என் மலர்
இது புதுசு
- பிஒய்டி நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய அட்டோ 3 எலெக்ட்ரிக் கார் விலையை அறிவித்து இருக்கிறது.
- முன்னதாக இந்த காருக்கான முன்பதிவுகள் துவங்கி நடைபெற்று நிலையில், விலை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
சீனாவை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன நிறுவனமான பிஒய்டி இந்திய சந்தையில் புதிய அட்டோ 3 எலெக்ட்ரிக் கார் விலையை அறிவித்து இருக்கிறது. புதிய பிஒய்டி அட்டோ 3 எலெக்ட்ரிக் எஸ்யுவி விலை ரூ. 33 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
அட்டோ 3 மாடல் இந்திய சந்தையில் பிஒய்டி நிறுவனத்தின் இரண்டாவது எலெக்ட்ரிக் வாகனம் ஆகும். பிஒய்டி அட்டோ 3 மாடல் பௌல்டர் கிரே, பார்க்கர் ரெட், ஸ்கை வைட் மற்றும் சர்ஃப் புளூ என நான்கு விதமான நிறங்களில் கிடைக்கிறது. 2021 ஆண்டில் காட்சிப்படுத்தப்பட்ட பிஒய்டி அட்டோ 3 மாடல் 60.48 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் ஆப்ஷனில் கிடைக்கிறது.

இந்த காரில் பெரிய க்ரோம் கிரில், எல்இடி ஹெட்லேம்ப்கள், டிஆர்எல்கள், ஸ்போர்ட் பம்ப்பர், 18 இன்ச் வீல்கள், பூட் லிட் மீது பிஒய்டி லோகோ இடம்பெற்று இருக்கிறது. ரூ. 30 லட்சம் பட்ஜெட்டில் பெரிய வீல்பேஸ் கொண்ட எலெக்ட்ரிக் கார் மாடல் என்ற பெருமையை அட்டோ 3 பெற்றுள்ளது.
பிஒய்டி அட்டோ 3 மாடலில் கீலெஸ் எண்ட்ரி, போர்டபில் கீ கார்டு, மல்டி-கலர் ஆம்பியண்ட் லைட்டிங், வித்தியாசமான வடிவங்களில் டேஷ்போர்டு, ஏசி வெண்ட்கள், டோர் ஹேண்டில் மற்றும் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரில் 12.8 இன்ச் டிஸ்ப்ளே, நேவிகேஷன் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் அடுத்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ சேவைகளுக்கான அப்டேட் வழங்கப்படுகிறது.
இந்திய சந்தையில் புதிய பிஒய்டி அட்டோ 3 மாடலில் 60.48 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்படுகிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 521 கிலோமீட்டர் வரை செல்லும் என சான்று பெற்று இருக்கிறது. இத்துடன் 7 கிலோவாட் ஹோம் சார்ஜர், 3 கிலோவாட் போர்டபில் சார்ஜர் வழங்கப்படுகிறது.
புதிய அட்டோ 3 மாடலை 7 கிலோவாட் ஹோம் சார்ஜர் மூலம் காரை 0 முதல் 100 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 9.5 முதல் 10 மணி நேரம் ஆகும். 80 கிலோவாட் டிசி சிசிஎஸ் 2 பாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தும் போது 0 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 50 நிமிடங்கள் ஆகும்.
- எம்ஜி மோட்டார் நிறுவனம் 2023 ஹெக்டார் மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
- புதிய ஹெக்டார் மாடல் அதிகளவு மாற்றங்கள், மேம்பட்ட டிசைன் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் 2023 ஹெக்டார் மாடல் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்திய சந்தையில் 2023 எம்ஜி ஹெக்டார் மாடல் அடுத்த ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. ஏற்கனவே இந்த மாடலுக்கான டீசர்கள் வெளியிடப்பட்டு வந்த நிலையில், தற்போது வெளியீடு தேதி உறுதியாகி இருக்கிறது.
