என் மலர்
சினிமா

ரம்யா கிருஷ்ணன் - வனிதா
நோ கமெண்ட்ஸ்... வனிதா விலகல் குறித்து ரம்யா கிருஷ்ணன் கருத்து
தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து இருக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணன், தற்போது சின்னத்திரை நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார்.
பிரபல நடிகையான வனிதா, ரம்யா கிருஷ்ணன் நடுவராக இருக்கும் பிக்பாஸ் ஜோடிகள் ரியாலிட்டி ஷோவில் நடனம் ஆடி வந்தார். இந்நிலையில் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக சில தினங்களுக்கு முன்பு வனிதா அறிக்கை வெளியிட்டார்.

அதில் சீனியர் ஒருவர் தன்னை அவமரியாதை செய்யும் விதமாக நடத்தியதாக பெயர் குறிப்பிடாமல் கூறியிருந்தார். ஆனால் அவர் குறிப்பிட்டது ரம்யா கிருஷ்ணன் பற்றித்தான் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், “பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் என்ன நடந்ததென்று வனிதாவிடம் தான் கேட்க வேண்டும். சொல்லப்போனால் அதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை. இதுகுறித்து நான் கருத்து சொல்ல வேண்டும் என்றால் 'நோ கமெண்ட்ஸ் என்று தான் சொல்வேன்” என்று ரம்யா கிருஷ்ணன் பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
Next Story






