என் மலர்
சினிமா செய்திகள்
குத்துச் சண்டையை மையமாக வைத்து பா.இரஞ்சித் இயக்கி இருக்கும் சார்பட்டா பரம்பரை படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள திரைப்படம் “சார்பட்டா பரம்பரை”. வடசென்னை பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வியலுக்குள் பிரிக்க முடியாத விளையாட்டாக இருக்கும் குத்துச்சண்டையை மையமாக வைத்து முழுக்க முழுக்க ஆக்சன் திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் பா.இரஞ்சித்.

சார்பட்டா படக்குழுவினர்
இப்படத்தில் ஆர்யாவுடன் பசுபதி, ஜான் கோகேன், கலையரசன், சந்தோஷ் பிரதாப், சபீர், துஷாரா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் பின்னணி வேலைகளில் ஒன்றான சவுண்ட் மிக்ஸிங் ஒர்க் முடிந்து இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
தயாரிப்பாளருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இந்தியன் 2 திரைப்படம் கிடப்பில் இருக்கும் நிலையில், பிரபல நடிகர் இயக்குனர் ஷங்கரை நேரில் சந்தித்துள்ளார்.
பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வந்தது. தயாரிப்பாளருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், இப்படம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதற்கிடையில் தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாகவும், இந்தியில் ரன்வீர்சிங் நடிப்பில் அந்நியனை ரீமேக் செய்வதாகவும் ஷங்கர் அறிவித்தார்.
இந்நிலையில், நடிகர் ராம் சரண் மற்றும் தயாரிப்பாளர் தில் ராஜு ஆகியோர் சென்னை வந்து இயக்குனர் ஷங்கரை சந்தித்துள்ளனர். இவர்கள் கூட்டணியில் உருவாகும் புதிய படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாக இருக்கிறது. இவர்கள் மூன்று பேரின் திடீர் சந்திப்பு, புதிய படம் பற்றிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராம் சரண் - ஷங்கர் - தில் ராஜு
இப்படத்தில் நாயகியாக கியாரா அத்வானி நடிக்க இருப்பதாகவும், தமன் இசையமைக்க இருப்பதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியாகியுள்ளது.
கார்த்திக் சவுத்ரி இயக்கத்தில் விக்ரம் பிரபு, வாணி போஜன் நடிப்பில் உருவாகி வரும் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படத்தின் முன்னோட்டம்.
நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகி உள்ள புதிய படம் ‘பாயும் ஒளி நீ எனக்கு’. இப்படத்தை கார்த்திக் சவுத்ரி என்பவர் இயக்கி உள்ளார். இவர், அமெரிக்காவில் திரைப்படம் தொடர்பான படிப்பை படித்து முடித்தவர். பிரபல தெலுங்கு நடிகர்கள் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் ஆகிய இருவரின் படங்களிலும் பணிபுரிந்து இருக்கிறார். இப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்கிறார்.

வாணி போஜன், விக்ரம் பிரபு
படத்தை பற்றி இயக்குனர் கூறியதாவது: “இது, அதிரடியான சண்டை காட்சிகள் நிறைந்த படம். கதாநாயகன் விக்ரம் பிரபு இதுவரை நடித்திராத ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடைய கதாபாத்திரம், ‘சஸ்பென்ஸ்’ ஆக வைக்கப்பட்டு இருக்கிறது. பாலுமகேந்திராவின் கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்ற சுரேஷ் பார்கவ் ஒளிப்பதிவு செய்கிறார். மணிஷர்மாவின் மகன் மஹதி ஸ்வர சாகர், இசையமைப்பாளராக அறிமுகம் ஆவதாக அவர் தெரிவித்துள்ளார்.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.
அதிக சம்பளத்துக்கு ஆசைப்படாமல் கதைக்கும், கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பவர், ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது இவர் நடித்துள்ள புதிய படம் ‘திட்டம் இரண்டு.’
திடுக்கிடும் மர்மங்கள் நிறைந்த திகில் படமாக உருவாகி உள்ளது. ‘யுவர்ஸ் சேம்புல்லி’ என்ற குறும்படத்தின் மூலம் பேசப்பட்ட விக்னேஷ் கார்த்திக் இயக்கி உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

