யுவன் மற்றும் தனுஷ் காம்பினேஷனில் வெளியான 'நானே வருவேன்' பட பாடல்

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ள படம் 'நானே வருவேன்'.இப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.
தனுஷ் - யுவன் சங்கர் ராஜா
தனுஷ் - யுவன் சங்கர் ராஜா
Published on

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் 'நானே வருவேன்'. இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் நடிக்கிறார். மேலும் யோகி பாபு, பிரபு, எல்லி அவுரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகை உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

நானே வருவேன்

வி கிரியேசன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு செய்கிறார். 'நானே வருவேன்' திரைப்படம் செப்டம்பர் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

நானே வருவேன்

இதையடுத்து இப்படத்தின் இரண்டாவது பாடல் 'ரெண்டு ராஜா' இன்று காலை 10.50 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி இப்படத்தின் பாடல் வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மற்றும் தனுஷ் இணைந்து பாடியுள்ள இந்த பாடலை  ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com