search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    கியா EV6
    X
    கியா EV6

    கியா EV6 இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு

    கியா இந்தியா நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் கார் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில் இது கியா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் ஆகும்.


    கியா இந்தியா நிறுவனம் தனது கியா EV6 எலெக்ட்ரிக் கார் மாடல் ஜூன் 2 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என அறிவித்து இருக்கிறது. புதிய கியா EV6 மாடலுக்கான முன்பதிவு மே 26 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த நிலையில், புதிய எலெக்ட்ரிக் கார் மாடலின் வெளியீட்டு தேதியை கியா இந்தியா அறிவித்து இருக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய கியா EV6 மாடலின் விலை ரூ. 50 முதல் ரூ. 60 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்டமாக இந்த காரின் 100 யூனிட்கள் மட்டுமே இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட இருக்கின்றன. கியா EV6 மாடல் RWD மற்றும் AWD என இரண்டு வேரியண்ட்களிலும் கிடைக்கும். 

    கியா EV6

    கியா EV6 மாடலில் 77.4 கிலோவாட் ஹவர் திறன் கொண்ட பேட்டரி வழங்கப்பட இருக்கிறது. சர்வதேச சந்தையில் இந்த கார் 58 கிலோவாட் ஹவர் மற்றும் 77.4 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரி ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனினும், இந்தியாவில் ஒரு வேரியண்ட் மட்டுமே அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 

    இந்த எலெக்ட்ரிக் கார் முழு சார்ஜ் செய்தால் மணிக்கு 425 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது. மேலும் இந்த கார் 320 ஹெச்.பி. பவர், 605 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. 

    Next Story
    ×