என் மலர்
இது புதுசு
- புதிய EQE மாடல் மெர்சிடிஸ் GLE எஸ்.யு.வி.-இன் எலெக்ட்ரிக் வெர்ஷன் ஆகும்.
- மெர்சிடிஸ் பென்ஸ் EQE மாடல் இருவித பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் தனது EQE மாடலை செப்டம்பர் 15-ம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்த மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
புதிய EQE மாடல் மெர்சிடிஸ் GLE எஸ்.யு.வி.-இன் எலெக்ட்ரிக் வெர்ஷன் ஆகும். இந்த மாடல் EQB மற்றும் EQS மாடல்களின் இடையில் நிலைநிறுத்தப்படுகிறது. தோற்றத்தில் இந்த மாடல் EQS போன்ற காட்சியளிக்கிறது. இதன் வெளிப்புறம் மூடப்பட்ட நிலையில் முன்புற கிரில், எல்.இ.டி. டி.ஆர்.எல்.-கள், டிஜிட்டல் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், ஃபிளஷ் டோர் ஹேண்டில்கள், 20 இன்ச் அளவில் ஏரோ அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன.

இந்த எஸ்.யு.வி. மாடலின் உள்புறம் டூயல் ஸ்கிரீன்கள்- இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் MBUX சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. மற்ற அம்சங்களை பொருத்தவரை வயர்லெஸ் சார்ஜர், மல்டி-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், பானரோமிக் சன்ரூஃப் வழங்கப்பட்டு இருக்கிறது.
சர்வதேச சந்தையில் மெர்சிடிஸ் பென்ஸ் EQE மாடல் 89 கிலோவாட் ஹவர் மற்றும் 90.6 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் பேஸ் 350+ வேரியண்டில் ஒற்றை மோட்டார் உள்ளது. இது 288 ஹெச்.பி. பவர், 565 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளன.
இதன் 350 4 மேடிக் மாடலில் டூயல் மோட்டார் செட்டப் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த யூனிட் 288 ஹெச்.பி. பவர், 765 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இவைதவிர 500 4மேடிக் வேரியண்ட் மற்றும் 53 4மேடிக் AMG வேரியண்ட்களும் கிடைக்கின்றன. இவற்றில் 170 கிலோவாட் டி.சி. ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இதை கொண்டு காரை 32 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்துவிட முடியும்.
- லெக்சஸ் LM மாடல் ஆட்டோ எக்ஸ்போ 2023 விழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டது.
- லெக்சஸ் LM மாடல் நான்கு, ஏழு பேர் அமரும் இருக்கை அமைப்புகளில் கிடைக்கிறது.
லெக்சஸ் பிரான்டின் புதிய LM மாடல் கார் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதனை உணர்த்தும் டீசரை லெக்சஸ் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது. முன்னதாக ஆட்டோ எக்ஸ்போ 2023 விழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டது. தற்போது டீசர் வெளியாகி இருப்பதை அடுத்து, லெக்சஸ் LM மாடல் வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
புதிய லெக்சஸ் LM மாடலில் ஸ்பின்டில் டிசைன், எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், இன்டகிரேட் செய்யப்பட்ட டி.ஆர்.எல்.கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரில் 19 இன்ச் அளவு கொண்ட அலாய் வீல்கள், 3000mm வீல்பேஸ் மற்றும் பவர் ஸ்லைடு வசதி கொண்ட பின்புற கதவுகள் வழங்கப்பட்டு உள்ளன.

சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் லெக்சஸ் LM மாடல் நான்கு மற்றும் ஏழு பேர் அமரும் இருக்கை அமைப்புகளில் கிடைக்கிறது. இந்த காரின் பின்புறம் 48-இன்ச் டிஸ்ப்ளே கொண்ட ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. காரின் உள்புறம் கேபின் பகுதியில் வயர்லெஸ் சார்ஜிங் பேட், மினி குளிரூட்டி, 50 நிறங்கள் அடங்கிய ஆம்பியன்ட் லைட்கள் வழங்கப்படுகின்றன.
