என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படம் அடுத்த வருடம் வெளியாகவுள்ளது.
    • இந்த படத்தின் முதல் பாடலான ‘ரஞ்சிதமே’ சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்று வருகிறது.

    வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

    ரஞ்சிதமே

    ரஞ்சிதமே

     

    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தீபாவளி தினத்தன்று 'வாரிசு' திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு, சங்கராந்திக்கு திரைப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இப்படத்தின் முதல் பாடலான 'ரஞ்சிதமே' பாடலை கடந்த 5 ம் தேதி படக்குழு வெளியிட்டது. விஜய் மற்றும் எம்.எம்.மானசி குரலில், விவேக் வரிகளில் வெளியான 'ரஞ்சிதமே' பாடல் துள்ளல் இசையோடு ரசிகர்களை கவர்ந்து ஹிட் ஆனது.

    ரஞ்சிதமே

    ரஞ்சிதமே

    இந்நிலையில் ரஞ்சிதமே பாடல் 60 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'என்சி22'.
    • இந்த படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைக்கின்றனர்.

    இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது இயக்கி வரும் புதிய படம் என்சி22. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கிறார். தற்காலிகமாக 'என்சி22' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் சார்பா ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.


    என்சி22 படக்குழு

    இப்படத்தின் வில்லனாக அரவிந்த் சாமி நடிக்கிறார். இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைக்கின்றனர். மேலும், இதில் சரத்குமார், வென்னேலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    என்சி22 போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, என்சி22 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் நாளை நடிகர் நாக சைதன்யா பிறந்த நாளன்று வெளியாகும் என இயக்குனர் வெங்கட் பிரபு தனது சமூக வலைதளப் பக்கத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.



    • நடிகர் எஸ்.ஜே. சூர்யா தற்போது நடித்துள்ள வெப் தொடர் 'வதந்தி'.
    • இந்த தொடர் வருகிற டிசம்பர் 2-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

    அஜித் நடித்த வாலி, விஜய்யின் குஷி ஆகிய வெற்றி படங்களை இயக்கி பிரபலமான எஸ்.ஜே.சூர்யா, பின்னர் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். தற்போது அவருக்கு பல படங்களில் வில்லன் வேடங்கள் குவிகின்றன. சமீபத்தில் வெளியான மாநாடு, டான் படங்களில் நடித்த எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. மேலும் இவர் கைவசம் தற்போது 'பொம்மை', 'மார்க் ஆண்டனி' மற்றும் 'ஆர்சி 15' படங்கள் உள்ளது.


    வதந்தி

    தொடர்ந்து இவர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் 'வதந்தி' எனும் புதிய வெப் தொடரில் நடித்துள்ளார். புஷ்கர் - காயத்ரி தயாரித்துள்ள இந்த வெப் தொடர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ளது. இந்நிலையில், இந்த வெப் தொடரின் டிரைலர் தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


    வதந்தி

    'வதந்தி' வெப் தொடர் வருகிற டிசம்பர் 2-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.



    • ‘எம்.எஸ்.தோனி: தி அண்டோல்ட் ஸ்டோரி’ படம் மூலம் திஷா பதானி இந்தியில் தடம் பதித்தார்.
    • பிரபுதேவா இயக்கத்தில் வெளியான ராதே படத்தில் சல்மான்கானுக்கு ஜோடியாக நடித்து இருந்தார்.

    பிரபல இளம் இந்தி நடிகை திஷா பதானி. இவர் 2015 ல் வருண் தேஜா ஜோடியாக லோபர் என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானார். இந்திய கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கையை மையமாக வைத்து வெளியான 'எம்.எஸ்.தோனி: தி அண்டோல்ட் ஸ்டோரி' படம் மூலம் இந்தியில் தடம் பதித்தார்.

     

    திஷா பதானி

    திஷா பதானி

    இதனை தொடர்ந்து அவர் நடித்த குங்பூ யோகா படம் வசூல் சாதனை நிகழ்த்தியது. கடந்த 2021 ஆம் ஆண்டு பிரபுதேவா இயக்கத்தில் வெளியான ராதே படத்தில் சல்மான்கானுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவரின் கைவசம் தற்போது ஏக் வில்லன் ரிட்டன்ஸ், யோதா, கேடினா, புராஜெக்ட் கே ஆகிய படங்கள் உள்ளன.

    திஷா பதானி

    திஷா பதானி

     நடிகை திஷா பதானி அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில், குளியலறையில் இருந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அவர் பதிவிட்டிருக்கிறார். இந்த கவர்ச்சி புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி லைக்குகளை குவித்து வருகிறது.

    • விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
    • இப்படத்தின் ரஞ்சிதமே பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.

    வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    வாரிசு

    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'வாரிசு' திரைப்படம் பொங்கல் தினத்தன்று வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இப்படத்திலிருந்து சமீபத்தில் வெளியான 'ரஞ்சிதமே' பாடல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை  பெற்று ட்ரெண்டாகி வருகிறது.


