என் மலர்
இது புதுசு
- ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் கிராண்ட் i10 நியோஸ் மாடலை அப்டேட் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
- புதிய கிராண்ட் i10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் டெஸ்டிங் இந்திய சாலைகளில் நடைபெற்று வருகிறது.
ஹூண்டாய் நிறுவனம் கிராண்ட் i10 நியோஸ் மாடலுக்கு மிட்-லைஃப் அப்டேட் வழங்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய கிராண்ட் i10 நியோஸ் மாடலுக்கான டெஸ்டிங் துவங்கி இருக்கிறது. புதிய கிராண்ட் i10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் சென்னை அருகில் உள்ள ஹூண்டாய் ஆலை பகுதிகளில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
புதிய கிராண்ட் i10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். தற்போதைய ஸ்பை படங்களில் புதிய கிராண்ட் i10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வெளிப்புறம் மூடப்பட்ட நிலையில் காட்சியளிக்கிறது. இந்த காரில் பூமராங் வடிவம் கொண்ட எல்இடி டிஆர்எல்கள் பம்ப்பரின் ஓரத்தில் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. இதன் முன்புற கிரில் தற்போது ஹெக்சகோனல் டிசைன் கொண்டிருக்கிறது.

பக்கவாட்டில் புதிய கிராண்ட் i10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் புதிய அலாய் வீல் டிசைன் கொண்டிருக்கிறது. காரின் பின்புறம் அதிகளவு மறைக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி இந்த காரில் புதிய டிசைன் கொண்ட எல்இடி டெயில் லைட்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
முன்னதாக ஜெர்மனியில் எடுக்கப்பட்ட ஸ்பை படங்களில் இந்த ஹேச்பேக் மாடல் ஸ்கை புளூ நிறம் கொண்டிருந்தது. இந்த நிறம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் பட்சத்தில் இது முற்றிலும் புதிதாக இருக்கும். இந்திய சாலைகளில் டெஸ்டிங் செய்யப்படும் மாடல் வைட் நிறம் கொண்டிருக்கிறது.
தற்போது இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் கிராண்ட் i10 நியோஸ் மாடல்- டைட்டன் கிரே, டைஃபூன் சில்வர், அக்வா டியல், ஃபியரி ரெட் மற்றும் போலார் வைட் என ஐந்து வித நிறங்களிலும், டூயல் டோன் நிற ஆப்ஷனிலும் கிடைக்கிறது. தற்போதைய ஸ்பை படங்களில் காரின் இண்டீரியர் பற்றிய விவரங்கள் எதுவும் இடம்பெறவில்லை. எனினும், புது காரின் இண்டீரியரும் மாற்றப்பட்டு இருக்கும் என்றே தெரிகிறது.
Photo Courtesy: Rushlane
- போர்ஷே நிறுவனம் இந்திய சதையில் மூன்று புது ஸ்போர்ட்ஸ் கார் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது.
- மூன்று ஸ்போர்ட்ஸ் கார்களில் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 1 கோடியே 80 லட்சம், எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஸ்போர்ட்ஸ் கார் உற்பத்தியாளரான போர்ஷே இந்திய சந்தையில் 911 கரெரா T, 718 கேமென் ஸ்டைல் எடிஷன் மற்றும் 718 பாக்ஸ்டர் ஸ்டைல் எடிஷன் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. இவற்றில் போர்ஷே 718 கேமென் மற்றும் பாக்ஸ்டர் ரக மாட்களின் விலை முறையே ரூ. 1 கோடியே 44 லட்சம் மற்றும் ரூ. 1 கோடியே 48 லட்சம், ஆகும். போர்ஷே கரெரா 911 T மாடலின் விலை ரூ. 1 கோடியே 80 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும்.
