என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • தமிழ் திரையுலகின் பழம்பெரும் இசையமைப்பாளர் எஸ்.வி. ரமணனன்.
    • இவர் வயது மூப்பு காரணமாக இன்று காலமானார்.

    தமிழ் திரையுலகின் பழம்பெரும் இசையமைப்பாளரும், வானொலி விளம்பரங்களுக்கு பின்னணி குரல் கொடுத்தவருமான எஸ்.வி ரமணன், வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். இவர் இசையமைப்பாளர் அனிருத்தின் தாத்தா ஆவார். இவர் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட ஆவணப்படங்களையும் தயாரித்து உள்ளார். இவரது ஆவணப்படம் ஒன்றிற்கு நடிகர் ரஜினிகாந்த் பின்னணி குரல் கொடுத்துள்ளார்.

     

    எஸ்.வி. ரமணனன்

    எஸ்.வி. ரமணனன்

    சென்னை ஆர்.ஏ.புரத்தில் வசித்து வந்த எஸ்.வி. ரமணனனின் மறைவுக்கு ரசிகர்களும் திரைத்துறை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரது இறுதிச் சடங்கு இன்று மாலை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மக்கள் தொடர்பு கலையில் இவர் செய்த சாதனைக்காக டாக்டர் பட்டம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரூ.200 கோடி மோசடி வழக்கில் டெல்லி போலீஸார் மூன்றாவது முறையாக ஜாக்குலினுக்கு சம்மன் அனுப்பியிருந்தனர்.
    • தற்போது அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்ததாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார். அவருடன் தொடர்பு வைத்து இருந்ததாக இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீது குற்றம் சாட்டப்பட்டது. சமீபத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில் ஜாக்குலின் பெயரையும் குற்றவாளிகளோடு சேர்த்து இருந்தது. சுகேஷிடம் இருந்து ஜாக்குலின் ரூ.7.12 கோடியும், அமெரிக்காவில் உள்ள அவரது சகோதரி ரூ.1.26 கோடியும், ஆஸ்திரேலியாவில் உள்ள அவரது சகோதரன் ரூ.15 லட்சத்தையும் பெற்றுள்ளனர் என்று குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டிருந்தனர்.

     

    ஜாக்குலின் பெர்னாண்டஸ்

    ஜாக்குலின் பெர்னாண்டஸ்

    ஜாக்குலின் பெர்னான்டசுக்கு எதிராக டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு ஆகஸ்ட் 29-ம் தேதி, செப்டம்பர் 12-ம் தேதிகளில் விசாரணைக்கு ஆஜராகும் படி சம்மன் அனுப்பியது. ஆனால் இரண்டு சம்மனுக்கும் ஜாக்குலின் ஆஜராகவில்லை. ஏற்கனவே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டி இருப்பதால் ஆஜராக இயலாது என்று ஜாக்குலின் போலீசுக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். இதனை ஏற்றுக்கொண்ட போலீசார் விசாரணையை தள்ளி வைத்து, இன்னொரு தேதியில் ஆஜராக மீண்டும் புதிய சம்மன் அனுப்பப்படும் என்று போலீசார் தெரிவித்திருந்தனர். இதையடுத்து செப்டம்பர் 14-ம் தேதி காலை 11 மணிக்கு விசாரணைக்கு டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸ் ஆஜராகியிருந்தார்.

     

    ஜாக்குலின் பெர்னாண்டஸ்

    ஜாக்குலின் பெர்னாண்டஸ்

    இந்நிலையில் நடிகை ஜாக்குலின் பெர்னான்டசுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெங்கட் பிரபு.
    • இவர் கலந்துக் கொண்ட நிகழ்ச்சியில் பேசியது தற்போது வைரலாகி வருகிறது.

    சென்னையில் நடைப்பெற்ற குறும்பட விழாவில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குனர்கள் வசந்த், வெங்கட் பிரபு சிம்பு தேவன் கலந்துக் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளர்களுக்கு விருதுகளை வழங்கினர்.

