உலக அளவில் வசூலை குவிக்கும் 'காந்தாரா'

நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘காந்தாரா’.இந்த திரைப்படம் பலரின் பாராட்டுக்களை பெற்றது.
காந்தாரா
காந்தாரா
Published on

நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த 'காந்தாரா' திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியானது. முதலில் இந்த படம் கன்னட மொழியில் மட்டுமே வெளியிடப்பட்டது. கர்நாடகாவில் விமர்சன ரீதியில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், நல்ல வசூலையும் குவித்தது. இதையடுத்து, படத்தை மற்ற மொழிகளில் வெளியிட படத்தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே பிலிம்ஸ் முடிவு செய்து. இதனடிப்படையில் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் சமீபத்தில் 'காந்தாரா' திரைப்படம் வெளியிடப்பட்டது.

காந்தாரா

தற்போது அனைத்து மொழிகளிலும் இந்த படம் வசூலில் சாதனை படைத்துள்ளது. இந்த படத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நடிகர் ரஜினிகாந்த் உள்பட பலரும் பாராட்டினர். இந்த நிலையில், 'காந்தாரா' திரைப்படம் உலகம் முழுவதும் இதுவரை ரூ.400 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காந்தாரா

அதன்படி, கேரளாவில் ரூ.19.2 கோடியையும், வட இந்தியாவில் ரூ.96 கோடியையும், தெலுங்கில் ரூ.60 கோடியையும், தமிழ்நாட்டில் 12.70 கோடியையும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கர்நாடகாவில் மட்டும் ரூ.168.5 கோடி ரூபாயை படம் வசூலித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் வெளிநாட்டில் ரூ.44 கோடியை வசூலித்திருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com