search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்படும் எம்ஜி-யின் புது எலெக்ட்ரிக் கார்?
    X

    ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்படும் எம்ஜி-யின் புது எலெக்ட்ரிக் கார்?

    • எம்ஜி மோட்டார் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.
    • இந்திய சந்தையில் எம்ஜி நிறுவனம் புது எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது.

    ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வுக்கு பல்வேறு கார் உற்பத்தியாளர்கள் ஏற்கனவே திட்டமிட்டு தயாராகி வருகின்றனர். இந்த நிலையில், எம்ஜி மோட்டார் நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போ விழாவில் சில கார்களை காட்சிப்படுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    எம்ஜி ஏர் சிட்டி EV மாடலின் இந்திய அறிமுகம் ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் நடைபெறும் என ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது. இதே போன்று புதிய ஹெக்டார் ஃபேஸ்லிஃப்ட் மாடலும் ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்படுகிறது. இந்த வரிசையில், எம்ஜி 4 EV மாடலும் இணைகிறது. இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் எம்ஜி 4 EV மாடல் ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்படுகிறது.

    இந்த ஆண்டு ஜூலை மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட எம்ஜி 4 முழுமையான எலெக்ட்ரிக் வாகனம் ஆகும். இது எம்ஜி-யின் தாய் நிறுவனமான SAIC-யின் மாட்யுலர் ஸ்கேலபில் பிளாட்ஃபார்மை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய எம்ஜி 4 மாடல் 4287mm நீளம், 1836mm அகலம், 1506mm உயரம் மற்றும் 2705mm வீல்பேஸ் கொண்டிருக்கிறது. இந்த கார் அளவில் தற்போது விற்பனை செய்யப்படும் ZS EV மாடலை போன்றே இருக்கும்.

    சர்வதேச சந்தையில் புதிய எம்ஜி 4 மாடல் - 51 கிலோவாட் ஹவர் மற்றும் 64 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரி பேக் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 170 ஹெச்பி பவர் மற்றும் 203 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இரு வேரியண்ட்களிலும் சிங்கில் மோட்டார், ரியர் வீல் டிரைவ் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 452 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது.

    Next Story
    ×