என் மலர்
சினிமா செய்திகள்
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி, இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில், 5-வது சீசனில் சில மாற்றங்களை செய்துள்ளதாக கூறப்படுகிறது
தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை தமிழில் நான்கு சீசன்கள் முடிந்துள்ளன. முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகின், நான்காவது சீசனில் ஆரி ஆகியோர் பிக்பாஸ் டைட்டிலை ஜெயித்தனர்.
வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஜூன் மாதத்தில் தொடங்கி அக்டோபர் வரை நடத்தப்படும். ஆனால் கடந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக லாக்டவுன் போடப்பட்டதால், பிக்பாஸ் 4 நிகழ்ச்சி திட்டமிட்டபடி ஜூன் மாதம் தொடங்கப்படவில்லை. பின்னர் அக்டோபர் மாதம் தொடங்கி இந்தாண்டு ஜனவரி 16-ந் தேதி வரை ‘பிக்பாஸ் 4’ நடைபெற்றது.

கமல்ஹாசன்
கொரோனா 2-வது அலை பரவல் காரணமாக பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியும் இந்தாண்டு அக்டோபர் மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. பிக்பாஸ் 5-வது சீசனில் சில அதிரடி மாற்றங்களை செய்ய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்துள்ளார்களாம். கடந்த 4 சீசன்களிலும் ஒரே மாதிரியான டாஸ்க்குகள் இடம்பெற்ற நிலையில், இனிவரும் 5-வது சீசனில் புதுவிதமான டாஸ்க்குகளை கொடுக்க திட்டமிட்டுள்ளார்களாம்.
கடந்த சீசனில் தொலைக்காட்சி பிரபலங்கள் அதிகளவில் இடம்பெற்றிருந்தனர். எனவே 5-வது சீசனில் அதிகளவில் சினிமா பிரபலங்களை களமிறக்க உள்ளார்களாம். மற்ற சீசன்களை விட இந்த சீசனுக்கான பட்ஜெட்டும் அதிகம் என கூறப்படுகிறது.
படத்தில் தனக்கு மகளாக நடித்த நடிகை ஒருவரை, நடிகர் அமீர்கான் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் அமீர்கான் கடந்த 2005-ம் ஆண்டு கிரண் ராவ் என்பவரை திருமணம் செய்தார். இவர்களின் 15 வருட திருமண வாழ்க்கை தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. அமீர்கான் மற்றும் அவரது மனைவி கிரண் ராவ் ஆகிய இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாக சமீபத்தில் அறிவித்தனர். ஆனால் பிரிவதற்கான காரணத்தை அவர்கள் இருவரும் வெளியிட வில்லை.

பாத்திமா சனா சேக், அமீர்கான்
இந்நிலையில் நடிகர் அமீர்கான், தங்கல் படத்தில் தனக்கு மகளாக நடித்த பாத்திமா சனா சேக்கை, விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக பாலிவுட் வட்டாரத்தில் செய்திகள் வலம் வருகின்றன. நடிகர் அமீர்கானும், பாத்திமாவும் காதலிப்பது பிடிக்காமல் தான் கிரண் ராவ் அவரை பிரிந்ததாக கூறப்படுகிறது. நடிகர் அமீர்கானுக்கு தற்போது 56 வயது ஆகிறது. அவர் காதலிப்பதாக கூறப்படும் பாத்திமாவுக்கு வயது 29, என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் திரையுலகில் இளம் நடிகராக வலம் வரும் அதர்வா, அடுத்ததாக பிரபல இயக்குனரின் படத்தில் நடிக்க உள்ளாராம்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்த முரளியின் மூத்த மகன் அதர்வா. பாணா காத்தாடி படம் மூலம் அறிமுகமானவர் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். இவர் கைவசம் தள்ளிப் போகாதே, குருதி ஆட்டம், ஒத்தைக்கு ஒத்த, அட்ரஸ் போன்ற படங்கள் உள்ளன. இதில் தள்ளிப் போகாதே, குருதி ஆட்டம் போன்ற படங்கள் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

இந்நிலையில், நடிகர் அதர்வா நடிக்க உள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி வாகை சூடவா, களவாணி போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சற்குணத்துடன் நடிகர் அதர்வா இணைந்து பணியாற்ற உள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே ‘சண்டிவீரன்’ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

