என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் தனுஷ், இரண்டு தெலுங்கு படங்களில் நடிக்க சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது.
    ‘தி கிரே மேன்’ எனும் ஹாலிவுட் படத்தில் நடித்து முடித்துள்ள தனுஷ், அடுத்ததாக கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர சேகர் கம்முலா இயக்கும் படம் மூலம் தெலுங்கிலும் அறிமுகமாக உள்ளார் தனுஷ். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற டிசம்பர் மாதம் தொடங்க உள்ளது.

    இந்நிலையில், நடிகர் தனுஷ் மற்றுமொரு தெலுங்கு படத்திலும் கமிட்டாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராக உள்ள அப்படத்தை பிரபல டோலிவுட் தயாரிப்பாளர் நாக வம்சி தயாரிக்க உள்ளாராம்.

    தனுஷ்

    தற்போது படப்பிடிப்புக்காக ஐதராபாத்தில் தங்கி உள்ள நடிகர் தனுஷை, அவர் அண்மையில் சந்தித்து, படம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும் அந்த படத்தை வெங்கி அட்லூரி இயக்க உள்ளதாகவும், விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
    ரஜினியின் சந்திரமுகி படத்தில் நடிப்பதற்காக இரண்டு முறை வாய்ப்புகள் தேடி வந்ததாக நடிகை சதா சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
    ‘ஜெயம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான சதா, அந்த ஒரே படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார். ‌ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘அந்நியன்’ படத்தில் நாயகியாக வந்து பரபரப்பாக பேசப்பட்டார். தொடர்ந்து தமிழ்பட உலகின் முன்னணி நாயகியாக வலம் வந்தார். பின்னர் பட வாய்ப்பு இல்லாததால் ஒரு பாடலுக்கு ஆடும் அளவு இறங்கி வந்தார். தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார்.

    சதா
    சதா

    ரஜினியின் சந்திரமுகி பட வாய்ப்பை நழுவவிட்டது குறித்து நடிகை சதா, சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். சந்திரமுகி படத்தில் நடிப்பதற்காக இரண்டு முறை வாய்ப்புகள் தேடி வந்தும் சில சூழல்கள் காரணமாக, அதில் நடிக்க முடியாமல் போனது. அதை நினைத்து நான் சில சமயம் அழுதும் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார் சதா. மாளவிகா கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக அவரை அழைத்ததாக கூறப்படுகிறது.
    சுந்தர் பாலு இயக்கத்தில் வரலட்சுமி, சுபிக்‌ஷா, ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி ஆகியோர் நடித்துள்ள கன்னித்தீவு படத்தின் முன்னோட்டம்.
    சுந்தர் பாலு தயாரித்து இயக்கும் படம் ‘கன்னித்தீவு’. இதில் வரலட்சுமி, சுபிக்‌ஷா, ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி ஆகிய நான்கு கதாநாயகிகள் நடித்துள்ளனர். மேலும் மொட்டை ராஜேந்திரன், சூப்பர் சுப்பராயன், சர்மிளா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். சண்டைக்காட்சியை ஸ்டண்ட் சிவா இயக்குகிறார். ஆரோல் கரோலி இசையமைக்கும் இந்த படத்திற்கு சிட்டி பாபு ஒளிப்பதிவு செய்கிறார். லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பை கவனிக்கிறார்.

    படம் பற்றி இயக்குநர் சுந்தர் பாலு கூறியதாவது: வட சென்னையில் உள்ள ஒரு ஹவுசிங் போர்டு குடியிருப்பில் வசிக்கும் நான்கு பெண்களை மையப்படுத்திய கதை இது. சின்ன வயதில் இருந்தே தோழிகளான வரலட்சுமி, ஆஷ்னா சவேரி, ஐஸ்வர்யா தத்தா, சுபிக்ஷா நான்கு பேரும் சமூக அக்கறையுள்ளவர்கள். உலகத்தை காப்பாற்ற முடியாவிட்டாலும் தங்கள் பகுதியையாவையாவது நன்றாக வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.