போர்ஷே 718 கேமென் மற்றும் 718 பாக்ஸ்டர் ஸ்டைல் எடிஷன் மாடல்கள் அவற்றின் பேஸ் வேரியண்டை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கின்றன. ஸ்டைலிங்கை பொருத்தவரை புதிதாக ரூபி ஸ்டார் நியோ பெயிண்ட் ஸ்கீம் மற்றும் ஹைலைட்கள் பிளாக் அல்லது வைட் நிறத்தில் செய்யப்பட்டுள்ளன. இரு மாடல்களிலும் 2.0 லிட்டர், ஃபிளாட்-4 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 295 ஹெச்பி பவர், 380 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு PDK டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் PDK மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 4.7 நொடிகளில் எட்டிவிடும். மேனுவல் கியர்பாக்ஸ் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 5.1 நொடிகளில் எட்டும். இந்த கார் மணிக்கு 275 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

போர்ஷே கரெரா 911 T மாடலில் 3.0 லிட்டர் ட்வின் டர்போசார்ஜ் செய்யப்பட்ட ஃபிளாட்-6 என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 380 ஹெச்பி பவர், 450 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் ஸ்டாண்டர்டு 911 கரெரா மாடலை விட 35 கிலோ எடை குறைவாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் உள்ள என்ஜினுடன் 7 ஸ்பீடு மேனுவல் அல்லது 8 ஸ்பீடு PDK ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
இதன் மேனுவல் கியர்பாக்ஸ் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 4.5 நொடிகளிலும், PDK மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 4.2 நொடிகளிலும் எட்டிவிடும். இந்த கார் மணிக்கு 291 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
- லம்போர்கினி நிறுவனத்தின் உருஸ் ஸ்டாண்டர்டு மாடலை விட புது வேரியண்ட் அதிக ஸ்போர்ட் தோற்றம் கொண்டுள்ளது.
- இதில் உள்ள என்ஜின் 16 ஹெச்பி வரை அதிக செயல்திறன் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.
லம்போர்கினி உருஸ் பெர்ஃபார்மண்ட் மாடல் இந்திய சந்தையில் அறிமுகமாகி இருக்கிறது. புதிய உருஸ் மாடலின் விலை ரூ. 4 கோடியே 22 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. முன்னதாக ஆகஸ்ட் மாத வாக்கில் இந்த மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது. புதிய உருஸ் மாடலின் வெளிப்புற டிசைன், இண்டீரியர் மற்றும் மெக்கானிக்கல் அம்சங்களில் அதிக மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2023 லம்போர்கினி உருஸ் பெர்ஃபார்மண்ட் மாடலில் 4.0 லிட்டர் ட்வின் டர்போ வி8 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 666 ஹெச்பி பவர், 850 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 7 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 3.3 நொடிகளில் எட்டிவிடும். மேலும் மணிக்கு அதிகபட்சம் 306 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.

மெக்கானிக்கல் அப்கிரேடுகளை பொருத்தவரை இந்த மாடலில் புதிய ஸ்டீல் ஸ்ப்ரிங்குகள் வழங்கப்பட்டுள்ளன. இவை காரின் சஸ்பென்ஷனை 20 மில்லிமீட்டர் வரை குறைத்துள்ளன. இத்துடன் ட்வீக் செய்யப்பட்ட ஸ்டீரிங் சிஸ்டம், ரேலி டிரைவ் மோட், அக்ரபோவிக் எக்சாஸ்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
டிசைனை பொருத்தவரை லம்போர்கினி உருஸ் பெர்ஃபார்மண்ட் மாடலில் புதிய பம்ப்பர்கள், பிளாக்டு-அவுட் ஏர் டேம், 22 இன்ச் அலாய் வீல்கள், ஸ்பாயிலர், ஏர் கர்டெயின்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்திய சந்தையில் புதிய உருஸ் பெர்ஃபார்மண்ட் மாடல் ஆஸ்டன் மார்டின் DBX 707, போர்ஷே கயென் கூப் டர்போ GT மற்றும் மசிராட்டு லெவாண்ட் ட்ரோஃபியோ போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
- ரெனால்ட் நிறுவனத்தின் புதிய டஸ்டர் மாடல் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.
- தற்போது ரெனால்ட் இந்தியா நிறுவனத்திற்கு மிகப் பெரும் தொகை முதலீடாக கிடைக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய சந்தையில் ரெனால்ட் நிசான் நிறுவனத்தின் நிலைமை சற்று தடுமாற்றத்திலேயே இருந்து வருகிறது. எனினும், இந்த நிலை விரைவில் மாறப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ரெனாட் மற்றும் நிசான் நிறுவனங்களின் இந்திய பிரிவுக்கு 500 மில்லியன் டாலர்கள் முதலீடு கிடைக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த முதலீட்டின் மூலம் CMF-B பிளாட்ஃபார்மை இந்தியாவுக்கு ஏற்ற வகையில் மாற்றிக் கொள்ள முடியும். இது சாத்தியமாகும் பட்சத்தில் சமீபத்தில் நிறுத்தப்பட்ட டஸ்டர் மாடல் இந்தியாவில் மீண்டும் களமிறங்கலாம். இதற்கு இடைப்பட்ட காலத்தில் ரெனால்ட் மற்றும் நிசான் நிறுவனங்கள் தங்களின் சர்வதேச தயாரிப்புகளை இந்தியாவுக்கு CBU முறையில் கொண்டுவரலாம். CMF பிளாட்ஃபார்மில் உருவாகி இருக்கும் முற்றிலும் புதிய டஸ்டர் பெட்ரோல் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது.