திட்டம் இரண்டு படத்தின் போஸ்டர்
இந்நிலையில், இப்படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக முன்னணி ஓடிடி தளங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ‘க/பெ.ரணசிங்கம்’ திரைப்படம் கடந்தாண்டு நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
திரிஷ்யம் படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது மோகன்லாலும் ஜீத்து ஜோசப்பும் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளனர்.
மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணியில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான திரிஷ்யம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதையடுத்து மோகன்லால் மற்றும் திரிஷாவை வைத்து ‘ராம்’ என்கிற படத்தை இயக்கி வந்தார் ஜீத்து ஜோசப். 50 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில், எஞ்சியுள்ள காட்சிகளை வெளிநாட்டில் படமாக்க திட்டமிட்டு இருந்தனர். கொரோனா பரவல் காரணமாக, வெளிநாடு செல்ல முடியாததால், அப்படத்தை கிடப்பில் போட்டனர்.
அண்மையில் மோகன்லாலும் ஜீத்து ஜோசப்பும் இணைந்து பணியாற்றிய திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகத்திற்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.

டுவெல்த் மேன் படத்தின் போஸ்டர்
இந்நிலையில் மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணி மீண்டும் இணையவுள்ளது. இது முழுக்க முழுக்க திரில்லர் கதையம்சம் கொண்ட படமாம். இப்படத்திற்கு ‘டுவெல்த் மேன்’ என பெயரிட்டுள்ளனர். இப்படத்தை ஆண்டனி பெரம்பாவூர் தயாரிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டத்தில் நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
ஷங்கர் - ராம்சரண் கூட்டணியில் உருவாக உள்ள புதிய படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வரும் ஷங்கர், அடுத்ததாக தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்க திட்டமிட்டுள்ள இயக்குனர் ஷங்கர், தற்போது அதற்கான முதற்கட்ட பணிகளை செய்து வருகிறார்.
இந்நிலையில், இப்படத்திற்கு தெலுங்கு திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் தமன் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தக் கூட்டணி உறுதியானால் ஷங்கர் படத்துக்கு தமன் இசையமைக்கும் முதல் படமாக இது அமையும். விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஷங்கர், தமன்
முன்னதாக இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2003-ம் ஆண்டு வெளியான பாய்ஸ் படத்தில் இசையமைப்பாளர் தமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அப்படத்திற்கு பின் அவர் நடிப்பை விட்டுவிட்டு முழு நேர இசையமைப்பாளராக மாறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பைக்கில் அதிவேகமாக சென்ற பிரபல இயக்குனரின் மகன், விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
கன்னட திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வருபவர் சூர்யோதே பெரம்பள்ளி. இவரின் மகனான மயூர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு பைக்கில் சென்று கொண்டிருந்த போது டேங்கர் லாரி மீது மோதி விபத்தில் சிக்கி உள்ளார். இதில் பலத்த காயமடைந்த மயூர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். அவருக்கு வயது 20.

இயக்குனர் சூர்யோதே பெரம்பள்ளி
இந்த விபத்து குறித்து விசாரணை நடத்திய போலீசார், இரவு நேரத்தில் அதிவேகமாக பைக் ஓட்டியதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக தெரிவித்தனர். முன்னணி இயக்குனரின் மகன் சாலை விபத்தில் மரணமடைந்த சம்பவம் கன்னட திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கன்னட திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும், இயக்குனர் சூர்யோதே பெரம்பள்ளிக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், சமுத்திரகனி நடித்துள்ள படத்தை நேரடியாக தொலைகாட்சியில் வெளியிட உள்ளனர்.
தனுஷின் ‘திருடா திருடி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சுப்ரமணியம்சிவா. அதன்பின் பொறி, யோகி, சீடன் போன்ற படங்களை இயக்கிய அவர், வடசென்னை படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பின் சமுத்திரகனியை வைத்து இவர் இயக்கியிருக்கும் படம் ‘வெள்ளை யானை’.
நடிகை ஆத்மியா கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் யோகிபாபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்டப் பணிகள் முடிவடைந்து, திரையரங்க வெளியீட்டிற்காக நீண்ட நாட்களாக காத்திருந்தது படக்குழு.

வெள்ளை யானை படத்தின் போஸ்டர்
தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், இப்படத்தை நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்ப உள்ளனர். அதன்படி வருகிற ஜூலை 11-ந் தேதி இப்படம் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். முன்னதாக நடிகர் சமுத்திரகனி நடித்த ‘ஏலே’ படமும் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பாகுபலியில் ரம்யா கிருஷ்ணன் நடித்த ராஜமாதா சிவகாமிதேவி கதாபாத்திரத்தின் இளம் வயது வாழ்க்கையை மையமாக வைத்து இந்த தொடரை எடுக்கின்றனர்.
ராஜமவுலி இயக்கத்தில் 2 பாகங்களாக வெளியான படம் ‘பாகுபலி’. இதில் பிரபாஸ், நாசர், ராணா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்து இருந்தனர். சரித்திர கதையம்சம் கொண்ட இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததோடு, வசூலிலும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியது.
தற்போது பாகுபலி கதை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெப் தொடராக தயாராகிறது. பாகுபலியில் ரம்யா கிருஷ்ணன் நடித்த ராஜமாதா சிவகாமிதேவி கதாபாத்திரத்தின் இளம் வயது வாழ்க்கையை மையமாக வைத்து இந்த தொடரை எடுக்கின்றனர். பாகுபலி பட காட்சிகளுக்கு முந்தைய சம்பவங்கள் இந்த தொடரில் இடம்பெற உள்ளன. சுமார் 9 எபிசோடுகளை கொண்ட இந்த வெப் தொடர், ரூ.200 கோடி பட்ஜெட்டில் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.