சற்குணம், அதர்வா
அதர்வா - சற்குணம் இணையும் புதிய படம் விளையாட்டை மையப்படுத்தி உருவாக உள்ளதாகவும், இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகை அஜித்தை வைத்து இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர், அடுத்ததாக இயக்கி உள்ள இந்தி படம் ஓடிடியில் ரிலீசாக உள்ளது.
`குறும்பு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் விஷ்ணுவர்தன். தொடர்ந்து, `அறிந்தும் அறியாமலும்', `பட்டியல்', `சர்வம்' உள்ளிட்ட படங்களை இயக்கினார். அஜித்தின் `பில்லா', `ஆரம்பம்' படங்களையும் இயக்கினார். கடைசியாக `யட்சன்' படத்தை இயக்கியிருந்தார்.
இதை தொடர்ந்து மூன்று வருடங்களாக படம் எதுவும் இயக்காமல் இருந்த விஷ்ணுவர்தன், தற்போது இந்தியில் ஒரு படத்தை இயக்கி இருக்கிறார். கார்கில் போரின்போது வீர மரணம் அடைந்த கேப்டன் விக்ரம் பத்ராவின் வாழ்க்கையை மையப்படுத்தி ஷெர்ஷா எனும் படம் உருவாகி இருக்கிறது. அதில் விக்ரம் பத்ரா கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்கோத்ரா நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடித்துள்ளார்.

விஷ்ணுவர்தன், அஜித்
இப்படத்தின் பணிகள் அனைத்தும் கடந்தாண்டே முடிந்து ரிலீசுக்கு தயாராகிவிட்டாலும், கொரோனா அச்சுறுத்தலால் வெளியாகாமல் இருந்தது. திரையரங்குகள் திறப்பதற்கான சாத்தியகூறுகள் இப்போதைக்கு இல்லை என்பதால், இப்படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. வருகிற ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று இப்படம் வெளியாகும் எனத் தெரிகிறது.
அஜித் நடிக்கும் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியீட்டு தேதி குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.
அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் வலிமை. எச்.வினோத் இயக்கும் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடிக்கின்றனர். இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இன்னும் ஒரு சண்டை காட்சி மட்டுமே எஞ்சியுள்ளது. இதனை விரைவில் படமாக்க உள்ளனர்.
வலிமை படத்தின் அப்டேட்டுக்காக அஜித் ரசிகர்கள், ஓராண்டுக்கு மேலாக காத்திருக்கின்றனர். அவர்களை திருப்தி படுத்தும் வகையில் இந்த மாதம் வலிமை பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

அஜித் - எச்.வினோத்
அதன்படி வருகிற ஜூலை 15-ந் தேதி வலிமை பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏனெனில் அஜித் - எச்.வினோத் கூட்டணியில் இதற்கு முன் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் ரிலீஸ் அப்டேட் கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை 15-ந் தேதி வெளியிடப்பட்டது. அதனால் வலிமை படத்தின் அப்டேட்டும் அன்றைய தினம் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகி உள்ள ‘கே.ஜி.எப். 2’ படத்தின் ரிலீஸ் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.
பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான படம் ‘கே.ஜி.எப்’. இப்படம் பிரம்மாண்டமான வசூல் சாதனை செய்தது. தற்போது இந்த படத்தின் 2வது பாகம் உருவாகி வருகிறது. இதில் யாஷுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ரவீனா டண்டன் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.
இப்படத்தை முதலில் ஜுலை 16-ந் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், கொரோனா 2-வது அலை காரணமாக படத்தின் பணிகள் முடிவடையாததால் படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்படுவதாக படக்குழு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

யாஷ்
இந்நிலையில், இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி முதல் பாகம் வெளியானதைப் போலவே கிறிஸ்துமஸ் விடுமுறை நாட்களில் இப்படத்தை வெளியிட படக்குழு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. அதற்குள் இயல்புநிலை திரும்பி, திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதி கிடைத்துவிடும் என்பதால், கிறிஸ்துமஸ் விடுமுறை நாட்களில் வெளியிடுவது படத்திற்கு பிளஸ் ஆக அமையும் என படக்குழு கருதுகிறதாம்.
நடிகை சமந்தா நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகி வெற்றி பெற்ற படத்தை தற்போது இந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர்.
தமிழில் வெற்றி பெற்ற படங்களுக்கு தற்போது இந்தியில் மவுசு அதிகரித்துள்ளது. அதன்படி மாஸ்டர், கைதி, விக்ரம் வேதா, அந்நியன், மாநகரம், கோலமாவு கோகிலா, ஜிகர்தண்டா, துருவங்கள் பதினாறு, ஆரண்ய காண்டம் ஆகிய படங்கள் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில், நடிகை சமந்தா நடித்துள்ள ‘யூ டர்ன்' படமும் இந்தியில் ரீமேக் ஆக உள்ளது.

