என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • சிந்து சமவெளி, மைனா, தெய்வதிருமகள், தலைவா, ராட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் அமலா பால்.
    • இவர் தற்போது மலையாளத்தில் நடிக்கும் 'தி டீச்சர்' படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

    தமிழ் திரையுலகிற்கு சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமானவர் அமலாபால். அதன்பின்னர் மைனா, தெய்வதிருமகள், தலைவா, ராட்சசன் போன்ற பல வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான கடாவர் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இவர் மலையாள திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

     

    அமலா பால் - தி டீச்சர் 

    அமலா பால் - தி டீச்சர் 

    இந்நிலையில் அமலாபால் மலையாளத்தில் நடித்திருக்கும் 'தி டீச்சர்' படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. நடிகர் பகத் பாசில் நடித்த அதிரன் என்ற படத்தை இயக்கிய விவேக், இந்த படத்தை இயக்கியுள்ளார். இதில் ஹக்கிம் ஷாஜகான், செம்பன் வினோத், அனு மோல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தி டீச்சர் படத்தின் விறுவிறுப்பான டிரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.

    • பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படங்களில் இயக்கியவர் மாரி செல்வராஜ்.
    • இவர் இயக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

    2018ம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். அதன்பின்னர் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படத்தை இயக்கி தனக்கான இடத்தை பிடித்தார். தற்போது உதயநிதி, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் மாமன்னன் படம் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். 'மாமன்னன்' படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

    நேற்று முன்தினம் மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. வாழை என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் கலையரசன் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். மேலும் நிகிலா விமல், திவ்யா துரைசாமி, வெயில் படம் மூலம் பிரபலமான பிரியங்கா மற்றும் சில சிறுவர்களும் நடிக்கவுள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார்.

    இந்நிலையில் இப்படம் சமூகத்தில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. மாரி செல்வராஜ் எழுதிய பேய் என்ற சிறுகதையை தழுவி வாழை திரைப்படம் உருவாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த சிறுகதையில் வாழைத் தோட்டத்தில் பணியாற்றும் சிறுவர்களைப் பற்றி எழுதியிருந்தார். எனவே வாழை படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

    • வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித், அர்ஜுன் நடிப்பில் வெளியான படம் மங்காத்தா.
    • தற்போது அஜித்குமாரை நடிகர் அர்ஜுன் திடீரென்று சந்தித்து பேசிய புகைப்படம் வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித்குமார், அர்ஜுன், திரிஷா ஆகியோர் நடித்து 2011-ல் வெளியான மங்காத்தா படம் பெரிய வெற்றி பெற்றது. இது அஜித்தின் 50-வது படமாக உருவாகி வெளியானது. தமிழில் 2-ம் பாகம் படங்கள் அதிகம் வந்து வரவேற்பை பெற்று வருவதால் மங்காத்தா 2-ம் பாகமும் உருவாக வேண்டும் என்று கடந்த சில மாதங்களாகவே ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகிறார்கள்.

     

    அஜித் - அர்ஜுன்

    அஜித் - அர்ஜுன்

    வெங்கட் பிரபுவிடமும் இந்த கோரிக்கையை அவர்கள் எழுப்பியபோது, ''மங்காத்தா 2-ம் பாகத்துக்கான கதையை தயார் செய்து விட்டேன். அஜித்குமார் எப்போது அழைத்தாலும் மங்காத்தா 2 படத்தை இயக்க தயாராக இருக்கிறேன்'' என்று பதில் அளித்திருந்தார். அஜித்குமார் தற்போது துணிவு படத்தை முடித்து விட்டு விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்க தயாராகி உள்ளார்.

     

    அஜித் - அர்ஜுன்

    அஜித் - அர்ஜுன்

    இந்நிலையில் அஜித்குமாரை நடிகர் அர்ஜுன் திடீரென்று சந்தித்து பேசியுளார். இருவரும் சந்தித்த புகைப்படம் வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த சந்திப்பை தொடர்ந்து அஜித், அர்ஜுன் இருவரும் மீண்டும் புதிய படத்தில் இணைந்து நடிக்கிறார்கள் என்பது உறுதியாகி உள்ளது. அது விக்னேஷ் சிவன் இயக்கும் படத்திலா? அல்லது மங்காத்தா 2-ம் பாகத்திலா என்பது விரைவில் அறிவிப்பு வரும் என்று கூறப்படுகிறது.

    • தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் டாக்டர் ஜி.தனஞ்ஜெயன்.
    • இவரின் மகள் திருமணம் சென்னை, அம்பத்தூரில் நடைபெற்றது.

    தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளர் டாக்டர் ஜி.தனஞ்ஜெயன். தற்போது இவர் நடிகர் விஜய் ஆண்டணியின் கொலை, ரத்தம், மழை பிடிக்காத மனிதன் மற்றும் காக்கி ஆகிய படங்களை இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சரின் சார்பில் தயாரித்து வருகிறார்.  இவரின் மூத்த மகளான ரேவதியின் திருமணம் அபிஷேக் குமார் என்பவருடன் அம்பத்தூரில் உள்ள பிஎஸ்பி கன்வென்ஷஸ் ஹாலில் நடைபெற்றது.


    தனஞ்ஜெயன் இல்லத் திருமண விழா

    இந்த நிகழ்ச்சியில் மூத்த நடிகரும் பிரபல பேச்சாளருமான சிவகுமார் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டு திருமாங்கல்யத்தை மணமகன் அபிஷேக்கிடம் எடுத்து கொடுத்தார். இந்த திருமண நிகழ்ச்சியில் முன்னணி தயாரிப்பாளர்களான கலைப்புலி எஸ். தாணு, 'சூப்பர் குட்' ஆர்.பி. செளத்ரி, எடிட்டர் மோகன், ஜி. என். அன்புசெழியன், அபிராமி ராமநாதன், டி.ஜி. தியாகராஜன், பிரமிட் நடராஜன், டி. சிவா, கே.இ. ஞானவேல்ராஜா, பி.எல். தேனப்பன், புஷ்பா கந்தசாமி, கதிரேசன், லலித்குமார், சுரேஷ் காமாட்சி, சித்ரா லக்‌ஷ்மணன், ஜே.எஸ்.கே. சதீஷ்குமார், கமல்போஹ்ரா, பி.பிரதீப் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    மேலும், இயக்குனர்கள் கே. பாக்யராஜ், கே.எஸ். ரவிக்குமார், ஆர். பார்த்திபன், பாலா, ராம், மிஷ்கின், சுந்தர்.சி, வசந்த் சாய், 'சிறுத்தை' சிவா, ஏ.எல். விஜய், எழில், சசி, சீனு ராமசாமி, மோகன் ராஜா, லக்ஷ்மி ராமகிருஷ்ணன், ராதாமோகன், விஜய் மில்டன், திரு, பாண்டிராஜ், கருணாகரன், எஸ்.எஸ். ஸ்டான்லி, அருண் வைத்யநாதன், பாலஜி குமார், பிரதீப் கிருஷ்ணமூர்த்தி, கிருஷ்ணா, கவுரவ் நாராயணன், ஆர். கண்ணன், மிலிந்த் ராவ், ஆண்ட்ரூ லூயிஸ், கேபிள் சங்கர் என பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.


    தனஞ்ஜெயன் இல்லத் திருமண விழா

    இவர்களுடன் முன்னணி நடிகர்கள் விஜய் ஆண்டனி, கெளதம் கார்த்திக், சிபி சத்யராஜ், மனோபாலா, சுஹாசினி, ரோகினி, லிசி, பிரசன்னா, சிநேகா, ஆர்.கே. சுரேஷ், சச்சு, தியாகராஜன், பிரசாந்த், நகுல், சதீஷ், கணேஷ் வெங்கட்ராம், குட்டி பத்மினி, விதார்த், நட்டி, பஞ்சு சுப்பு, பூர்ணிமா பாக்யராஜ், சாந்தனு, கிகி விஜய், ஜெகன், சிதார்த்தா சங்கர், அஷ்வின் காக்குமனு, கயல் சந்திரன், ஜெயப்பிரகாஷ், சுரேஷ் ரவி, விஜே ரம்யா, விச்சு மற்றும் பலர் இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

    • நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘காந்தாரா’.
    • இந்த திரைப்படம் பலரின் பாராட்டுக்களை பெற்றது.

    நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த 'காந்தாரா' திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியானது. முதலில் இந்த படம் கன்னட மொழியில் மட்டுமே வெளியிடப்பட்டது. கர்நாடகாவில் விமர்சன ரீதியில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், நல்ல வசூலையும் குவித்தது. இதையடுத்து, படத்தை மற்ற மொழிகளில் வெளியிட படத்தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே பிலிம்ஸ் முடிவு செய்து. இதனடிப்படையில் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் சமீபத்தில் 'காந்தாரா' திரைப்படம் வெளியிடப்பட்டது.


    காந்தாரா

    தற்போது அனைத்து மொழிகளிலும் இந்த படம் வசூலில் சாதனை படைத்துள்ளது. இந்த படத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நடிகர் ரஜினிகாந்த் உள்பட பலரும் பாராட்டினர். இந்த நிலையில், 'காந்தாரா' திரைப்படம் உலகம் முழுவதும் இதுவரை ரூ.400 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


    காந்தாரா

    அதன்படி, கேரளாவில் ரூ.19.2 கோடியையும், வட இந்தியாவில் ரூ.96 கோடியையும், தெலுங்கில் ரூ.60 கோடியையும், தமிழ்நாட்டில் 12.70 கோடியையும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கர்நாடகாவில் மட்டும் ரூ.168.5 கோடி ரூபாயை படம் வசூலித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் வெளிநாட்டில் ரூ.44 கோடியை வசூலித்திருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
    • பொங்கல் பண்டிகையில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து அதிக தியேட்டர்களை ஒதுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    வாரிசு

    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தீபாவளி தினத்தன்று 'வாரிசு' திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு, சங்கராந்திக்கு திரைப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இதனிடையே ஐதராபாத்தில் நடந்த தெலுங்கு தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் பொங்கல் பண்டிகையில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து அதிக தியேட்டர்களை ஒதுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


    வாரிசு

    இந்த முடிவுக்கு தமிழ் சினிமாவில் இருந்து பலரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர்.இந்நிலையில் இந்த பிரச்சினை குறித்து நடிகர் கஞ்சா கருப்பு தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார். அதில், "சபரி ஐயப்பன் படம் வெற்றி பெற்றால் தெலுங்கிற்கு கேட்டால் கொடுக்க மாட்டோமா. நீங்க ஏன் தியேட்டர் இல்ல அது இல்லை என்று சொல்கிறீர்கள். உங்க படம் மட்டும் பாகுபலியிலிருந்து பரதேசி புலி வரை இங்க வந்திருக்கு.


    கஞ்சா கருப்பு

    உங்க படம் மட்டும் தமிழ்நாட்டில் ஓடி பெரிய காசு பாக்கலாம். எங்க படம் அங்க ஓடக் கூடாதா. ஆந்திராவில் ஒரு சூப்பர் ஹீரோ படம் வரும் போது நாங்கள் இப்படி சொன்னால் நீங்கள் விடுவீர்களா? தமிழர்களைத் தமிழர்களாக மதியுங்கள். ஆந்திரா மக்களுக்கு ஒன்று நான் சொல்கிறேன். ஒழுங்கா விஜய்யின் வாரிசு படத்தை அங்கே திரையிடுங்கள். அப்படிச் செய்தால்தான் எங்களுக்குப் பெருமை. இல்லைன்னா அது எங்களுக்குப் பெருமை கிடையாது. வறுமை என நாங்க சொல்லிட்டு போய்டுவோம்" என ஆவேசமாகப் பேசினார்.

    • இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் திரைப்படம் 'தங்கலான்'.
    • இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

    'பொன்னியின் செல்வன்' படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்திற்கு கிடைத்த மாபெரும் வரவேற்பை தொடர்ந்து, நடிகர் விக்ரம் அடுத்ததாக இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கும் 'தங்கலான்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.


