என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • ஆந்திர மாநிலத்தில் நடிகை ரோஜா, நடிகர்கள் பாலகிருஷ்ணா, பவன் கல்யாண் ஆகியோர் தீவிர அரசியலில் உள்ளனர்.
    • இந்த நிலையில் நடிகர் சுமன் தீவிர அரசியலுக்கு வருவதாக தெரிவித்துள்ளார்.

    ஆந்திர மாநிலத்தில் நடிகை ரோஜா, நடிகர்கள் பாலகிருஷ்ணா, பவன் கல்யாண் ஆகியோர் தீவிர அரசியலில் உள்ளனர். இந்த நிலையில் நடிகர் சுமன் தீவிர அரசியலுக்கு வருவதாக தெரிவித்துள்ளார்.

    ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கோமாட்டிப்பா கிராமத்தில் நேற்று தனியார் நிகழ்ச்சியில் நடிகர் சுமன் கலந்து கொண்டார். அப்போது அவர், நான் அரசியலுக்கு வருவது உறுதி. ஒவ்வொரு ஆண்டும் மழை மற்றும் பேரிடர்கள் ஏற்படுகின்றன, எனவே முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டும். நெற்பயிர் நன்றாக இருந்தால்தான் நாடு நன்றாக இருக்கும். எந்த ஒரு அரசும் விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்க்க முன்வர வேண்டும். இவ்வாறு கூறினார்.

    நடிகர் சுமன் பா.ஜ.க. அல்லது தெலுங்கு தேசம் கட்சியில் இணைய வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    • மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் பொன்னியின் செல்வன் -2.
    • இப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது.

    மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், ரகுமான் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் பொன்னியின் செல்வன் -2. இப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை போலவே இரண்டாம் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் உலக அளவில் ரூ.300 கோடிக்கு மேல் வசூலை குவித்து சாதனை படைத்துள்ளதாக அதிகராப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டிருந்தது.


    பொன்னியின் செல்வன் -2

    பொன்னியின் செல்வன் -2

    இந்நிலையில் பொன்னியின் செல்வன் -2 படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.

    • விஜய் ஆண்டனி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பிச்சைக்காரன் -2’ திரைப்படம் மே 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
    • இப்படத்தில் இடம்பெற்றுள்ள நாநா புலுக் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

    விஜய் ஆண்டனி நடித்த 'பிச்சைக்காரன்' படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது பிச்சைக்காரன் 2 திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்கியும் உள்ளார். இதில் காவ்யா தப்பார், ராதா ரவி, ஒயி ஜி மகேந்திரன், மன்சூர் அலிகான், ஜான் விஜய், ஹரிஷ் பேரடி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் மே 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    பிச்சைக்காரன் 2

    இந்நிலையில் பிச்சைக்காரன் 2 படத்தில் இடம்பெற்றுள்ள நாநா புலுக் வீடியோ பாடலை படக்கு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ பாடல் ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கஸ்டடி’.
    • இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் 'கஸ்டடி'. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடித்துள்ளார். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி இதனை தயாரித்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்திருக்கிறார்.


    கஸ்டடி

    கஸ்டடி

    'கஸ்டடி' திரைப்படத்தில் வில்லனாக அரவிந்த் சாமி நடித்திருக்கிறார். மேலும், இதில் சரத்குமார், வென்னேலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர்.


    கஸ்டடி படக்குழு

    கஸ்டடி படக்குழு

    'கஸ்டடி' திரைப்படம் நாளை (மே 12-ஆம் தேதி) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் கஸ்டடி திரைப்படம் மலையாளத்தில் வெளியான நயட்டு படத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளது என்று நெட்டிசன் ஒருவர் பதிவிட்டிருந்தார். இதற்கு வெங்கட் பிரபு பதிலளித்திருப்பது, இது உண்மை இல்லை ப்ரோ, நான் சொன்னதை நீங்கள் தவறாக புரிந்துக் கொண்டுள்ளீர்கள். நாளை அனைவரும் தெரிந்து கொள்வார்கள். கண்டிப்பாக கஸ்டடி திரைப்படத்தை பாருங்கள். பார்த்த பிறகு எனக்கு தெரியப்படுத்துங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

    • விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘இராவண கோட்டம்’.
    • இப்படத்தின் கதாப்பாத்திரங்களை படக்குழு அறிவித்துள்ளது.

    இயக்குனர் விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் `இராவண கோட்டம்'. சாந்தனு நாயகனாக நடித்துள்ள இப்படத்தை கண்ணன் ரவி தயாரித்துள்ளார். இதில் சாந்தனுவுக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார். முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.



    இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர், டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் `இராவண கோட்டம்' படத்தின் கதாப்பாத்திரங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தில் கயல் ஆனந்தி இந்திராவாகவும், திபா ஷங்கர் காளியம்மாவாகவும் நடித்துள்ளதாக போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

    இதற்குமுன்பு சித்ரவேல் என்ற கதாப்பாத்திரத்தில் நடிகர் இளவரசுவும், மதிவாணன் என்ற கதாப்பாத்திரத்தில் சஞ்சய் சரவணனும் நடித்துள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘சாகுந்தலம்’.
    • இப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகவுள்ளது.

    இயக்குனர் குணசேகர் இயக்கத்தில் சமந்தா நடித்திருந்த திரைப்படம் 'சாகுந்தலம்'. இப்படத்தில் மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்திருந்தார். 


    சாகுந்தலம்

    சாகுந்தலம்

    இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற 5 மொழிகளில் ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில், சாகுந்தலம் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் நாளை (மே 12ம் தேதி) வெளியாகவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. சமந்தாவின் சாகுந்தலம் படம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள நிலையில் இது தொடர்பான ஹேஷ்டாக்கை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

    • ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் நடிப்பில் தெலுங்கில் தயாராகி தமிழ், இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் வெளியானது.
    • ஜப்பானில் 44 நகரங்களில் 209 தியேட்டர்களிலும், 31 ஐமேக்ஸ் தியேட்டர்களிலும் ஆர்.ஆர்.ஆர் படம் திரையிடப்பட்டது.

    ஜப்பான் ரசிகர்கள் இந்திய படங்களை பார்க்க ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் தமிழ், தெலுங்கு, இந்தி படங்களை ஜப்பான் மொழியில் டப்பிங் செய்து வெளியிட்டு வருகிறார்கள். ரஜினிகாந்தின் முத்து படத்தை பார்த்த பிறகு அவருக்கு ஜப்பானில் ரசிகர் மன்றத்தையே தொடங்கி உள்ளனர். சமீப காலங்களில் திரைக்கு வந்த அனைத்து ரஜினி படங்களும் ஜப்பானிலும் திரையிடப்பட்டன.


    ஆர்.ஆர்.ஆர்

    ஆர்.ஆர்.ஆர்

    சமீபத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் நடிப்பில் தெலுங்கில் தயாராகி தமிழ், இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் வெளியிடப்பட்டு வசூல் சாதனை நிகழ்த்திய ஆர்.ஆர்.ஆர் படத்தையும் ஜப்பானில் வெளியிட்டனர். இந்த படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கார் விருதை வென்றதும் ஜப்பானியர்கள் ஆர்வமாக படத்தை பார்த்தனர்.


    ஆர்.ஆர்.ஆர்

    ஆர்.ஆர்.ஆர்

    ஜப்பானில் 44 நகரங்களில் 209 தியேட்டர்களிலும், 31 ஐமேக்ஸ் தியேட்டர்களிலும் ஆர்.ஆர்.ஆர் படம் திரையிடப்பட்டது. இந்நிலையில் ஜப்பானில் ஆர் ஆர் ஆர் படம் 200 நாட்கள் ஓடி ரூ.119 கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தி உள்ளது. இதன் மூலம் ஜப்பானில் அதிக வசூல் செய்த இந்திய படம் என்ற பெருமையை ஆர்.ஆர்.ஆர் பெற்றுள்ளது. ஆர்.ஆர்.ஆர் படம் உலகம் முழுவதும் ரூ.1,235 கோடி வசூலித்து உள்ளது.

    • இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கஸ்டடி’.
    • இப்படம் வருகிற 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் 'கஸ்டடி'. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடித்துள்ளார். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி இதனை தயாரித்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்திருக்கிறார்.


    கஸ்டடி

    'கஸ்டடி' திரைப்படத்தில் வில்லனாக அரவிந்த் சாமி நடித்திருக்கிறார். மேலும், இதில் சரத்குமார், வென்னேலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர்.


    கஸ்டடி போஸ்டர்

    'கஸ்டடி' திரைப்படம் வருகிற 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.


    • கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'தி கேரளா ஸ்டோரி'.
    • இந்த திரைப்படத்திற்கு தடை விதித்து முதல் மந்திரி மம்தா பானர்ஜி அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

    விபுல்ஷா தயாரிப்பில் இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'தி கேரளா ஸ்டோரி'. இப்படம் கேரளாவை சேர்ந்த 32 ஆயிரம் இந்து இளம் பெண்களை மூளைச் சலவை செய்து மதம் மாற்றி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாக சித்தரித்து எடுக்கப்பட்டுள்ளது.