புதிய எம்ஜி ஹெக்டார் மாடல் அளவில் பெரியதாகவும், பிரம்மாண்ட தோற்றம் கொண்டிருக்கும். இதன் முன்புறம் டைமண்ட் மெஷ் ரேடியேட்டர் கிரில், எல்இடி ஹெட்லைட்கள், எல்இடி டேடைம் ரன்னிங் லைட்கள் வழங்கப்படுகிறது. இந்த மாடலிலும் ஸ்ப்லிட் ஹெட்லைட், டிஆர்எல் செட்டப் வழங்கப்படுகிறது. எனினும், இதன் டிசைன் சிறிதளவு மாற்றப்படும் என தெரிகிறது.

காரின் உள்புறம் புதிய டேஷ்போர்டு, ரிடிசைன் செய்யப்பட்ட ஏர்கான் வெண்ட்கள் உள்ளன. அப்பர் மற்றும் லோயர் டேஷ்போர்டுகள் இன்செட் செக்ஷன் மூலம் பிரிக்கப்பட்டுள்ளன. இருபுறங்களிலும் மென்மையான மெட்டீரியல் பயன்படுத்தப்பட்டு, டபுள் ஸ்டிட்ச் செய்யப்பட்டு உள்ளது. 2019 வாக்கில் அறிமுகமாகும் போது ஹெக்டார் மாடல் ஏராளமான அம்சங்களுடன் புது அத்தியாயத்தை கட்டமைத்தது.
தற்போது புதிய மாடலில் மேலும் பெரிய 14 இன்ச் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. முந்தைய மாடலில் 10.4 இன்ச் சிஸ்டம் வழங்கப்பட்டு இருந்தது. இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்தில் ஏராளமான அம்சங்கள், புதிய செயலிகள், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட இருக்கிறது. இத்துடன் புதிய ஹெக்டார் மாடலில் மேம்பட்ட ADAS சிஸ்டம் வழங்கப்பட இருக்கிறது.
- லம்போர்கினி நிறுவனத்தின் புதிய உருஸ் மாடல் இந்திய வெளியீடு உறுதியாகி இருக்கிறது.
- புதிய உருஸ் பெர்ஃபார்மென்ட் மாடல் 657 ஹெச்பி வரையிலான செயல்திறன் கொண்டிருக்கிறது.
லம்போர்கினி நிறுவனம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உருஸ் எஸ்யுவி மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க செய்திருந்தது. இதைத்தொடர்ந்து இந்த ஆண்டு துவக்கத்தில் உருஸ் S மாடலை அறிமுகம் செய்தது. தற்போது உருஸ் பெர்ஃபார்மென்ட் மாடலின் இந்திய வெளியீட்டை லம்போபர்கினி உறுதிப்படுத்தி இருக்கிறது. அதன்படி இந்தியா சந்தையில் புதிய லம்போர்கினி உருஸ் பெர்ஃபார்மென்ட் நவம்பர் 24 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
புதிய உருஸ் பெர்ஃபார்மென்ட் மாடல் 657 ஹெச்பி திறன் கொண்டிருக்கிறது. மேலும் இதன் எடை முந்தைய வெர்ஷன்களை விட குறைக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் சிறப்பான ஏரோடைனமிக் டிசைன், சேசிஸ் செட்டப், ஸ்போர்ட் டிரைவிங் டைனமிக்ஸ் மற்றும் டிரைவ் மோட் கலிபரேஷன் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள ரேலி மோட் பெர்ஃபார்மென்ட் வெர்ஷனில் மட்டுமே பிரத்யேகமாக வழங்கப்பட்டுள்ளது.

உருஸ் பெர்ஃபார்மென்ட் மாடல் 850 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 3.3 நொடிகளில் எட்டிவிடும். மேலும் அதிகபட்சம் மணிக்கு 306 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.
இந்திய சந்தையில் லம்போர்கினி உருஸ் பெர்ஃபார்மென்ட் மாடல் ஆஸ்டன் மார்டின் DBX 707, போர்ஷே கயென் கூப் டர்போ ஜிடி, மசிராட்டி லெவாணஅட் டிரோஃபியோ, பெண்ட்லி பெண்ட்யகா மற்றும் ஆடி RS Q8 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைய இருக்கிறது.
