என் மலர்
சினிமா செய்திகள்
முன்னணி நகைச்சுவை நடிகராக இருக்கும் யோகிபாபு, பிரபல கிரிக்கெட் வீரருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. இவரும் யார்க்கர் கிங் என்று அழைக்கப்படும் நடராஜனும் நண்பர்கள். சமீபத்தில் யோகி பாபு நடித்த மண்டேலா படத்தை பார்த்து நடராஜன் பாராட்டி இருந்தார்.

யார்க்கர் கிங் நடராஜன் - யோகி பாபு
இந்த நிலையில் யோகி பாபு, நடராஜனை நேரில் சந்தித்து பேசி இருக்கிறார். இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை நடராஜன் மற்றும் யோகி பாபு இருவரும் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். இந்த புகைப்படங்கள் அதிக லைக்குகளை குவித்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ் படத்தில் கதாநாயகியாக நடித்த மெஹ்ரீன் பிர்சாடா, தனது காதலரை திருமணம் செய்ய வில்லை என்று அறிவித்து இருக்கிறார்.
சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் மெஹ்ரீன் பிர்சாடா. இதையடுத்து விஜய் தேவரகொண்டாவின் நோட்டா, தனுஷுடன் ‘பட்டாஸ்’ படத்தில் நடித்து பிரபலமானார். தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
நடிகை மெஹ்ரீன் பிர்சாடா, அரியானா மாநில முன்னாள் முதல்வர் பஜன் லாலின் பேரன் பவ்யா பிஷ்னோயை காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, மார்ச் மாதம் இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.

தற்போது பவ்யா பிஷ்னோவை தான் திருமணம் செய்யவில்லை என்று நடிகை மெஹ்ரீன் பிர்சாடா கூறி இருக்கிறார். இது குறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில், ‘நானும் பவ்யா பிஷ்னோவும் திருமணத்திற்கு முன்பே எங்கள் உறவை முறித்துக் கொள்கிறோம். இது எங்கள் நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவு. இனிமேல் பவ்யா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் எவருடனும் எனக்கு தொடர்பு இல்லை. இது எனது தனிப்பட்ட விஷயம். இதை மதிப்பீர்கள் என்று நம்புகிறேன். என் வேலைகளில் இனிமேல் கவனம் செலுத்த இருக்கிறேன்’ என்று பதிவு செய்திருக்கிறார்.
தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற கார்த்தியின் கைதி படத்தின் கதை தன்னுடையது என கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த ராஜீவ் ரஞ்சன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நீதிமன்றம் இத்தடையை விதித்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் கைதி. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் 2 ஆம் பாகம் உருவாக இருப்பதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில், கைதி படத்தின் 2ஆம் பாகத்திற்கும் ரீமேக் செய்வதற்கும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ராஜீவ் ரஞ்சன் என்பவர் தான் எழுதிய கதையை தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபுவிடம் கூறியதாகவும் கதை பிடித்திருந்ததால், இக்கதையை படமாக்க எஸ்.ஆர்.பிரபு ஒப்புதல் வழங்கியதோடு அதற்கான முன் தொகையாக ரூ.10 ஆயிரத்தை தன்னிடம் வழங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதன்பின் கைதி படத்தை அண்மையில் ஊரடங்கில் பார்த்தபோது தான் அதிர்ச்சி அடைந்ததாகவும், தான் சொன்ன கதையின் இரண்டாம் பகுதியை எடுத்துக்கொண்டு கைதி முழு படத்தையும் அவர்கள் உருவாக்கி இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனால் தனக்கு நஷ்ட ஈடாக 4 கோடி ரூபாயை தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு வழங்க வேண்டுமெனவும், கேரள மாநிலம் கொல்லம் நீதிமன்றத்தில் ராஜீவ் ரஞ்சன் புகார் அளித்திருந்தார்.

