என் மலர்
இது புதுசு
மஹிந்திரா நிறுவனத்தின் eXUV300 எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல் வெளியீடு பற்றி அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஏற்கனவே இந்த மாடல் ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது.
மஹிந்திரா நிறுவனம் தனது முழு எலெக்ட்ரிக் மாடலான eXUV300 இந்தியாவில் தற்போதைய நிதியாண்டின் மூன்று அல்லது நான்காவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என அறிவித்து இருக்கிறது. அதன்படி மஹிந்திரா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஆல் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல் 2023 முதல் காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
முன்னதாக மஹிந்திரா தனது ஆல் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடலை 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் பிரீ-ப்ரோடக்ஷன் வடிவில் காட்சிப்படுத்தி இருந்தது. மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்ட எலெக்ட்ரிக் வாகனங்கள் பட்டியலில் eXUV300 அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அடுத்த ஏழு ஆண்டுகளில் மஹிந்திரா நிறுவனம் 16 புது எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கடந்த ஆண்டு அறிவித்து இருந்தது.

புது வாகனங்களில் எட்டு எலெக்ட்ரிக் எஸ்.யு.வி.க்கள், எட்டு இலகு ரக வர்த்தக வாகனங்கள் இடம்பெற்று இருக்கிறது. இதுதவிர மேலும் மூன்று எலெக்ட்ரிக் எஸ்.யு.வி.க்களை இந்த ஆண்டு அறிமுகம் செய்ய இருப்பதாக மஹிந்திரா சமீபத்திய டீசரில் அறிவித்து இருந்தது. இத்துடன் போக்ஸ்வேகன் நிறுவனத்தின் MEB பிளாட்பார்ம் உபகரணங்களை தனது வாகனங்களில் பயனபடுத்த மஹிந்திரா நிறுவனம் ஒப்பந்தம் போட்டுள்ளது.
முந்தைய கான்செப்ட் மாடல்களின் படி மஹிந்திரா eXUV300 மாடல் அதன் பெட்ரோல், டீசல் வேரியண்ட்களுடன் ஒப்பிடும் போது காஸ்மெடிக் மாற்றங்களை மட்டுமே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
பிரபல அம்பாசடர் கார்களை விற்பனை செய்து வந்த இந்துஸ்தான் மோட்டார்ஸ் எலெக்ட்ரிக் வாகன சந்தையில் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
உலகளவில் நீண்ட காலம் உற்பத்தி செய்யப்பட்டு வந்த கார்களில் ஒன்று இந்துஸ்தான் அம்பாசடர். 1956-இல் தொடங்கி 2014 வரை அம்பாசடார் மாடல் சந்தையில் இருந்தது. அதன் பின் இந்தியாவில் பிறப்பிக்கப்பட்ட கடுமையான புகை விதிகளை அடுத்து அம்பாசடர் மாடல் இந்த சந்தையில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது.
தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி இந்துஸ்தான் மோட்டார்ஸ் மீண்டும் களமிறங்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் ஐரோப்பிய நிறுவனத்துடன் கூட்டணி அமைப்பதாக கூறப்படுகிறது. இரு நிறுவனங்கள் கூட்டணியில் புதிதாக எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன.

இது தொடர்பாக இரு நிறுவனங்களிடையே அடுத்த ஆண்டு அதிகாகரப்பூர்வ ஒப்பந்தம் கையெழுத்தாக இருக்கிறது. கொல்கத்தாவை அடுத்த உத்தர்பாராவில் உள்ள இந்துஸ்தான் மோட்டார்ஸ் உற்பத்தி ஆலையில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன. எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்ய முதற்கட்டமாக ரூ. 600 கோடி முதலீடு செய்ய இந்கதுஸ்தான் மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது.
இது பற்றிய முழு தகவல்கள் அடுத்த ஆண்டு அறிவிக்கப்படும் என தெரிகிறது. இந்துஸ்தான் மோட்டார்ஸ் அதிக இடவசதி கொண்டிருப்பதால், ஆலையை மாற்றி அமைத்து புது எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தியை இங்கேயே துவங்க இருக்கிறது. இந்துஸ்தான் மோட்டார்ஸ் மட்டுமின்றி ஐரோப்பிய நிறுவனமும் தன்பங்கிற்கு முதலீடு செய்யும் என கூறப்படுகிறது.
எனினும், இதுபற்றி இரு நிறுவனங்கள் தரப்பில் இதுவரை இறுதியான முடிவு எட்டப்படவில்லை. இது பற்றிய தகவல்கள் அடுத்த ஆண்டு அறிவிக்கப்படலாம்.
ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய கிரெட்டா N லைன் மாடலுக்கான டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதன் இந்திய வெளியீடு பற்றி விரைவில் அறிவிக்கப்படலாம்.
ஹூண்டாய் நிறுவனம் சர்வதேச சந்தையில் தனது கிரெட்டா N மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் டீசரையும் ஹூண்டாய் வெளியிட்டு உஎள்ளது. புதிய ஹூண்டாய் கிரெட்டா N லைன் மாடலுக்கான டீசர் படங்கள் ஹூண்டாய் பிரேசில் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதன் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