     

    இயக்குனர்கள் வசந்த், வெங்கட் பிரபு, சிம்புதேவன்

    இயக்குனர்கள் வசந்த், வெங்கட் பிரபு, சிம்புதேவன்

    இந்த விழாவில் வெங்கட் பிரபு பேசியதாவது, இங்கிருக்கும் எல்லோரும் இந்த மேடையில் கைத்தட்டல் வாங்க வேண்டும் என்பது தான் எனது ஆசை. தெலுங்கு எனக்கு தெரியாது. ஆனால், தெலுங்கில் படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. தமிழ் நடிகர்கள் பலரும் அந்த படத்தில் நடிக்கிறார்கள். தெலுங்கில் படம் இயக்குவதன் மூலம் பல அனுபவங்கள் கிடைத்தது.

     

    விழாவில் பரிசு வழங்கிய இயக்குனர்கள்

    விழாவில் பரிசு வழங்கிய இயக்குனர்கள்

    சினிமாவிற்கு மொழி முக்கியமல்ல என்பதற்கு முருகதாஸ் மற்றும் பிரபுதேவா மாஸ்டர் சிறந்த உதாரணம். ஹிந்தியே தெரியாமல் படம் எடுத்து வெற்றி பெற்றார்கள். ஆங்கிலம் சரியாக தெரியாமல் பாலிவுட் படம் வரை செல்கிறார்கள். ஆகவே, சினிமாவிற்கு மொழி தடையில்லை. குறும்படம் இயக்குவது மிகவும் கஷ்டம் என்று கூறினார்கள். நானும் அதைத்தான் சொல்கிறேன். என்னைப் போன்ற இயக்குனர்களுக்கு குறும்படம் இயக்குவது கஷ்டம் தான். ஏனென்றால், 3 நிமிடங்களில் சொல்ல வேண்டிய விஷயங்களை சொல்ல வேண்டும்.

     

    தல, தளபதி ஒப்புக் கொண்டால் இருவரையும் வைத்து படம் இயக்குவதற்கு தயாராக உள்ளேன். மாநாடு படத்தில் சிம்புவிற்கு பில்ட்ப் இருக்காது. ஆனால், அவரை உயிரோட்டமுள்ள கதாபாத்திரமாக வெந்து தணிந்தது காடு படத்தில் இயக்குநர் கௌதம் மேனன் காட்டியிருப்பார். அப்படத்தை பார்த்து விட்டு சிம்புவை பாராட்டினேன். நாம் எப்போது அடுத்த படம் எடுக்க போகிறோம் என்று கேட்டார். அதற்காக சூழல் வரும்போது நிச்சயம் எடுப்போம் என்று கூறினேன்.

     

    வெங்கட் பிரபு

    வெங்கட் பிரபு

    மேலும், எனக்கு மட்டுமில்லை எல்லா இயக்குனர்களுக்குமே ஒரு படத்தைவிட அடுத்த படத்தை இன்னும் சிறப்பாக எடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஒரு இயக்குனருக்கு முற்றுப்புள்ளியே கிடையாது. 82 வயதிலும் படம் இயக்குகிறார்கள். கோவா படத்திற்கு ஹாலிடே என்று டேக் வைத்தோம். மங்காத்தா படத்திற்கு கேம் என்று வைத்தோம். அப்படியே மாநாடு படத்திற்கு பாலிட்டிக்ஸ் என்று வைத்தோம். எல்லா படங்களுக்கும் மாபெரும் வரவேற்பு கிடைத்தது மற்றும் டேக் வைப்பது வெங்கட்பிரபுவின் பாணி என்றானதால். அதைப் பின்பற்றி வருகிறேன் என்றார்.

    • இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் படம் இந்தியன் -2.
    • இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் தொடங்கி விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.

    இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தியன் திரைப்படம் ரசிகர்களிடன் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

     

    கமல் - ஷங்கர்

    கமல் - ஷங்கர்

    இதில் சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சில தினங்களுக்கு முன்பு 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது.