    கன்னித்தீவு படக்குழு
    கன்னித்தீவு படக்குழு


    அந்த பகுதியில் நீண்ட நாளாக இருக்கும் ஒரு பிரச்சினையை தீர்ப்பதற்காக போராட்டத்தில் குதிக்கிறார்கள். அந்த பகுதி மக்களின் பேராதரவோடு அந்த போராட்டத்தில் பெரிய வெற்றி பெறுகிறார்கள். அந்த வெற்றியே இந்த நான்கு பேருக்கும் பெரிய பிரச்சினையாக மாறுகிறது. அந்த பிரச்சினை என்ன? அதில் இந்த நான்கு பேரும் எப்படி போராடி வெற்றி பெற்றார்கள் என்பதை ஆக்சன் த்ரில்லர் திரைக்கதையாக உருவாகுவதாக இயக்குநர் சுந்தர்பாலு கூறினார்.
    தமிழ், தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் தேவி ஸ்ரீ பிரசாத், விரைவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளதாக கூறப்படுகிறது.
    விஜய் ஆண்டனி, ஜீ.வி.பிரகாஷ் ஆகியோர் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பின்னர் ஹீரோவாக அவதாரம் எடுத்தவர்கள். தற்போது இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்கள் பட்டியலில் இடம்பிடித்து உள்ளனர். இவர்களை தொடர்ந்து தற்போது மற்றொரு முன்னணி இசையமைப்பாளரான தேவி ஸ்ரீ பிரசாத்தும், விரைவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளதாக கூறப்படுகிறது.

    தேவி ஸ்ரீ பிரசாத், சார்மி
    தேவி ஸ்ரீ பிரசாத், சார்மி

    தேவி ஸ்ரீ பிரசாத்தை ஹீரோவாக்கும் முயற்சியில் நடிகை சார்மி இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம்வந்த நடிகை சார்மி, தற்போது தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, இயக்குனர் பூரி ஜெகன்நாத்துடன் இணைந்து படங்களை தயாரித்து வருகிறார். தற்போது விஜய் தேவரகொண்டா நடிக்கும் லிகர் படத்தை தயாரித்து வரும் சார்மி, அடுத்ததாக தேவி ஸ்ரீ பிரசாத் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தை தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. 
    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் தனது நண்பர்களுடன் சைக்கிளிங் சென்றார்.
    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுவாக சென்னை கடற்கரை சாலை, ஈசிஆர் சாலையில் சைக்கிளிங் மேற்கொள்வதை விடாமல் செய்து வருகிறார். தற்போது முதல்வர் ஆன பிறகும், பல்வேறு பணிகளுக்கு மத்தியிலும் சைக்கிளிங் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

    அந்த வகையில் ஞாயிற்றுகிழமையான இன்று கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிளிங் சென்றார் மு.க.ஸ்டாலின். வழிநெடுக போலீசார் அவருக்கு பாதுகாப்பு அளித்தனர். கோவளம் முதல் மாமல்லபுரம் வரையிலான இந்த சைக்கிள் பயணத்தில் அவரது நண்பர்கள் சிலரும் பங்கேற்றனர். 

    முதல்வருடன் நடிகை யாஷிகா எடுத்த செல்பி புகைப்படம்
    முதல்வருடன் நடிகை யாஷிகா எடுத்த செல்பி புகைப்படம்

    இந்நிலையில் சைக்கிளிங் சென்ற முதல்வருடன், நடிகை யாஷிகா ஆனந்த் செல்பி எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ள அவர், முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார். வைரலாகி வரும் இந்த புகைப்படத்திற்கு சமூக வலைதளங்களில் லைக்குகளும் குவிந்து வருகிறது.
    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஓராண்டாக ரிலீசாகாமல் இருந்த சிவகார்த்திகேயனின் படம் விரைவில் ஓடிடி-யில் ரிலீசாக உள்ளது.
    தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பது மட்டுமின்றி, படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக சினிமாவில் சாதிக்க நினைக்கும் இளம் திறமையாளர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறார்.  

    இவர் இதுவரை 2 படங்களை தயாரித்துள்ளார். அதில் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியான ‘கனா’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து ரியோ நடிப்பில் வெளியான ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தை தயாரித்திருந்தார்.   

    தற்போது சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள 3-வது படம் ‘வாழ்’. இப்படத்தை அருவி பட இயக்குனர் அருண்பிரபு இயக்கி உள்ளார். இப்படத்தை கடந்தாண்டே வெளியிட திட்டமிட்டிருந்தனர். இருப்பினும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. 

