நம் வாழ்வின் தருணங்களை கொண்டாடும் வகையில் இருக்கும் - இயக்குனர் ஆர்.கார்த்திக்

இயக்குனர் ஆர். கார்த்திக் இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்துள்ள படம் 'நித்தம் ஒரு வானம்'.இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.
ஆர்.கார்த்திக்
ஆர்.கார்த்திக்
Published on

அறிமுக இயக்குனர் ஆர். கார்த்திக் இயக்கத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்கும் படம் 'நித்தம் ஒரு வானம்'. அசோக் செல்வன் மூன்று கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி, ரித்து வர்மா, சிவாத்மிகா ராஜசேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

நித்தம் ஒரு வானம்

வியாகோம் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு பிரபல மலையாள இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். இப்படம் மலையாளத்தில் 'ஆகாசம்' என்ற தலைப்பில் உருவாகியுள்ளது. 'நித்தம் ஒரு வானம்' திரைப்படம் வரும் நவம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

நித்தம் ஒரு வானம்

இப்படம் குறித்து இயக்குனர் ஆர். கார்த்திக் கூறுயதாவது, " நித்தம் ஒரு வானம் நிச்சயம் நல்ல உணர்வைத் தரக்கூடிய படமாக இருக்கும். மூன்று வித்தியாசமான நிலபரப்பில் மூன்று வித்தியாசமான உணர்வுகளை இதில் கொடுத்திருக்கிறோம். இது ஒரு காதல் கதை போன்ற தோற்றத்தைக் கொடுத்தாலும் இதை எல்லாம் தாண்டி நம் வாழ்வின் தருணங்களை கொண்டாடும் வகையில் 'நித்தம் ஒரு வானம்' இருக்கும்.

நித்தம் ஒரு வானம்

நிறைய பாசிட்டிவான விஷயங்களை படத்தில் சேர்த்துள்ளோம். எப்போதெல்லாம் நாம் சோர்வாகவோ அல்லது மன அழுத்தமாகவோ உணர்கிறோமோ அப்போது பயணம் செல்வது நம்முடைய எண்ணங்களை நேர்மறையாக்கும். திரையரங்குகளுக்கு படம் பார்க்க வரும் பார்வையாளர்கள் படம் முடித்து வெளியேறும் போது புத்துணர்ச்சியோடும் புன்னகையோடும் வெளியேற வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் நித்தம் ஒரு வானம் திரைப்படத்தை உருவாக்கியுள்ளோம்" என்று கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com