என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பாலாஜி முருகதாஸ்.
    • இவரின் சமூக வலைதளப் பதிவு வைரலாகி வருகிறது.

    பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் பாலாஜி முருகதாஸ். இந்த நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்ற இவர் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு டைட்டில் பட்டத்தை வென்றார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பலருக்கு சினிமா வாய்ப்புகள் குவிந்தன. அந்த வகையில் பாலாஜி முருகதாஸுக்கும் வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் கிடைக்கவில்லை.


    பாலாஜி முருகதாஸ்

    இந்த நிலையில் பாலாஜி முருகதாஸ் முதலமைச்சர் ஸ்டாலினை டேக் செய்து பகிர்ந்துள்ள பதிவு தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில், 'தயவுசெய்து டாஸ்மாக் கடைகளை மூடுங்கள். இது ஏராளமான உயிர்களை அழித்துள்ளது. ரம்மியை ஒப்பிடும்போது குடியால் அழிந்தவர்கள் தான் அதிகம் என்று பதிவு செய்திருந்தார்.


    ரசிகர்கள் பகிர்ந்த புகைப்படம்

    மேலும், தனது மற்றொரு பதிவில், மதுவினால் என்னை போன்ற பலர் அனாதையாக மாறியுள்ளனர். பலர் குடும்பத்தை இழந்துள்ளனர். என்னை அரசியலுக்கு இழுக்காதீர்கள். உங்களால் என்னை சமாளிக்க முடியாது" என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு பாலாஜி முருகதாஸ் டாஸ்மாக் கடைக்குள் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.


    • நானி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தசரா’.
    • இப்படம் வருகிற 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் நானி தற்போது 'தசரா' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். மேலும் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் சுதாகர் செருக்குரி தயாரித்துள்ள இப்படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ளார்.


    தசரா

    இப்படத்தின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. மேலும், இப்படத்தின் புரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது. 'தசரா' படத்தின் டிரைலர் மற்றும் மூன்று பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.


    தசரா போஸ்டர்

    இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'தசரா' படத்தின் நான்காவது பாடலான 'ஓ தாலேலாலோ' பாடல் நாளை மாலை 4.05 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


    • நடிகை சமந்தாவின் சாகுந்தலம் திரைப்படம் ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
    • இதைத்தொடர்ந்து இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு ஈடுப்பட்டுள்ளது.

    நடிகை சமந்தா தற்போது சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள சாகுந்தலம் படத்தில் நடித்துள்ளார். மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை குணசேகர் இயக்கியுள்ளார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார்.


    இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற 5 மொழிகளில் வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், நடிகை சமந்தா சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார். அப்போது ஒரு ரசிகர், நீங்கள் யாருடனாவது டேட்டிங் வைத்துக் கொள்ளுங்கள் என்று கோரிக்கை வைத்தார். அதற்கு சமந்தா உங்களை விட என்னை அதிகம் நேசிக்கப்போவது யார் என்று கேட்டிருக்கிறார். இது தற்போது வேகமாக பரவி வருகிறது.

    • இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைபப்டம் 'கேப்டன் மில்லர்'.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    ராக்கி, சாணிக் காயிதம் படங்களை இயக்கிய இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார்.


    மேலும் நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் மற்றும் சுமேஷ் மூர், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் வைரலானது.


    இதையடுத்து கேப்டன் மில்லர் திரைப்படம் இந்தியர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையிலான போரை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வருவதாகவும் இதில் ஏராளமான துப்பாக்கி குண்டுகள் மற்றும் குண்டுவெடிப்புகளுடன் படக்குழு பெரிய அளவில் காட்சியை பதிவு செய்து வருவதாகவும் தகவல் வெளியானது.


    இந்நிலையில், இப்படத்தின் போர்க் காட்சிகள் தென்காசி அருகே உள்ள காட்டுப் பகுதியில் படமாக்கப்பட்டு வருவதாகவும் இந்தக் காட்சிகளை வீடியோ எடுத்த ஒருவர், அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், அந்த காட்சிகளை நீக்கும்பணியில் படக்குழுவினர் ஈடுப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • 'பொன்னியின் செல்வன் -2' படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியிட்டு விழா வருகிற 29ம் தேதி நடைபெறவுள்ளது.
    • இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கமல் கலந்து கொள்ளவுள்ளார்.

    மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்-2 திரைப்படம் வருகிற ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் முதல் பாகம் ரசிகர்களை கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்றதால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

     

    பொன்னியின் செல்வன்-2

    பொன்னியின் செல்வன்-2


    பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா வருகிற 29ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளவுள்ள பிரபலங்கள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில் இதில் கலந்துக் கொள்ளும் விருந்தினர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.


    சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் கமல்
    சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் கமல்

    அதன்படி இந்நிகழ்ச்சியில் நடிகர் கமல் கலந்து கொள்ளவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி, கமல் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் திரைப்படம் 'கேம் சேஞ்ஜர்'.
    • இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

    தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர், தெலுங்கு நடிகர் ராம்சரண் நடிப்பில் 'கேம் சேஞ்ஜர்' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். இப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். 'கேம் சேஞ்ஜர்' படத்தில் நடிகர் ராம் சரண் 80 வினாடிகளுக்கு தொடர்ந்து நடனமாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


    கேம் சேஞ்ஜர் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்

    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து ராம்சரண் பிறந்தநாளானா இன்று 'கேம் சேஞ்ஜர்' படத்தின் டைட்டில் வீடியோவை படக்குழு வெளியிட்டது. இந்நிலையில், தற்போது இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'கேம் சேஞ்ஜர்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.


    • மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன் -2' திரைப்படம் வருகிற ஏப்ரல் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • இப்படத்தின் வெளியீட்டு உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

    மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான படம் பொன்னியின் செல்வன்-1. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.


    பொன்னியின் செல்வன்

    பொன்னியின் செல்வன்


    இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா வருகிற 29ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


    பொன்னியின் செல்வன்

    பொன்னியின் செல்வன்


    இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டு உரிமை குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

    • விஜய், அஜித், ரஜினி, தனுஷ், கார்த்தி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் யோகி பாபு.
    • இவர் திருசெந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. இவர் விஜய், அஜித், ரஜினி, தனுஷ், கார்த்தி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இவர் தற்போது பல படங்களை கைவசம் வைத்துள்ளார். தீவிர கடவுள் பக்தி கொண்ட யோகி பாபு அவ்வப்போது கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்.


    யோகி பாபு

    யோகி பாபு

    இந்நிலையில் நடிகர் யோகி பாபு திருசெந்தூர் செந்திலாண்டவர் திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர்.

    • நடிகை சமந்தாவின் சாகுந்தலம் திரைப்படம் ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
    • இதைத்தொடர்ந்து இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு ஈடுப்பட்டுள்ளது.

    நடிகை சமந்தா தற்போது சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள சாகுந்தலம் படத்தில் நடித்துள்ளார். மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை குணசேகர் இயக்கியுள்ளார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளா்.


    சாகுந்தலம்

    இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற 5 மொழிகளில் வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து சமீபத்தில் சமந்தா மற்றும் சாகுந்தலம் படக்குழுவினர் ஐதராபாத்திலுள்ள ஸ்ரீ பேடம்மா தள்ளி கோவிலுக்கு சென்று படம் வெற்றி பெறுவதற்காக சிறப்பு பூஜை செய்தனர்.


    சாகுந்தலம் போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, சாகுந்தலம் படத்தின் 3D டிரைலரை படக்குழு வெளியிடவுள்ளது. இந்த நிகழ்ச்சி நாளை (மார்ச் 28) மாலை ஹைதராபாத்தில் உள்ள தனியார் திரையரங்கில் நடைபெறவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

    • நடிகை யாஷிகா ஆனந்த் சமீபத்தில் எதிர்பாராத கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.
    • இவருக்கு சமீபத்தில் கைது வாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

    தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக இருக்கும் யாஷிகா ஆனந்த், தனது நண்பர்களுடன் காரில் பயணம் செய்த போது மாமல்லபுரம் அருகே உள்ள சூளேரிக்காடு பகுதியில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி வள்ளிச்செட்டி பவணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.



    மேலும் படுகாயம் அடைந்த யாஷிகா மற்றும் அவரது இரண்டு ஆண் நண்பர்கள் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தனர். இதையடுத்து யாஷிகாவிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். இந்த வாக்குமூலத்தில் காரை ஓட்டி வந்தது யாஷிகா தான் என்பது உறுதி செய்யப்பட்டது. யாஷிகா அதிவேகமாக காரை ஓட்டி வந்த போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்துக்குள்ளானதாகவும் அந்த காரில் இருந்த யாஷிகாவின் தோழி பவானி சீட்பெல்ட் அணியாததால் காருக்கு வெளியே தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததாகவும் அவருடைய வாக்குமூலத்தில் தெரியவந்தது.