எதிர்காலத்தில் இந்த காரின் எலெக்ட்ரிக் வேரியண்ட் அறிமுகம் செய்யப்படலாம். இந்தியாவுக்காக மாற்றப்படும் CMF-B பிளாட்ஃபார்ம் பெட்ரோல், ஹைப்ரிட் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான வசதியை வழங்கும். அந்த வகையில் முற்றிலும் புதிய டஸ்டர் மாடல் இந்தியாவில் 2024 அல்லது 2025 வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம். நீண்ட இடைவெளியை பூர்த்தி செய்யும் வகையில் ரெனால்ட் நிறுவனம் அர்கானா கிராஸ்ஒவர் கூப் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்யும் என தெரிகிறது.
இந்திய சாலைகளில் ரெனால்ட் நிறுவனம் அர்கானா மாடலின் சோதனைகளை ஏற்கனவே துவங்கி மேற்கொண்டு வருகிறது. புதிய 500 மில்லியன் டாலர்கள் முதலீடு பற்றி ரெனால்ட் மற்றும் நிசான் தரப்பில் இருந்து எந்த விதமான தகவலும் வழங்கப்படவில்லை. மேலும் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
- ராயல் என்பீல்டு நிறுவனம் சமீபத்தில் தான் சூப்பர் மீடியோர் 650 மோட்டார்சைக்கிளை இந்தியாவில் காட்சிப்படுத்தியது.
- விரைவில் முற்றிலும் புதிய புல்லட் மோட்டார்சைக்கிளை மேம்பட்ட அம்சங்களுடன் ராயல் என்பீல்டு அறிமுகம் செய்ய இருக்கிறது.
உலக சந்தையில் முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் எலெக்ட்ரிக் வாகன பிரிவில் கவனம் செலுத்த துவங்கி விட்டன. பல்வேறு நிறுவனங்கள் ஏற்கனவே எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய துவங்கி விட்டது. இந்த நிலையில், ராயல் என்பீல்டு நிறுவனமும் எலெக்ட்ரிக் வாகன துறையில் களமிறங்க திட்டமிட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகனம் பற்றிய விவரங்கள் அதிகளவில் வெளியாகவில்லை. எனினும், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முதல் எலெகட்ரிக் மோட்டார்சைக்கிள் கான்செப்ட் எப்படி இருக்கும் என்ற விவரங்கள் ஆன்லைனில் லீக் ஆகி இருக்கிறது. இதில் புதிய எலெக்ட்ரிக் பைக் எவ்வாறு காட்சியளிக்கும் என ஓரளவுக்கு தெரிகிறது. மேலும் இந்த மாடல் "எலெக்ட்ரிக்01" எனும் பெயரில் அறிமுகமாகும் என்றும் கூறப்படுகிறது.

தோற்றத்தில் ராயல் என்பீல்டு எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் கான்செப்ட் நியோ விண்டேஜ் தீம் சார்ந்த டிசைன் கொண்டிருக்கிறது. இதன் ஸ்டைலிங்கில் நீண்ட, மெல்லிய ஸ்லெண்டர் ஃபியூவல் டேன்க் போன்ற வடிவம், முன்புற சஸ்பென்ஷன் கிர்டர் ஃபோர்க்குகள் போன்று காட்சியளிக்கிறது. இத்துடன் அலாய் வீல்கள் நவீன தோற்றம் கொண்டிருக்கின்றன. இந்த பைக்கின் ஃபிரேம் டேன்க் மீது நீள்கிறது.
இதன் முகப்பு பகுதியில் ரெட்ரோ தோற்றத்திலான வட்ட வடிவம் கொண்ட ஹெட்லேம்ப், எல்இடி லைட்டிங் கொண்டிருக்கும் என தெரிகிறது. எலெக்ட்ரிக் வாகனங்களுக்காக ராயல் என்பீல்டு நிறுவனம் புதிய பிராண்டு உருவாக்கும் என்றும் இதன் முதல் எலெக்ட்ரிக் வாகனம் 2025 வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக்கில் உள்ள பேட்டரி பேக் ஆல்-பிளாக் ஹவுசிங் மூலம் மறைக்கப்பட்டு இருக்கிறது.