இதை விசாரித்த நீதிபதி தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபுவுக்கு நோட்டீஸ் அனுப்பியதோடு கைதி படத்தை பிற மொழிகளில் ரீமேக் செய்யவும் அதன் இரண்டாம் பாகத்தை எடுக்கவும் தடை விதித்துள்ளது.
எஸ்தல் எண்டர்டெய்னர் நிறுவனத்தின் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் உருவாகி வரும் அழகிய கண்ணே படத்தின் முன்னோட்டம்.
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ "எஸ்தல் எண்டர்டெய்னர்" நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் திரைப்படம் "அழகிய கண்ணே". இத்திரைப்படத்தை இயக்குநர் சீனு ராமசாமியின் துணை இயக்குனர் ஆர்.விஜயகுமார் இயக்குகிறார்.
இதில் அறிமுக நடிகர் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபு சாலமன், ஆண்ட்ரூஸ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

என்.ஆர்.ரகுநந்தன் இசையமைப்பில் உருவாகும் இப்படத்திற்காக நடிகர், பாடகர், இசையமைப்பாளர் என பன்முக திறமை வாய்ந்த ஜி.வி.பிரகாஷ் குமார் ஒரு பாடல் ஒன்றை பாடியுள்ளார். இப்பாடல் மிகவும் அருமையாக உருவாகியுள்ளது என நடிகர் லியோ சிவக்குமார் கூறியுள்ளார்.
தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வந்த நடிகை சரண்யா சசி கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழில் பச்சை என்கிற காத்து படத்தில் நடித்தவர் சரண்யா சசி. இவர் மலையாளத்தில் மோகன்லாலின் சோட்டா மும்பை, தலப்பாவு, பாம்பே மார்ச் 12, மரியா காலிப்பினலு உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். தமிழ், மலையாளத்தில் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
சரண்யா சசிக்கு சில வருடங்களுக்கு முன்பு மூளையில் கட்டி ஏற்பட்டது. இதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதுவரை 11 அறுவை சிகிச்சை செய்துள்ள சரண்யா சசிக்கு மலையாள நடிகர், நடிகைகள் பண உதவி செய்து வருகிறார்கள்.

இந்தநிலையில் சரண்யா சசிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த மே மாதம் 23-ந்தேதி அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் சரண்யா சசியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றும் செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டு உள்ளது என்றும் அவரது தோழியும் மலையாள நடிகையுமான சீமா ஜி.நாயர் தெரிவித்து உள்ளார். சரண்யா சசிக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் திடீரென தனது மனைவியை விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்துள்ளது சினிமாவுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் அமீர்கான் கடந்த 2005ஆம் ஆண்டு கிரண் என்பவரை திருமணம் செய்தார். இவர்களின் 15 வருட திருமண வாழ்க்கை தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. அமீர்கான் மற்றும் அவரது மனைவி கிரண் ஆகிய இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதை உறுதி செய்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இந்த 15 அழகான ஆண்டுகளில் நாங்கள் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்து ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளோம், எங்கள் உறவு உண்மையாக வளர்ந்தது. எங்கள் இருவரிடமும் நம்பிக்கை, மரியாதை மற்றும் பாசம் ஆகியவை இருந்தது. ஆனால் இப்போது நாங்கள் எங்களுடைய வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்க விரும்புகிறோம். இனி நாங்கள் கணவன்-மனைவியாக இல்லாமல் ஒருவருக்கொருவர் துணையாகவும் ஒரு நல்ல பெற்றோராகவும் இருக்க முடிவு செய்துள்ளோம்.
சில காலத்திற்கு முன்பே இதனை நாங்கள் திட்டமிட்டு, இப்போது அதனை செயல்படுத்த சரியான நேரம் என்பதை உணர்கிறோம். எங்கள் மகன் ஆசாத்துக்கு ஒரு நல்ல பெற்றோர்களாக இருக்கிறோம், நாங்கள் ஒன்றாக அவரை வளர்ப்போம், பாதுகாப்போம்.