- டொயோட்டா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட E-CNG கார் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
- புதிய டொயோட்டா கிளான்சா E-CNG கார் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் E-CNG கிட் பொருத்தப்பட்ட கிளான்சா மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய டொயோட்டா கிளான்சா E-CNG மாடலின் விலை ரூ. 8 லட்சத்து 43 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. கிளான்சா மட்டுமின்றி அர்பன் குரூயிசர் ஹைரைடர் E-CNG வேரியண்டும் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என டொயோட்டா அறிவித்து இருக்கிறது.
புதிய டொயோட்டா கிளான்சா E-CNG மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த கார் லிட்டருக்கு 30.61 கிலோமீட்டர் வரை செல்லும் என ARAI சான்று பெற்று இருக்கிறது. டொயோட்டா கிளான்சா E-CNG மாடலில் உள்ள 1.2 லிட்டர் K சீரிஸ் என்ஜின் 76 ஹெச்பி பவர் வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு உள்ளது.

"நுகர்வோருக்கான நிறுவனம் என்ற வகையில், டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் வாடிக்கையாளர் விருப்பதை முதலில் வைத்துக் கொள்வதில் நம்பிக்கை கொண்டுள்ளது. சந்தையின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதோடு, வாடிக்கையாளர்களின் கனவுகள் மீது தெளிவான கண்ணோட்டத்தில் சிறந்த பொருட்கள் மற்றும் சேவைகளை அவர்களுக்கு வழங்குவதே எங்களின் குறிக்கோள்."
"இதே குறிக்கோளை மனதில் வைத்துக் கொண்டே CNG பிரிவில் களமிறங்குவதை அறிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். அதன்படி டொயோட்டா கிளான்சா மற்றும் அர்பன் குரூயிசர் மாடல்களின் CNG வேரியண்டை அறிமுகம் செய்ய இருக்கிறோம். புது அறிமுகங்கள் மூலம் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்ய அதிக ஆப்ஷன்களை வழங்கி இருக்கிறோம்."
"டொயோட்டா வாகனத்தை பயன்படுத்தும் மகிழ்ச்சி மட்டுமின்றி அவர்களுக்கு குறைந்த செலவில், முழுமையான மன நிம்மதியை டொயோட்டா வாகனங்கள் வழங்கும். இதன் மூலம் அனைவரும் மகிழ்ச்சி அடைய முடியும்." என டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் விற்பனை மற்றும் விளம்பர பிரிவு துணை தலைவர் அடுல் சூட் தெரிவித்து இருக்கிறார்.
- ஆடி நிறுவனம் முற்றிலும் புதிய Q8 இ டிரான் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
- இந்திய சந்தையில் புதிய Q8 இ டிரான் விற்பனை அடுத்த ஆண்டு வாக்கில் துவங்க இருக்கிறது.
ஆடி நிறுவனம் 2018 வாக்கில் தனது முதல் எலெக்ட்ரிக் கார் மாடல்- ஆடி இ டிரான் அறிமுகம் செய்தது. அன்று முதல் இதுவரை 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிக எலெக்ட்ரிக் கார்களை ஆடி விற்பனை செய்துள்ளது. இது உலகளவில் விற்பனை செய்யப்பட்ட எண்ணிக்கை ஆகும்.
2023 ஆண்டிற்காக ஆடி தனது இ டிரான் மாடலை ரிபிராண்டு செய்ய திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் புதிய இ டிரான் மாடல் இனி ஆடி Q8 இ டிரான் என அழைக்கப்பட இருக்கிறது. பெயர் மட்டுமின்றி புது கார் ஏராளமான மாற்றங்களை பெற்று இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் - Q8 இ டிரான், SQ8 இ டிரான் மற்றும் Q8 இ டிரான் ஸ்போர்ட்பேக் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.

தற்போது ஆடி நிறுவனம் எட்டு முழுமையான எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகிறது. 2026 வாக்கில் 20-க்கும் அதிக எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்த ஆடி நிறுவனம் முடிவு செய்துள்ளது. 2026 முதல் முழுக்க முழுக்க எலெக்ட்ரிக் வாகனங்களை மட்டுமே அறிமுகம் செய்ய ஆடி திட்டமிட்டுள்ளது.