    வாழ் படத்தின் போஸ்டர்
    வாழ் படத்தின் போஸ்டர்

    இந்நிலையில், இப்படம் வருகிற ஜூலை 16-ந் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    கைதி படத்தை பிற மொழிகளில் ரீமேக் செய்யவும் அதன் இரண்டாம் பாகத்தை எடுக்கவும் தடை விதித்து கொல்லம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் கைதி. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் 2 ஆம் பாகம் உருவாக இருப்பதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    இதனிடையே, கேரள மாநிலம் கொல்லம் நீதிமன்றத்தில் ராஜீவ் ரஞ்சன், என்பவர் கைதி படத்தின் கதை தன்னுடையது என்றும் இதனால் தனக்கு நஷ்ட ஈடாக 4 கோடி ரூபாயை தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு வழங்க வேண்டுமெனவும் வழக்கு தொடர்ந்திருந்தார். இதை விசாரித்த நீதிபதி, தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதோடு கைதி படத்தை பிற மொழிகளில் ரீமேக் செய்யவும் அதன் இரண்டாம் பாகத்தை எடுக்கவும் தடை விதித்தது.
     
    இந்நிலையில், அதுகுறித்து கைதி படத்தின் தயாரிப்பாளர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:  “எங்களின் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் கதை, திரைக்கதை, இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த கைதி திரைப்படத்தின் ரீமேக் மற்றும் இரண்டாம் பாகம் தயாரிக்க, கேரள நீதிமன்றத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக செய்தி ஊடகங்கள் வாயிலாக அறிந்தோம். 

    தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு
    தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு

    இது சம்மந்தமாக ஊடக நண்பர்கள் எங்களை தொடர்பு கொண்டு கருத்து கேட்டும் வருகின்றனர். எங்களுக்கு அவ்வழக்கின் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் தெரியாத காரணத்தால் அதைப்பற்றிய விபரங்கள் எதுவும் தற்போது வெளியிட இயலாது. 

    அதே சமயம் கைதி சம்மந்தப்பட்ட ஊடக செய்திகளில் எங்கள் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நாங்கள் உறுதியாக மறுக்கவோ, சட்டப்படி இதை நிரூபிக்கவோ முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்”. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தாரா, அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
    நடிகை நயன்தாரா தற்போது நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இவற்றில் ‘நெற்றிக்கண்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து, விரைவில் வெளியாக உள்ளது. இதில் அவர் பார்வையற்றவராக நடித்து இருக்கிறார். 

    அதேபோல் ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்திலும் நடித்து முடித்து விட்டார் நயன்தாரா. இந்த படத்தில் அவர் வக்கீல் வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. அவர் நடிக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தை அவரது காதலர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இதில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா. இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. 

    நயன்தாரா

    இந்நிலையில், நடிகை நயன்தாரா, தமிழில் புதிய படமொன்றில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி சடகோபன் ரமேஷ் நடித்த போட்டா போட்டி, வடிவேலு நடித்த தெனாலிராமன், எலி போன்ற படங்களை இயக்கிய யுவராஜ், அடுத்ததாக இயக்க உள்ள புதிய படத்தில் நடிகை நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. முழுக்க முழுக்க காமெடி கதையம்சம் கொண்ட படமாக இது உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. 
    மூடர்கூடம் நவீன் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘அக்னிச் சிறகுகள்’ படத்தில் விஜய் ஆண்டனி, அருண் விஜய் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
    விஜய் ஆண்டனி, அருண் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘அக்னிச்சிறகுகள்’.  ஆக்‌ஷன், திரில்லராக உருவாகும் இப்படத்தில் அக்‌ஷரா ஹாசன், ஷாலினி பாண்டே, பிரகாஷ் ராஜ், ஜே.எஸ்.கே.சதீஷ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். மூடர்கூடம் நவீன் இயக்கி உள்ள இப்படத்தை அம்மா கிரியேசன்ஸ் சார்பாக டி.சிவா அதிக பொருட்செலவில் தயாரித்துள்ளார்.

    நடிகர் அருண் விஜய் டுவிட்டரில் பகிர்ந்த புகைப்படம்
    நடிகர் அருண் விஜய் டுவிட்டரில் பகிர்ந்த புகைப்படம்

    இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார் அருண் விஜய். அதன்படி அக்னிச் சிறகுகள் படத்தின் டப்பிங் பணிகளை முடித்துவிட்டதாக அருண் விஜய் தெரிவித்துள்ளார். நடிகர் அருண் விஜய் இப்படத்தில் ரஞ்சித் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  
    நடிகை ராதா தனது இரண்டாவது கணவரான சப்-இன்ஸ்பெக்டர் வசந்தராஜா, தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக பரங்கிமலை போலீசில் புகார் அளித்துள்ளார்.
    பிரபல தமிழ் சினிமா நடிகை ராதா. இவர் முரளி நடித்த சுந்தரா டிராவல்ஸ், சத்யராஜ் நடித்த அடாவடி, கார்த்திக் நடித்த கேம் உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்து உள்ளார். 