Photo Courtesy; AutoCar
- பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய சந்தையில் புது கார்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
- புது கார்களின் அம்சங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அடுத்த மாதம் இவற்றின் விலை விவரங்கள் வெளியாகின்றன.
பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் X7 ஃபேஸ்லிஃப்ட், புதிய XM மற்றும் மேம்பட்ட M340i எக்ஸ்-டிரைவ் மாடல்களை டிசம்பர் 10 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய XM பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் இரண்டாவது பிஸ்போக் பிஎம்டபிள்யூ M மாடல் ஆகும். இது பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் மாடலாக விற்பனைக்கு வர இருக்கிறது. X7 ஃபேஸ்லிஃப்ட் மற்றும் M340i எக்ஸ்-டிரைவ் மாடல்களில் மேம்பட்ட பவர்டிரெயின் மற்றும் அம்சங்கள் வழங்கப்பட உள்ளன.
அதிக மாற்றங்களை பெற்று இருக்கும் மேம்பட்ட X7 ஆடம்பர எஸ்யுவி மாடல் இந்த ஆண்டு ஏப்ரல் மாத வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காரின் முன்புற தோற்றம் அதிகளவு மாற்றப்பட்டு இருக்கிறது. இதில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய ஸ்ப்லிட் ரக ஹெட்லேம்ப் டிசைன் உள்ளது. இதே போன்ற செட்டப் புதிய i7 மற்றும் 7 சீரிஸ் மாடல்களில் வழங்கப்பட இருக்கிறது.

இந்த மாடல்கள் அடுத்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. காரின் உள்புறத்தில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய வளைந்த இன்ஃபோடெயின்மெண்ட் ஸ்கிரீன், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், 14.9 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட ஐடிரைவ் 8 மென்பொருள் வழங்கப்படுகிறது. இதே போன்ற செட்டப் முன்னதாக iX மற்றும் i4 மாடல்களில் வழங்கப்பட்டு இருந்தது.
இந்திய சந்தையில் Xக்ஷ மாடல் எக்ஸ்-டிரைவ் 40i மற்றும் எக்ஸ்-டிரைவ் 30d என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது. இவற்றில் முறையே 380 ஹெச்பி பவர் கொண்ட 6 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 352 ஹெச்பி பவர் கொண்ட இன்லைன் 6 சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இரு என்ஜின்களுடன் 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ், ஆல்-வீல் டிரைவ் வசதி வழங்கப்படுகிறது.
- டொயோட்டா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இன்னோவா ஹைகிராஸ் சர்வதேச சந்தையில் அறிமுகமானது.
- புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடல் சில நாட்களில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
டொயோட்டா நிறுவனத்தின் முற்றிலும் புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடல் இன்னோவா ஜெனிக்ஸ் பெயரில் இந்தோனேசிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் புதிய இன்னோவா சர்வதேச வெளியீடு ஆகும். இதே கார் இந்தியாவில் நவம்பர் 25 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய எம்பிவி மாடல் டொயோட்டா நிறுவனத்தின் மாட்யுலர் TNGA-C: GA-C பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இது தற்போது விற்பனை செய்யப்படும் இன்னோவா க்ரிஸ்டா மாடலை விட வித்தியாசமாக இருக்கும். மேலும் இதன் காஸ்மெடிக் மற்றும் மெக்கானிக்கல் என முழு அம்சங்களும் அடியோடு வேறுபடுகிறது. தற்போதைய இன்னோவா க்ரிஸ்டா மாடலில் ரியர் வீல் டிரைவ், லேடர் ஆன் ஃபிரேம் உற்பத்திக்கு மாற்றாக புதிய இன்னோவா மோனோக் சேசிஸ் மற்றும் முன்புற வீல் டிரைவ் செட்டப் கொண்டிருக்கிறது.

தோற்றத்தில் புது இன்னோவா மாடல் எஸ்யுவி போன்ற தோற்றம் கொண்டிருக்கிறது. இதில் ஹெக்சகோனல் வடிவம் கொண்ட கிரில், க்ரோம் பார்டர்கள், மெல்லிய ஹெட்லைட்கள், பெரிய வெண்ட்கள் கொண்ட மஸ்குலர் முன்புற பம்ப்பர், மெல்லிய எல்இடி டிஆர்எல் பார்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் பக்கவாட்டுகளில் ஃபிலார்டு வீல் ஆர்ச்கள், 18 இன்ச் அலாய் வீல்கள், அண்டர் பாடி கிலாடிங், மஸ்குலர் கேரக்டர் லைன்கள் உள்ளன.
