என் மலர்
இது புதுசு
- லோன்சின் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் மத்தியில் பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது.
- இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மணிக்கு 115 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.
சீனாவை சேர்ந்த இருசக்கர வாகன பிராண்டு, லோன்சின் மோட்டார்சைக்கிள்ஸ் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய லோன்சின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரியல் 5T என அழைக்கப்படுகிறது. பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் F 850 GS மற்றும் F 900 R மாடல்களுக்கான என்ஜின்களை லோன்சின் உற்பத்தி செய்து கொடுத்து வருகிறது.
புதிய லோன்சின் ரியல் 5T மாடல் தோற்றத்தில் ஸ்போர்ட் டிசைன் மற்றும் மேக்சி ஸ்கூட்டர் போன்று காட்சியளிக்கிறது. இதில் ஸ்ப்லிட் எல்இடி ஹெட்லைட், ஸ்மோக்டு வைசர், பாடிவொர்க் முழுக்க ஷார்ப் கட், கிரீஸ் கொண்டிருக்கிறது. இதன் மத்தியில் வழக்கமான மேக்சி ஸ்கூட்டரில் உள்ளதை போன்ற ஸ்பைன் வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் இந்த இ ஸ்கூட்டர் 125சிசி பெட்ரோல் ஸ்கூட்டருக்கு இணையானதாக இருக்கும்.

இந்த ஸ்கூட்டரின் மத்தியில் எலெக்ட்ரிக் மோட்டார் மவுண்ட் செய்யப்பட்டு உள்ளது. இது 15 ஹெச்பி பவர் கொண்டிருக்கிறது. புதிய லோன்சின் ரியல் 5T மணிக்கு அதிகபட்சம் 115 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 240 கிலோமீட்டர் வரை செல்ல முடியும். இதனுடன் 1.84 கிலோவாட் சார்ஜர் வழங்கப்பட்டு இருக்கிறது. இதனை இரண்டு மணி நேரத்தில் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்துவிட முடியும்.
எல்இடி இலுமினேஷன் கொண்டிருக்கும் ரியல் 5T மூன்று விதமான ரைடிங் மோட்கள், டிராக்ஷன் கண்ட்ரோல், ஆட்டோமேடிக் வார்னிங் லைட்கள், சார்ஜிங் போர்ட், ரிவர்ஸ் கியர் உள்ளிட்டவைகளை கொண்டிருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், பின்புறம் ஆஃப்செட் ரியர் ஷாக் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. பிரேக்கிங்கிற்கு முன்புறம் சிங்கில் டிஸ்க், பின்புறம் டிரம் யூனிட் வழங்கப்பட்டு உள்ளது.
தற்போது லோன்சின் பிராண்டு சர்வதேச சந்தையில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த மாடலின் இந்திய வெளியீட்டை உடனடியாக எதிர்பார்க்க முடியாது.
- பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 31 கிலோவாட் மோட்டார் கொண்டிருக்கிறது.
- இந்த ஸ்கூட்டரில் ரைடு மோட்கள், டிராக்ஷன் கண்ட்ரோல், ஏபிஎஸ் என ஏராளமான அம்சங்கள் உள்ளன.
பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் தனது 2023 S1000RR மோட்டாகர்சைக்கிளுடன் CE 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் காட்சிப்படுத்தி இருக்கிறது. புதிய CE 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் லாங் சைடு பேனல்கள், எல்இடி ஹெட்லைட், டிசைன் பிட்கள் உள்ளன. ஒற்றை பீஸ் இருக்கை, மஸ்குலர் பாடிவொர்க் கொண்டிருக்கிறது.
புதிய பிஎம்டபிள்யூ CE 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 31 கிலோவாட் பீக் பவர் கொண்ட மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு 0 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தை 2.6 நொடிகளில் எட்டிவிடும். மேலும் மணிக்கு அதிகபட்சம் 120 கிலோமீட்ர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் மோட்டார் உடன் 8.9 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

இதன் காரணமாக பிஎம்டபிள்யூ CE 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 130 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது. வழக்கமான சார்ஜர் மூலம் இந்த ஸ்கூட்டரை சார்ஜ் செய்ய 4 மணி 20 நிமிடங்கள் ஆகும். ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தும் போது பிஎம்டபிள்யூ CE 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை 1 மணி 40 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்திடலாம்.
