என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தனது கணவரின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகை தீபிகா படுகோனே, வீடியோ வெளியிட்டு சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.
    பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் இன்று தனது 36-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில், நடிகை தீபிகா படுகோனே, கணவர் ரன்வீர் சிங்குடன் நடனமாடிய வீடியோவை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

    அவர் வெளியிட்ட வீடியோவில் இருவரும் யஷ் ராஜ் முக்தே இசையமைப்பில் ஷாஹனாஸ் கில் பாடிய பாடலுக்கு நடனமாடியிருந்தனர். மேலும், அந்த வீடியோவின் தலைப்பில் உங்கள் பிறந்த நாள் என்பதால் சமாதானம் செய்கிறேன். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். எனக்கு மிகவும் பிடித்த நபர் நீங்கள் என ரன்வீர் சிங்கை டேக் செய்துள்ளார். 

    விக்ரமின் கோப்ரா படத்தில் நடித்துவரும் நடிகை மியா ஜார்ஜ், தொழில் அதிபர் அஸ்வின் பிலிப்பை கிறிஸ்தவ முறைப்படி கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
    தமிழில் அமரகாவியம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் மியா ஜார்ஜ். இன்று நேற்று நாளை, வெற்றிவேல், ஒரு நாள் கூத்து , எமன் உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்துள்ளார். இவருக்கும், கேரளாவை சேர்ந்த தொழில் அதிபர் அஸ்வின் பிலிப்புக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது.

    மியா
    குழந்தையுடன் மியா ஜார்ஜ்

    இந்நிலையில் இந்த தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை மியா ஜார்ஜ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். மேலும் குழந்தைக்கு லுகா ஜோசப் பிலிப் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். தற்போது இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் மற்றும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
    இந்திய திரையுலகில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் கேஜிஎப் 2 படத்தின் புதிய அறிவிப்பை இயக்குனர் பிரஷாந்த் நீல் வெளியிட்டு இருக்கிறார்.
    கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான 'கேஜிஎப்' முதல் பாகம் வெற்றி பெற்றதால், தற்போது 'கேஜிஎப் 2' இரண்டாம் பாகத்தை எடுத்து முடித்துள்ளார் இயக்குநர் பிரஷாந்த் நீல். யாஷுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் நடித்துள்ள 'கேஜிஎப் 2' டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

    இப்படம் ஜூலை 16 ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தால் பல மாநிலங்களில் தியேட்டர்கள் திறக்கப்படாததால், படம் வெளியாகுமா? வெளியாகாதா? என்று எதிர்பார்ப்புகள் கிளம்பி இருந்தது.

    இந்த நிலையில், புதிய வெளியீட்டு தேதி விரைவில் தெரிவிக்கப்படும் என்று இயக்குநர் பிரஷாந்த் நீல் அறிவித்திருக்கிறார். அவர், இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் 'தியேட்டர்களில் கேங்ஸ்டர்கள் நிறைந்திருக்கும்போதுதான் மான்ஸ்டர் வருவார். அவர் வரும் புதிய தேதியை விரைவில் அறிவிப்போம்' என்று அதிகாரபூர்வமாக தெரிவித்திருக்கிறார்.


    பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் அக்‌ஷய் குமார் அடுத்ததாக பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனருடன் மீண்டும் இணைய இருக்கிறார்.
    இந்தியாவின் பிரபல இயக்குநர்களில் ஒருவராக அறியப்படுபவர் பிரியதர்ஷன். இவரின் இயக்கத்தில் கடந்த ஆண்டே மோகன்லால் நடிப்பில் 'மரக்கையர்' படம் தயாராகிவிட்டது. கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்ட இப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தற்போது இந்தியில் 'ஹங்கமா 2' படத்தை இயக்கி முடித்து இருக்கும் பிரியதர்ஷன், அடுத்ததாக அக்‌ஷய் குமாரை வைத்து படம் இயக்க இருக்கிறார். 

    அக்ஷய் குமார்
    பிரியதர்ஷன் - அக்ஷய் குமார்

    பிரியதர்ஷன் - அக்‌ஷய் குமார் கூட்டணியில் வெளிவந்த "ஹேரா பேரி", "கரம் மசாலா", "பூல் புலையா" போன்ற படங்கள் மெகா ஹிட் அடித்தன. தற்போது இந்த கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமான நடிகை சனம் ஷெட்டிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய மர்ம நபர் கைது செய்யப்பட்டார்.
    அம்புலி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சனம் ஷெட்டி. பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர். இந்நிலையில் இவரது வாட்ஸ் ஆப் மற்றும் இன்ஸ்டாகிராமிற்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தொடர்ந்து ஆபாச மெசேஜ்கள் மற்றும் போட்டோக்களை அனுப்பி வருவதாகவும், அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அடையாறு சைபர் பிரிவில் புகார் அளித்தார்.