இந்த கார் டூயல் டோன் ORVMகள், இண்டகிரேட் செய்யப்பட்ட எல்இடி இண்டிகேட்டர்கள், பிளாக்டு-அவுட் எலிமண்ட்களை கொண்டிருக்கிறது. பின்புறத்தில் மெல்லிய ராப்-அரவுண்ட் எல்இடி டெயில் லைட்கள், மெல்லிய ஆர்ச்டு ரியர் விண்ட்-ஷீல்டு மற்றும் வைப்பர் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் இன்னோவா க்ரிஸ்டாவை விட 20மில்லிமீட்டர் நீளமாக உள்ளது. இது 475 மில்லிமீட்டர் அகலம், உயரம் 1795 மில்லிமீட்டர், வீல்பேஸ் 100 மில்லிமீட்டர் உயரமாக்கப்பட்டு இருக்கிறது.
உள்புறம் புதிய, அதிக நவீனமான லே-அவுட், ஆல் பிளாக் அல்லது பிளாக் மற்றும் பிரவுன் என டூயல் டோன் இண்டீரியர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. டேஷ்போர்டில் 10 இன்ச் அளவில் இன்ஃபோடெயின்மெண்ட் டிஸ்ப்ளே, மல்டி-ஃபன்ஷனல் ஸ்டீரிங் வீல், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளது. இந்த காரில் எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், ஹில்-ஹோல்டு பட்டன் வழங்கப்பட்டு இருக்கிறது.
இதன் இரண்டாம் அடுக்கில் கேப்டன் சீட்கள், பானரோமிக் சன்ரூஃப், ரூஃப் மவுண்ட் செய்யப்பட்ட ஏசி வெண்ட்கள், வயர்லெஸ் சார்ஜிங், ஆம்பியண்ட் லைட்டிங் வசதிகளை கொண்டுள்ளது. இதன் டாப் எண்ட் மாடல்களில் 10 இன்ச் அளவில் இரண்டாவது ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடல் டொயோட்டா சேஃப்டி சென்ஸ் 3.0 தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது.
இதில் அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல், லேன் கீப் அசிஸ்ட், ஏழு ஏர்பேக், 3 பாயிண்ட் சீட் பெல்ட்கள், ABS, EBD, ரியர் பார்க்கிங் கேமரா என ஏராளமான அம்சங்கள் உள்ளன. காரின் அனைத்து வேரியண்ட்களின் நான்கு வீல்களிலும் டிஸ்க் பிரேக் ஸ்டாண்டர்டு அம்சமாக உள்ளது. இத்துடன் எலெக்ட்ரிக் டெயில்கேட் மற்றும் வாய்ஸ் கமாண்ட் மூலம் திறக்கும் வசதி கொண்டுள்ளது.
இந்தோனேசியாவில் அறிமுகமாகி இருக்கும் இன்னோவா ஜெனிக்ஸ் (ஹைகிராஸ்) மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின், ஆப்ஷனல் 2.0 லிட்டர் ஹைப்ரிட் மோட்டார் வழங்கப்படுகிறது. இவற்றின் செயல்திறன் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
- ராயல் என்பீல்டு நிறுவனம் இந்திய சந்தையில் புதிய 650 சிசி மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
- முன்னதாக சூப்பர் மீடியோர் 650 மோட்டார்சைக்கிள் இத்தாலியில் நடைபெற்ற 2022 EICMA நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.
ராயல் என்பீல்டு நிறுவனம் 2022 ரைடர் மேனியா நிகழ்ச்சியில் சூப்பர் மீடியோர் 650 மோட்டார்சைக்கிளை காட்சிப்படுத்தி இருக்கிறது. விரைவில் இந்த மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. தற்போது இந்த மோட்டார்சைக்கிள் காட்சிக்கு மட்டுமே வைக்கப்பட்டது. விரைவில் இந்த மாடலின் விலை விவரங்கள் அறிவிக்கப்படும். விலை அறிவிக்கப்படாத நிலையில், இந்த மாடலுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகின்றன.