     


    பரிசு வழங்கிய கமல்
    பரிசு வழங்கிய கமல்

    இந்நிலையில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்திற்காக தயார்ப்படுத்திய தனது உடற்பயிற்சி பயிற்சியாளருக்கு ரெனால்ட் காரை கமல் பரிசளித்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் அமலாபால்.
    • பின்னர் மைனா, தெய்வதிருமகள், தலைவா, ராட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தார்.

    தமிழ் திரையுலகிற்கு சிந்து சமவெளி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் அமலாபால். அதன்பின்னர் மைனா, தெய்வதிருமகள், தலைவா, ராட்சசன் போன்ற பல வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

    அமலாபால்

    அமலாபால்

     

    இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான கடாவர் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் அமலாபால் தனது நீச்சல் உடை புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

     

    அமலாபால்

    அமலாபால்

    சில தினங்களாக அமலாபால் கவர்ச்சி காட்டும் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்த புகைப்படங்களை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

    • இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் படம் இந்தியன் -2.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தியன் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கமல்ஹாசன் நடிப்பில் 'இந்தியன்-2' திரைப்படத்தின் பணிகள் தொடங்கின. பின்னர் ஒரு சில காரணங்களால் இதன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

     

    களரிப் பயிற்சியில் காஜல் அகர்வால்

    களரிப் பயிற்சியில் காஜல் அகர்வால்


    இந்நிலையில், இந்த படப்பிடிப்பில் கமல்ஹாசன் மற்றும் காஜல் அகர்வால் கலந்துக் கொண்டுள்ளனர். படத்தில் இடம்பெறவுள்ள பிளாஷ் பேக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதோடு மிகவும் பிரம்மாண்டமாகத் தயாராகி வருகிறது. இந்த படப்பிடிப்பில் காஜல் அகர்வால் தனது பகுதிகளுக்காக களரிப் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதனை பயிற்சி செய்யும் வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வரைலாகி வருகிறது.

    • சரவணன் மீனாட்சி, ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி, அன்னக்கொடியும் ஐந்து பெண்களும் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை லட்சுமி வாசுதேவன்.
    • இவர் தற்போது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் வீடியோ ஒன்று பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆனந்தம் சீரியல் மூலம், சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை லட்சுமி வாசுதேவன். இதனை தொடர்ந்து சரவணன் மீனாட்சி, ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி, அன்னக்கொடியும் ஐந்து பெண்களும் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார். பல முன்னணி சீரியல்களில் அம்மா பாத்திரங்களில் நடித்து வரும் இவர், கதறி அழுத வீடியோ ஒன்றை தற்போது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

     

    லஷ்மி வாசுதேவன்

    லஷ்மி வாசுதேவன்

    அதில் அவர் கூறியது, "தனது புகைப்படத்தை மார்பிங் செய்து வாட்ஸ் அப் தொடர்பில் உள்ள அனைவருக்கும் அனுப்புகின்றனர். கடந்த செப்டம்பர் 11 எனக்கு 5 லட்சம் பரிசு விழுந்ததாக கூறி ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதனுடன் வந்த ஒரு லிங்கை தொட்ட உடன் ஆப் பதிவிறக்கம் ஆனது. அதிலிருந்து என் மொபைல் ஹேக் ஆனது. அதன்பின் 3 நாட்கள் கழித்து மர்மநபர்கள் எனக்கு போன் செய்து, 'நீங்கள் 5 ஆயிரம் கடன் வாங்கியுள்ளீர்கள் அதை திரும்ப செலுத்துங்கள்'என கூறி குறுஞ்செய்தி வந்து கொண்டே இருந்தது.

     

    லஷ்மி வாசுதேவன்

    லஷ்மி வாசுதேவன்

    தொடர்ந்து மோசமாக பேசி புகைப்படங்களை மாப்பிங் செய்து வைரலாக்கி விடுவோம் என மிரட்டினர். என்னுடைய வாட்சப் நண்பர்களுக்கும் என் அப்பா அம்மாவுக்கும் அனுப்புகிறார்கள்" என கதறி அழுதப்படி கூறினார். இது குறித்து சைபர் பிரிவில் புகார் கொடுத்துள்ளதாகவும், இனிமே யாரும் இது போன்ற தேவையில்லாத ஆப்புகளை டவுன்லோட் செய்ய வேண்டாம் என்றும், எச்சரிக்கையுடன் இருங்கள் என்றும் கண்ணீருடன் பேசியுள்ளார். பிரபல சீரியல் நடிகைக்கு ஏற்பட்ட இந்த நிலை குறித்து பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    • எச்.வினோத் இயக்கத்தில் தற்போது அஜித் ‘துணிவு' படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தை தொடர்ந்து ஏகே-62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார்.