பிஎம்டபிள்யூ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், பின்புறம் மோனோஷாக் யூனிட் கொண்டிருக்கஇறது. பிரேக்கிங்கிற்கு 265mm முன்புற சிஸ்ர், பின்புற டிஸ்க் 15 இன்ச் வீல்களில் மவுண்ட் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்கூட்டரின் முழன்புறம் 120 பின்புறம் 160 டயர்கள் வழங்கப்பட்டு உள்ளன.
பிஎம்டபிள்யூ நிறுவனம் CE 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் மூன்று ரைடிங் மோட்கள், டிராக்ஷன் கண்ட்ரோல், ஏபிஎஸ், டிஎஃப்டி டிஸ்ப்ளே, ப்ளூடூத் கனெக்டிவிட்டி மூலம் நேவிகேஷன் மற்றும் ஏராளமான அம்சங்களை கொண்டிருக்கிறது. இந்த ஸ்கூட்டரின் இந்திய வெளியீடு பற்றி பிஎம்டபிள்யூ நிறுவனம் இதுவரை எந்த தகவலும் வழங்கவில்லை.
- இந்திய சந்தையில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் சக்திவாய்ந்த கார் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
- முன்னதாக 2021 வாக்கில் கான்செப்ட் வடிவில் அறிமுகம் செய்யப்பட்ட கார் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய XM கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய பிஎம்டபிள்யூ XM விலை ரூ. 2 கோடியே 60 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பிஎம்டபிள்யூ M பிரிவில் இரண்டாவது பி-ஸ்போக் மாடலாக புதிய பிஎம்டபிள்யூ XM அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய XM மாடலின் வினியோகம் அடுத்த ஆண்டு மே மாத வாக்கில் துவங்குகிறது.
புதிய பிஎம்டபிள்யூ XM மாடலில் M ஹைப்ரிட் டிரைவ் மற்றும் 4.4 லிட்டர் ட்வின் டர்போ வி8 என்ஜின், கியர்பாக்ஸ் மவுண்ட் செய்யப்பட்ட எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 644 ஹெச்பி பவர், 800 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இது இந்திய சந்தையில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் சக்திவாய்ந்த கார் என்ற பெருமையை பெற்று இருக்கிறது.

இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 4.3 நொடிகளில் எட்டிவிடும். இந்த கார் மணிக்கு 250 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. XM மாடலில் உள்ள ஆல் எலெக்ட்ரிக் டிரைவிங் மூலம் 88 கிலோமீட்டர் வரை செல்ல முடியும். புதிய பிஎம்டபிள்யூ XM மாடலில் 5-லிண்க் ரியர் சஸ்பென்ஷன் செட்டப், M டேம்ப்பர்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்யுவி-யில் 48 வோல்ட் ஆக்டிவ் ரோல் ஸ்டேபிலைசேஷன் வழங்கப்பட்டுள்ளது.
பிஎம்டபிள்யூ XM மாடலில் ஸ்ப்லிட் ஹெட்லேம்ப்கள், பிஎம்டபிள்யூ பாரம்பரிய கிட்னி கிரில், ப்ககவாட்டில் ரெசிடிங் விண்டோ லைன், சதுரங்க வடிவம் கொண்ட வீல் ஆர்ச்கள் உள்ளன. ஃபுல் சைஸ் X7 மாடலை விட புதிய XM அளவில் சற்று சிறியதாகவே இருக்கிறது. புதிய XM மாடல் 5-சீட்டர் வடிவில் மட்டுமே கிடைக்கிறது.
- லம்போர்கினி நிறுவனம் தனது ஹூரகேன் ஸ்டெராடோ சூப்பர்கார் மாடலை சமீபத்தில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது.
- புதிய ஹூரகேன் ஸ்டெராடோ மாடல் மணிக்கு அதிகபட்சமாக 260 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
லம்போர்கினி நிறுவனம் ஹூரகேன் ஸ்டெராடோ மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஹூரகேன் ஸ்டெராடோ மாடலின் விலை ரூ. 4 கோடியே 61 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. லம்போர்கினி நிறுவனம் புதிய ஹூரகேன் ஸ்டெராடோ மாடலை மொத்தத்தில் 1,499 யூனிட்களை மட்டுமே உற்பத்தி செய்ய இருக்கிறது. உற்பத்தி பணிகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் துவங்குகிறது.