    சனம் ஷெட்டி

    இந்நிலையில் ஆபாச மெசேஜ்கள் அனுப்பியதாக திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ராய் ஜான்பால் (21) என்பவரை சைபர் பிரிவு போலீசார் கைது செய்து திருவான்மியூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தற்போது ராய் ஜான்பாலிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து இருக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணன், தற்போது சின்னத்திரை நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார்.
    பிரபல நடிகையான வனிதா, ரம்யா கிருஷ்ணன் நடுவராக இருக்கும் பிக்பாஸ் ஜோடிகள் ரியாலிட்டி ஷோவில் நடனம் ஆடி வந்தார். இந்நிலையில் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக சில தினங்களுக்கு முன்பு வனிதா அறிக்கை வெளியிட்டார்.

    அதில் சீனியர் ஒருவர் தன்னை அவமரியாதை செய்யும் விதமாக நடத்தியதாக பெயர் குறிப்பிடாமல் கூறியிருந்தார். ஆனால் அவர் குறிப்பிட்டது ரம்யா கிருஷ்ணன் பற்றித்தான் என்று கூறப்பட்டது.

    வனிதா - ரம்யா

    இந்நிலையில், “பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் என்ன நடந்ததென்று வனிதாவிடம் தான் கேட்க வேண்டும். சொல்லப்போனால் அதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை. இதுகுறித்து நான் கருத்து சொல்ல வேண்டும் என்றால் 'நோ கமெண்ட்ஸ் என்று தான் சொல்வேன்” என்று ரம்யா கிருஷ்ணன் பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
    திரையுலகில் 50 படங்களில் நடித்து இருக்கும் நடிகை ஹன்சிகா, அடுத்ததாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடிக்க இருக்கிறார்.
    தமிழில் பிரபல நடிகையாக இருப்பவர் ஹன்சிகா. இவர் நடித்துள்ள 50 வது திரைப்படம் மஹா. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தில், சிம்பு, ஶ்ரீகாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. 

    இந்நிலையில் ஹன்சிகா நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தெலுங்கில் நடிக்கிறார். இப்படத்திற்கு 'மை நேம் இஸ் ஸ்ருதி' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

    ஹன்சிகா

    இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது. ஸ்ரீனிவாஸ் ஓம்கர் என்பவர் இயக்கும் இப்படம், ஒரு பெண் எதிர்கொள்ளும் அத்தனை பிரச்சனைகளுக்கும் ஒரு ஆண் எப்படி பொறுப்பாகிறான் என்பதை மையமாக வைத்து உருவாக்க இருக்கிறார்கள்.
    அறிமுக இயக்குனர் தமிழ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகி இருக்கும் ‘டாணாக்காரன்’ படத்தின் முன்னோட்டம்.
    இந்திய திரையுலகில் இதுவரை வெளிவராத ஒரு கதையில், விக்ரம் பிரபு நடித்து இருக்கிறார். ‘டாணாக் காரன்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் தமிழ் இயக்கி உள்ளார். இவர், இயக்குனர் வெற்றிமாறனிடம் ‘வடசென்னை’, ‘விசாரணை’, ‘அசுரன்’ ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்

    இப்படத்தில் விக்ரம் பிரபுவின் ஜோடியாக அஞ்சலி நாயர் நடித்து இருக்கிறார். லால் வில்லனாக வருகிறார். போஸ் வெங்கட், முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். எஸ்.ஆர்.பிரபு தயாரித்து இருக்கிறார். 

    விக்ரம் பிரபு
    விக்ரம் பிரபு

    ‘டாணாக்காரன்’ பற்றி இயக்குனர் தமிழ் கூறியதாவது: “தமிழ்நாட்டில், 1997-ல் நடந்த ஒரு உண்மை சம்பவத்தைக் கருவாகக் கொண்ட படம் இது. போலீஸ் வேலைக்குச் செல்லும் ஒரு இளைஞர், பயிற்சியின்போது சந்திக்கும் சம்பவங்களே கதை. இது, இந்திய சினிமாவில் இதுவரை யாரும் சொல்லாத கதை.