இந்த முடிவுக்கு எங்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் தொடர்ந்து ஆதரவளிப்பதற்கும் புரிந்து கொண்டதற்கும் நன்றி. எங்கள் நலம் விரும்பிகளுக்கு நாங்கள் கேட்டுக்கொள்வது என்னவெனில் எங்களைப் போலவே இந்த விவாகரத்தை நீங்களும் ஒரு புதிய பயணத்தின் தொடக்கமாக காண்பீர்கள் என்று நம்புகிறோம் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக திரைப் பிரபலங்கள் பலரும் குரல் எழுப்பி வருகின்றனர்.
திரைப்படங்களை கட்டுப்படுத்தும் வகையில் ஒளிப்பதிவு சட்டம் அமலில் உள்ளது. இதில் திருத்தப்பட்ட வரைவு சட்ட மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. இந்த சட்ட திருத்தத்தின்படி சென்சார் சான்றிதழ் பெற்ற பிறகு படம் திரைக்கு வந்தாலும் அதில் ஆட்சேபணைக்குரிய காட்சிகள் இருந்தால் மத்திய அரசு பார்த்து சென்சாருக்கு மறு தணிக்கைக்காக அனுப்பி வைக்கப்படும். இந்த திருத்தப்பட்ட சட்டத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கமல்ஹாசன், அனுராக் காஷ்யப், வெற்றிமாறன், பா.ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ், சூர்யா உள்ளிட்ட பலர் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தற்போது நடிகர் கார்த்தி, இந்த சட்டத்தில் மேற்கொள்ள உள்ள திருத்தத்தை கைவிட வேண்டும் என டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
அதுபோல் விஷால் வெளியிட்டுள்ள பதிவில், 'பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் எங்கே? இப்படி ஒரு பரபரப்பான மாற்றங்கள் ஏன்? சினிமா துறையை எப்போதும் ஏன் குறிவைக்க வேண்டும்? முதல் ஜிஎஸ்டி, பின்னர் பைரசி, இப்போது இந்த சட்டம்? இந்தச் சட்டத்தைக் கொண்டுவருவது நியாயமில்லை.'. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
Where is Freedom of Speech & Expression ?
— Vishal (@VishalKOfficial) July 3, 2021
Why have a Censor Board ?
Why the Hectic Process ?
Why always target Cinema Industry ?
First GST, Then no action against Piracy & Now this Law,
It’s not at all Fair to bring this Act..#FreedomOfExpression#CinematographAct2021
தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், நடிகர் அர்ஜுன் கட்டியிருக்கும் கோவிலில் சாமி தரிசனம் செய்து இருக்கிறார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அர்ஜுன் தீவிர ஆஞ்சநேய பக்தர். இவர், கடந்த சில வருடங்களாக சென்னை போரூர் கிருகம்பாக்கத்தில், 180 டன் எடையில் ஆஞ்சநேயருக்கு சிலை வைத்து கோவில் கட்டியுள்ளார்.


இந்த கோவிலின் கும்பாபிஷேகம் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இதில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களின் மனைவி துர்கா ஸ்டாலின் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து இருக்கிறார்.
பிரபல நடிகையான வனிதா, தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருந்து மோதல் காரணமாக வெளியேற இருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நடிகையான வனிதா, பிரபல தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 3, குக் வித் கோமாளி, கலக்கப் போவது யாரு ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருந்தார். தற்போது பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடனம் ஆடி வந்தார். இந்நிலையில், பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து இருக்கிறார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், என்னை அவமானப்படுத்துவது, கொடுமைப்படுத்துவது முதலானவற்றை நான் தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறேன். எனது குடும்பமாகவே இருந்தாலும் அதனை எதிர்கொள்வேன் என்பதை உலகமே அறியும். பிக் பாஸ் 3 நிகழ்ச்சிக்குப் பிறகு, பிரபல தொலைக்காட்சி எனக்கு மற்றொரு வீடாக இருந்து வருகிறது.
தொலைக்காட்சி நிறுவனத்தோடு எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லையென்ற போதும், பணியிடத்தில் நிகழும் மோசமான தாக்குதல்களையும், நெறியற்ற நடவடிக்கைகளையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. எனது தொழில்முறை வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாத சிலரால் நான் அவமானப்படுத்தப்பட்டதோடு, எனக்கு அநீதி நிகழ்த்தப்பட்டது. பணியிடங்களில் பெண்களை மோசமாக நடத்துவது ஆண்கள் மட்டுமல்ல; பொறாமை பிடித்த பெண்களும் அப்படியே நடந்துகொள்கிறார்கள். கிடைக்கும் வாய்ப்புகளையும் ஒழிக்க முயல்கிறார்கள்.

