என் மலர்
இது புதுசு

வெளியீட்டுக்கு முன் இந்தியாவில் சோதனை செய்யப்படும் பென்ஸ் EQB
- மெர்சிடிஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புது எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
- புதிய EQB மாடல் இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் நான்காவது எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும்.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் EQS AMG மாடலை அறிமுகம் செய்யும் போதே புதிய EQB எலெக்ட்ரிக் எஸ்யுவி நவம்பர் மாத வாக்கில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என அறிவித்து இருந்தது. இந்த நிலையில், புதிய மெர்சிடிஸ் பென்ஸ் EQB மாடல் முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில், பொது சார்ஜிங் மையத்தில் சார்ஜ் செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
ஸ்பை படங்களின் படி மெர்சிடிஸ் பென்ஸ் EQB எஸ்யுவி மாடல் முழுமையாக கருப்பு நிற கமோஃபிளேஜில் வெள்ளை நிற மென்ஸ் லோகோ மூலம் மறைக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் க்ளோஸ்டு-ஆஃப் கிரில், அகலமான ஏர் டேம், அக்ரசிவ் முன்புற பம்ப்பர், டூயல் டோன் அலாய் வீல், சில்வர் ரூஃப் ரெயில்கள், பின்புறம் வலதுபக்க பெண்டரில் சார்ஜிங் போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாத வாக்கில் மெர்சிடிஸ் பென்ஸ் EQB மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இது சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படும் GLS செடான் மாடலின் எலெக்ட்ரிக் வேரியண்ட் ஆகும். இந்த கார் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் பிரத்யேக எலெக்ட்ரிக் வாகன ஆர்கிடெக்ச்சரில் உருவாக்கப்பட்டவில்லை. மாறாக இந்த கார் MFA2 பிளாட்பார்மில் உருவாகியுள்ளது.
இந்திய சந்தையில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் நான்காவது எலெக்ட்ரிக் வாகனமாக புதிய EQB மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 2022 மெர்சிடிஸ் பென்ஸ் EQB மாடல் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. EQB 250 மாடல் 188 ஹெச்பி பவர், 385 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. EQB300 4மேடிக் மாடல் 225ஹெச்பி பவர், 390 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
பென்ஸ் EQB350 4மேடிக் மாடல் 288ஹெச்பி பவர், 520 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. EQB மட்டுமின்றி மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் EQE செடான் மாடலை உருவாக்கி வருகிறது. இந்த கார் அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படலாம்.
Photo Courtesy: PowerDrift






