3டி டிரைலரை வெளியிடும் சமந்தா படக்குழு. வைரலாகும் போஸ்டர்

நடிகை சமந்தாவின் சாகுந்தலம் திரைப்படம் ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு ஈடுப்பட்டுள்ளது.
சாகுந்தலம்
சாகுந்தலம்
Published on

நடிகை சமந்தா தற்போது சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள சாகுந்தலம் படத்தில் நடித்துள்ளார். மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை குணசேகர் இயக்கியுள்ளார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளா்.

சாகுந்தலம்

இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற 5 மொழிகளில் வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து சமீபத்தில் சமந்தா மற்றும் சாகுந்தலம் படக்குழுவினர் ஐதராபாத்திலுள்ள ஸ்ரீ பேடம்மா தள்ளி கோவிலுக்கு சென்று படம் வெற்றி பெறுவதற்காக சிறப்பு பூஜை செய்தனர்.

சாகுந்தலம் போஸ்டர்

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, சாகுந்தலம் படத்தின் 3D டிரைலரை படக்குழு வெளியிடவுள்ளது. இந்த நிகழ்ச்சி நாளை (மார்ச் 28) மாலை ஹைதராபாத்தில் உள்ள தனியார் திரையரங்கில் நடைபெறவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com