    எச்.வினோத் இயக்கத்தில் தற்போது அஜித் 'துணிவு' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை பொங்கல் பண்டிகைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளனர். இந்த படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே62-வது படத்தில் அஜித் இணைய உள்ளார்.

     

    விக்னேஷ் சிவன் - அஜித் - அனிருத்

    விக்னேஷ் சிவன் - அஜித் - அனிருத்

     

    "அஜித் நடிக்கும் புதிய படத்தில் 'மாஸ்' காட்டும் வில்லன் நடிகர் நிச்சயம் இருப்பார்" என்று சமீபத்தில் விக்னேஷ் சிவன் தெரிவித்து இருந்தார். இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகரித்திருந்தது. அஜித்துடன் மோதும் வில்லன் கதாபாத்திரத்துக்கு விஜய் சேதுபதி, ராணா பெயர்களும் அடிபட்டன.

    கவுதம் மேனன் - அஜித்

    கவுதம் மேனன் - அஜித்

     

    ஆனால் தற்போது அஜித்துக்கு வில்லனாக நடிக்கவுள்ள நடிகர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் கவுதம் வாசுதேவ் மேனன் அஜித் படத்தில் வில்லனாக நடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    கவுதம் மேனன் - அஜித்

    கவுதம் மேனன் - அஜித்

     

    கவுதம் வாசுதேவ் மேனன் படங்களை இயக்குவதை தாண்டி சில படங்களில் நடித்துள்ளார். மேலும் ஒரு சில படங்களில் 'டப்பிங்' வசனமும் பேசியிருக்கிறார். சமீபத்தில் வெளியான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தில் இவரின் நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

    கவுதம் மேனன் - அஜித்

    கவுதம் மேனன் - அஜித்

     

    அஜித் நடிப்பில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய 'என்னை அறிந்தால்...' படத்தில் வரும் 'அதாரு... அதாரு...' என்ற பாடலை விக்னேஷ் சிவன் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது.
    • வாரிசு திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீசாகும் என்பதை படத்தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்துள்ளது.

    வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

     

    வாரிசு

    வாரிசு

    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த மாத இறுதிக்குள் இதன் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துவிடும் எனக் கூறப்படுகிறது. மேலும், இப்படத்தின் முதல் சிங்கிள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

     

    வாரிசு

    வாரிசு

    இந்நிலையில் வாரிசு படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இன்று தொடங்குவதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனை படத்தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ், தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அதில் இன்னும் 2 பாடல்களும், 2 சண்டை காட்சிகளும் மட்டுமே படமாக்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் ஏற்கனவே அறிவித்தபடி, வாரிசு திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீசாகும் என்பதையும் படத்தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்துள்ளது. இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

    • மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வருகிற செப்டம்பர் 30-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
    • இப்படத்தின் புரமோஷனுக்காக படக்குழு ஒவ்வொரு மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் சென்று படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கல்கி எழுதிய நாவலை தழுவி, மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்-1' திரைப்படம் வரும் 30-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், பார்த்திபன், சரத்குமார், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

     

    பொன்னியின் செல்வன்

    பொன்னியின் செல்வன்

     

    தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் நேரடியாக இந்த படம் வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு படக்குழுவினர் தற்போது ஒவ்வொரு மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் சென்று படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

     