சர்வேதச அளவில் லம்போர்கினி நிறுவனத்தின் மிகமுக்கிய சந்தைகளில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது. இதன் காரணமாக லம்போர்கினி நிறுவனம் இந்தியாவில் தனது சூப்பர்கார் மாடல்களின் முன்பதிவை இருமடங்கு அதிகரித்து இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. மேலும் அடுத்த 15 முதல் 18 மாதங்களுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே நிறைவு பெற்று விட்டதாக அறிவித்துள்ளது.

புதிய ஸ்டெரடோ மாடல் ஆஃப்-ரோடு சார்ந்த சஸ்பென்ஷன் செட்டப் கொண்டிருக்கிறது. இது ஸ்டாண்டர்டு மாடலை விட 44mm உயரமாக இறுக்கிறது. சஸ்பென்ஷன் டிராவல் முன்புறம் 33mm ஆகவும், பின்புறம் 34mm ஆகவும் உள்ளது. இந்த காரில் 19 இன்ச் அலாய் வீல்கள், பிரிட்ஜ்ஸ்டோன் டியூலெர் AT002 ஆல்-டெரைன் டயர்கள் வழங்கப்பட்டுள்ளது. பிரேக்கிங்கிற்கு 380mm கார்பன்-செராமிக் டிஸ்க், 6 பிஸ்டன்கள் கொண்ட கேலிப்பர்கள், பின்புறத்திற்கு 356mm டிஸ்க் மற்றும் 4 பிஸ்டன் கேலிப்பர்கள் உள்ளன.
லம்போர்கினி ஹூரகேன் ஸ்டெராடோ மாடலில் 5.2 லிட்டர் NA V10 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள என்ஜின் 602 ஹெச்பி பவர், 560 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 260 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். மேலும் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 3.4 நொடிகளில் எட்டிவிடும்.
- எம்ஜி மோட்டார் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.
- இந்திய சந்தையில் எம்ஜி நிறுவனம் புது எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது.
ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வுக்கு பல்வேறு கார் உற்பத்தியாளர்கள் ஏற்கனவே திட்டமிட்டு தயாராகி வருகின்றனர். இந்த நிலையில், எம்ஜி மோட்டார் நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போ விழாவில் சில கார்களை காட்சிப்படுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எம்ஜி ஏர் சிட்டி EV மாடலின் இந்திய அறிமுகம் ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் நடைபெறும் என ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது. இதே போன்று புதிய ஹெக்டார் ஃபேஸ்லிஃப்ட் மாடலும் ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்படுகிறது. இந்த வரிசையில், எம்ஜி 4 EV மாடலும் இணைகிறது. இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் எம்ஜி 4 EV மாடல் ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்படுகிறது.

இந்த ஆண்டு ஜூலை மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட எம்ஜி 4 முழுமையான எலெக்ட்ரிக் வாகனம் ஆகும். இது எம்ஜி-யின் தாய் நிறுவனமான SAIC-யின் மாட்யுலர் ஸ்கேலபில் பிளாட்ஃபார்மை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய எம்ஜி 4 மாடல் 4287mm நீளம், 1836mm அகலம், 1506mm உயரம் மற்றும் 2705mm வீல்பேஸ் கொண்டிருக்கிறது. இந்த கார் அளவில் தற்போது விற்பனை செய்யப்படும் ZS EV மாடலை போன்றே இருக்கும்.
சர்வதேச சந்தையில் புதிய எம்ஜி 4 மாடல் - 51 கிலோவாட் ஹவர் மற்றும் 64 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரி பேக் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 170 ஹெச்பி பவர் மற்றும் 203 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இரு வேரியண்ட்களிலும் சிங்கில் மோட்டார், ரியர் வீல் டிரைவ் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 452 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது.
- சுசுகி நிறுவனத்தின் புதிய பர்க்மேன் ஸ்டிரீட் பிரீமியம் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
- இது பர்க்மேன் ஸ்டிரீட் மேக்சி ஸ்கூட்டர் சீரிசின் முற்றிலும் புதிய டாப் எண்ட் மாடல் ஆகும்.