புதிய ஆடி Q8 இ டிரான் மாடல் மூன்று வித டிரைவ்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை 50, 55 மற்றும் டாப் எண்ட் SQ8 என அழைக்கப்படுகின்றன. இதில் அதிக ரேன்ஜ் 55 மாடல்களில் கிடைக்கின்றன. இவை முழு சார்ஜ் செய்தால் 582 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகின்றன. ஸ்போர்ட்பேக் மாடல் 600 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. இதன் S ரேன்ஜ் 973 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
- ஆடி இந்தியா நிறுவனம் முற்றிலும் புது Q5 ஸ்பெஷல் எடிஷன் காரை அறிமுகம் செய்து இருக்கிறது.
- ஆடி இந்திய சந்தையில் அறிமுகம் செய்திருக்கும் ஸ்பெஷல் எடிஷன் கார் இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
ஆடி இந்தியா நிறுவனம் Q5 ஸ்பெஷல் எடிஷன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஆடி Q5 ஸ்பெஷல் எடிஷன் மாடலின் விலை ரூ. 67 லட்சத்தி 05 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது ஸ்டாண்டர்டு டெக்னாலஜி வேரியண்டை விட ரூ. 84 ஆயிரம் அதிகம் ஆகும். இந்த கார் டாப் எண் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.
புதிய Q5 ஸ்பெஷல் எடிஷன் மாடல் பிளாக் ஸ்டைலிங் பேக்கேஜில் கிடைக்கிறது. இந்த கார் பிளாக்டு-அவுட் லோகோ, கிளாஸ் பிளாக் முன்புற கிரில், பிளாக் ரூப், பிளாக் ORVM கேப்கள், 19 இன்ச் 5-ஸ்போக் அலாய் வீல்கள் கிராபைட் கிரே நிறத்தில் கிடைக்கிறது. இந்த ஸ்பெஷல் எடிஷன் கார் ஐபிஸ் வைட் மற்றும் புதிய டிஸ்ட்ரிக்ட் கிரீன் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
இது தவிர ஆடி Q5 ஸ்பெஷல் எடிஷன் மாடல் எல்இடி ஹெட்லேம்ப்கள், பானரோமிக் சன்ரூப், 10 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, 12.2 இன்ச் டிரைவர் டிஸ்ப்ளே, 3 ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், 30 நிறங்கள் அடங்கிய ஆம்பியண்ட் லைட்டிங், வயர்லெஸ் சார்ஜர், முன்புறம் பவர்டு இருக்கைகள் வழங்கப்பட்டு உள்ளன.
ஆடி Q5 ஸ்பெஷல் எடிஷன் மாடலின் என்ஜினில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் இந்த காரிலும் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 249 ஹெச்பி பவர், 370 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.
- டொயோட்டா நிறுவனம் முற்றிலும் புதிய இன்னோவா காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
- இன்னோவா ஹைகிராஸ் வெளியீட்டை உணர்த்தும் டீசர்களை டொயோட்டா நிறுவனம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.
டொயோட்டா நிறுவனம் புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடலின் இந்திய வெளியீட்டை சில தினங்களுக்கு முன்பு தான் உறுதிப்படுத்தியது. தற்போது புதிய இன்னவோ ஹைகிராஸ் மாடல் நவம்பர் 25 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என டொயோட்டா அறிவித்து இருக்கிறது. மேலும் இந்த காருக்கான புது டீசரையும் வெளியிட்டு உள்ளது.
டீசரில் புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடலின் படம் சில்ஹவுட் முறையில் படமாக்கப்பட்டு இருக்கிறது. இதில் புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடல் உறுதியான பெல்ட்லைன், பொனெட்டில் ஷார்ப் கிரீஸ்கள், வெளிப்புற கண்ணாடிகளின் கீழ் மாடல் பெயர் இடம்பெற்று இருக்கிறது. இத்துடன் இந்த காரில் முற்றிலும் புதிய ரேடியேட்டர் கிரில், புது ஹெட்லைட்கள் இண்டகிரேட் செய்யப்பட்ட டேடைம் ரன்னிங் லைட்கள் வழங்கப்படுகிறது.