    இந்த படத்துக்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அசம்பாவிதங்களை தவிர்க்க தியேட்டர்களில் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் மால்களில் உள்ள திரையரங்குகளில் மட்டும் இப்படம் திரையிடப்பட்டு பின்னர் திரையிடப்படாது என அறிவிக்கப்பட்டது.


    தி கேரளா ஸ்டோரி

    'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்திற்கு தடை விதித்து முதல் மந்திரி மம்தா பானர்ஜி அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதாவது, வெறுப்பு மற்றும் வன்முறை சம்பவங்களை தவிர்க்கவும் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார்.

    இதையடுத்து உத்தரப்பிரதேசத்தில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்திற்கு வரி விலக்கு அறிவிக்க உள்ளதாக அம்மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவித்திருந்தார். இந்நிலையில், 'தி கேரளா ஸ்டோரி' படக்குழுவினர் லக்னோவில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • நடிகர் சரவணன் கடந்த 2014-ஆம் ஆண்டு மவுலிவாக்கத்தில் லேக் வியூ அடுக்கு மாடி குடியிருப்பில் இரண்டு வீடுகளை வாங்கியுள்ளார்.
    • அந்த வீடுகளுக்கு சொந்தமான கார் பார்க்கிங் மட்டும் 700 முதல் 800 சதுரடி இருந்துள்ளது.

    90-களில் பல திரைப்படங்களில் நடித்து கதாநாயகனாக வலம் வந்தவர் நடிகர் சரவணன். கார்த்தியுடன் இவர் நடித்த 'பருத்திவீரன்' திரைப்படம் சினிமாவில் இவருக்கு மேலும் புகழை சேர்த்தது. நடிகர் சரவணன் கடந்த 2014-ஆம் ஆண்டு சென்னை, போரூர் அடுத்த மவுலிவாக்கத்தில் செண்பகராமன் என்பவரிடம் லேக் வியூ அடுக்கு மாடி குடியிருப்பில் இரண்டு வீடுகளை வாங்கியுள்ளார். அந்த வீடுகளுக்கு சொந்தமான கார் பார்க்கிங்கும் யு.டி.எஸ். என்று சொல்லப்படும் உபயோகிக்கும் இடம் 700 முதல் 800 சதுரடி இருந்துள்ளது.


    சரவணன் -தாமோ அன்பரசன்

    இந்த இடத்தை அந்த பகுதியில் இருக்கும் இராமமூர்த்தி என்பவர் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து அந்த இடத்தில் கடை அமைத்து அதற்கு மின் இணைப்பு வாங்கிக் கொண்டதாகவும் அதற்கான வரியையும் செலுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

    இது குறித்து அறிந்த சரவணன் அந்த இடத்தை மீட்டு தருமாறு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு போரூர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். ஆனால் அங்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தற்போது காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு அமைச்சர் தாமோ அன்பரசனிடம் தனது இடத்தை மீட்டு தருமாறு கோரிக்கை மனு அளித்துள்ளார். இந்த மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

    • நடிகர் ஜெய் தற்போது நடிக்கும் திரைப்படம் 'தீராக்காதல்'.
    • இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

    இயக்குனர் ரோகின் இயக்கத்தில் ஜெய் நடிக்கும் திரைப்படம் 'தீராக் காதல்'. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சித்து குமார் இசையமைக்கிறார். ரவிவர்மன் நீலமேகம் ஒளிப்பதி செய்கிறார். பிரசன்னா ஜி.கே. படத்தொகுப்பு மேற்கொள்கிறார்.


    தீராக்காதல் போஸ்டர்

    இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து, 'தீராக் காதல்' திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, தற்போது இப்படத்தின் டிரைலர் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. மனைவிக்கும் முன்னாள் காதலிக்கும் இடையே சிக்கி தவிக்கும் இளைஞனின் கதையை வெளிப்படுத்துவது போல உருவாகியுள்ள இந்த டிரைலர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

    மேலும், இப்படம் வருகிற 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.



    • தரணி ராசேந்திரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘யாத்திசை’.
    • இப்படம் ஏப்ரல் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

    தரணி ராசேந்திரன் இயக்கத்தில் வீனஸ் இன்ஃபோடைன்மென்ட் கே.ஜெ.கணேஷ் தயாரிப்பில் உருவான திரைப்படம் 'யாத்திசை'. இதில் சக்தி மித்ரன், செயோன், ராஜலட்சுமி, குரு சோமசுந்தரம், சந்திரகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏழாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனுக்கெதிராக போராடிய ஒரு சிறு தொல்குடியை பற்றிய கதையாக 'யாத்திசை' உருவாகி கடந்த ஏப்ரல் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இப்படம் குறித்து பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர்.


    யாத்திசை போஸ்டர்

    இந்நிலையில், 'யாத்திசை' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 12-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.


    ×