விஜய் ஆண்டனி வெளியிட்ட மா.கா.பா.ஆனந்த்-ஆர்.ஜே.விஜய் பாடல்

மா.கா.பா.ஆனந்த் மற்றும் ஆர்.ஜே.விஜய் இணைந்து ஆல்பம் பாடலில் நடித்துள்ளனர்.'உச்சிமலை காத்தவராயன்' என்ற இந்த பாடலை விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ளார்.
விஜய் ஆண்டனி
விஜய் ஆண்டனி
Published on

தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர்களும் நடிகர்களுமான மா.கா.பா.ஆனந்த் மற்றும் ஆர்.ஜே.விஜய் ஆகியோர் ஆல்பம் பாடலில் நடித்துள்ளனர். இதில் நடிகை ஆஷ்னா சவேரி இணைந்து நடனமாடியுள்ளார். 'உச்சிமலை காத்தவராயன்' என்ற இந்த பாடலை டோங்கிலி ஜம்போ இயக்கியிருக்கிறார். இதன் நடனத்தை நடன இயக்குனர் சாண்டி அமைக்க, மல்லிகா அர்ஜுன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இசையமைப்பாளர் ஆனிவி இசையில் தயாராகி இருக்கும் இந்த பாடலை அவரே எழுதி, ஜெஸ்ஸி கிப்ட்டுடன் இணைந்து ஆனிவி பாடியிருக்கிறார்.

மா.கா.பா.ஆனந்த், ஆர்.ஜே.விஜய்
மா.கா.பா.ஆனந்த், ஆர்.ஜே.விஜய்

மா.கா.பா.ஆனந்த், ஆர்.ஜே.விஜய்

இந்நிலையில் 'உச்சிமலை காத்தவராயன்' பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. மா.கா.பா.ஆனந்த், ஆர்.ஜே.விஜய் மற்றும் ஆஷ்னா ஜாவேரி இணைந்து நடனமாடியுள்ள இந்த பாடல் வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com