புதிய லெக்சஸ் LM மாடலில் ADAS அம்சங்களான அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல், பிரீ-கொலிஷன் வார்னிங், பிரேக் அசிஸ்ட் மற்றும் ப்ரோ ஆக்டிவ் டிரைவ் அசிஸ்ட் போன்ற வசதிகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்தியாவுக்கு இந்த கார் சி.பி.யு. முறையில் கொண்டுவரப்படுகிறது. இதன் காரணமாக அம்சங்கள், சர்வதேச மாடலில் இருப்பதை போன்றே வழங்கப்படலாம். இந்த காரில் 2.4 லிட்டர் அல்லது 2.5 லிட்டர் செல்ஃப் சார்ஜிங் வசதி கொண்ட ஹைப்ரிட் பவர்டிரெயின் வழங்கப்படுகிறது.
- புதிய ஹோண்டா லிவோ மாடல் மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது.
- 2023 ஹோண்டா லிவோ மாடலிலும் 109.51சிசி என்ஜின் தான் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் OBD2-விதிகளுக்கு பொருந்தும் 2023 லிவோ மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் டிரம் மற்றும் டிஸ்க் வேரியன்ட்களில் கிடைக்கின்றன. இவற்றின் விலை முறையே ரூ. 78 ஆயிரத்து 500 மற்றும் ரூ. 82 ஆயிரத்து 500, எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன.
புதிய ஹோண்டா லிவோ மோட்டார்சைக்கிள்- அத்லெடிக் புளூ மெட்டாலிக், மேட் கிரஸ்ட் மெட்டாலிக் மற்றும் பிளாக் என மூன்றுவிதமான நிறங்களில் கிடைக்கிறது. ஹோண்டா லிவோ மாடலில் 109.51சிசி, ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ACG ஸ்டார்டர் மோட்டார் மற்றும் சைலன்ட் என்ஜின் ஸ்டார்ட் வசதி வழங்கப்படுகிறது.

இதன் செயல்திறன் அளவில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில், புதிய மாடலிலும், இந்த என்ஜின் 8.67 ஹெச்.பி. பவர், 9.30 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையே வெளிப்படுத்துகிறது. இத்துடன் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
அம்சங்களை பொருத்தவரை புதிய ஹோண்டா லிவோ மாடலில் என்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் ஸ்விட்ச், டி.சி. ஹெட்லேம்ப், கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம், டியூப்லெஸ் டயர், 5 ஸ்டெப் பிரீலோடு அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ரியர் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் ஒட்டுமொத்த தோற்றத்தில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
- பி.ஒய்.டி. நிறுவனம் "சீ லயன்" என்ற பெயரை பயன்படுத்த டிரேட்மார்க் செய்து இருக்கிறது.
- பி.ஒய்.டி. சீ லயன் எலெக்ட்ரிக் எஸ்.யுவி. மாடலில் 82.5 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்படலாம்.
பி.ஒய்.டி. (பில்டு யுவர் டிரீம்ஸ்) நிறுவனம் உலகின் முன்னணி எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்களில் ஒன்றாக இருக்கிறது. இந்திய சந்தையில் பி.ஒய்.டி. நிறுவனம் அட்டோ 3 எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடலை விற்பனை செய்து வருகிறது. இது ஐந்து பேர் பயணிக்கக்கூடிய கார் மாடல் ஆகும்.
இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகன விற்பனை வரும் ஆண்டுகளில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக பி.ஒய்.டி. நிறுவனமும் தனது வாகனங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. அந்த வகையில், பி.ஒய்.டி. நிறுவனம் "சீ லயன்" என்ற பெயரை பயன்படுத்துவதற்கு இந்தியாவில் டிரேட்மார்க் செய்து இருக்கிறது.

கோப்புப் படம்
அதிக மாடல்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் பி.ஒய்.டி. நிறுவனம் டெஸ்லாவுக்கு சவால் விட நினைக்கிறது. இதோடு டெஸ்லா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகனங்களை இந்தியாவில் உற்பத்தி செய்வதற்கான ஆயத்த பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதோடு பூனே நகரில் 5 ஆயிரத்து 850 சதுர அடி பரப்பளவு கொண்ட இடத்தை டெஸ்லா லீசுக்கு எடுத்துள்ளது.