சர்வதேச சந்தையில் ஹூண்டாய் நிறுவனத்தின் N லைன் வேரியண்ட்கள்: i10, i20, i30, எலாண்ட்ரா, கோனா மற்றும் டக்சன் போன்ற மாடல்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. எனினும், இந்தியாவில் ஹூண்டாய் i20 ஹேச்பேக் மாடலில் மட்டுமே N லைன் வேரியண்ட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஹூண்டாய் வென்யூ N லைன் வேரியண்ட் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹூண்டாய் கிரெட்டா N லைன் மாடலில் i20 N லைன் ஹேச்பேக் மாடலில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களுடனேயே அறிமுகமாகும் என கூறப்படுகிறது. அதன்படி முன்புற கிரில் மீது N லைன் பேட்ஜ், காண்டிராஸ்ட் ரெட் நிறம் மற்றும் ஸ்போர்ட் டிசைன் எலிமண்ட்கள் வழங்கப்படலாம்.
மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய பொலிரோ சிட்டி பிக் அப் டிரக் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் புதிய பொலிரோ பிக் அப் டிரக் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய பொலிரோ சிட்டி பிக் அப் டிரக் விலை ரூ. 7 லட்சத்து 97 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பொலிரோ சிட்டி பிக்அப் மாடலில் 1500 கிலோ எடையை சுமந்து செல்லும் திறன் கொண்டுள்ளது.

இதன் முந்தைய மாடலை விட புதிய பொரிலோ சிட்டி பிக்அப் டிரக் மாடலில் சிறிய பொனெட் வழங்கப்பட்டு இருக்கிறது. இதனால் பிக்அப் டிரக்-ஐ குறுகிய பகுதிகளிலும் சிறப்பாக கொண்டு செல்ல முடியும். புதிய பொலிரோ சிட்டி மாடலில் 2.5 லிட்டர் m2Di டீசல் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 65 பி.ஹெச்.பி. பவர், 195 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த பிக்அப் டிரக் லிட்டருக்கு 17.2 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது.
மஹிந்திரா பொலிரோ சிட்டி பிக்அப் டிரக் மாடலின் ஓட்டுனர் இருக்கை அருகில் அகலமான இருக்கை வழங்கப்பட்டு உள்ளது. இந்த மாடலுக்கு மூன்று ஆண்டுகள் அல்லது ஒரு கிலோமீட்டர் வரையிலான வாரண்டி கொண்டிருக்கிறது.
பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் செடான் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த காரின் வினியோகம் விரைவில் துவங்க இருக்கிறது.
பி.எம்.டபிள்யூ. நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஃபிளாக்ஷிப் iX எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மற்றும் மினி கூப்பர் SE மாடல்களை அறிமுகம் செய்து விட்டது. இந்த வரிசையில் தற்போது i4 எலெக்ட்ரிக் செடான் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய பி.எம்.டபிள்யூ. i4 மாடல் விலை ரூ. 69 லட்சத்து 90 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