பல ஆண்டுகள் அனுபவம்மிக்க சீனியர் ஒருவர் தன்னைவிட வயது குறைந்தவர்களிடம் இப்படி நேர்மையின்றி நடந்துகொள்வது எனக்கு வருத்தம் அளிக்கிறது. பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்கும் மற்ற போட்டியாளர்களுக்கு எனது வாழ்த்துகள். என்னால் இந்தப் போட்டியில் இருந்து விலகிய சுரேஷ் சக்ரவர்த்தியிடம் மன்னிப்பு கோருகிறேன்' என்றார்.
மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கமலின் விக்ரம் படத்தை இயக்க உள்ளார்.
நடிகர் கமலின் 232-வது படம் ‘விக்ரம்’. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தை கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் நரேன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.


ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் - இயக்குனர் லோகேஷ் கனகராஜ்
இந்த நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ’விக்ரம்’ படத்தின் ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் என அறிவித்துள்ளார். கிரிஷ் கங்காதரன் இதற்குமுன் விஜய் நடித்த சர்கார் படத்துக்கு ஒளிப்பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடன் வாங்கித் தருவதாக ஒரு கோடி ரூபாயை தான் ஏமாற்றிவிட்டதாக கொடுப்பட்ட புகாருக்கு நடிகர் ஆர்.கே.சுரேஷ் விளக்கம் அளித்துள்ளார்.
பிரபல தயாரிப்பாளரும் விநியோகஸ்தரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ் தன் வீட்டை விற்பதற்காகக் கடன் வாங்கித் தருவதாக ஒரு கோடி ரூபாய் ஏமாற்றிவிட்டார் என்று வீணா என்பவர் சில நாட்களுக்கு முன்பு காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருந்தார்.

இது சம்பந்தமாக விளக்கம் அளிப்பதற்கும் தன் தரப்பு ஆவணங்களைக் கொடுப்பதற்கும் ஆர்.கே.சுரேஷ் இன்று காவல்துறை ஆணையாளர் அலுவலகத்திற்கு வந்திருந்தார்.
தன் தரப்பு ஆவணங்களையும் ஆதாரங்களையும் ஆணையாளர் வசம் கொடுத்து விட்டு வெளியே வந்தவர், ஊடகங்களைச் சந்தித்தார் அப்போது அவர் பேசியபோது,

"நான் எந்த மோசடியும் செய்யவில்லை. என்மீது என் தரப்பில் எந்தத் தவறும் இல்லை. அது முழுக்க ஜோடிக்கப்பட்ட பொய்யான புகார்" என்றார்.
பீஸ்ட் படத்திற்கு நடனம் அமைத்து வரும் நடன இயக்குனரின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடித்து வரும் படம் ‘பீஸ்ட்’. இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்தது. தற்போது 2 ம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

தனியார் ஸ்டூடியோ ஒன்றில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட செட்டில், விஜய்- பூஜா ஹெக்டே நடிக்கும் பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த பாடலின் நடன இயக்குனர் ஜானியின் பிறந்தநாள் இந்த செட்டில் கொண்டாடப்பட்டுள்ளது.

நெல்சன் - ஜானி
ஜானியின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.






