சிம்புவுக்கு கார், கவுதம் மேனனுக்கு பைக்... தயாரிப்பாளர் கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்

அருள்நிதி நடிப்பில் வெளியான டிமான்ட்டி காலனி படத்தின் இரண்டாம் பாகத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
அருள்நிதி
அருள்நிதி
Published on

2015-ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான திரைப்படம் டிமான்ட்டி காலனி. அருள்நிதி, ரமேஷ் திலக், சனத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. மு.க.தமிழரசு தயாரிப்பில் உருவான இந்தப் படத்தினை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டது.

அஜய் ஞானமுத்து அறிமுகமான முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதைத்தொடர்ந்து டிமான்ட்டி காலனி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பு அண்மையில் வெளியானது. கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு இதன் இரண்டாம் பாகத்தில் அருள்நிதி நடிக்க ஒப்புக்கொண்டார்.

டிமான்ட்டி காலனி 
டிமான்ட்டி காலனி 

டிமான்ட்டி காலனி 

இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்குனர் அஜய் ஞானமுத்து இப்படத்தை தயாரிக்க, அவரது இணை இயக்குனரான வெங்கி வேணுகோபால் இந்த படத்தினை இயக்குகிறார். இதனிடையே டிமான்ட்டி காலனி இரண்டாம் பாகத்தின் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

டிமான்ட்டி காலனி 
டிமான்ட்டி காலனி 

டிமான்ட்டி காலனி 

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவலை அருள்நிதி இணையத்தில் பகிர்ந்துள்ளார். அதன்படி டிமான்டி காலனி இரண்டாம் பாகம் எப்பொழுது வெளியாகும் என ரசிகர்கர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளிக்கும் வகையில் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என்று அருள்நிதி பதிவிட்டுள்ளார். இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com