சினிமாவில் தமிழ் பெண்களின் ஆர்வம் குறைவாக உள்ளது - இயக்குனர் சற்குணம்

இயக்குனர் சற்குணம் தற்போது இயக்கியுள்ள திரைப்படம் 'பட்டத்து அரசன்'.இந்த திரைப்படம் வருகிற நவம்பர் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
சற்குணம்
சற்குணம்
Published on

'களவாணி', 'வாகை சூடவா' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ஏ.சற்குணம் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள திரைப்படம் 'பட்டத்து அரசன்'. இந்த படத்தில் ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். லைக்கா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

பட்டத்து அரசன் படக்குழு

'பட்டத்து அரசன்' திரைப்படம் வருகிற நவம்பர் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து, இந்த படத்தின் இயக்குனர் ஏ. சற்குணம் மாலை மலர் நேயர்களுக்காக பிரத்யேகமாக பேட்டி அளித்தார். 'பட்டத்து அரசன்' திரைப்படம் குறித்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

சற்குணம்

அவர் கூறியதாவது, "சினிமாவில் தமிழ் பெண்களின் ஆர்வம் குறைவாக இருக்கிறது. சினிமாவில் அதிகம் ஆர்வம் காட்டுவது மலையாள பெண்களும் மற்ற மாநில பெண்களும் தான். மற்ற மாநில பெண்களை வைத்து தான் படம் பண்ணுவேன் என்று இல்லை. அதே நேரம் தமிழ் பெண்களை வைத்து படம் பண்ணியே ஆக வேண்டும் என்றும் எடுத்துக் கொள்ள வேண்டாம்." என்று பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com