இன்னோவா ஹைகிராஸ் மாடலில் பானரோமிக் சன்ரூப் கொண்டிருக்கும் என்றும் இந்த கார் அதிநவீன மோனோக் ஆர்கிடெக்ச்சரில் உருவாக்கப்பட்டு இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இது டொயோட்டாவின் புது குளோபல் ஆர்கிடெக்ச்சரின் மற்றொரு வெர்ஷன் ஆகும். புதிய ஹைகிராஸ் மாடலில் பெட்ரோல் ஹைப்ரிட் பவர்டிரெயின் வழங்கப்பட இருக்கிறது. இத்துடன் e-CVT டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
இதில் 2.0 லிட்டர் அல்லது 2.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் சிறிய பேட்டரி, எலெக்ட்ரிக் மோட்டார் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கும் என கூறப்படுகிறது. புதிய இன்னோவா ஹைகிராஸ் எம்பிவி மாடலில் ஆல் வீல் டிரைவ் வசதியும் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
- வால்வோ நிறுவனத்தின் புது எலெக்ட்ரிக் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
- புது எலெக்ட்ரிக் கார் வெளியீட்டை உணர்த்தும் டீசரை வால்வோ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
வால்வோ நிறுவனம் தனது EX90 பிளாக்ஷிப் எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலை நவம்பர் 9 ஆம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இது வால்வோ நிறுவனம் தனது SPA2 பிளாட்பார்மில் உருவாக்கி இருக்கும் முதல் எஸ்யுவி மாடல் ஆகும். இதுவரை உற்பத்தி செய்யப்பட்ட கார்களில் இல்லாத வகையிலான பாதுகாப்பான தொழில்நுட்பங்கள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கிறது.
சமீபத்திய டீசர்களில் புதிய EX90 மாடலின் இண்டீரியர் விவரங்கள் இடம்பெற்றுள்ளது. அதன்படி டேஷ்போர்டில் பெரிய தொடுதிரை வசதி கொண்ட ஸ்கிரீன், நேவிகேஷன், மீடியா, போன் கண்ட்ரோல், கிளைமேட் கண்ட்ரோல், சீட் வெண்டிலேஷன் என ஏராளமான அம்சங்கள் புது வால்வோ எலெக்ட்ரிக் எஸ்யுவி-யில் வழங்கப்படுகிறது. இந்த காரில் கூகுள் சார்ந்த யுஎக்ஸ் இண்டர்பேஸ் பயன்படுத்துகிறது. எனினும், இதில் ஏராளமான AI அம்சங்கள் வழங்கப்படுகிறது.

இத்துடன் அளவில் சிறிய டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இது வழி, ரேன்ஜ் விவரங்கள், கியர் நிலை, ADAS தொடர்பான விவரங்களை காண்பிக்கிறது. இதன் ஸ்டீரிங் வீல் மேம்படுத்தப்பட்டு டச் கண்ட்ரோல்கள் வழங்கப்பட்டுள்ளன. கேபினில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் பொருட்கள் அதிக தரமானது என்பதையும் விட சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிக்காது.
தோற்றத்தில் இந்த கார் வட்டம் மற்றும் மெல்லிய ஏரோடைனமிக் டிசைன் கொண்டிருக்கிறது. இதில் சுத்தியல் போன்ற டிஆர்எல்கள் உள்ளன. புதிய வால்வோ EX90 எலெக்ட்ரிக் எஸ்யுவி-யின் தொழில்நுட்ப விவரங்கள் எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்த காரின் இந்திய வெளியீடு அடுத்த ஆண்டு வாக்கில் நடைபெறும் என எதிர்பார்க்கலாம்.
- ஹோண்டா நிறுவனத்தின் முற்றிலும் புதிய WR-V மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
- புது தலைமுறை ஹோண்டா WR-V ஏராளமான ADAS அம்சங்களை கொண்டிருக்கிறது.