சமந்தா
யூ டர்ன் படம் தமிழ், தெலுங்கில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் சமந்தாவின் நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன. இதன் இந்தி ரீமேக்கில் சமந்தா கதாபாத்திரத்தில் நடிகை அலயா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. படத்தின் இயக்குனர் மற்றும் இதர நடிகர், நடிகை விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.
நடிகர் திலீப் குமார் மறைவுக்கு பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆகியோர் டுவிட்டர் வாயிலாக இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பழம்பெரும் இந்தி நடிகர் திலீப்குமார் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை காலமானார். அவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ஆகியோர் டுவிட்டர் வாயிலாக இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “நடிகர் திலீப் குமாரின் மறைவு கலைத்துறைக்கு பேரிழப்பாகும். அவர் திரைத்துறை ஜாம்பவானாக என்றும் நினைவுகூரப்படுவார். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், எண்ணற்ற அபிமானிகளுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தனது டுவிட்டர் பதிவில், “இந்திய சினிமாவில் திலீப் குமாரின் பங்களிப்பு அடுத்த தலைமுறைகளின் நினைவில் எப்போதும் இருக்கும். திலீப் குமாரின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்” என கூறியுள்ளார்.
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் இந்தி நடிகர் திலீப்குமார், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பழம்பெரும் இந்தி நடிகர் திலீப்குமார். இவர் 1944-ல் சினிமாவில் அறிமுகமாகி தேவதாஸ், கங்கா யமுனா, ஆன், தஸ்தான் உள்பட பல வெற்றி படங்களில் நடித்து இருக்கிறார். வயது மூப்பு காரணமாக இவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. அந்த வகையில் கடந்த வாரம், இவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

திலீப்குமார்
இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த திலீப்குமார், இன்று காலை காலமானார். இவருக்கு வயது 98. திலீப் குமாரின் மறைவு பாலிவுட் திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்தியத் திரையுலகின் மகத்தான நடிகர்களில் ஒருவரான திலீப் குமார், 1994-ல் தாதாசாகேப் பால்கே விருதை வென்றார். மத்திய அரசின் பத்ம பூஷன், பத்ம விபூஷன் பட்டங்களும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதுகளை அதிகமுறை வென்றுள்ளார். 1944-ல் நடிகராக அறிமுகமாகி, 50 ஆண்டுகளில் 65 படங்களில் நடித்துள்ளார்.
சூப்பர்மேன் பட இயக்குனர் ரிச்சர்ட் டோனர் மறைவுக்கு ஹாலிவுட் நடிகர் நடிகைகள், இயக்குனர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குனர் ரிச்சர்ட் டோனர். இவர் 1978-ல் வெளியான சூப்பர்மேன் படத்தை இயக்கி பிரபலமானார். சூப்பர் மேன் இரண்டாம் பாகத்தையும் இயக்கி வெளியிட்டார். இந்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது. வசூலும் குவித்தது. தற்போதைய அனைத்து சூப்பர்மேன் படங்களுக்கும் இவை முன்னோடி படங்களாக கொண்டாடப்படுகின்றன.