புதிய பி.எம்.டபிள்யூ. i4 எலெக்ட்ரிக் செடான் மாடல் 4 சீரிஸ் கிரான் கூப் மாடலை போன்றே உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் தோற்றத்தில் மட்டும் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது. இந்த காரின் உள்புறம் 14.9 இன்ச் டச் ஸ்கிரீன் கொண்ட இன்போடெயின்மண்ட் சிஸ்டம், 12.3 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே என டூயல் ஸ்கிரீன் செட்-அப், i டிரைவ் 8 யு.ஐ. வழங்கப்பட்டு இருக்கிறது.
பி.எம்.டபிள்யூ. i4 எலெக்ட்ரிக் காரில் 83.9 கிலோவாட் ஹவர் பேட்டரி மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த யூனிட் 335 ஹெச்.பி. திறன், 430 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 5.7 நொடிகளில் எட்டிவிடும். மேலும் முழு சார்ஜ் செய்தால் 590 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அவின்யா எலெக்ட்ரிக் கார் மாடல் ரெண்டர் இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த கார் 2025 வாக்கில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய டாடா அவின்யா கான்செப்ட் மாடலை கடந்த மாதம் அறிமுகம் செய்தது. கான்செப்ட் மாடல் அறிமுகமானது முதல், புதிய அவின்யா மாடலின் ரெண்டர்கள் இணையத்தில் வெளியாக துவங்கி விட்டன. புதிய டாடா அவின்யா மாடல் 2025 ஆண்டு தான் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், புதிய மாடல் எப்படி இருக்கும் என்ற வாக்கில் பல ரெண்டர்கள் வெளியாகி விட்டன.
புதிய டாடா அவின்யா எலெக்ட்ரிக் கார் மாடல் ஜென் 3 ஸ்கேட்போர்டு ஆர்கிடெக்ச்சரில் உருவாகி வருகிறது. எலெக்ட்ரிக் வாகன சந்தையில் தொடர் வளர்ச்சியை பதிவு செய்து வரும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் 2025 வாக்கில் பத்து புது எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அறிவித்து இருக்கிறது.

சமீபத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்த டாடா ஹேரியர், அல்ட்ரோஸ் மற்றும் டாடா பன்ச் மாடல்களை போன்றே தனது ப்ரோடக்ஷன் மாடல் அதன் ரோட்-லீகல் மாடலுக்கு இணையாக உருவாக்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. புது எலெக்ட்ரிக் மாடலில் 18 அல்லது 19 இன்ச் வீல்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இது இந்திய சாலைகளுக்கு ஏற்ற ஒன்றாக இருக்கும்.
புதிய டாடா அவின்யா மாடல் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 500 கிலோமீட்டர்கள் வரை செல்லும் என தெரிகிறது. அவின்யா மட்டும் இன்றி டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டாடா கர்வ் கூப் போன்ற எஸ்.யு.வி. மாடலை உருவாக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது. இந்த மாடலின் ப்ரோடக்ஷன் வெர்ஷன் 2024 வாக்கில் வெளியாகும் என தெரிகிறது.
போக்ஸ்வேகன் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன சந்தையில் பல்வேறு புது மாடல்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளை துவங்கி, விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது.
போக்ஸ்வேகன் நிறுவனம் மிட்-லெவல் மற்றும் ஹை எண்ட் எலெக்ட்ரிக் வாகனங்களை பல்வேறு நாடுகளில் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில் போக்ஸ்வேகன் தற்போது எண்ட்ரி லெவல் எலெக்ட்ரிக் வாகன மாடல்களில் தனது கவனத்தை திருப்பி இருக்கிறது. முதற்கட்டமாக இந்த மாடல் ஐரோப்பியா மற்றும் வளர்ந்து வரும் நாடுகளில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

