search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    அம்பாசடர் கார்
    X
    அம்பாசடர் கார்

    எலெக்ட்ரிக் வாகன சந்தையில் களமிறங்கும் இந்துஸ்தான் மோட்டார்ஸ்?

    பிரபல அம்பாசடர் கார்களை விற்பனை செய்து வந்த இந்துஸ்தான் மோட்டார்ஸ் எலெக்ட்ரிக் வாகன சந்தையில் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    உலகளவில் நீண்ட காலம் உற்பத்தி செய்யப்பட்டு வந்த கார்களில் ஒன்று இந்துஸ்தான் அம்பாசடர். 1956-இல் தொடங்கி 2014 வரை அம்பாசடார் மாடல் சந்தையில் இருந்தது. அதன் பின் இந்தியாவில் பிறப்பிக்கப்பட்ட கடுமையான புகை விதிகளை அடுத்து அம்பாசடர் மாடல் இந்த சந்தையில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது.

    தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி இந்துஸ்தான் மோட்டார்ஸ் மீண்டும் களமிறங்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் ஐரோப்பிய நிறுவனத்துடன் கூட்டணி அமைப்பதாக கூறப்படுகிறது. இரு நிறுவனங்கள் கூட்டணியில் புதிதாக எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன.

     அம்பாசடர் கார்

    இது தொடர்பாக இரு நிறுவனங்களிடையே அடுத்த ஆண்டு அதிகாகரப்பூர்வ ஒப்பந்தம் கையெழுத்தாக இருக்கிறது. கொல்கத்தாவை அடுத்த உத்தர்பாராவில் உள்ள இந்துஸ்தான் மோட்டார்ஸ் உற்பத்தி ஆலையில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன. எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்ய முதற்கட்டமாக ரூ. 600 கோடி முதலீடு செய்ய இந்கதுஸ்தான் மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது.

    இது பற்றிய முழு தகவல்கள் அடுத்த ஆண்டு அறிவிக்கப்படும் என தெரிகிறது. இந்துஸ்தான் மோட்டார்ஸ் அதிக இடவசதி கொண்டிருப்பதால், ஆலையை மாற்றி அமைத்து புது எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தியை இங்கேயே துவங்க இருக்கிறது. இந்துஸ்தான் மோட்டார்ஸ் மட்டுமின்றி ஐரோப்பிய நிறுவனமும் தன்பங்கிற்கு முதலீடு செய்யும் என கூறப்படுகிறது.

    எனினும், இதுபற்றி இரு நிறுவனங்கள் தரப்பில் இதுவரை இறுதியான முடிவு எட்டப்படவில்லை. இது பற்றிய தகவல்கள் அடுத்த ஆண்டு அறிவிக்கப்படலாம். 
    Next Story
    ×