    முதல் கணவரை பிரிந்து மகன் மற்றும் தாயுடன் ஒரே வீட்டில் தங்கி உள்ள நடிகை ராதா, எண்ணூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் வசந்த ராஜா என்பவரை, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, 2-வதாக திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளார்.

    இதனிடையே கடந்த ஏப்ரல் மாதம், கணவர் வசந்த ராஜா, தன்மீது சந்தேகப்படுவதாகவும், அடித்து கொடுமைபடுத்துவதாகவும் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நடிகை ராதா, பின்னர் இருவரும் சமரசமாக செல்வதாக புகாரை வாபஸ் பெற்றார்.

    ராதா, வசந்தராஜா
    ராதா, வசந்தராஜா

    இந்தநிலையில் தற்போது மீண்டும் இரண்டாவது கணவரான சப்-இன்ஸ்பெக்டர் வசந்தராஜா தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக பரங்கிமலை போலீசில் புகார் அளித்துள்ளார் நடிகை ராதா.

    அந்த புகார் மனுவில், தான் ஏற்கனவே கொடுத்த புகாரை காவல் நிலையத்தில் உள்ள தனது நண்பர்களை வைத்து அழித்து விட்டதாக வசந்தராஜா கூறியதாகவும், போலீசில் புகார் கொடுத்து என்னை எதுவும் செய்ய முடியாது என்று மிரட்டல் விடுத்ததாக தெரிவித்ததாகவும், வசந்தராஜா மற்றும் அவருக்கு ஆதரவாக செயல்பட்ட சப்-இன்ஸ்பெக்டர்கள் பாரதி, இளம்பருதி ஆகியோர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நடிகை ராதா அந்த மனுவில் தெரிவித்துள்ளார். இதுகுறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.
    திருமணத்திற்குப் பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டிருந்த மீனா, தற்போது சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி உள்ளார்.
    தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மீனா. பின்னர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பிரபலமானார். இவருடைய நடிப்புக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே உண்டு. 

    திருமணத்திற்குப் பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டிருந்த மீனா, தற்போது சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி உள்ளார். இவர் கைவசம், ரஜினியின் ‘அண்ணாத்த’, திரிஷ்யம் தெலுங்கு ரீமேக் போன்ற படங்கள் உள்ளன.

    நடிகை மீனாவின் இன்ஸ்டாகிராம் பதிவு
    நடிகை மீனாவின் இன்ஸ்டாகிராம் பதிவு

    இதுதவிர பாபநாசம் படத்தின் இரண்டாம் பாகத்தில் கமலுக்கு ஜோடியாக மீனா நடிக்க உள்ளதாகவும் செய்திகள் வலம் வந்தன. இந்நிலையில், சமீபத்தில் சமூக வலைதளம் வாயிலாக கலந்துரையாடிய நடிகை மீனாவிடம், ரசிகர் ஒருவர் ‘பாபநாசம் 2-வில் நீங்கள் நடிப்பீர்களா?’ என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அவர், அதை நடிகர் கமலிடம் கேளுங்கள் என்று கூறியுள்ளார். 
    நடிகை சனம் ஷெட்டிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி தொல்லை கொடுத்த நபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகை சனம் ஷெட்டி, பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானார். சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சனம் ஷெட்டி, அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி, அதன் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

    சனம் ஷெட்டி

    இந்நிலையில் இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒருவர் தொடர்ந்து ஆபாச மெசேஜ் அனுப்பி வந்துள்ளார். இதுகுறித்து நடிகை சனம் ஷெட்டி திருவான்மியூர் காவல் நிலையத்தில், ‘தனக்கு வந்த ஆபாச மெசேஜ் அடங்கிய ஆதாரங்களுடன் புகார் அளித்தார். அதன்பேரில் ‘சைபர் கிரைம்’ போலீசார் வழக்குப்பதிவு செய்து, நடிகை சனம் ஷெட்டிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி தொல்லை கொடுத்த நபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×