கடந்த ஆண்டு நடைபெற்ற முனிச் மோட்டார் விழாவில் போக்ஸ்வேகன் நிறுவனம் தனது குறைந்த விலை எலெக்ட்ரிக் கார் எப்படி காட்சியளிக்கும் என்ற விவரங்களை ID கான்செப்ட் வடிவில் அறிவித்து இருந்தது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் போக்ஸ்வேகன் நிறுவனம் தனது ID 4 மாடலின் ப்ரோடக்ஷன் வெர்ஷனை டிசைன் செய்ய துவங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் புது எலெக்ட்ரிக் கார் மெல்லிய தோற்றம், ஆங்குலர் முன்புறம் மற்றும் ID டிசைன் அம்சங்களை கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. ஒட்டுமொத்தத்தில் இந்த எலெக்ட்ரிக் கார் போலோ மாடல் அளவில் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இது போக்ஸ்வேகன் நிறுவனத்தின் எண்ட்ரி லெவல் எலெக்ட்ரிக் கார் மாடலாக அறிமுகம் செய்யப்படும் என்றும் தெரிகிறது.
கோமகி நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது.
டெல்லியை சேர்ந்த கோமகி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து உள்ளது. புது ஸ்கூட்டர்கள் கோமகி LY மற்றும் கோமகி DT 3000 என அழைக்கப்படுகின்றன. இவற்றின் விலை முறையே ரூ. 88 ஆயிரம் மற்றும் ரூ. 1 லட்சத்து 22 ஆயிரம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இந்த ஆண்டில் மட்டும் கோமகி நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்த மூன்று மற்றும் நான்காவது மாடல் ஆகும். இரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் ஹை-ஸ்பீடு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரிவில் நிலை நிறுத்தப்பட்டு உள்ளன. இதன் மூலம் இந்திய சந்தையில் கோமகி நிறுவனம் 18 ஸ்மார்ட் மற்றும் ஹை ஸ்பீடு எலெக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் இரண்டு எலெக்ட்ரிக் ரிக்ஷாக்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
கோமகி LY மாடலில் 62.9 வோல்ட் லித்தியம் ஃபெரோ பாஸ்பேட் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 70 முதல் 90 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. கோமகி DT 3000 மாடலில் 3000 62V52AH பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சமாக 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். இது முழு சார்ஜ் செய்தால் 110 முதல் 180 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது.
கியா இந்தியா நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் கார் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில் இது கியா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் ஆகும்.
கியா இந்தியா நிறுவனம் தனது கியா EV6 எலெக்ட்ரிக் கார் மாடல் ஜூன் 2 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என அறிவித்து இருக்கிறது. புதிய கியா EV6 மாடலுக்கான முன்பதிவு மே 26 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த நிலையில், புதிய எலெக்ட்ரிக் கார் மாடலின் வெளியீட்டு தேதியை கியா இந்தியா அறிவித்து இருக்கிறது.
இந்திய சந்தையில் புதிய கியா EV6 மாடலின் விலை ரூ. 50 முதல் ரூ. 60 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்டமாக இந்த காரின் 100 யூனிட்கள் மட்டுமே இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட இருக்கின்றன. கியா EV6 மாடல் RWD மற்றும் AWD என இரண்டு வேரியண்ட்களிலும் கிடைக்கும்.

கியா EV6 மாடலில் 77.4 கிலோவாட் ஹவர் திறன் கொண்ட பேட்டரி வழங்கப்பட இருக்கிறது. சர்வதேச சந்தையில் இந்த கார் 58 கிலோவாட் ஹவர் மற்றும் 77.4 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரி ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனினும், இந்தியாவில் ஒரு வேரியண்ட் மட்டுமே அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
இந்த எலெக்ட்ரிக் கார் முழு சார்ஜ் செய்தால் மணிக்கு 425 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது. மேலும் இந்த கார் 320 ஹெச்.பி. பவர், 605 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் ஒற்றை வாடிக்கையாளருக்காக புது கார் மாடலை உருவாக்கி இருக்கிறது. இதனை யார் வாங்கி இருக்கிறார்கள் என்பதை அந்நிறுவனம் அறிவிக்கவில்லை.
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் இரண்டவாது போட் டெயில் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல் இத்தாலியில் நடைபெற்ற 2022 கான்கார்சோ எலிகன்ஸ் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது. தன் குடும்பம், தந்தையின் வரலாற்றை போற்றும் வகையில், வாடிக்கையாளர் ஒருவர் இந்த காரை வாங்க ஆர்டர் கொடுத்து இருக்கிறார். மதர் ஆஃப் பியல் டிசைனில் இந்த கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