வெளிநாட்டு சந்தைகளில் அறிமுகப்படுத்த பி.ஒய்.டி. நிறுவனம் சீ லயன் என்ற பெயரில் எஸ்.யு.வி. மாடல் ஒன்றை டெஸ்டிங் செய்து வருகிறது. இது மிட்-சைஸ் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. ஆகும். இந்த கார் பி.ஒய்.டி. ஏற்கனவே விற்பனை செய்து வரும் அட்டோ 3 எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடலின் மேல் நிலைநிறுத்தப்படும் என்று தெரிகிறது.
பி.ஒய்.டி. சீ லயன் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடலில் 82.5 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்படும் என்று தெரிகிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 700 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என்று தெரிகிறது. இத்துடன் ரியர் வீல் டிரைவ் மற்றும் ஆல் வீல் டிரைவ் வசதியும் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
இதில் ரியர் வீல் டிரைவ் ஆப்ஷனில் ஒற்றை மோட்டார், 204 ஹெச்.பி. வரையிலான திறன், 310 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. ஆல்-வீல் டிரைவ் வசதி கொண்ட வேரியன்டில் 530 ஹெச்.பி. வரையிலான திறன் வெளிப்படுத்தும் டூயல் மோட்டார் செட்டப் வழங்கப்படலாம்.
- புதிய பைக் பிளாக் பேந்தர் மற்றும் ஐயன் மேன் என இருவித பெயின்ட் தீம்களில் கிடைக்கிறது.
- டி.வி.எஸ். ரைடர் 125 சூப்பர் ஸ்குவாட் எடிஷன் மாடலிலும் 124.8சிசி சிங்கில் சிலின்டர் என்ஜின் உள்ளது.
டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் தனது 125சிசி கம்யுட்டர் மாடலான ரைடர் 125 மாடலின் புது வேரியன்டை அறிமுகம் செய்தது. இந்த வேரியன்ட் சூப்பர் ஸ்குவாட் எடிஷன் என்று அழைக்கப்படுகிறது. இந்த பைக் மார்வல் சீரிசை தழுவி: பிளாக் பேந்தர் மற்றும் ஐயன் மேன் என இருவித பெயின்ட் தீம்களில் கிடைக்கிறது. அந்த வகையில் ஒரு மாடல் ரெட், பிளாக் மற்றும் கோல்டு நிறங்களிலும், மற்றொரு மாடல் பர்பில் மற்றும் பிளாக் நிறங்களில் பெயின்ட் செய்யப்பட்டு உள்ளது.
இவைதவிர புதிய மாடலில் டிசைன், அம்சங்கள் மற்றும் மெக்கானிக்கல் மாற்றங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில், புதிய மாடலிலும் எல்.இ.டி. ஹெட்லைட் வழங்கப்படுகிறது. இத்துடன் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், மோனோஷாக் யூனிட் வழங்கப்படுகிறது. மேலும் முன்புறத்தில் டிஸ்க் பிரேக், பின்புறம் டிரம் பிரேக் யூனிட் வழங்கப்படுகிறது.

அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் எல்.இ.டி. இலுமினேஷன், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், ப்ளூடூத் கனெக்டிவிட்டி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த யூனிட்-இல் ஸ்பீடோமீட்டர், ஒடோமீட்டர், ட்ரிப் மீட்டர், ஃபியூவல் லெவல், கியர் பொசிஷன் இன்டிகேட்டர் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது.
புதிய டி.வி.எஸ். ரைடர் 125 சூப்பர் ஸ்குவாட் எடிஷன் மாடலிலும் 124.8சிசி சிங்கில் சிலின்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 11.2 ஹெச்.பி. பவர் மற்றும் 11.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
டி.வி.எஸ். ரைடர் 125 சூப்பர் ஸ்குவாட் எடிஷன் மாடலின் விலை ரூ. 98 ஆயிரத்து 919, எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதுதவிர ரைடர் 125 மாடல் SX,ஸ்ப்லிட் சீட் மற்றும் சிங்கில் சீட் என மூன்று விதமான வேரியன்ட்களில் கிடைக்கிறது.
