உண்மை நடக்கும் பொய் பறக்கும்.. கவனம் ஈர்க்கும் வதந்தி டிரைலர்..

நடிகர் எஸ்.ஜே. சூர்யா தற்போது நடித்துள்ள வெப் தொடர் 'வதந்தி'.இந்த தொடர் வருகிற டிசம்பர் 2-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
வதந்தி
வதந்தி
Published on

அஜித் நடித்த வாலி, விஜய்யின் குஷி ஆகிய வெற்றி படங்களை இயக்கி பிரபலமான எஸ்.ஜே.சூர்யா, பின்னர் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். தற்போது அவருக்கு பல படங்களில் வில்லன் வேடங்கள் குவிகின்றன. சமீபத்தில் வெளியான மாநாடு, டான் படங்களில் நடித்த எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. மேலும் இவர் கைவசம் தற்போது 'பொம்மை', 'மார்க் ஆண்டனி' மற்றும் 'ஆர்சி 15' படங்கள் உள்ளது.

வதந்தி

தொடர்ந்து இவர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் 'வதந்தி' எனும் புதிய வெப் தொடரில் நடித்துள்ளார். புஷ்கர் - காயத்ரி தயாரித்துள்ள இந்த வெப் தொடர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ளது. இந்நிலையில், இந்த வெப் தொடரின் டிரைலர் தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

வதந்தி

'வதந்தி' வெப் தொடர் வருகிற டிசம்பர் 2-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com