    பொன்னியின் செல்வன்

    பொன்னியின் செல்வன்

    அந்த வகையில் மும்பையில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் பொன்னியின் செல்வன் படக்குழுவினர் கலந்து கொண்டு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசினர். அப்போது பத்திரிக்கையாளர் ஒருவர், "வரலாற்றை தெரிந்து கொள்வது எந்த அளவு முக்கியமானது?" என்று கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்த நடிகர் விக்ரம் பேசியதாவது;- "நாம் எகிப்தில் உள்ள பிரமீடுகள் பற்றி பேசுகிறோம். அதை எப்படி கட்டி இருப்பார்கள் என்றெல்லாம் யோசிக்கிறோம். ஆனால் நம் இந்தியாவில் நிறைய கோவில்கள் இருக்கின்றன. அதில் உயரமான கோபுரத்தை கொண்ட கோவில் என்றால் அது தஞ்சை பெரிய கோவில் தான்.

     

    பொன்னியின் செல்வன்

    பொன்னியின் செல்வன்

    சோழ மன்னர் ராஜராஜ சோழன் அந்த கோவிலைக் கட்டினார். உலகத்திலேயே உயரமான கோபுரத்தை கொண்ட கோவில் அதுதான். அந்த கோவில் கோபுரத்தின் உச்சியில் உள்ள கல் மட்டும் 80 டன் எடை கொண்டது. பைசா நகரத்தின் சாய்ந்த கோபுரத்தைப் பார்த்து நாம் வியப்படைகிறோம், பாராட்டுகிறோம். ஆனால் தஞ்சை பெரிய கோவில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக 6 பூகம்பங்களை தாங்கி இன்று வரை நிற்கிறது.

    அதிலும் எந்த வகையான பிளாஸ்டர்களும் இல்லாமல் அந்த கோவில் கட்டப்பட்டுள்ளது. அது எப்படி சாத்தியமானது என்றால், முதலில் சுற்றுச்சுவர், பின்னர் 6 அடி நீளத்துக்கு தாழ்வாரம் அமைத்து அதன்பின்னர் மையப்பகுதியில் கோவிலை கட்டி உள்ளனர். அதனால் தான் அது இத்தனை பூகம்பங்களையும் தாண்டி இன்றளவும் நிலைத்து நிற்கிறது.

     

    பொன்னியின் செல்வன்

    பொன்னியின் செல்வன்

    எந்திரங்கள் எதுவும் இல்லாமல், யானைகள், குதிரைகள் மற்றும் மனிதர்களைக் கொண்டு அவ்வளவு பெரிய கட்டுமானத்தைக் கட்டியுள்ளனர். மேலும் ராஜராஜசோழன் தனது காலத்தில் 5 ஆயிரம் அணைகளை கட்டியுள்ளார். நீர் மேலாண்மைக்கு தனி துறையை அமைத்துள்ளார். அந்த காலத்திலேயே தேர்தல்கள் நடத்தியுள்ளனர். ஆறுகளுக்கு பெண்களின் பெயர்களை சூட்டியுள்ளனர். இலவச மருத்துவமனைகள் கட்டியுள்ளனர். கடன் உதவிகளையும் வழங்கி கண்ணியமாக வாழ்ந்துள்ளனர்.

     

    பொன்னியின் செல்வன்

    பொன்னியின் செல்வன்

    இவையெல்லாம் 9-ம் நூற்றாண்டில் நடந்தவை என்றால் ஆச்சரியமாக உள்ளது. இதெல்லாம் நடந்து சுமார் 500 ஆண்டுகளுக்குப் பிறகு தான் கொலம்பஸ் அமெரிக்காவையே கண்டுபிடித்தார். இதை நினைத்து நாம் பெருமைப்பட வேண்டும். வட இந்தியா, தென் இந்தியா என பிரித்து பார்க்க வேண்டாம். நாமெல்லாம் இந்தியர்கள். அதனால் நாம் இவர்களையெல்லாம் கொண்டாட வேண்டும்." என்றார். 

    • நகைச்சுவை நடிகர் போண்டாமணி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • இவரது சிகிச்சைக்கு விஜய் சேதுபதியை தொடர்ந்து நடிகர் தனுஷ் தற்போது உதவி செய்துள்ளார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரில் ஒருவரான போண்டாமணி, சினிமா துறையில் சாதிக்க நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பிறகு நகைச்சுவை உலகில் அவருக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார். வடிவேலுவின் நகைச்சுவைப் பட்டாளத்தில் ஒருவரான இவர் பல படங்களில் அவருடன் இணைந்து நடித்துள்ளார்.