- மஹிந்திரா நிறுவனத்தின் XUV300 மாடல் தற்போது ஐந்து வித வேரியன்ட்களில் கிடைக்கிறது.
- புதிய XUV300 மாடலின் W8 (O) AT வேரியன்ட் டாப் எண்ட் மாடலாக இருக்கிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் XUV300 மாடலின் இரண்டு புதிய வேரியண்ட்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. இவை W2 மற்றும் W4 என்று அழைக்கப்படுகின்றன. புதிய மஹிந்திரா XUV300 மாடல்களின் விலை ரூ. 7 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று துவங்குகின்றன. புது வேரியன்ட்களின் மூலம் மஹிந்திரா XUV300 மாடல் W2, W4, W6, W8 மற்றும் W8 (ஆப்ஷனல்) என ஐந்து வேரியன்ட்களில் கிடைக்கிறது.
இவற்றில் மஹிந்திரா XUV300 மாடலின் W4 வேரியன்ட்-இல் சன்ரூஃப், பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. W4 டர்போ ஸ்போர்ட் வேரியன்ட் விலை ரூ. 9 லட்சத்து 29 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று துவங்குகிறது. இதில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த என்ஜின் 129 ஹெச்பி பவர், 230 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த கார் மணக்கு 60 கிலோமீட்டர் வேகத்தை ஐந்து நொடிகளுக்குள் எட்டிவிடும். முன்னதாக இந்த என்ஜின் W6 வேரியன்டில் மட்டுமே வழங்கப்பட்டு இருந்தது.
தற்போதைய புது வேரியன்ட்கள் மூலம் மஹிந்திரா XUV300 மாடலின் விலை ரூ. 7 லட்சத்து 99 ஆயிரம் என்று துவங்குகிறது. இதன் டாப் எண்ட் W8 (O) AT வேரியன்ட் விலை ரூ. 14 லட்சத்து 59 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
- மினி கூப்பர் SE சார்ஜ்டு எடிஷன் மாடலில் உள்ள மோட்டார் 184 ஹெச்பி பவர், 270 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
- புதிய மினி ஸ்பெஷல் எடிஷன் மாடல் முழு சார்ஜ் செய்தால் 270 கிமீ ரேன்ஜ் வழங்குகிறது.
மினி நிறுவனத்தின் ஆல்-எலெக்ட்ரிக் கூப்பர் SE மாடலின் சார்ஜ்டு எடிஷன் வேரியன்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. புதிய மினி கூப்பர் SE சார்ஜ்டு எடிஷன் மாடலின் விலை ரூ. 55 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய சார்ஜ்டு எடிஷன் மாடல் நாடு முழுக்க வெறும் 20 வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.
இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட முதல் லிமிடெட் எடிஷன் கூப்பர் SE மாடல்- சார்ஜ்டு எடிஷன் சில்லி ரெட் நிறம் மற்றும் டூயல்-டோன் ரூஃப் ஆப்ஷன் கொண்டிருக்கிறது. அதன்படி இந்த காரின் ரூஃப் வைட் நிறத்திலும், வட்டவடிவம் கொண்ட ஹெட்லைட், டெயில் லைட் ரிங்குகள், டோர் ஹேன்டில்கள், லோகோ மற்றும் டெயில்கேட் ஹேன்டில் உள்ளிட்டவைகளை சுற்றி வைட் நிற அக்சென்ட்கள் செய்யப்பட்டு உள்ளன.

இத்துடன் கான்டிராட்ஸ்ட் ஃபுரோசன் ரெட் ஸ்போர்ட்ஸ் ஸ்டிரைப்கள், பொனெட், பக்கவாட்டு மற்றும் பூட் பகுதி மற்றும் ஏர் வென்ட்களில் எல்லோ ஹைலைட்கள் செய்யப்பட்டுள்ளன. 17-இன்ச் மினி எலெக்ட்ரிக் மாடலின் வீல்களிலும் எல்லோ சரவுன்ட்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. வழக்கமாக மினி மாடல்களில் உள்ளதை போன்ற S லோகோ, இந்த வேரியன்டில் எல்லோ நிற பினிஷ் செய்யப்பட்டுள்ளது.