    தொடர்ந்து படுகாயம் அடைந்த யாஷிகா மற்றும் அவரது இரண்டு ஆண் நண்பர்கள் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தனர். இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக நடிகை யாஷிகா ஆனந்த் மார்ச் 21-ஆம் தேதி செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய நிலையில் இவர் ஆஜராகாததால் 25-ஆம் தேதிக்குள் ஆஜராக வேண்டும் என கைது வாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், இவர் தற்போது செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

    • ரஜினிகாந்த் அன்பு இல்லம் எனும் பெயரில் கான்கிரீட் தளத்துடன் வீடு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.
    • நேற்று கிரகப்பிரவேஷம் செய்து அதற்கான சாவியை பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

    நடிகர் ரஜினிகாந்த் 47 ஆண்டாக கலைத்துறையில் சேவையாற்றி தமிழக மக்களை மகிழ்வித்து வருவதற்காகவும், இந்திய அரசின் திரைத்துறை சார்ந்த உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெற்றமைக்காகவும் ரஜினிகாந்த் ரசிகர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து சென்னை, நந்தனம் ஓய்.எம்.சி.ஏ மைதானத்தில் மார்ச் மாதம் 26-ந்தேதி பாராட்டு விழாவும், நலிந்த ரசிகர் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவையும் நடத்த திட்டமிட்டு அதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வந்தது.

    இந்நிலையில் நிகழ்ச்சி திடீரென தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணத்தால் ரத்து செய்யப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளரும், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தின் செயலாளருமான சோளிங்கர் என்.ரவி அப்போது வெளியிட்ட அறிக்கையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் அவர்களிடத்தில் நேரில் வழங்கப்படும் என்று கூறியிருந்தார்.



    அதனடிப்படையில் ரசிகர்களின் குடும்ப சூழலுக்கு ஏற்றவாறு தேர்ந்தெடுக்கப்பட்ட நலத்திட்ட உதவிகளுள் ரஜினிகாந்த் அன்பு இல்லம் எனும் பெயரில் கான்கிரீட் தளத்துடன் வீடு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 5 பேருக்கு இந்த வீடு வழங்கப்பட்டுள்ளது. நேற்று கிரகப்பிரவேஷம் செய்து அதற்கான சாவியை பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

    வாழ்வாதாரம் இன்றி தவித்து வந்தவர்களுக்கு பங்க் அமைத்து கொடுத்துள்ளனர். கணவனால் கைவிடப்பட்டு வருவாய் இன்றி தவித்து வந்த பெண்களுக்கு வீட்டிலிருந்தபடியே வருவாய் ஈட்ட ஊதுவத்தி தயாரிக்கும் எந்திரம், 2 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இட்லி மாவு அரைக்கும் எந்திரம், தையல் எந்திரம் 5 பேருக்கும், மேற்படிப்பு படிக்க இயலாமல் தவித்து வந்த 15 மாணவர்களுக்கு முழு கல்விக்கான நிதியும், உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கான நிதியும், ஏழ்மையில் தவித்து வந்த குடும்ப தலைவிகளுக்கு குடிசை தொழில் தொடங்க நிதியும், மாற்றுத்திறனாளி ரசிகர்களுக்கு 3 சக்கர மோட்டார் வாகனங்களும் வழங்கப்பட்டது. 2 பேருக்கு கறவை மாடுகள் வழங்கினர்.

    நலத்திட்ட உதவிகள் பெற்றுக்கொண்ட பயனாளிகள் நடிகர் ரஜினிகாந்த்துக்கு நன்றியை தெரிவித்து ஒருமுறையாவது தங்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் வாய்ப்பை வழங்குமாறு மிகுந்த உருக்கத்துடன் கேட்டுக் கொண்டனர்.

    • அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் கடந்த 24ம் தேதி அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார்.
    • நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி நேரில் சந்தித்து அஜித்துக்கு ஆறுதல் கூறியுள்ளனர்.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் கடந்த மார்ச் 24ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். சில ஆண்டுகளாக பக்கவாத பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவுக்கு திரையுலகினர், பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். இவரது உடல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.



    தந்தையின் மறைவுக்கு பிறகு அஜித்தை நேரில் சந்தித்து விஜய் ஆறுதல் கூறினார். இந்நிலையில் அஜித்தை நேரில் சந்தித்து நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆறுதல் கூறினர். சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித்தின் வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

    ×