முன்னதாக இத்தாலி நாட்டில் உள்ள மிலன் நகரில் நடைபெற்ற 2022 EICMA நிகழ்வில் ராயல் என்பீல்டு சூப்பர் மீடியோர் 650 மாடல் காட்சிக்கு வைக்கப்பட்டது. இந்திய சந்தையில் புதிய சூப்பர் மீடியோர் 650 மாடல் அடுத்த ஆண்டு துவக்கத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கலாம். புதிய 650சிசி மோட்டார்சைக்கிள் ராயல் என்ஃபீல்டு இண்டர்செப்டார் 650 மற்றும் காண்டினெண்டல் ஜிடி 650 மாடல்கள் உருவான பிளாட்ஃபார்மிலேயே உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இண்டர்செப்டார் மற்றும் காண்டினெண்டல் ஜிடி மாடல்களில் உள்ளதை போன்றே இந்த மாடலிலும் 648சிசி, பேரலல் ட்வின் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. எனினும், இதன் செயல்திறன் சிறிதளவு சரிவடைந்துள்ளது. புது மாடலில் உள்ள என்ஜின் 46.2 ஹெச்பி பவர், 52 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசைய வெளிப்படுத்துகிறது. இந்த மாடலில் எல்இடி ஹெட்லைட், அலாய் வீல்கள், டியுப்லெஸ் டயர்கள் வழங்கப்பட்டுள்ளன.
இத்துடன் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ட்ரிப்பர் நேவிகேஷன் சிஸ்டம், அப்சைடு-டவுன் முன்புற ஃபோர்க்குகள் உள்ளன. இந்த மோட்டார்சைக்கிள் ஸ்டாண்டர்டு மற்றும் டூரர் என இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கும். வெவ்வேறு நிறம் மற்றும் அக்சஸரீக்கள் மூலம் இரு மாடல்களை வித்தியாசப்படுத்திக் கொள்ள முடியும்.
- ஹார்லி டேவிட்சன் நிறுவனத்துடன் இணைந்து மோட்டார்சைக்கிள் உருவாக்குவதை ஹீரோ மோட்டோகார்ப் உறுதிப்படுத்தி இருக்கிறது.
- புது இருசக்கர வாகனங்களை அறிமுகம் செய்யும் வகையில் இரு நிறுவனங்கள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது.
ஹார்லி டேவிட்சன் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கிய முதல் மோட்டார்சைக்கிள் 2024 மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என ஹீரோ மோட்டோகார்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. இந்திய இருசக்கர வாகன உற்பத்தியாளரான ஹீரோ மோட்டோகார்ப் புதிதாக பிரீமியம் மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்யும் திட்டம் பற்றியுடம் தகவல் வெளியிட்டு உள்ளது.
அடுத்த இரு ஆண்டுகளில் அதிக வாடிக்கையாளர்களை கவரும் வகையிலும், பிரீமியம் பிரிவில் புது மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் தலைமை நிதி அலுவலர் நிரன்ஜன் குப்தா முதலீட்டாளர் கூட்டத்தில் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது. இத்துடன் ஹார்லி டேவிட்சன் உடன் இணைந்து புது பிளாட்ஃபார்ம் உருவாக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இரு நிறுவனங்கள் கூட்டணியில் உருவாகும் புது மோட்டார்சைக்கிள் மிடில்வெயிட் பிரிவில், 350சிசி திறன் கொண்டிருக்கும். மேலும் இந்த மாடல் ராயல் என்பீல்டு வாகனங்களுக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலை உருவாக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன. புது மாடல் ஹார்லி டேவிட்சன் விற்பனையகம் மூலம் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
இந்திய சந்தையில் இருந்து வெளியேறியதை தொடர்ந்து ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஹார்லியின் விற்பனை மற்றும் சர்வீஸ் பிரிவை கவனித்து வருகிறது. மேலும் நாடு முழுக்க டீலர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தி வருகிறது. அடுத்த ஆண்டு வாக்கில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எக்ஸ்டிரீம் 300S மற்றும் எக்ஸ்-பல்ஸ் 400 போன்ற மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என நிரன்ஜன் தெரிவித்தார்.
- இந்திய சந்தையில் புதிய ஜீப் கிராண்ட் செரோக்கி மாடல் சிகேடி முறையில் கொண்டுவரப்பட இருக்கிறது.
- இதில் ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள், 360 டிகிரி கேமரா உள்ளிட்டவை வழங்கப்பட இருக்கிறது.