புதிய போட் டெயில் மாடல் விலை 28 மில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 217 கோடி வரை இருக்கலாம் என கணிக்கப்படுகிறது. ஆனாலும், இது பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. முந்தைய போட் டெயில் மாடலுடன் ஒப்பிடும் போது, புது மாடலில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த காரை யார் உருவாக்க சொன்னார்கள் என ரோர்ஸ் ராய்ஸ் இதுவரை தெரிவிக்கவில்லை.
ஏராளமான பாரம்பரிய கார் மாடல்களை வாங்கி குவித்து வைத்து இருக்கும் நபர் தான் இந்த காரை வாங்கி இருக்க வேண்டும் என கூறப்படுகிறது. இவர் தனியார் அருங்காட்சியகத்தை வைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த வாடிக்கையாளரின் தந்தை முத்துக்களை சேகரிப்பதில் ஆர்வம் மிக்கவர். இவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் தான் புதிய போட் டெயில் மாடலை மதர் ஆப் பியல் தீமில் உருவாக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் புதிய M சீரிஸ் கார் மாடல் 540 ஹெச்.பி. திறன் வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது பந்தைய களத்திலும் புது சாதனை படைத்து அசத்தி இருக்கிறது.
பி.எம்.டபிள்யூ. நிறுவனம் தனது M பெர்பார்மன்ஸ் பிரிவின் 50 ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில், பி.எம்.டபிள்யூ. M4 CSL மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய M4 CSL மாடலில் அதிக செயல்திறன், சிறப்பான டிசைன் மற்றும் நர்பர்கிரிங் பந்தய களத்தில் பி.எம்.டபிள்யூ. உற்பத்தி செய்ததில் அதிவேக கார் என்ற பட்டத்தை பெற்று இருக்கிறது. இந்த பந்தய களத்தில் பி.எம்.டபிள்யூ. M4 CSL மாடல் 7 நிமிடங்கள் 20.207 நொடிகளில் கடந்துள்ளது.

இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 3.7 நொடிகளில் எட்டிவிடும். உலகளவில் இந்த கார் மொத்தத்தில் 1000 யூனிட்களே உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. இந்த மாடலில் 3.0 லிட்டர், ட்வின் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட, ஸ்டிரெயிட் 6 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 550 ஹெச்.பி. திறன், 650 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய பி.எம்.டபிள்யூ. M4 CSL மணிக்கு அதிகபட்சமாக 307 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த கார் ஸ்டாண்டர்டு மாடலை விட 110 கிலோ எடை குறைவாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலின் முன்புறம் 21 இன்ச் வீல்களும், பின்புறம் 22 இன்ச் வீல்களும் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் மிஷெலின் பைலட் ஸ்போர்ட் கப் 2 R டையர்கள் வழங்கப்பட்டுள்ளன.
மஹிந்திரா நிறுவனத்தின் புது தலைமுறை ஸ்கார்பியோ மாடல் மஹிந்திரா ஸ்கார்பியோ N என்று அழைக்கப்பட இருக்கிறது. இந்த மாடலின் இந்திய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
மஹிந்திரா நிறுவனம் தனது புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்.யு.வி. மாடல் மஹிந்திரா ஸ்கார்பியோ N எனும் பெயரில் விற்பனைக்கு வரும் என அறிவித்து இருக்கிறது. புதிய மஹந்திரா ஸ்கார்பியோ N மாடல் ஜூன் 27 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதுதவிர மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடல் எப்படி காட்சியளிக்கும் என்ற புகைப்படங்களையும் மஹிந்திரா நிறுவனம் வெளியிட்டு உள்ளது.
புது மாடல் அறிமுகம் செய்யப்பட்டாலும், தற்போது விற்பனையாகி வரும் மஹிந்திரா ஸ்கார்பியோ மாடல் புது பெயர் - மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் மூலம் விற்பனை செய்யப்பட இருக்கிறது. புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும். இத்துடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.

மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடலின் முன்புறம் செங்குத்தான கிரில், புது எலிமண்ட்கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் புதிய மஹிந்திரா லோகோ மற்றும் சி வடிவ எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், பாக் லேம்ப்கள் காணப்படுகின்றன.
காரின் பின்புறம் ரி-டிசைன் செய்யப்பட்ட டெயில்கேட், பின்புறம் கீழ் பகுதியில் கிடைமட்டமான ப்ரோபைல் கொண்டிருக்கிறது. இத்துடன் இருபுறங்களிலும் பம்ப்பர் மற்றும் க்ரோம் ஸ்ட்ரிப் ப்ரிட்ஜிங் உள்ளது. இந்த மாடலில் 2.2 லிட்டர், 4 சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படலாம்.






