என் மலர்
சினிமா செய்திகள்

சுமன்
அரசியலுக்கு வருவது உறுதி நடிகர் சுமன் பேட்டி
- ஆந்திர மாநிலத்தில் நடிகை ரோஜா, நடிகர்கள் பாலகிருஷ்ணா, பவன் கல்யாண் ஆகியோர் தீவிர அரசியலில் உள்ளனர்.
- இந்த நிலையில் நடிகர் சுமன் தீவிர அரசியலுக்கு வருவதாக தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் நடிகை ரோஜா, நடிகர்கள் பாலகிருஷ்ணா, பவன் கல்யாண் ஆகியோர் தீவிர அரசியலில் உள்ளனர். இந்த நிலையில் நடிகர் சுமன் தீவிர அரசியலுக்கு வருவதாக தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கோமாட்டிப்பா கிராமத்தில் நேற்று தனியார் நிகழ்ச்சியில் நடிகர் சுமன் கலந்து கொண்டார். அப்போது அவர், நான் அரசியலுக்கு வருவது உறுதி. ஒவ்வொரு ஆண்டும் மழை மற்றும் பேரிடர்கள் ஏற்படுகின்றன, எனவே முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டும். நெற்பயிர் நன்றாக இருந்தால்தான் நாடு நன்றாக இருக்கும். எந்த ஒரு அரசும் விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்க்க முன்வர வேண்டும். இவ்வாறு கூறினார்.
நடிகர் சுமன் பா.ஜ.க. அல்லது தெலுங்கு தேசம் கட்சியில் இணைய வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
Next Story