ஜீப் நிறுவனம் இந்திய சந்தையில் முற்றிலும் புதிய கிராண்ட் செரோக்கி மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய கிராண்ட் செரோக்கி மாடலின் விலை ரூ. 77 லட்சத்து 50 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடலுக்கான முன்பதிவு நவம்பர் மாதத்தின் முதல் வாரத்திலேயே துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 50 ஆயிரம் ஆகும்.
புதிய 2022 ஜீப் கிராண்ட் செரோக்கி மாடலில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின், 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 268 ஹெச்பி பவர், 400 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் குவாட்ரா டிராக் ஐ 4x4 சிஸ்டம் மற்றும் ஸ்போர்ட், ஆட்டோ, ஸ்னோ மற்றும் சேண்ட்/மட் என நான்கு வித டிரைவ் மோட்களை கொண்டிருக்கிறது.

காரின் வெளிப்புறம் எல்இடி ஹெட்லேம்ப்கள், ஃபேம்டு 7 ஸ்லாட் கிரில், டூயல் எல்இடி டிஆர்எல், புதிய அலாய் வீல்கள், ரூஃப் ரெயில்கள், ஷார்க் ஃபின் ஆண்டெனா, சதுரங்க வடிவம் கொண்ட வீல் ஆர்ச்கள், பின்புற பம்ப்பரில் டூயல் எக்சாஸ்ட் டிப்கள், ராப்-அரவுண்ட் எல்இடி டெயில் லைட்கள் வழங்கப்பட்டுள்ளன.
உள்புறத்தில் 10.1 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், டூயல் டோன் இண்டீரியர், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, பவர்டு முன்புற இருக்கைகள், வயர்லெஸ் சார்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பிரிவு வாகனங்களில் முதல் முறையாக 10.25 இன்ச் பேசன்ஜர் ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. பாதுகாப்பிற்கு 110 மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் செக்யுரிட்டி அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதில் ஆக்டிவ் டிரைவிங் அசிஸ்டன்ஸ் சிஸ்டம், எட்டு ஏர்பேக், 360 டிகிரி சரவுண்ட் வியூ, டிரௌசி டிரைவர் டிடெக்ஷன், 3-பாயிண்ட் சீட் பெல்ட், அனைத்து பயணிகளுக்கும் occupant டிடெக்ஷன் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ஜீப் கிராண்ட் செரோக்கி மாடல் இந்தியாவுக்கு சிகேடி முறையில் கொண்டுவரப்படுகிறது. இந்த காரின் வலதுபுற டிரைவ் யூனிட்கள் பூனேவை அடுத்த ரங்கூன் ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது.
- இந்திய எலெக்ட்ரிக் வாகன ஸ்டார்ட்-அப் நிறுவனம் நாட்டின் மிக குறைந்த விலை எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்தது.
- புதிய PMV எலெக்ட்ரிக் கார் மூன்று வித ரேன்ஜ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
மும்பையை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன ஸ்டார்ட் அப் தனது முதல் எலெக்ட்ரிக் வாகனத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. Eas-E பெயரில் அறிமுகமாகி இருக்கும் புதிய எலெக்ட்ரிக் வாகனம் இந்திய சந்தையில் PMV (பெர்சனல் மொபிலிட்டி வெஹிகில்) எனும் புதிய பிரிவை உருவாக்கி இருக்கிறது. புதிய PMV Eas-E மாடல் இந்தியாவின் குறைந்த விலை எலெக்ட்ரிக் வாகனம் என்ற பெருமையை பெற்று இருக்கிறது.
புதிய PMV Eas-E மாடலின் அறிமுக விலை ரூ. 4 லட்சத்து 79 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். புதிய Eas-E மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 20 ஆயிரம் ஆகும். PMV Eas-E விலை அறிமுக சலுகையாக முதல் 10 ஆயிரம் முன்பதிவுகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த காரை வாங்க இதுவரை சுமார் 6 ஆயிரத்திற்கும் அதிக முன்பதிவுகள் செய்யப்பட்டு இருப்பதாக PMV எலெக்ட்ரிக் தெரிவித்து இருக்கிறது.

PMV Eas-E மாடலில் 48 வோல்ட் பேட்டரி பேக் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார் 50 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. மேலும் இது முழு சார்ஜ் செய்தால் 120, 160 மற்றும் 200 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்கும் வகையில் மூன்று ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
இந்த காரின் அதிகபட்சம் வேகம் மணிக்கு 70 கிலோமீட்டர் என கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. மேலும் மணிக்கு 0 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தை ஐந்து நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டுள்ளது. இந்த காரை 15A சார்ஜர் மூலம் நான்கு மணி நேரத்திற்குள் முழுமையாக சார்ஜ் செய்திட முடியும். 2915mm நீளமாக இருக்கும் PMV Eas-E மாடலில் ஓட்டுனர் சேர்த்து இருவர் பயணம் செய்ய முடியும்.
