என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • அருள்நிதி நடிப்பில் வெளியான டிமான்ட்டி காலனி படத்தின் இரண்டாம் பாகத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
    • இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

    2015-ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான திரைப்படம் டிமான்ட்டி காலனி. அருள்நிதி, ரமேஷ் திலக், சனத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. மு.க.தமிழரசு தயாரிப்பில் உருவான இந்தப் படத்தினை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டது.

     

    அஜய் ஞானமுத்து அறிமுகமான முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதைத்தொடர்ந்து டிமான்ட்டி காலனி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பு அண்மையில் வெளியானது. கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு இதன் இரண்டாம் பாகத்தில் அருள்நிதி நடிக்க ஒப்புக்கொண்டார்.

    டிமான்ட்டி காலனி 

    டிமான்ட்டி காலனி 

     

    இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்குனர் அஜய் ஞானமுத்து இப்படத்தை தயாரிக்க, அவரது இணை இயக்குனரான வெங்கி வேணுகோபால் இந்த படத்தினை இயக்குகிறார். இதனிடையே டிமான்ட்டி காலனி இரண்டாம் பாகத்தின் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

    டிமான்ட்டி காலனி 

    டிமான்ட்டி காலனி 

     

    இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவலை அருள்நிதி இணையத்தில் பகிர்ந்துள்ளார். அதன்படி டிமான்டி காலனி இரண்டாம் பாகம் எப்பொழுது வெளியாகும் என ரசிகர்கர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளிக்கும் வகையில் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என்று அருள்நிதி பதிவிட்டுள்ளார். இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

    • பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் கலந்துகொண்டு பிரபலமானவர் ரம்யா பாண்டியன்.
    • தற்போது இவர் வெளியிட்டிருக்கும் புதிய புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது.

    தமிழில், டம்மி டப்பாசு, ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்த ரம்யா பாண்டியன், போட்டோஷூட் மூலம் மிகவும் பிரபலமானார். பின்னர் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக களமிறங்கி இறுதிப்போட்டி வரை முன்னேறினார். இந்நிகழ்ச்சி மூலம் அவரது ரசிகர்கள் வட்டம் பெரிதானது.

     

    ரம்யா பாண்டியன்

    ரம்யா பாண்டியன்

    இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்த இப்படத்தில் ரம்யா பாண்டியனின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

    ரம்யா பாண்டியன்

    ரம்யா பாண்டியன்

     

    அவ்வப்போது ரம்யா பாண்டியன் தனது புகைப்படங்களை சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது வெள்ளை நிற கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படத்தை அவர் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி ஏராளமான லைக்குகளை குவித்து வருகிறது. தொடர் கவர்ச்சி உடைகளை பதிவிட்டு ரசிகர்களை கிரங்கடிக்கும் ரம்யா பாண்டியனின் புகைப்படங்களை இணையத்தில் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

    • அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் துணிவு என்ற படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்படுகிறது.

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் "துணிவு". இப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

    இதைத்தொடர்ந்து, இப்படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் அஜித் இன்று அதிகாலை பாங்காக் விமானத்தில் சென்றதாக கூறப்பட்டது. இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளத்தில் வைரலானது.


    துணிவு - வாரிசு

    இந்நிலையில், இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, "துணிவு" திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது என்று இணையதளங்களில் தகவல் பரவி வருகிறது.

    வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கு வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில் துணிவு திரைப்படத்தின் தகவல் இரு தரப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் அமலாபால்.
    • பின்னர் மைனா, தெய்வதிருமகள், தலைவா, ராட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தார்.

    தமிழ் திரையுலகிற்கு சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமானவர் அமலாபால். அதன்பின்னர் மைனா, தெய்வதிருமகள், தலைவா, ராட்சசன் போன்ற பல வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான கடாவர் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.


    அமலாபால்

    இந்நிலையில் அமலாபால் தனது கவர்ச்சி புதிய புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். கடற்கரையில் கவர்ச்சி காட்டும் அமலாபாலின் புகைப்படங்களை ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.


    • இயக்குனர் ஆர். கார்த்திக் இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்துள்ள படம் 'நித்தம் ஒரு வானம்'.
    • இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

    அறிமுக இயக்குனர் ஆர். கார்த்திக் இயக்கத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்கும் படம் 'நித்தம் ஒரு வானம்'. அசோக் செல்வன் மூன்று கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி, ரித்து வர்மா, சிவாத்மிகா ராஜசேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.