    வாரிசு

    இந்நிலையில், 'வாரிசு' படத்தின் அடுத்த பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனை நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "இன்னொரு வெற்றிகரமான பாடல் வர உள்ளது. 'வாரிசு' பெல்லாரி படப்பிடிப்பில் பல நல்ல தருணங்கள் இருந்தன. எங்களை வரவேற்று ஆதரவளித்த அன்பான மக்களுக்கு நன்றி" என பதிவிட்டுள்ளார்.


    வாரிசு

    இதற்கு இசையமைப்பாளர் தமன், "யோவ் ஜானி ரொம்ப பிரஷர் ஏத்துற" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்கு ரசிகர்கள் பட்டய கிளப்புங்கள் தமன். எல்லாரும் வெயிட்டிங் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.



    • சார்லி சாப்லின், பரசுராம், விசில், வை ராஜா வை உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் காயத்ரி ரகுராம்.
    • இவர் தற்போது தமிழக பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக இருந்து வந்தார்.

    2022-ம் ஆண்டு வெளியான சார்லி சாப்லின் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் காயத்ரி ரகுராம். அதன்பின்னர் பரசுராம், விசில், வை ராஜா வை, அருவம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். காயத்ரி ரகுராம், நடன இயக்குனராகவும் பல படங்களுக்கு பணியாற்றியுள்ளார். பின்னர் காயத்ரி ரகுராம் தீவிரமாக அரசியலில் ஈடுபட்டு வந்தார். இவர் தமிழக பாஜகாவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக இருந்து வந்தார்.

     

    காயத்ரி ரகுராம்

    காயத்ரி ரகுராம்

    இந்நிலையில் தமிழக பாஜகவில் இருந்து நடிகை காயத்ரி ரகுராமை 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் காயத்ரி ரகுராம் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

    • தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பூனம் பஜ்வா.
    • சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் பூனம் பஜ்வா தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

    'சேவல்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானவர் பூனம் பஜ்வா. இதைத் தொடர்ந்து ஜீவாவின் 'தெனாவட்டு', 'கச்சேரி ஆரம்பம்' படங்களில் நடித்த இவர், சுந்தர்.சி இயக்கிய 'அரண்மனை 2' படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். இதில் இவருடைய கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

    பூனம் பஜ்வா

    பூனம் பஜ்வா

     

    பின்னர் சுந்தர்.சி-யுடன் 'முத்தின கத்திரிக்கா' படத்தில் நடித்தார். அதன்பின் முன்னணி நடிகர்களின் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். படவாய்ப்பு குறைந்தாலும், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

     

    பூனம் பஜ்வா

    பூனம் பஜ்வா

    இந்நிலையில் நீச்சல் உடையில் படுகவர்ச்சியாக நீச்சல் குளம் அருகில் படுத்திருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பூனம் பஜ்வா பதிவிட்டுள்ளார். அதில், தட்பவெப்பநிலையில் அப்படி ஒரு குளிர் என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பலரும் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

    • தமிழில் 90களில் பிரபலமான நடிகையாக வலம் வந்த ரோஜா.
    • இவர் தற்போது ஒரு ஏழை மாணவியின் கனவை நனவாக்க உதவியுள்ளார்.

    சூரியன், உழைப்பாளி, வீரா, மக்கள் ஆட்சி உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் ரோஜா. இவர் 90களில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்தார். தற்போது ஆந்திர மாநிலம், நகரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும், சுற்றுலாத்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் கொரோனா காலத்தில் தாய், தந்தை என இரண்டு பேரையும் இழந்து வறுமையில் வாடிய தனது தொகுதியை சேர்ந்த புஷ்பா என்ற மாணவியை தத்தெடுத்து கொண்டார். அந்த மாணவியின் கல்வி செலவை முழுவதும் தான் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்திருந்தார்.

     

    மாணவி புஷ்பா தனது பள்ளி படிப்பை முடித்துவிட்டு நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்து, திருப்பதியில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அவர் கூறியதாவது, "மருத்துவ வசதி இல்லாமல் என் தாய், தந்தையர் இறந்ததைப் போன்று எந்தக் குழந்தைக்கும் அது போன்று ஒரு நிகழ்வு ஏற்படாமல், வருங்காலத்தில் என்னால் முடிந்த அனைத்து மருத்துவ உதவிகளையும் என்னைப் போன்ற குழந்தைகளுக்கு இலவசமாக கொடுப்பதே என் லட்சியம்" என்றார். 

    • இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தயாராகியிருக்கும் படம் 'ஹனு-மேன்'.
    • இதில் தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அமிர்தா ஐயர் நடித்திருக்கிறார்.

    இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தயாராகியிருக்கும் படம் 'ஹனு-மேன்'. இதில் தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அமிர்தா ஐயர் நடிக்கிறார். இவர்களுடன் வரலட்சுமி சரத்குமார், வினய் ராய், கெட்டப் சீனு, ராஜ் தீபக் ஷெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தாசரதி சிவேந்திரா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கௌரஹரி, அனுதீப் தேவ் மற்றும் கிருஷ்ண சவுரப் என மூன்று இசையமைப்பாளர்கள் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். இப்படத்தை ப்ரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.நிரஞ்சன் ரெட்டி தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

     

    ஹனு-மேன்

    ஹனு-மேன்

    இந்நிலையில் 'ஹனு-மேன்' படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தின் டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    • மா.கா.பா.ஆனந்த் மற்றும் ஆர்.ஜே.விஜய் இணைந்து ஆல்பம் பாடலில் நடித்துள்ளனர்.
    • 'உச்சிமலை காத்தவராயன்' என்ற இந்த பாடலை விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ளார்.

    தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர்களும் நடிகர்களுமான மா.கா.பா.ஆனந்த் மற்றும் ஆர்.ஜே.விஜய் ஆகியோர் ஆல்பம் பாடலில் நடித்துள்ளனர். இதில் நடிகை ஆஷ்னா சவேரி இணைந்து நடனமாடியுள்ளார். 'உச்சிமலை காத்தவராயன்' என்ற இந்த பாடலை டோங்கிலி ஜம்போ இயக்கியிருக்கிறார். இதன் நடனத்தை நடன இயக்குனர் சாண்டி அமைக்க, மல்லிகா அர்ஜுன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இசையமைப்பாளர் ஆனிவி இசையில் தயாராகி இருக்கும் இந்த பாடலை அவரே எழுதி, ஜெஸ்ஸி கிப்ட்டுடன் இணைந்து ஆனிவி பாடியிருக்கிறார்.

     

    மா.கா.பா.ஆனந்த், ஆர்.ஜே.விஜய்

    மா.கா.பா.ஆனந்த், ஆர்.ஜே.விஜய்

    இந்நிலையில் 'உச்சிமலை காத்தவராயன்' பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. மா.கா.பா.ஆனந்த், ஆர்.ஜே.விஜய் மற்றும் ஆஷ்னா ஜாவேரி இணைந்து நடனமாடியுள்ள இந்த பாடல் வைரலாகி வருகிறது.

    • மார்வல் வரிசையில் 'தோர்' படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் கிறிஸ் ஹேம்ஸ்வொர்த்.
    • இவர் தற்போது சினிமாவில் இருந்து ஓய்வு எடுப்பதாக அறிவித்துள்ளார்.

    ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகர் கிறிஸ் ஹேம்ஸ்வொர்த். இவர் மார்வல் வரிசையில் 'தோர்' படங்களில் நடித்து சூப்பர் ஹீரோவாக உலகம் முழுவதும் புகழ் பெற்றார். ஹாலிவுட் நடிகை எல்சாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கடும் உடற்பயிற்சிகள் செய்து உடம்பை கட்டுக்கோப்பாகவும் வைத்து இருந்தார். கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துக்கு தற்போது 39 வயது ஆகிறது. சில தினங்களுக்கு முன்பு தனக்கு அல்சைமர் எனப்படும் மறதி நோய் பாதிப்பு இருப்பதாக தெரிவித்து இருந்தார்.

     

    கிறிஸ் ஹேம்ஸ்வொர்த்

    கிறிஸ் ஹேம்ஸ்வொர்த்

    இந்த நிலையில் மறதி நோய் காரணமாக சினிமாவில் இருந்து தற்காலிகமாக ஓய்வு எடுக்கப்போவதாக கிறிஸ் ஹேம்ஸ்வொர்த் அறிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, "எனக்கு அல்சமைர் நோய் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. மருத்துவ பரிசோதனையில் இது தெரியவந்தது. எனது தாத்தாவுக்கும் இந்த நோய் பாதிப்பு இருந்துள்ளது. எனவே எனக்கும் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதில் ஆச்சரியம் இல்லை. எனவே சில காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்து மனைவி, குழந்தைகளுடன் நேரத்தை கழிக்க விரும்புகிறேன்'' என்றார். இது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • இயக்குனர் சற்குணம் தற்போது இயக்கியுள்ள திரைப்படம் 'பட்டத்து அரசன்'.
    • இந்த திரைப்படம் வருகிற நவம்பர் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    'களவாணி', 'வாகை சூடவா' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ஏ.சற்குணம் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள திரைப்படம் 'பட்டத்து அரசன்'. இந்த படத்தில் ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். லைக்கா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.


    பட்டத்து அரசன் படக்குழு

    'பட்டத்து அரசன்' திரைப்படம் வருகிற நவம்பர் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து, இந்த படத்தின் இயக்குனர் ஏ. சற்குணம் மாலை மலர் நேயர்களுக்காக பிரத்யேகமாக பேட்டி அளித்தார். 'பட்டத்து அரசன்' திரைப்படம் குறித்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.


    சற்குணம்

    அவர் கூறியதாவது, "சினிமாவில் தமிழ் பெண்களின் ஆர்வம் குறைவாக இருக்கிறது. சினிமாவில் அதிகம் ஆர்வம் காட்டுவது மலையாள பெண்களும் மற்ற மாநில பெண்களும் தான். மற்ற மாநில பெண்களை வைத்து தான் படம் பண்ணுவேன் என்று இல்லை. அதே நேரம் தமிழ் பெண்களை வைத்து படம் பண்ணியே ஆக வேண்டும் என்றும் எடுத்துக் கொள்ள வேண்டாம்." என்று பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.




    ×