என் மலர்
சினிமா

அர்ஜுன் குடும்பத்தினருடன் துர்கா ஸ்டாலின்
அர்ஜுன் கட்டிய கோவிலில் சாமி தரிசனம் செய்த துர்கா ஸ்டாலின்
தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், நடிகர் அர்ஜுன் கட்டியிருக்கும் கோவிலில் சாமி தரிசனம் செய்து இருக்கிறார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அர்ஜுன் தீவிர ஆஞ்சநேய பக்தர். இவர், கடந்த சில வருடங்களாக சென்னை போரூர் கிருகம்பாக்கத்தில், 180 டன் எடையில் ஆஞ்சநேயருக்கு சிலை வைத்து கோவில் கட்டியுள்ளார்.


இந்த கோவிலின் கும்பாபிஷேகம் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இதில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களின் மனைவி துர்கா ஸ்டாலின் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து இருக்கிறார்.
Next Story