    51 நாட்கள் ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடத்தி முடித்து விட்டோம். படத்தின் இறுதிக்கட்ட வேலைகளும் முடிவடைந்தன. படத்தை விரைவில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறோம்.” என தெரிவித்தார்.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் தனுஷ், அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
    நடிகர் தனுஷை வைத்து யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்தவர் மித்ரன் ஜவஹர். இவர் நீண்ட இடைவெளிக்கு பின் தனுஷுடன் மீண்டும் இணைய உள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். கடந்த 6 ஆண்டுகளாக இணைந்து பணியாற்றாமல் இருந்த, அனிருத்தும் தனுஷும் இப்படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர்.

    மித்ரன் ஜவஹர்
    மித்ரன் ஜவஹர்

    இந்நிலையில், இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மூன்று ஹீரோயின்கள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் அவர்கள் யார் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நடிகர் தனுஷ் தற்போது கார்த்திக் நரேன் இயக்கும் ‘டி 43’ படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ள தனுஷ், அதன் பின்னர் மித்ரன் ஜவஹர் இயக்கும் படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது.
    ஒளிப்பதிவு சட்டத்திருத்த வரைவு மசோதா தொடர்பாக மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத்துக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
    ஒளிப்பதிவு சட்டத்திருத்த வரைவு மசோதாவை கடந்த ஜூன் 18-ம் தேதி வெளியிட்டது மத்திய அரசு. அந்த மசோதா வெளியானதிலிருந்து கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என பல்வேறு திரையுலகை சேர்ந்த கலைஞர்கள் தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள். தமிழ் திரையுலகில் இந்த மசோதாவுக்கு கமல், சூர்யா, கவுதம் மேனன், கார்த்திக் சுப்புராஜ், விஷால், கார்த்தி உள்ளிட்ட பலரும் தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்து உள்ளனர்.

    நேற்று தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ராமசாமி, நடிகர் கார்த்தி, நடிகை ரோகிணி ஆகியோர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, ஒளிப்பதிவு சட்டத்திருத்த வரைவு மசோதா தொடர்பாக தங்களுடைய கோரிக்கைகளை முன்வைத்து ஆதரவு கோரினர்.

    மு.க.ஸ்டாலின்
    மு.க.ஸ்டாலின்

    இந்நிலையில், மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத்துக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அந்த கடிதத்தில், “கருத்து சுதந்திரத்தை பறிக்கும் ஒளிப்பதிவு வரைவு திருத்த மசோதா, மாநில அரசுகளின் அதிகாரங்களையும் குறைக்கிறது. உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தங்கள், மத்திய திரைப்பட சான்றிதழ் வாரிய அதிகாரத்தையும் குறைக்கிறது. வயது வாரியாக சென்சார் சான்று வழங்குவதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. எனவே இந்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
    நெல்சனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வரும் கவின், பீஸ்ட் படப்பிடிப்பின் போது நடந்த சுவாரஸ்ய சம்பவங்களை பகிர்ந்துள்ளார்.
    ‘சரவணன் மீனாட்சி’ என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர் கவின். இதையடுத்து படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த கவின், ‘நட்புன்னா என்னானு தெரியுமா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார்.

    அதைத்தொடர்ந்து பிக்பாஸ் 3வது சீசனில் கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்களைப் பெற்ற அவர், தற்போது இயக்குனர் நெல்சனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். நெல்சன் இயக்கத்தில் தற்போது பீஸ்ட் படம் உருவாகி வருகிறது. இதில் விஜய் ஹீரோவாக நடிக்கிறார். 

    கவின்
    கவின்

    இந்த படத்திலும் உதவி இயக்குனராக பணியாற்றி வரும் கவின், பீஸ்ட் படப்பிடிப்பின் போது நடந்த சுவாரஸ்ய சம்பவங்களை பகிர்ந்துள்ளார். அதன்படி, பீஸ்ட் படப்பிடிப்பு துவங்கியதில் இருந்து நடிகர் விஜய், செட்டில் இருப்பவர்கள் அனைவரிடமும் இயல்பாக பழகியதாக கூறியுள்ள கவின், மேலும் தனது நடிப்பில் வெளியான ‘அஸ்க் மாரோ’ என்கிற ஆல்பம் பாடலை பார்த்து ‘செம்மையா இருந்தது’ என விஜய் பாராட்டியதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.  
    மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்க உள்ள புதிய படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.
    விக்ரமின் மகன் துருவ், ஆதித்ய வர்மா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார். தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்காக வெளியான இப்படத்தில், துருவ் விக்ரமின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. 

    இதையடுத்து தற்போது, தனது தந்தையுடன் இணைந்து ‘சியான் 60’ படத்தில் நடித்து வருகிறார் துருவ். கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

    துருவ் விக்ரம்
    துருவ் விக்ரம்

    இதையடுத்து நடிகர் துருவ் விக்ரம், மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். கபடி விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தை இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×