ஹோண்டா நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி முற்றிலும் புதிய WR-V மாடலை இந்தோனேசியா சந்தையில் அறிமுகம் செய்தது. இந்தோனேசியாவில் இருந்தபடி புதிய ஹோண்டா WR-V சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஹோண்டா WR-V எஸ்யுவி அளவில் பெரியதாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் ADAS உள்பட ஏராளமான புது அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஸ்டைலிங் மற்றும் டிசைனை பொருத்தவரை புதிய WR-V மாடல் தோற்றத்தில் ஸ்போர்ட் கார் போன்று காட்சியளிக்கிறது. இதன் முன்புறம் க்ரோம்-ஸ்டட் செய்யப்பட்ட முன்புற கிரில், எல்இடி ஹெட்லேம்ப்கள், இண்டகிரேட் செய்யப்பட்ட டிஆர்எல்-கள், முன்புறம் பம்ப்பர் மாற்றப்பட்டு ரி-டிசைன் செய்யப்பட்ட ஃபாக் லேம்ப் ஹவுசிங், பிளாக் அவுட்லைன் இடம்பெற்று இருக்கிறது. புதிய WR-V மாடல் 17 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள், பின்புறம் ஸ்ப்லிட் ரக எல்இடி டெயில் லேம்ப்கள், ரூப் மவுண்ட் செய்யப்பட்ட ஸ்பாயிலர் கொண்டுள்ளது.

ஹோண்டா WR-V மாடலின் கேபின் இந்தியாவில் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் அமேஸ் மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. அந்த வகையில் புதிய WR-V உள்புறம் ஆல்-பிளாக் தீம், ஸ்டீரிங் வீல், டேஷ்போர்டு, டோர் பேட் உள்ளிட்டவைகளில் ரெட் ஹைலைட்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த காரில் 7 இன்ச் தொடு திரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், ரியர் வியூ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
சர்வதேச சந்தையில் ஹோண்டா WR-V மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 119 ஹெச்பி பவர், 145 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் சிவிடி யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ஹோண்டா WR-V இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. இந்திய சந்தைக்காக முற்றிலும் புது எஸ்யுவி மாடலை உருவாக்கும் பணிகளில் ஹோண்டா ஈடுபட்டு வருகிறது.
- மெர்சிடிஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புது எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
- புதிய EQB மாடல் இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் நான்காவது எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும்.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் EQS AMG மாடலை அறிமுகம் செய்யும் போதே புதிய EQB எலெக்ட்ரிக் எஸ்யுவி நவம்பர் மாத வாக்கில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என அறிவித்து இருந்தது. இந்த நிலையில், புதிய மெர்சிடிஸ் பென்ஸ் EQB மாடல் முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில், பொது சார்ஜிங் மையத்தில் சார்ஜ் செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
ஸ்பை படங்களின் படி மெர்சிடிஸ் பென்ஸ் EQB எஸ்யுவி மாடல் முழுமையாக கருப்பு நிற கமோஃபிளேஜில் வெள்ளை நிற மென்ஸ் லோகோ மூலம் மறைக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் க்ளோஸ்டு-ஆஃப் கிரில், அகலமான ஏர் டேம், அக்ரசிவ் முன்புற பம்ப்பர், டூயல் டோன் அலாய் வீல், சில்வர் ரூஃப் ரெயில்கள், பின்புறம் வலதுபக்க பெண்டரில் சார்ஜிங் போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாத வாக்கில் மெர்சிடிஸ் பென்ஸ் EQB மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இது சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படும் GLS செடான் மாடலின் எலெக்ட்ரிக் வேரியண்ட் ஆகும். இந்த கார் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் பிரத்யேக எலெக்ட்ரிக் வாகன ஆர்கிடெக்ச்சரில் உருவாக்கப்பட்டவில்லை. மாறாக இந்த கார் MFA2 பிளாட்பார்மில் உருவாகியுள்ளது.
இந்திய சந்தையில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் நான்காவது எலெக்ட்ரிக் வாகனமாக புதிய EQB மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 2022 மெர்சிடிஸ் பென்ஸ் EQB மாடல் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. EQB 250 மாடல் 188 ஹெச்பி பவர், 385 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. EQB300 4மேடிக் மாடல் 225ஹெச்பி பவர், 390 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
பென்ஸ் EQB350 4மேடிக் மாடல் 288ஹெச்பி பவர், 520 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. EQB மட்டுமின்றி மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் EQE செடான் மாடலை உருவாக்கி வருகிறது. இந்த கார் அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படலாம்.