ரிச்சர்ட் டோனர்
இவர் லீத்தல் வெப்பன் படத்தின் 4 பாகங்களை உருவாக்கினார். இதுதவிர த ஓமன், த கூனீஸ், அசாசின்ஸ் உள்பட பல வெற்றி படங்களையும் இயக்கி உள்ளார். ரிச்சர்ட் டோனருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 91. ரிச்சர்ட் டோனர் மறைவுக்கு ஹாலிவுட் நடிகர் நடிகைகள், இயக்குனர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
சினிமாவில் தோல்வியைச் சந்தித்த கோவி.மணிசேகரன், டெலிவிஷனுக்கு தொடர்கள் எழுதி வெற்றி பெற்றார்.
சினிமாவில் தோல்வியைச் சந்தித்த கோவி.மணிசேகரன், டெலிவிஷனுக்கு தொடர்கள் எழுதி வெற்றி பெற்றார்.
"மனோரஞ்சிதம்'' திரைப்படம் வெளிவராமல் போனதால் மணிசேகரன் மனம் வருந்தினார் என்றாலும், சினிமா மோகம் அவரை விடவில்லை.
கீதையை அடிப்படையாக வைத்து அவர் எழுதிய "யாகசாலை'' என்ற நாவலை சொந்தமாக படமாக்க எண்ணினார். 1,200 பக்கங்கள் கொண்ட பெரிய நாவல் இது.
"இலக்கிய உலகில் பேரும் புகழுமாக இருக்கிறீர்கள். சினிமா நமக்குத் தேவையா?'' என்று மனைவி சொன்னதை அவர் கேட்கவில்லை.
வேகமாக வசனங்களை எழுதி முடித்தார்.
இவருடைய நாவல்களில் மனதைப் பறிகொடுத்து, இவருக்கு நண்பரானவர் ஜெமினிகணேசன். அவருக்கு படத்தில் ஒரு முக்கிய வேடம் கொடுக்கத் தீர்மானித்தார்.
இதன்பின் நடந்தது பற்றி மணிசேகரன் கூறியதாவது:-
"யாகசாலை நாவலைப் படித்துப் பாராட்டியவர், எம்.ஜி.ஆர். நான் அந்த நாவலைப் படமாக்கப்போகிறேன் என்பதை அறிந்து `இது புரட்சிகரமான நாவல். படமாக வந்தால், நாவலின் ஜீவன் கெட்டுப்போகும். படமாக்கும் முயற்சியைக் கைவிடுங்கள் என்று கூறினார்.
நான் கேட்கவில்லை. அதாவது, என் விதி, அவர் அறிவுரையைக் கேட்க மறுத்து விட்டது!
படப்பிடிப்பைத் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் தொடர்ந்தன.
இந்தப் படத்தின் கதாநாயகி, நல்ல குடும்பத்தில் பிறந்து, விதி வசத்தால் கற்பை இழக்க, பிறகு அதுவே தொழிலாய் போய்விட, கடைசியில் நோய்வாய்படுகிறாள்.
இந்தக் காலக்கட்டத்தில் "சிவப்பு ரோஜாக்கள்'' படத்தில் அறிமுகமாகியிருந்த வடிவுக்கரசிக்கு, கதாநாயகி வேடம் கொடுத்தேன்.
படத்தில் இரு கதாநாயகர்கள். ஒருவர், கீதையில் வரும் கண்ணன் பாத்திரத்துக்கு ஒப்பானவர். அந்தக் கண்ணன் தேர் ஓட்டினான். இந்த கண்ணன் குதிரை ஓட்டுபவன். இந்தப் பாத்திரத்துக்கு பொருத்தமான நடிகர் அமையவில்லை. பலபேரை பார்த்தும் திருப்தி ஏற்படவில்லை.
இன்று திரை உலகிலும், அரசியலிலும் விஸ்வரூபம் எடுத்துள்ள விஜயகாந்த், அப்போதுதான் திரைப்பட உலகுக்கு வந்திருந்தார். அவரை என்னுடைய `கண்ணன்' கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்த நேரத்தில், விதி விளையாடியது.
என் கையில் போதிய பணம் இல்லை. படப்பிடிப்புக்கு செல்ல, மேலும் ரூ.30 ஆயிரம் தேவைப்பட்டது. அப்போது ஒரு புதுமுக நடிகர் என்னிடம் வந்தார். நல்ல கதாபாத்திரம் கொடுத்தால் ரூ.30 ஆயிரம் `பைனான்ஸ்' செய்வதாகக் கூறினார். இதனால் நான் விஜயகாந்தை இழக்க நேரிட்டது. அன்று நான் அவரை பயன்படுத்தி இருந்தால், ஒரு சரித்திரத்தின் முதல் அத்தியாயத்தைப் பார்த்தவனாக இருந்திருப்பேன். விதியின் சதியால், அந்த வாய்ப்பு எனக்குக் கிட்டாமல் போயிற்று.