    நித்தம் ஒரு வானம்

    வியாகோம் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு பிரபல மலையாள இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். இப்படம் மலையாளத்தில் 'ஆகாசம்' என்ற தலைப்பில் உருவாகியுள்ளது. 'நித்தம் ஒரு வானம்' திரைப்படம் வரும் நவம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    நித்தம் ஒரு வானம்

    இப்படம் குறித்து இயக்குனர் ஆர். கார்த்திக் கூறுயதாவது, " நித்தம் ஒரு வானம் நிச்சயம் நல்ல உணர்வைத் தரக்கூடிய படமாக இருக்கும். மூன்று வித்தியாசமான நிலபரப்பில் மூன்று வித்தியாசமான உணர்வுகளை இதில் கொடுத்திருக்கிறோம். இது ஒரு காதல் கதை போன்ற தோற்றத்தைக் கொடுத்தாலும் இதை எல்லாம் தாண்டி நம் வாழ்வின் தருணங்களை கொண்டாடும் வகையில் 'நித்தம் ஒரு வானம்' இருக்கும்.


    நித்தம் ஒரு வானம்

    நிறைய பாசிட்டிவான விஷயங்களை படத்தில் சேர்த்துள்ளோம். எப்போதெல்லாம் நாம் சோர்வாகவோ அல்லது மன அழுத்தமாகவோ உணர்கிறோமோ அப்போது பயணம் செல்வது நம்முடைய எண்ணங்களை நேர்மறையாக்கும். திரையரங்குகளுக்கு படம் பார்க்க வரும் பார்வையாளர்கள் படம் முடித்து வெளியேறும் போது புத்துணர்ச்சியோடும் புன்னகையோடும் வெளியேற வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் நித்தம் ஒரு வானம் திரைப்படத்தை உருவாக்கியுள்ளோம்" என்று கூறினார்.

    • பொன்னியின் செல்வன்-1 திரைப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

    கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "பொன்னியின்செல்வன்". இரண்டு பாகங்களாக வெளிவரும் இப்படத்தில் ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், திரிஷா உள்பட முன்னணி திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர்.


    பொன்னியின் செல்வன்

    "பொன்னியின் செல்வன்" திரைப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து படக்குழுவினர் தீவிரமாக புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


    பொன்னியின் செல்வன் படக்குழு

    இந்நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பேசியதாவது, "இயக்குனர் மணிரத்னத்திற்கு நன்றி கூறுகிறேன். 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தை பார்த்த பின்னர் ஓடிடி தளங்களில் வெளிநாட்டு தொடர்களை பார்ப்பதை நிறுத்திவிட்டேன். நமது கலாசாரத்தை 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் மிகவும் அழகாக பிரதிபலிக்கிறது" என்று பேசினார்.

    • அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் துணிவு என்ற படத்தில் நடித்து வருகிறார்.
    • இவர் விமான நிலையத்தில் இருக்கு வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் "துணிவு". இப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் தோற்ற போஸ்டர் அண்மையில் வெளியாகி வைரலானது. இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், உண்மை கதையில் அஜித் நடித்து வருவதாக புதிய தகவல் வெளியானது.


    துணிவு போஸ்டர்

    இந்நிலையில், நடிகர் அஜித் விமான நிலையத்தில் இருக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி, அஜித் இன்று அதிகாலை சென்னை விமான நிலையத்தில் இருந்து பாங்காக் செல்லும் விமானத்தில் புறப்பட்டு சென்றுள்ளார். இவர் பாங்காகில் நடைபெறும் "துணிவு" படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்கு சென்றதாக கூறப்படுகிறது. மேலும், இவருடன் நடிகை மஞ்சுவாரியர் இருந்தது குறிப்பிடத்தக்கது.



    • விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவரின் திருமணம் சமீபத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
    • நயன்தாரா வாழ்க்கை பயணம் குறித்த புரோமோவை நெட்ப்ளிக்ஸ் ஓடிடி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகியான நயன்தாரா, கடந்த ஜூன் மாதம் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கோலாகலமாக நடைபெற்றது.


    நயன்தாரா - விக்னேஷ் சிவன்

    இவர்களது திருமணத்தை பிரபல ஓடிடி நிறுவனமான நெட்ப்ளிக்ஸ் ஒளிப்பரப்பு செய்வதாக தெரிவித்திருந்தது. இதன் பொறுப்பு பிரபல இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் இவர்களது திருமணத்தில் யாரும் புகைப்படம் எடுக்கக் கூடாது என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.


