அது தவறு.. நாளை அனைவரும் தெரிந்து கொள்வார்கள்.. நெட்டிசனுக்கு பதிலடி கொடுத்த வெங்கட் பிரபு

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கஸ்டடி’.இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
வெங்கட் பிரபு
வெங்கட் பிரபு
Published on

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் 'கஸ்டடி'. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடித்துள்ளார். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி இதனை தயாரித்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்திருக்கிறார்.

கஸ்டடி
கஸ்டடி

கஸ்டடி

'கஸ்டடி' திரைப்படத்தில் வில்லனாக அரவிந்த் சாமி நடித்திருக்கிறார். மேலும், இதில் சரத்குமார், வென்னேலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர்.

கஸ்டடி படக்குழு
கஸ்டடி படக்குழு

கஸ்டடி படக்குழு

'கஸ்டடி' திரைப்படம் நாளை (மே 12-ஆம் தேதி) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் கஸ்டடி திரைப்படம் மலையாளத்தில் வெளியான நயட்டு படத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளது என்று நெட்டிசன் ஒருவர் பதிவிட்டிருந்தார். இதற்கு வெங்கட் பிரபு பதிலளித்திருப்பது, இது உண்மை இல்லை ப்ரோ, நான் சொன்னதை நீங்கள் தவறாக புரிந்துக் கொண்டுள்ளீர்கள். நாளை அனைவரும் தெரிந்து கொள்வார்கள். கண்டிப்பாக கஸ்டடி திரைப்படத்தை பாருங்கள். பார்த்த பிறகு எனக்கு தெரியப்படுத்துங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com