ஜப்பான் நாட்டை சேர்ந்த இருசக்கர வாகனங்கள் உற்பத்தியாளரான சுசுகி இந்திய சந்தையில் முற்றிலும் புதிய பர்க்மேன் ஸ்டிரீட் EX மேக்சி ஸ்கூட்டரை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய சுசுகி பர்க்மேன் ஸ்டிரீட் EX மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 12 ஆயிரத்து 300, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணம் செய்யப்பட்டு உள்ளது.
சுசுகி பர்க்மேன் ஸ்டிரீட் EX மாடல் சுசுகியின் மேக்சி ஸ்கூட்டர் சீரிசின் புதிய டாப் எண்ட் மாடல் ஆகும். புதிய ஸ்கூட்டரில் கணிசமான மாற்றங்கள் செய்யப்பட்டு, மிக முக்கிய மெக்கானிக்கல் அப்டேட் பெற்று இருக்கிறது. சுசுகி பர்க்மேன் ஸ்டிரீட் EX மாடலில் மேம்பட்ட 124சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 8.5 ஹெச்பி பவர், 10.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

பர்க்மேன் ஸ்டிரீட் EX மாடலில் ஆட்டோ ஸ்டார்ட்/ஸ்டாப் சிஸ்டம் கொண்டிருக்கிறது. இது எரிபொருள் பயன்பாட்டை மற்றும் காற்று மாசை குறைக்கும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் சைலண்ட் ஸ்டார்டர் சிஸ்டம் உள்ளது. இது போக்குவரத்து நெரிசலில் என்ஜின் ஆஃப் ஆன பின், திராட்டிலை மெதுவாக திருகும் போது என்ஜின் ஆன் ஆகி விடும். இத்துடன் புது மாடலில் 12 இன்ச் வீல், சற்றே அகலமான 100/80 செக்ஷன் டயர் கொண்டிருக்கிறது.
இத்துடன் பர்க்மேன் ஸ்டிரீட் EX மாடலில் ப்ளூடூத் சார்ந்த டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், சுசுகி ரைடு கனெக்ட் சிஸ்டம் உள்ளது. இந்த சிஸ்டம் மூலம் பயனர்கள் தங்களின் போன்களை ஸ்கூட்டருடன் இணைத்துக் கொண்டு டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், இன்கமிங் அழைப்புகள், எல்எம்எஸ், வாட்ஸ்அப் அலெர்ட் என ஏராளமான விவரங்களை ஸ்கூட்டரின் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டரில் பார்க்க முடியும்.
- பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய 1000சிசி மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
- அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன் பிஎம்டபிள்யூ தனது சூப்பர்பைக் மாடலை இந்திய பைக் வார நிகழ்வில் காட்சிப்படுத்தியது.
பிஎம்டபிள்யூ மோட்டாராட் நிறுவனம் 2023 S 1000 RR மோட்டார்சைக்கிளை தற்போது நடைபெற்று வரும் இந்திய பைக் வார நிகழ்வில் காட்சிக்கு வைத்தது. இதன் மூலம் புதிய S 1000 RR மாடலை பிஎம்டபிள்யூ இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய 2023 பிஎம்டபிள்யூ S 1000 RR மோட்டார்சைக்கிள் டிசம்பர் 10 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்கிறது.
டிசைனை பொருத்தவரை பிஎம்டபிள்யூ S 1000 RR மோட்டார்சைக்கிள் முற்றிலும் புதிய முன்புற தோற்றம் பெற்று இருக்கிறது. டிசைனை பொருத்தவரை மெல்லிய எல்இடி ஹெட்லைட், ஃபேரிங்கில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு அதிக ஸ்டேபிலிட்டி வழங்கும் வகையில் ஏரோ பேக்கேஜ் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் புதிதாக சேர்க்கப்பட்ட விங்லெட்கள் 10 கிலோ வரை டவுன்ஃபோர்ஸ் வழங்குகிறது.