    தங்கலான்

    இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்திருந்தார். இதனால் இந்த படம் மீது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது.


    விக்ரம்

    இந்நிலையில், நடிகர் விக்ரம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், 'பெரிய தாடியுடன் பெரிய பொறுப்பும் வருகிறது. தங்கலான்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இதனுடன் சில புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். இந்த பதிவிற்கு ரசிகர்கள் அதிகம் லைக் செய்து வருகின்றனர்.



    • 'கைதி' திரைப்படம் இந்தியில் 'போலோ' என்ற தலைப்பில் உருவாகி வருகிறது.
    • இந்த படத்தில் கார்த்தி கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் அஜய் தேவ்கன் நடிக்கிறார்.

    மாநகரம், மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான 'கைதி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு 2023-ஆம் ஆண்டு தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.


    அஜய் தேவ்கன்

    இதைத்தொடர்ந்து, 'கைதி' திரைப்படம் இந்தியில் 'போலோ' என்ற தலைப்பில் உருவாகி வருகிறது. இதில் கார்த்தி கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் அஜய் தேவ்கன் நடிக்கிறார். மேலும் நரேன் கதாபாத்திரத்தில் நடிகை தபு நடிக்கிறார். இப்படத்தை அஜய் தேவ்கன் பிலிம்ஸ் மற்றும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.


    போலா

    இப்படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த டீசரின் இறுதியில் சூலம் கொண்டு காரை குத்துவது போன்ற காட்சி ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 



    • அவதார்: தி வே ஆப் வாட்டர் திரைப்படம் 160 மொழிகளில், டிசம்பர் 16 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
    • இப்படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில், 2009-ல் திரைக்கு வந்த அவதார் படம் உலகம் முழுவதும் வசூல் சாதனை நிகழ்த்தியது. படத்தில் இடம்பெற்ற கற்பனை உலகமும், கிராபிக்ஸ் தொழில் நுட்பங்களும் ரசிகர்களை வியக்க வைத்தன. தற்போது அவதார் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. படத்துக்கு அவதார்: தி வே ஆப் வாட்டர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படம் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய இந்திய மொழிகள் உள்பட 160 மொழிகளில், டிசம்பர் 16 ஆம் தேதி வெளியாகவுள்ளது.


    அவதார் -2

    சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்திய நிலையில் தற்போது 'அவதார்: தி வே ஆப் வாட்டர்' படத்தின் புதிய டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தின் டிரைலரில் ஆச்சரியப்படுத்தும் கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்று ரசிர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தற்போது இந்த டிரைலர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.



    • சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை வெப் தொடராக இயக்குனர் ஏ.எம்.ஆர். ரமேஷ் இயக்கி வருகிறார்.
    • இந்த தொடருக்கு எதிராக வீரப்பன் மனைவி முத்துலட்சுமி தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை 'வனயுத்தம்' என்ற பெயரில் இயக்குனர் ஏ.எம்.ஆர். ரமேஷ் திரைப்படமாக இயக்கினார். இவர் தமிழில் குப்பி, காவலர் குடியிருப்பு போன்ற படங்களை இயக்கியுள்ளார். தற்போது சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை வெப் தொடராக இயக்கி வருகிறார். இதில் வீரப்பன் கதாபாத்திரத்தில் நடிகர் கிஷோர் நடிக்கிறார்.


    கிஷோர்

    இந்த வெப்தொடரின் படப்பிடிப்பு சத்தியமங்கலம் காடுகளில் தொடங்கி உள்ளது. இதில், வீரப்பனை வேட்டையாடும் போலீஸ் அதிகாரியாக விவேக் ஓபராயும், வீரப்பனின் தந்தை கதாபாத்திரத்தில் கயல் தேவராஜும், குற்ற உளவியல் நிபுணராக டைரக்டர் ரமேஷ் மகள் விஜேதாவும், நடிகர் ராஜ்குமார் வேடத்தில் விவேக் ஓபராயின் தந்தை சுரேஷ் ஓபராயும் நடிக்கின்றனர்.