    நயன்தாரா - விக்னேஷ் சிவன்

    அண்மையில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமண வீடியோவின் புரோமோவை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டது. இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், விக்னேஷ் சிவனின் மனைவி நயன்தாராவின் வாழ்க்கை பயணம் குறித்த புரோமோவை தற்போது நெட்ப்ளிக்ஸ் வெளியிட்டுள்ளது. இந்த புரோமோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


    • தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ராஜமவுலி.
    • இவரின் அடுத்த படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.

    தெலுங்கில் முன்னணி இயக்குனர் ராஜமவுலி. இவர் இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து இவர் தனது அடுத்த படத்தில் நடிகர் மகேஷ் பாபுவுடன் இணையவுள்ளார். ஆர். ஆர். ஆர். படத்தின் வெற்றிக்கு பிறகு மகேஷ் பாபு படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளில் இயக்குனர் ராஜமௌலி ஈடுபட்டுள்ளார்.


    ராஜமவுலி

    மகேஷ் பாபு தற்போது எஸ்.எஸ்.எம்.பி. 28 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததும் ராஜமவுலி படத்தின் படப்பிடிப்பு துவங்கப்படவுள்ளது. மேலும் இந்த படம் ஆக்‌ஷன், அட்வென்ச்சர் ஜானரில் இருக்கும் என்றும் இந்த படத்தின் கதை உலகம் முழுவதும் வெவ்வேறு இடங்களில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது என்றும் அண்மையில் ராஜமவுலி தெரிவித்திருந்தார்.


     சாமுவேல் எல் ஜாக்சன்

    இந்நிலையில், இயக்குனர் ராஜமவுலி கதாபாத்திரங்களை தேர்வு செய்யும் பணிகளில் அதிக கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் சாமுவேல் எல் ஜாக்சன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சாமுவேல் எல் ஜாக்சன், ஜுராசிக் பார்க், அயன் மேன், அயன் மேன் 2, கேப்டன் அமெரிக்கா போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிபலமானவர். தற்போது வெப் தொடர் ஒன்றிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ள படம் 'நானே வருவேன்'.
    • இப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.

    இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் 'நானே வருவேன்'. இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் நடிக்கிறார். மேலும் யோகி பாபு, பிரபு, எல்லி அவுரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகை உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    நானே வருவேன்

    வி கிரியேசன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு செய்கிறார். 'நானே வருவேன்' திரைப்படம் செப்டம்பர் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    நானே வருவேன்

    இதையடுத்து இப்படத்தின் இரண்டாவது பாடல் 'ரெண்டு ராஜா' இன்று காலை 10.50 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி இப்படத்தின் பாடல் வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மற்றும் தனுஷ் இணைந்து பாடியுள்ள இந்த பாடலை  ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.



    • மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் பொன்னியின் செல்வன்.
    • இந்த படம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "பொன்னியின்செல்வன்". இரண்டு பாகங்களாக வெளிவரும் இப்படத்தில் ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், திரிஷா உள்பட முன்னணி திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர்.


    பொன்னியின் செல்வன்

    பொன்னியின் செல்வன்' திரைப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து படக்குழுவினர் தீவிரமாக புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஜெயம் ரவி நடிகர் ஜெயராமுடன் சபரிமலையில் சாமி தரிசனம் செய்துள்ளார்.


    ஜெயம் ரவி - ஜெயராம்

    இதனை புகைப்படத்துடன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ள ஜெயம் ரவி "பொன்னியின் செல்வனில் ஆழ்வார்க்கடியான் நம்பியைப்போல நிஜ வாழ்க்கையிலும் என்னை அன்புடன் வழிநடத்தும் எனது குருசாமி ஜெயராமுடன் பம்பையில் !!" என்று குறிப்பிட்டுள்ளார்.


    • இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தற்போது பிரின்ஸ் படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் இரண்டாம் பாடல் வெளியாகியுள்ளது.

    இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் 'பிரின்ஸ்' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா நடித்து வருகிறார்.


    பிரின்ஸ்

    மேலும் இப்படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கும் இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். 'பிரின்ஸ்' திரைப்படத்தின் முதல் பாடலான பிம்பிலிக்கி பிலாப்பி பாடல் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது.


    பிரின்ஸ்

    இந்நிலையில் 'பிரின்ஸ்' திரைப்படத்தின் இரண்டாவது பாடல் 'ஜெசிக்கா' வெளியாகியுள்ளது. அறிவு வரிகளில் உருவாகியுள்ள இந்த பாடலை இசையமைப்பாளர் தமன் பாடியுள்ளார். இந்த பாடல் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது. 



    ×