search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    வெளியீட்டுக்கு முன் இந்தியாவில் காட்சிப்படுத்தப்பட்ட சூப்பர் மீடியோர் 650
    X

    வெளியீட்டுக்கு முன் இந்தியாவில் காட்சிப்படுத்தப்பட்ட சூப்பர் மீடியோர் 650

    • ராயல் என்பீல்டு நிறுவனம் இந்திய சந்தையில் புதிய 650 சிசி மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • முன்னதாக சூப்பர் மீடியோர் 650 மோட்டார்சைக்கிள் இத்தாலியில் நடைபெற்ற 2022 EICMA நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.

    ராயல் என்பீல்டு நிறுவனம் 2022 ரைடர் மேனியா நிகழ்ச்சியில் சூப்பர் மீடியோர் 650 மோட்டார்சைக்கிளை காட்சிப்படுத்தி இருக்கிறது. விரைவில் இந்த மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. தற்போது இந்த மோட்டார்சைக்கிள் காட்சிக்கு மட்டுமே வைக்கப்பட்டது. விரைவில் இந்த மாடலின் விலை விவரங்கள் அறிவிக்கப்படும். விலை அறிவிக்கப்படாத நிலையில், இந்த மாடலுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகின்றன.

    முன்னதாக இத்தாலி நாட்டில் உள்ள மிலன் நகரில் நடைபெற்ற 2022 EICMA நிகழ்வில் ராயல் என்பீல்டு சூப்பர் மீடியோர் 650 மாடல் காட்சிக்கு வைக்கப்பட்டது. இந்திய சந்தையில் புதிய சூப்பர் மீடியோர் 650 மாடல் அடுத்த ஆண்டு துவக்கத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கலாம். புதிய 650சிசி மோட்டார்சைக்கிள் ராயல் என்ஃபீல்டு இண்டர்செப்டார் 650 மற்றும் காண்டினெண்டல் ஜிடி 650 மாடல்கள் உருவான பிளாட்ஃபார்மிலேயே உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    இண்டர்செப்டார் மற்றும் காண்டினெண்டல் ஜிடி மாடல்களில் உள்ளதை போன்றே இந்த மாடலிலும் 648சிசி, பேரலல் ட்வின் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. எனினும், இதன் செயல்திறன் சிறிதளவு சரிவடைந்துள்ளது. புது மாடலில் உள்ள என்ஜின் 46.2 ஹெச்பி பவர், 52 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசைய வெளிப்படுத்துகிறது. இந்த மாடலில் எல்இடி ஹெட்லைட், அலாய் வீல்கள், டியுப்லெஸ் டயர்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இத்துடன் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ட்ரிப்பர் நேவிகேஷன் சிஸ்டம், அப்சைடு-டவுன் முன்புற ஃபோர்க்குகள் உள்ளன. இந்த மோட்டார்சைக்கிள் ஸ்டாண்டர்டு மற்றும் டூரர் என இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கும். வெவ்வேறு நிறம் மற்றும் அக்சஸரீக்கள் மூலம் இரு மாடல்களை வித்தியாசப்படுத்திக் கொள்ள முடியும்.

    Next Story
    ×