    கிஷோர்

    தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் இந்த தொடர் உருவாகிறது. இத்தொடருக்கு தடை விதிக்கக்கோரி வீரப்பன் மனைவி முத்துலட்சுமி தரப்பில் பெங்களூரு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இருப்பதாகவும், இந்த வழக்கை சட்டப்படி சந்திப்பேன் என்றும் இயக்குனர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் தெரிவித்திருந்தார்.

    இதைத்தொடர்ந்து, வீரப்பன் வெப் தொடருக்கு எதிரான தடையை நீக்கி நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. இதனால் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் என்று இயக்குனர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் அறிவித்து உள்ளார்.

    • பிக்பாஸ் 6-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • தற்போது பிக்பாஸ் வீட்டினுள் 15 போட்டியாளர்கள் இருக்கின்றனர்.

    பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். மேலும் ஜி.பி. முத்து தாமாக முன் வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். பின்னர் அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி உள்ளிட்டோர் எலிமினேட் செய்யப்பட்டனர். இதில் தற்போது 15 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 44-வது நாட்களை நெருங்கியுள்ளது.


    பிக்பாஸ் சீசன் 6

    இதில் இந்த வாரத்திற்கான டாஸ்க்கில் பிக்பாஸ் வீடு நீதிமன்றமாக மாறியுள்ளது. இதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வந்து கேமரா முன்பு தங்களது புகார்களை தெரிவித்து யார் தங்களுக்காக வாதாட வேண்டும் என்பதையும் தெரிவிக்குமாறு கூறப்பட்டது. இதில் தனலட்சுமி தனக்கு வாதாடுவதற்காக ஆயிஷாவை தேர்வு செய்தார். இந்நிலையில், இன்று வெளியான மூன்றாவது புரோமோவில், இதற்கு முன்பு 40 நாட்கள் இருந்த வீட்டை நான் வித்தியாசமாக காண்பிக்க வேண்டும் என்று அவ்வளவு ஆர்வமாக இருந்தேன்.


    பிக்பாஸ் சீசன் 6

    ஆனால் அது யாருக்கும் புரியவில்லை என்று தனலட்சுமி, ஆயிஷாவிடம் வருத்தத்துடன் கூறுகிறார். பின்னர் நீதிமன்றத்தில் நந்தினியையும் சிவினையும் விக்டிமாக அசெஸ் பண்றேன் என்று ஆயிஷா கூறுகிறார். இதற்கு பிக்பாஸ் நந்தினி மற்றும் சிவினிடம் சாட்சியாக இருக்க சம்மதமா? என்று கேட்கிறார். அதற்கு இருவரும் மறுப்பு தெரிவிக்கின்றனர். இதனால் கோபமடைந்த தனலட்சுமி இனி என் கேம்ம நான் எப்படி விளையாடுறேனு பாரு என்று கூறுகிறார். இதனுடன் இந்த புரோமோ முடிவடைகிறது. இதற்கு முன்பு நந்தினி மற்றும் சிவினிடம் தனலட்சுமி பிரச்சினையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.



    • விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படம் அடுத்த வருடம் வெளியாகவுள்ளது.
    • இந்த படத்தின் முதல் பாடலான ‘ரஞ்சிதமே’ சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்று வருகிறது.

    வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

    ரஞ்சிதமே

    ரஞ்சிதமே

     

    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தீபாவளி தினத்தன்று 'வாரிசு' திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு, சங்கராந்திக்கு திரைப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இப்படத்தின் முதல் பாடலான 'ரஞ்சிதமே' பாடலை கடந்த 5 ம் தேதி படக்குழு வெளியிட்டது. விஜய் மற்றும் எம்.எம்.மானசி குரலில், விவேக் வரிகளில் வெளியான 'ரஞ்சிதமே' பாடல் துள்ளல் இசையோடு ரசிகர்களை கவர்ந்து ஹிட் ஆனது.

    ரஞ்சிதமே

    ரஞ்சிதமே

    இந்நிலையில் ரஞ்சிதமே பாடல் 60 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    ×