இதன் பின்புறம் புதிதாக உருவாக்கப்பட்டு அதிக செயல்திறன் வெளிப்படுத்துவதோடு, மேம்பட்ட அசிஸ்டன்ஸ் சிஸ்டம்களை கொண்டிருக்கிறது. இந்த மாடலில் 999சிசி, இன்-லைன் 4 சிலிண்டர் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பிஎம்டபிள்யூ ஷிஃப்ட்கேம் உள்ளது. இது 206.5 ஹெச்பி பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
எலெக்ட்ரிக் அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், ஸ்லைடு கண்ட்ரோல், ஏபிஎஸ் மற்றும் பிரேக் ஸ்லைட் அசிஸ்ட், நான்கு ரைடு மோட்கள், ஹில் ஸ்டார்ட் கண்ட்ரோல், பை-டைரெக்ஷனல் குயிக்ஷிஃப்டர், லான்ச் கண்ட்ரோல், பிட் லேன் லிமிட்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
- மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட GLB மாடல் இந்தியாவில் அறிமுகமானது.
- புதிய பென்ஸ் GLB மாடல் இந்திய சந்தையில் மொத்தம் மூன்று வித வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய GLB 3-ரோ எஸ்யுவி மாடலை அறிமுகம் செய்தது. புதிய மெர்சிடிஸ் பென்ஸ் GLB மாடல் விலை ரூ. 63 லட்சத்து 8 ஆயிரம் என துவங்குகிறது. இந்த மாடல் 200, 220d மற்றும் 220d 4மேடிக் என மூன்று வித வேரியண்ட்களில் கிடைக்கிறது. புதிய பென்ஸ் GLB பேஸ் வேரியண்ட் விலை ரூ. 63 லட்சத்து 8 ஆயிரம் என துவங்குகிறது.
புதிய மெர்சிடிஸ் பென்ஸ் GLB 220d மற்றும் GLB 220d 4 மேடிக் வேரியண்ட்களின் விலை முறையே ரூ. 66 லட்சத்து 8 ஆயிரம் மற்றும் ரூ. 69 லட்சத்து 8 ஆயிரம் என துவங்குகிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் GLB மாடலில் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவற்றுடன் 7 ஸ்பீடு மற்றும் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளன. இதன் பெட்ரோல் என்ஜின் 161 ஹெச்பி பவர், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. டீசல் என்ஜின் 188 ஹெச்பி பவர், 400 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
அம்சங்களை பொருத்தவரை பென்ஸ் GLB மாடலில் சதுரங்க வடிவம் கொண்ட எல்இடி ஹெட்லேம்ப்கள், 2-பீஸ் எல்இடி டெயில் லைட்கள், பானரோமிக் சன்ரூஃப், வெண்டிலேஷன் வசதி கொண்ட பவர்டு முன்புற இருக்கைகள், 7 ஏர்பேக், இரண்டு 10.25 இன்ச் ஸ்கிரீன்கள் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் மற்றும் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் போன்று செயல்படுகின்றன.
- எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடல்களின் இந்திய வெளியீடு பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.
- ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட எம்ஜி ZS EV தாய்லாந்தில் எம்ஜி VS என பெயர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.
எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் தனது பிரபல மிட்சைஸ் எஸ்யுவி ZS மாடலின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த கார் சர்வதேச சந்தையில் அறிமுகமாகி இருக்கிறது. இதுதவிர ZS EV ஃபேஸ்லிஃப்ட் மாடலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலில் முன்புறம் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. எம்ஜி ZS EV தாய்லாந்து சந்தையில் எம்ஜி VS என பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய எம்ஜி ZS ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வெளிப்புறம், ரி-வொர்க் செய்யப்பட்ட முகப்பு பகுதி, அளவில் பெரிய - வட்ட வடிவம் கொண்ட கிரில் உள்ளது. இத்துடன் மெல்லிய, கூர்மையான கிடைமட்டமாக பொருத்தப்பட்ட கிரில் காணப்படுகிறது. ஹெட்லேம்ப்களும் மாற்றப்பட்டு ஷார்ப்-எட்ஜ், ஆல் எல்இடி லைட்டிங் செய்யப்பட்டு இருக்கிறது. முன்புற பம்ப்பர் புதிதாக மாற்றப்பட்டு, டைமண்ட் பேட்டன், பெரிய ஏர் இண்டேக் வழங்கப்பட்டுள்ளது.

காரின் பக்கவாட்டு மற்றும் பின்புறங்களில் அதிகளவு மாற்றங்கள் செய்யப்படவில்லை. இதன் மெஷிண்டு அலாய் வீல்களில் ரிவைஸ்டு டிசைன், டெயில் லேம்ப்களில் புதிய எல்இடி இன்சர்ட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதன் இண்டீரியர் பற்றி அதிக விவரங்கள் வெளியாகவில்லை. எனினும், இதில் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், 10.1 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், பெரிய பானரோமிக் சன்ரூஃப் வழங்கப்பட்டு இருக்கிறது.