Photo Courtesy: PowerDrift
- மாருதி சுசுகி நிறுவனம் தனது XL6 காரில் S-CNG கிட் வழங்கி இருக்கிறது.
- புதிய மாருதி சுசுகி XL6 S-CNG ஒற்றை வேரியண்டில் அறிமுகமாகி இருக்கிறது.
மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிறுவனம் XL6 S-CNG மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய மாருதி சுசுகி XL6 S-CNG மாடலின் விலை ரூ. 12 லட்சத்து 24 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. இந்த கார் ஸீட்டா MT எனும் ஒற்றை வேரியண்டில் மட்டுமே கிடைக்கிறது. இதே காருடன் பேலனோ CNG மாடலும் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

புதிய மாருதி சுசுகி XL6 S-CNG மாடலில் 1.5 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 99 ஹெச்பி பவர், 136 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. CNG மோடில் இந்த என்ஜின் 87 ஹெச்பி பவர், 121.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய XL6 S-CNG மாடல் லிட்டருக்கு 26.32 கிலோமீட்டர் வரை செல்லும். இந்த காரில் 7 இன்ச் ஸ்மார்ட் பிளே ஸ்டூடியோ டச் ஸ்கிரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, குரூயிஸ் கண்ட்ரோல், எல்இடி டிஆர்எல்கள், நான்கு ஏர்பேக், ESP மற்றும் ஹில் ஹோல்டு அம்சம், எல்இடி பாக் லைட்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த கார் மாதாந்திர சந்தா முறையிலும் விற்பனைக்கு கிடைக்கிறது.
- ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் புதிய ஸ்பெக்டர் மாடல் மூலம் எலெக்ட்ரிக் வாகன பிரிவில் களமிறங்கி இருக்கிறது.
- புதிய ஸ்பெக்டர் எலெக்ட்ரிக் கார் இரண்டு கதவுகள் மற்றும் நான்கு சீட்களை கொண்டிருக்கிறது.
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் முற்றிலும் புதிய ஸ்பெக்டர் மாடல் மூலம் எலெக்ட்ரிக் வாகன பயணத்தை துவங்கி உள்ளது. புதிய ஸ்பெக்டர் எலெக்ட்ரிக் கார் அடுத்த ஆண்டின் நான்காவது காலாண்டு வாக்கில் வினியோகம் செய்யப்பட இருக்கிறது. ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலெக்ட்ரிக் மாடல் இரண்டு கதவுகள் மற்றும் நான்கு இருக்கைகளை கொண்டுள்ளது.
புதிய ஸ்பெக்டர் மாடல் பாரம்பரியம் மிக்க பேண்டம் கூப் மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். புதிய அலுமினியம் ஆர்கிடெக்ச்சரில் உருவாக்கப்பட்டு இருக்கும் ஸ்பெக்டர் மாடலின் பேட்டரிகள், வழக்கமான ரோல்ஸ் ராய்ஸ் மாடலை விட 30 சதவீதம் உறுதியானதாக மாற்றி இருக்கிறது. ரோல்ஸ் ராய்ஸ் வழக்கப்படி ஸ்பெக்டர் மாடல் 700 கிலோ சவுண்ட் டெடனிங் பயன்படுத்துகிறது. இது காரின் தேவையற்ற சத்தத்தை காரினுள் கேட்க விடாமல் தடுக்கும்.

இந்த எலெக்ட்ரிக் காரின் முழுமையான அம்சங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்த காரின் இறுதிக்கட்ட சோதனைகள் அடுத்த ஆண்டு வரை தொடர்ச்சியாக நடைபெற இருக்கிறது. புதிய ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் மாடல் 430 கிலோவாட் திறன் மற்றும் 900 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 4.5 நொடிகளில் எட்டிவிடும். முழு சார்ஜ் செய்தால் இந்த கார் 520 கிலோமீட்டர் வரை செல்லும். அடுத்த ஆண்டின் நான்காவது காலாண்டு வாக்கில் அறிமுகமாகும் ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் மாடலின் விற்பனை சர்வதேச சந்தையில் 2024 வாக்கில் துவங்குகிறது. இதைத் தொடர்ந்து இந்திய விற்பனை துவங்கும்.






