search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    லம்போர்கினி உருஸ் பெர்ஃபார்மென்ட் இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு
    X

    லம்போர்கினி உருஸ் பெர்ஃபார்மென்ட் இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு

    • லம்போர்கினி நிறுவனத்தின் புதிய உருஸ் மாடல் இந்திய வெளியீடு உறுதியாகி இருக்கிறது.
    • புதிய உருஸ் பெர்ஃபார்மென்ட் மாடல் 657 ஹெச்பி வரையிலான செயல்திறன் கொண்டிருக்கிறது.

    லம்போர்கினி நிறுவனம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உருஸ் எஸ்யுவி மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க செய்திருந்தது. இதைத்தொடர்ந்து இந்த ஆண்டு துவக்கத்தில் உருஸ் S மாடலை அறிமுகம் செய்தது. தற்போது உருஸ் பெர்ஃபார்மென்ட் மாடலின் இந்திய வெளியீட்டை லம்போபர்கினி உறுதிப்படுத்தி இருக்கிறது. அதன்படி இந்தியா சந்தையில் புதிய லம்போர்கினி உருஸ் பெர்ஃபார்மென்ட் நவம்பர் 24 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    புதிய உருஸ் பெர்ஃபார்மென்ட் மாடல் 657 ஹெச்பி திறன் கொண்டிருக்கிறது. மேலும் இதன் எடை முந்தைய வெர்ஷன்களை விட குறைக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் சிறப்பான ஏரோடைனமிக் டிசைன், சேசிஸ் செட்டப், ஸ்போர்ட் டிரைவிங் டைனமிக்ஸ் மற்றும் டிரைவ் மோட் கலிபரேஷன் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள ரேலி மோட் பெர்ஃபார்மென்ட் வெர்ஷனில் மட்டுமே பிரத்யேகமாக வழங்கப்பட்டுள்ளது.

    உருஸ் பெர்ஃபார்மென்ட் மாடல் 850 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 3.3 நொடிகளில் எட்டிவிடும். மேலும் அதிகபட்சம் மணிக்கு 306 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.

    இந்திய சந்தையில் லம்போர்கினி உருஸ் பெர்ஃபார்மென்ட் மாடல் ஆஸ்டன் மார்டின் DBX 707, போர்ஷே கயென் கூப் டர்போ ஜிடி, மசிராட்டி லெவாணஅட் டிரோஃபியோ, பெண்ட்லி பெண்ட்யகா மற்றும் ஆடி RS Q8 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைய இருக்கிறது.

    Next Story
    ×