தாய்லாந்தில் புதிய எம்ஜி ZS ஃபேஸ்லிஃப்ட் மாடல் பெட்ரோல் ஹைப்ரிட் பவர்டிரெயின் கொண்டிருக்கிறது. இதில் 1.5 லிட்டர் 115 PS NA பெட்ரோல் என்ஜின், 1.3 லிட்டர் 140 PS டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. ZS EV மாடலில் தொடர்ந்து 50.3 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்படலாம். இது முழு சார்ஜ் செய்தால் 461 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகிறது.
எம்ஜி மோட்டார் நிறுவனம் புதிய ZS அல்லது ZS EV மாடல்களின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன்களின் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் வழங்கவில்லை. எனினும், புது மாடல்கள் அடுத்த ஆண்டு இறுதியிலோ அல்லது 2024 துவக்கத்திலோ இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். இரு மாடல்களின் தற்போதைய வெர்ஷன் சமீபத்தில் தான் அறிமுகம் செய்யப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.
- ராயல் என்பீல்டு நிறுவனம் உருவாக்கி வரும் புது மோட்டார்சைக்கிள் மாடல் விவரங்கள் வெளியாகி உள்ளது.
- சமீபத்தில் தான் ராயல் என்பீல்டு நிறுவனம் சூப்பர் மீடியோர் 650 மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்து இருந்தது.
ராயல் என்பீல்டு நிறுவனம் 2018 வாக்கில் இண்டர்செப்டார் 650 மற்றும் காண்டினெண்டல் ஜிடி 650 என இரு மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருந்தது. இரு மாடல்களும் விற்பனையில் தொடர்ந்து அசத்தி வருகின்றன. இந்தியா மட்டும் இன்றி உலக சந்தைகளிலும் இந்த இரு மாடல்களும் அமோக வெற்றி பெற்றுள்ளன.
650 சிசி மாடல்கள் மூலம் ராயல் என்பீல்டு நிறுவனம் இந்திய சந்தையில் போட்டி மாடல்களை பின்னுக்குத் தள்ளி மிடில்வெயிட் மோட்டார்சைக்கிள் பிரிவில் ஏற்கனவே முன்னணியில் இருந்து வந்த பிரீமியம் பிராண்டுகளை முந்தியது. நல்ல வரவேற்பை தொடர்ந்து ராயல் என்பீல்டு நிறுவனம் தனது 650 சிசி பிரிவு வாகனங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த துவங்கி இருக்கிறது.

இந்த வரிசையில் தான் புதிதாக சூப்பர் மீடியோர் 650 மாடலை ஃபிளாக்ஷிப் குரூயிசர் மாடலாக ராயல் என்பீல்டு அறிமுகம் செய்து இருக்கிறது. இந்திய சந்தையில் புதிய ராயல் என்பீல்டு சூப்பர் மீடியோர் 650 மாடலின் விலை ரூ. 4 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.
இந்திய சந்தையில் ராயல் என்பீல்டு சூப்பர் மீடியோர் 650 மாடல் விலை விவரங்கள் ஜனவரி மாத வாக்கில் அறிவிக்கப்பட உள்ளன. இதைத் தொடர்ந்து வினியோகம் 2023 பிப்ரவரி மாத வாக்கில் துவங்க இருக்கிறது. இந்த ரெட்ரோ மோட்டார்சைக்கிள் விவரங்கள ஏற்கனவே வெளியாகியுள்ளன.
- மஹிந்திரா நிறுவனத்தின் XUV400 எலெக்ட்ரிக் கார் செப்டம்பர் மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
- தற்போது மஹிந்திரா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் காரின் ஸ்பெஷல் எடிஷனை அறிமுகம் செய்து இருக்கிறது.