தோற்றத்தில் PMS Eas-E முன்புறம் எல்இடி லைட் ஸ்ட்ரிப், எல்இடி ஹெட்லேம்ப் உள்ளது. பின்புறத்தில் எல்இடி லைட்டிங் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் 4ஜி கனெக்டிவிட்டி, பல்வேறு டிரைவிங் மோட்கள், எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ரிமோட் பார்க்கிங் அசிஸ்ட், குரூயிஸ் கண்ட்ரோல், ஏசி, பவர் விண்டோ, கீலெஸ் எண்ட்ரி, ப்ளூடூத் கனெக்டிவிட்டி, ஆன்போர்டு நேவிகேஷன், ரியர் கேமரா, முன்புறம் டிஸ்க் பிரேக், ஏர்பேக் வழங்கப்பட்டு இருக்கிறது.
- கியா நிறுவனத்தின் செல்டோஸ் பேஸ்லிப்ட் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
- முதற்கட்டமாக இந்த மாடல் அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு, அதன்பின் இந்தியா வருகிறது.
இந்திய சந்தையில் கியா நிறுவனத்தின் செல்டோஸ் மாடல் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் செல்டோஸ் மாடல் மூலம் கியா குறிப்பிடத்தக்க பங்குகளை பெற்றது. 2019 வாக்கில் இந்தியாவில் களமிறங்கிய கியா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடலாக கியா செல்டோஸ் இருக்கிறது. புதிய செல்டோஸ் பேஸ்லிப்ட் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
அமெரிக்காவில் ஸ்போர்டேஜ், சொரெண்டோ மற்றும் டெலுரைடு மாடல்களை போன்று செல்டோஸ் அதிக வரவேற்பு பெறவில்லை. புதிய மேம்பட்ட செல்டோஸ் மூலம் இந்த நிலையை மாற்ற கியா திட்டமிட்டுள்ளது. புதிய செல்டோஸ் பேஸ்லிப்ட் மாடலில் மேம்பட்ட முகப்பு பகுதி, பெரிய கிரில், இலுமினேட் செய்யப்பட்ட அக்செண்ட்கள் வழங்கப்படுகிறது. இதன் ஹெட்லைட்களும் மாற்றப்பட்டு அழகாக டிசைன் செய்யப்பட்டு உள்ளன.

பின்புறம், டெயில் லைட்களும் புதிதாக வழங்கப்படுகின்றன. இவை ஸ்டிரெட்ச் செய்யப்பட்ட லைட் ஸ்ட்ரிப் மூலம் இண்டர்கனெக்ட் செய்யப்படுகின்றன. காரின் உள்புறத்தில் மேம்பட்ட 10.25 இன்ச் இன்போடெயின்மெண்ட் டிஸ்ப்ளே, 10.25 இன்ச் அளவில் மேம்பட்ட டிரைவர் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. காரின் ஏர் வெண்ட்கள் மாற்றப்பட்டு இருக்கும் என தெரிகிறது. இந்த மாடல் ஏற்கனவே தென் கொரிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது.
அமெரிக்காவில் இந்த மாடல் அதன் தென் கொரிய வெர்ஷனில் வழங்கப்பட்டு இருந்த என்ஜின்களை பெறும் என கூறப்படுகிறது. அந்த வகையில் புதிய கியா செல்டோஸ் பேஸ்லிப்ட் மாடலில் 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட என்ஜின் வழங்கப்படலாம். இந்த என்ஜின் 147 ஹெச்பி பவர், 180 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் என தெரிகிறது. இத்துடன் 1.6 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட என்ஜினும் வழங்கப்படலாம்.
இந்த என்ஜின் 195 ஹெச்பி பவர், 265 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தலாம். இந்திய சந்தையில் தற்போது விற்பனை செய்யப்படும் செல்டோஸ் மாடலில் 1.4 லிட்டர் GDI டர்போ பெட்ரோல், 1.5 லிட்டர் ஸ்மார்ட்ஸ்டிரீம் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்தியாவில் புதிய செல்டோஸ் பேஸ்லிப்ட் மாடல் அடுத்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.