     


    போண்டாமணி

    போண்டாமணி

    ரன், சுந்தரா டிராவல்ஸ், வின்னர், திருமலை உள்ளிட்ட பல படங்களின் மூலம் கவனம் ஈர்த்தார். குறிப்பாக சுந்தரா டிராவல்ஸ் படத்தில் வடிவேலுவுடன் இடம்பெற்ற இவரின் காமெடி காட்சி இன்றளவும் ரசிகர்கள் விரும்பும் காட்சிகளில் ஒன்றாகவுள்ளது.

     

    போண்டாமணியை நலம் விசாரித்த அமைச்சர்

    போண்டாமணியை நலம் விசாரித்த அமைச்சர்

    இதனிடையே நடிகர் போண்டா மணி இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு சிறுநீரக பிரிவில் டயாலிசிஸ் செய்யப்பட்டு வருகிறது. மாற்று சிறுநீரகம் பொருத்தும் வரையில் அவருக்கு சிகிச்சை அளிக்க மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் ஏற்பாடு செய்திருப்பதாகக் அறிவிக்கப்பட்டது.


     


    போண்டாமணி - விஜய் சேதுபதி

    போண்டாமணி - விஜய் சேதுபதி

    நடிகர் பார்த்திபன், போன் மூலம் தொடர்புக் கொண்டு போண்டாமணியை நலம் விசாரித்து அவருக்கு தேவையான உதவியை செய்து வருகிறார். மேலும், வடிவேலு உடல் நலக்குறைவால் இருக்கும் நடிகர் போண்டா மணிக்கு தன்னால் இயன்ற உதவியை செய்வேன் என்று கூறினார். நடிகர் விஜய் சேதுபதி மருத்துவ உதவிக்கு ரூ.1 லட்சம் வழங்கினார்.


     


    தனுஷ்

    தனுஷ்

    இந்நிலையில் சிறுநீரக பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் போண்டாமணிக்கு ரூ.1 லட்சம் வழங்கி நடிகர் தனுஷ் உதவி செய்துள்ளார். இவரின் இந்த உதவியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

    • கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் வெந்து தணிந்தது காடு.
    • இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பரிசுகள் வழங்கியுள்ளார்.

    கவுதம் மேனன் இயக்கத்தில், நடிகர் சிம்பு, நடிகை சித்தி இத்னானி, நடிகை ராதிகா உள்ளிட்டோர் நடித்த 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு வெற்றி கிடைத்து வருகிறது. தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது.

    கவுதம் மேனன் - ஐசரி கணேஷ்

    கவுதம் மேனன் - ஐசரி கணேஷ்

     

    ஏ.ஆர்.ரகுமான் இசையில் படத்தின் பின்னனி இசையும், பாடல்களும் கவனத்தைப் பெற்றுள்ளன. குறிப்பாக 'மல்லிப்பூ' பாடலும், அதன் காட்சியமைப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. எழுத்தாளர் ஜெயமோகனின் கதைக்கு, கவுதம் மேனன் திரைக்கதை எழுதி இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து வெந்து தணிந்தது காடு படத்தின் 2-ம் பாகத்தை உருவாக்கும் பணிகள் தொடங்க உள்ளதாக கவுதம் மேனன் அறிவித்துள்ளார்.

     

    சிம்பு - ஐசரி கணேஷ்

    சிம்பு - ஐசரி கணேஷ்

    இந்நிலையில் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நடிகர் சிம்புவுக்கு 'டொயோட்டா வெல்ஃபையர்' சொகுசு கார் ஒன்றை பரிசளித்துள்ளார். அதே போல் இயக்குனர் கவுதம் மேனனுக்கு 'ராயல் என்ஃபீல்ட்' பைக்கை ஐசரி கணேஷ் பரிசாக வழங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

    ×