என் மலர்

  இது புதுசு

  கோமகி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
  X
  கோமகி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

  இரண்டு புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்த கோமகி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோமகி நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது.
   

  டெல்லியை சேர்ந்த கோமகி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து உள்ளது. புது ஸ்கூட்டர்கள் கோமகி LY மற்றும் கோமகி DT 3000 என அழைக்கப்படுகின்றன. இவற்றின் விலை முறையே ரூ. 88 ஆயிரம் மற்றும் ரூ. 1 லட்சத்து 22 ஆயிரம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

   கோமகி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

  இந்த ஆண்டில் மட்டும் கோமகி நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்த மூன்று மற்றும் நான்காவது மாடல் ஆகும். இரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் ஹை-ஸ்பீடு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரிவில் நிலை நிறுத்தப்பட்டு உள்ளன. இதன் மூலம் இந்திய சந்தையில் கோமகி நிறுவனம் 18 ஸ்மார்ட் மற்றும் ஹை ஸ்பீடு எலெக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் இரண்டு எலெக்ட்ரிக் ரிக்‌ஷாக்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. 

  கோமகி LY மாடலில் 62.9 வோல்ட் லித்தியம் ஃபெரோ பாஸ்பேட் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 70 முதல் 90 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. கோமகி DT 3000 மாடலில் 3000 62V52AH பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சமாக 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். இது முழு சார்ஜ் செய்தால் 110 முதல் 180 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. 
  Next Story
  ×