search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    உங்க படம் இங்க ஓடி காசு பாக்கலாம்.. வாரிசு அங்க ஓடக்கூடாதா..? நடிகர் கஞ்சா கருப்பு ஆவேசம்..
    X

    கஞ்சா கருப்பு

    உங்க படம் இங்க ஓடி காசு பாக்கலாம்.. 'வாரிசு' அங்க ஓடக்கூடாதா..? நடிகர் கஞ்சா கருப்பு ஆவேசம்..

    • விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
    • பொங்கல் பண்டிகையில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து அதிக தியேட்டர்களை ஒதுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    வாரிசு

    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தீபாவளி தினத்தன்று 'வாரிசு' திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு, சங்கராந்திக்கு திரைப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இதனிடையே ஐதராபாத்தில் நடந்த தெலுங்கு தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் பொங்கல் பண்டிகையில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து அதிக தியேட்டர்களை ஒதுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


    வாரிசு

    இந்த முடிவுக்கு தமிழ் சினிமாவில் இருந்து பலரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர்.இந்நிலையில் இந்த பிரச்சினை குறித்து நடிகர் கஞ்சா கருப்பு தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார். அதில், "சபரி ஐயப்பன் படம் வெற்றி பெற்றால் தெலுங்கிற்கு கேட்டால் கொடுக்க மாட்டோமா. நீங்க ஏன் தியேட்டர் இல்ல அது இல்லை என்று சொல்கிறீர்கள். உங்க படம் மட்டும் பாகுபலியிலிருந்து பரதேசி புலி வரை இங்க வந்திருக்கு.


    கஞ்சா கருப்பு

    உங்க படம் மட்டும் தமிழ்நாட்டில் ஓடி பெரிய காசு பாக்கலாம். எங்க படம் அங்க ஓடக் கூடாதா. ஆந்திராவில் ஒரு சூப்பர் ஹீரோ படம் வரும் போது நாங்கள் இப்படி சொன்னால் நீங்கள் விடுவீர்களா? தமிழர்களைத் தமிழர்களாக மதியுங்கள். ஆந்திரா மக்களுக்கு ஒன்று நான் சொல்கிறேன். ஒழுங்கா விஜய்யின் வாரிசு படத்தை அங்கே திரையிடுங்கள். அப்படிச் செய்தால்தான் எங்களுக்குப் பெருமை. இல்லைன்னா அது எங்களுக்குப் பெருமை கிடையாது. வறுமை என நாங்க சொல்லிட்டு போய்டுவோம்" என ஆவேசமாகப் பேசினார்.

    Next Story
    ×