படப்பிடிப்பு தொடங்கியது. முதலில் வெளிப்புறக் காட்சிகளை எடுக்கத் தீர்மானித்தேன். மதராந்தகத்தின் அருகேயுள்ள கோட்டைக்காடு கிராமத்தில் படப்பிடிப்பு நடந்தது. ஒய்.ஜி.மகேந்திரன், கே.நட்ராஜ், டி.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் நடித்தனர்.
மேற்கொண்டு, ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டபோது, மீண்டும் பணமுடை ஏற்பட்டது. அப்போது, இப்ராகிம் என்ற தயாரிப்பாளர் என்னை நாடி வந்தார். என்னுடைய "அகிலா'' என்ற நாவல், நடிகை சுஜாதாவுக்கு மிகவும் பிடித்தமானதாகும். அவர் சொல்லி, அக்கதையை என்னுடைய இயக்கத்தில் படமாக்க விரும்பி, இப்ராகிம் வந்திருந்தார்.
வெளிப்படங்களுக்கு வசனம் எழுதி, டைரக்ட் செய்வதில்லை என்ற முடிவுக்கு வந்திருந்தேன். அதை அவரிடம் தெரிவித்து, "வேண்டுமானால் கதையை வாங்கிக் கொண்டு, நீங்களே தயாரியுங்கள். கூடுதலோ, குறைவோ, ஒரு தொகையை தவணை முறையில் கொடுக்காமல் மொத்தமாக கொடுத்துவிடவேண்டும்'' என்று தெரிவித்தேன்.
அதன்படி அவர்கள் ஒரே `செக்' கொடுத்தார்கள். அந்தத் தொகை, "யாகசாலை'' படத்தை தொடர்ந்து உருவாக்க உதவியது.
யாகசாலை தயாராகிக் கொண்டிருந்தபோதே, "அகிலா'' கதை "மீண்டும் பல்லவி'' என்ற பெயரில் படமாக வெளிவந்தது. `கதை: கோவி.மணிசேகரன்' என்று டைட்டிலில் போட்டார்கள்.
"யாகசாலை'' 95 சதவீதம் முடிந்து விட்டது. ஜெமினிகணேசன் சம்பந்தப்பட்ட காட்சிகள்தான் பாக்கி. இந்த நிலையில் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், அவருடைய சம்மதத்தைப் பெற்று அந்தப் பாத்திரத்தில் பூரணம் விஸ்வநாதனை நடிக்க வைத்தேன். அவரும் நன்றாக நடித்தார்.
படம் ரிலீஸ் தேதியை நெருங்கியபோது, ஒரு கடன்காரர் வந்து மென்னியைப் பிடித்தார். படத்தை, "அவுட்ரைட்'' முறையில் நான் விற்று விட்டதால், படம் வெளியான பின்னர் பணம் வராது என்று அவர் நினைத்து விட்டார் போலும்!
வீடு கட்டுவதற்காக வாங்கியிருந்த நிலத்தை விற்று, கடனை அடைத்தேன்.
"யாகசாலை'' ரிலீஸ் ஆகியது. நான்கே நாளில் ரிசல்ட் தெரிந்து விட்டது. படம் "அவுட்!'' சென்னை எமரால்டு தியேட்டரில் மட்டும் நான்கு வாரம் ஓடியது.
அன்றே சினிமாவுக்கு தலைமுழுகத் தீர்மானித்தேன். ஒரு சனிக்கிழமையன்று, எண்ணை வாங்கி வரச்செய்து, தலைமுழுகினேன்!
என்னிடம் புகழ்வாய்ந்த - உறுதியான பேனா இருந்ததால், என் வாழ்க்கை தப்பியது. இல்லையென்றால், `நடுத்தெரு நாராயணன்' ஆகியிருப்பேன். நான் வணங்கும் சக்தி என்னைக் காப்பாற்றினாள்.
தொடர்ந்து இலக்கியப்பணிகளில் ஈடுபட்டேன்.
சென்னை தொலைக்காட்சிக்கு, புதுமுகங்களை வைத்து நான் தயாரித்த "ஊஞ்சல் ஊர்வலம்'' என்ற தொடர், பெரிய வெற்றி பெற்றது.
அதன் பிறகு திரிசூலி, அக்னிப் பரீட்சை முதலான தொடர்களும் வெற்றி பெற்றன.
பெரிய திரையில் வெற்றி பெறாமல் போன நான், சின்னத்திரையில் வெற்றி கண்டேன்.
சினிமாவில் இருந்து விடுபட்டு இலக்கியத்தில் கவனம் செலுத்தியதால், 3,571 பாடல்கள் கொண்ட "கோவி.ராமாயண''த்தை என்னால் எழுத முடிந்தது.