மஹிந்திரா நிறுவனம் XUV400 மாடல் மூலம் செப்டம்பர் மாத வாக்கில் இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் களமிறங்கியது. இதன் வெளியீடு அடுத்த ஆண்டு வாக்கில் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், மஹிந்திரா நிறுவனம் ஆட்டோமோடிவ் வடிவமைப்பாளர் பிரதாப் போஸ் மற்றும் முன்னணி அழகி ரிம்ஜிம் ததுவுடன் இணைந்து ஸ்பெஷல் எடிஷன் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
மஹிந்திரா ஆட்டோமோடிவ் டெக் ஃபேஷன் டூர் சீசன் 6 நிகழ்வில் மஹிந்திரா XUV400 ஸ்பெஷல் எடிஷன் காட்சிப்படுத்தப்பட்டது. ஸ்பெஷல் எடிஷன் மாடல் ஃபேஷனை ஃபேப்ரிக்ஸ்-ஐ முதன்மை உபகரணமாக கொண்டு வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. ஃபேப்ரிக் சார்ந்து உருவாக்கப்பட்ட தீம், ட்வின்-பீக் காப்பர் நிற மஹிந்திரா லோகோ புளூ நிற அவுட்லைன் பெற்று இருப்பதோடு ரிம்ஜிம் தது எக்ஸ் போஸ் கையெழுத்து இடம்பெற்று இருக்கிறது. இந்த லோகோ விண்ட்ஷீல்டு மற்றும் இதர வெளிப்புற பாகங்களில் பொருத்தப்படுகிறது.

காரின் உள்புறத்தில் ஃபேப்ரிக் சார்ந்த எலிமண்ட்கள் கேபின் முழுக்க காணப்படுகிறது. ரிம்ஜிம் தது எக்ஸ் போஸ் லோகோ சீட் ஹெட்ரெஸ்ட் மீது காணப்படுகிறது. இச்சுடன் ஆர்க்டிக் புளூ தீம் கார் இண்டீரியர் முழுக்க பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. புதிய மஹிந்திரா XUV400 மாடல் பேஸ், EP மற்றும் EL.A என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த காரில் 39.4 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் உள்ளது.
இதில் உள்ள மோட்டார்கள் 150 ஹெச்பி பவர், 310 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 456 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது. அளவீடுகளை பொருத்தவரை மஹிந்திரா XUV400 மாடல் 4200mm நீளமாக உள்ளது.
- ஹூண்டாய் நிறுவனம் உருவாக்கி வரும் புது கார் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
- புதிய ஹூண்டாய் கார் K1 பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது.
ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய மைக்ரோ எஸ்யுவி மாடலை அறிமுகம் செய்யும் திட்டம் பற்றி சமீபத்தில் அறிவித்து இருந்தது. இந்த மாடல் சிட்ரோயன் C3 மற்றும் டாடா பன்ச் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும். மேலும் இந்த கார் கிராண்ட் i10 நியோஸ் மாடலுடன் நிலை நிறுத்தப்படும் என கூறப்படுகிறது. புதிய பி1 செக்மெண்ட் காம்பேக்ட் எஸ்யுவி மாடல் பல்வேறு பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது.
இந்திய சந்தையில் புதிய ஹூண்டாய் மைக்ரோ எஸ்யுவி மாடல் அடுத்த ஆண்டு இறுதியிலோ அல்லது 2024 ஆண்டு துவக்கத்திலோ அறிமுகம் செய்யப்படலாம். புதிய மைக்ரோ எஸ்யுவி மாடல் ஹூண்டாய் Ai3 CUV எனும் குறியீட்டு பெயரில் உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்தியாவில் நியோஸ் மற்றும் ஆரா மாடல்கள் உருவாக்கப்பட்டு இருக்கும் பிளாட்ஃபார்மிலேயே புதிய காரும் உருவாக்கப்பட இருக்கிறது.

அந்த வகையில், இந்த கார் கிராண்ட் i10 நியோஸ் மாடலில் வழங்கப்படும் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம் தற்போது இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் மாடலில் 1.2 லிட்டர் NA பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின்கள் வழங்கப்படுகிறது. அறிமுகம் செய்யப்பட்டதும் இந்த மாடல் ஹூண்டாய் நிறுவனத்தின் குறைந்த விலை எஸ்யுவி என்ற பெருமையை பெறும்.
புதிய ஹூண்டாய் காரில் பெரிய இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜ், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், புஷ் பட்டன் ஸ்டார்ட், ஹூண்டாய் புளூ லின்க், கூல்டு ஸ்டோரேஜ் கன்சோல், எலெக்ட்ரிக் வசதியுடன் ORVM போன்ற அம்சங்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.