ரம்யா கிருஷ்ணன், வாமிகா கபி
இதில் இளம் வயது சிவகாமிதேவி கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் நடிகை சமந்தாவை அணுகினர். அவர் நடிக்க மறுத்துவிட்டதால் தற்போது இளம் நடிகை வாமிகா கபியை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே தமிழில் மாலை நேரத்து மயக்கம் என்ற படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்துகொண்டு பிரபலமான நடிகை லாஸ்லியா, தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
இலங்கையை சேர்ந்த லாஸ்லியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். அந்நிகழ்ச்சி மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவானார்கள். அந்நிகழ்ச்சிக்கு பின் அவருக்கு பட வாய்ப்பும் குவிந்து வருகிறது. அந்த வகையில் அவர் கைவசம் ‘பிரெண்ட்ஷிப்’, ‘கூகுள் குட்டப்பன்’ போன்ற படங்கள் உள்ளன.
இதில் பிரெண்ட்ஷிப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜான் பால் ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்கி இருக்கும் இப்படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குக்கு ஜோடியாக நடித்துள்ளார் லாஸ்லியா.

லாஸ்லியா
இந்நிலையில், இப்படத்தின் மூலம் நடிகை லாஸ்லியா, பாடகியாகவும் அறிமுகமாகி உள்ளார். பிரெண்ட்ஷிப் படத்தில் இடம்பெறும் ‘அடிச்சு பறக்கவிடுமா’ என்கிற குத்துப் பாடலை தேவாவுடன் இணைந்து பாடியுள்ளார் லாஸ்லியா. இந்தப் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் பிரபாஸ், ராதே ஷ்யாம், ஆதிபுருஷ், சலார் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
கே.ஜி.எப் படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் பிரசாந்த் நீல். இவர் அடுத்ததாக பாகுபலி நடிகர் பிரபாஸை வைத்து ‘சலார்’ என்ற படத்தை இயக்குகிறார். பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகும் இப்படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடிக்கிறார். பிரபல கன்னட நடிகர் மது குருசாமி, இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள சலார் படத்தின் படப்பிடிப்பு, அடுத்த மாதம் மீண்டும் தொடங்க உள்ளது.

வாணி கபூர்
இந்நிலையில், சலார் படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடிக்க பாலிவுட் நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்த படக்குழு, தற்போது நடிகை வாணி கபூரை ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவர் நடிக்கும் முதல் தெலுங்கு படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
கேங்ஸ்டர் கதையம்சம் கொண்டு உருவாகும், இப்படம் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் ரிலீசாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது. தெலுங்கு, கன்னடம் ஆகிய இரு மொழிகளில் தயாராகும் இப்படத்தை, தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட பிற மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர்.
பாடகி சின்மயி கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்த நிலையில், அதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
பாடகி சின்மயி, தனது கணவர் ராகுல் ரவீந்திரனுடன் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில், அவர் புடவையில் இருந்ததால் சற்று உடல் பருமனாக இருப்பது போல காணப்படுகிறார். இதனால், அவர் கர்ப்பமாக இருப்பது போன்று சமூக வலைதளங்களில் செய்தி பரப்பி விட்டார்கள்.

சின்மயி, ராகுல் ரவீந்திரன்
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள சின்மயி, “நான் கர்ப்பமாக இல்லை. அதனால் பொய்யான செய்திகளை யாரும் பரப்ப வேண்டாம். அப்படியே குழந்தை பிறந்தாலும் சமூக வலைதளத்தில் பகிர மாட்டேன். அதோடு குழந்தை வளர்ந்த பிறகு சமூக வலைதளம் பக்கம் செல்ல விடமாட்டேன். எனது தனிப்பட்ட விஷயத்தில் யாரும் தலையிட வேண்டாம்” என்று கூறியுள்ளார்.