நான் விதி பற்றி பல முறை குறிப்பிட்டேன். நமக்கு நல்ல வாய்ப்பு வரும்போது, விதி குறுக்கிட்டு கெடுத்து விடும். உதாரணத்துக்கு ஒன்று சொல்வேன்.
இந்நாளைய இணையற்ற நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், 1973-ல் சினிமா உலகில் நுழைய முயற்சி செய்து கொண்டிருந்த சிவாஜிராவ். நான் பாலசந்தரிடம் பயிற்சி பெற்றுவிட்டு, சினிமா தயாரிக்கலாம் என்று இருந்த நேரம்.
ரஜினியுடன் நடிப்பு பயின்ற கோபால் என்ற நண்பர், ரஜினிக்கு வாய்ப்பு கேட்டு வந்தார். படம் தொடங்கும்போது நிச்சயம் அவர் இடம் பெறுவார் என்று கூறினேன்.
ரஜினி என் வீட்டுக்கு வருவார். சிகரெட் வித்தைகளை பிள்ளைகளிடம் காட்டி மகிழ்விப்பார்.
இதற்கிடையே ரஜினி, "அபூர்வராகங்கள்'' படத்தில் அறிமுகம் ஆகிவிட்டார். ஏராளமான படங்களுக்கு ஒப்பந்தம் ஆனார்.
"தென்னங்கீற்று'' படம் ஆரம்பம் ஆனதும், ரஜினியிடம் பேசினேன். "குரு! இருபது நாட்களுக்கு என்னை விட்டு விடுங்கள். அப்புறம் ஒரு வாரம் பெங்களூர் வந்து உங்கள் மனதைக் குளிரச் செய்கிறேன்'' என்றார்.
ஆனால், படத் தயாரிப்பாளரோ இதற்கு சம்மதிக்கவில்லை. ஏற்கனவே, மற்ற நடிகர் - நடிகைகளிடம் பெற்ற `கால்ஷீட்'படி உடனே படத்தைத் தொடங்க வேண்டும் என்றார். இதனால் என் படத்தில் ரஜினி இடம் பெறவில்லை. இதை விதி என்று சொல்லாமல், வேறு எப்படி சொல்வது?
சினிமா உலகில் நுழைந்து விடவேண்டும் என்ற ஆசை கொண்ட இளைஞர்களும், இளம் நங்கையர்களும் ஏராளம். அவர்களுக்கு ஒன்று
சொல்வேன்:`சினிமா என்பது பல ரசவாத வித்தைக் தெரிந்த ஒரு அழகான மாயமோகினி. அந்த மோகினியிடம் சென்றால், மீள்வது அரிது. அந்த மோகினியின் வித்தையில் பாதியேனும் தெரிந்தவர்கள் தப்பித்து திரும்பி வரலாம்; அல்லது மோகினியை அடிமைப்படுத்தி, அவளைக் காதலிக்கச் செய்யலாம். அந்த வித்தை தெரியாதவர்கள் நுழைந்து விட்டால், அந்த மோகினி நம் ரத்தத்தை உறிஞ்சி, சக்கையாகத்தான்
துப்புவாள்!''இவ்வாறு கோவி.மணிசேகரன் கூறினார்.
மணிசேகரன் - சரசுவதி தம்பதிகளுக்கு அம்பிகாபதி, மாமல்லன், செல்வக்கண்ணன் என்ற மூன்று மகன்கள். பீலிவளை, அம்மங்கை, ஸ்ரீ, சமயபுரி, வானதி என்று ஐந்து மகள்கள்.
மூத்த மகன் அம்பிகாபதி, இளம் வயதில் காலமாகிவிட்டார். மற்ற 7 பேரும் படித்து, பட்டம் பெற்றவர்கள். எல்லோருக்கும் திருமணம் ஆகிவிட்டது

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமான நடிகை ஷிவானியின் புதிய புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற சீரியல் மூலம் நடிகையானவர் ஷிவானி நாராயணன். அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களிலும் ஹீரோயினாக நடித்தார். கடந்தாண்டு நடந்த பிக்பாஸ் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு மிகவும் பிரபலமானார்.

இந்த நிலையில் நடிகை ஷிவானி நாராயணன் இன்று விஜய் சேதுபதியை நேரில் சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஷிவானி நாராயணன் - விஜய் சேதுபதி
அந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பலரும் விஜய் சேதுபதியின் அடுத்த படத்தில் ஷிவானி நாராயணன் நடிக்க போகிறார் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.