கூப்பர் சார்ஜ்டு எடிஷன் மாடலின் உள்புறம் லெதர் கார்பன் பிளாக் இருக்கை மேற்கவர்கள், நப்பா லெதர் இன்சர்ட்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் உள்புற ஸ்டார்ட் / ஸ்டாப் ஸ்விட்ச், கியர் லீவர் மற்றும் டோர் சில் உள்ளிட்டவைகளில் ஸ்பெஷல் எடிஷன் பேட்ஜ்கள் இடம்பெற்றுள்ளன. இத்துடன் நேவிகேஷன், வயர்லெஸ் சார்ஜிங், ப்ளூடூத் கனெக்டிவிட்டி மற்றும் ஹார்மன் கார்டன் சவுன்ட் உள்ளிட்டவை "வயர்டு பேக்கேஜ்" மூலம் வழங்கப்படுகிறது.
மினி கூப்பர் SE சார்ஜ்டு எடிஷன் மாடலில் உள்ள மோட்டார் 184 ஹெச்பி பவர், 270 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 7.3 நொடிகளில் எட்டிவிடும். இதில் உள்ள 32.6 கிலோவாட் ஹவர் பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்தால் 270 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் கிடைக்கும்.
- புதிய கவாசகி Z900RS மாடலில் 948சிசி, நான்கு சிலிண்டர்கள் கொண்ட லிக்விட் கூல்டு என்ஜின் உள்ளது.
- 2024 கவாசகி Z900RS மெட்டாலிக் டயப்ளோ பிளாக் என ஒற்றை நிறத்தில் மட்டுமே கிடைக்கிறது.
கவாசகி நிறுவனத்தின் 2024 Z900RS சூப்பர்பைக் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய பைக்கின் விலை ரூ. 16 லட்சத்து 80 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 2024 கவாசகி Z900RS மாடல்- மெட்டாலிக் டயப்ளோ பிளாக் நிறத்தில் மட்டுமே கிடைக்கிறது. ஸ்டைலிங்கை பொருத்தவரை புதிய மாடல் அதன் முந்தைய வெர்ஷனை போன்றே காட்சியளிக்கிறது.
அதன்படி இந்த பைக்கின் முன்புறத்தில் வட்ட வடிவம் கொண்ட ஹெட்லைட், டுவின் பாட் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டியர்-டிராப் வடிவம் கொண்ட ஃபியூவல் டேன்க், சிங்கில்-பீஸ் சாடில், சைடு ஸ்லங் எக்சாஸ்ட், ஸ்போக் ஸ்டைல் கேஸ்ட் வீல்கள் வழங்கப்பட்டு உள்ளன. முந்தைய மாடலை போன்றே 2024 மாடலிலும் ஃபுல் எல்இடி லைட்டிங், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டூயல் சேனல் ஏபிஎஸ், கவாசகி டிராக்ஷன் கண்ட்ரோல், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது.

மெக்கானிக்கல் அம்சங்களை பொருத்தவரை புதிய கவாசகி Z900RS மாடலில் 948சிசி, இன்லைன் நான்கு சிலிண்டர்கள் கொண்ட லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 107 ஹெச்பி பவர், 95 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.
பிரேக்கிங்கிற்கு 300 மில்லிமீட்டர் முன்புற டிஸ்க் பிரேக்குகள், பின்புறம் 250 மில்லிமீட்டர் ரோட்டார், அப்சைடு டவுன் முன்புற ஃபோர்க்குகள், பின்புறம் மோனோஷாக் யூனிட் வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் புதிய 2024 கவாசகி Z900RS மாடல் டிரையம்ப் போன்வில் T100 மற்றும் ஸ்பீடு டுவின் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
- புதிய டுகாட்டி சூப்பர்பைக் மாடலில் பவர் மோட்கள், ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன.
- டுகாட்டி டயவெல் V4 மாடலில் 1158சிசி, V4 கிரான்டூரிஸ்மோ என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
டுகாட்டி இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் முற்றிலும் புதிய டயவெல் V4 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. புதிய டுகாட்டி டயவெல் V4 மாடலின் விலை ரூ. 25 லட்சத்து 91 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய மாடலின் சில அம்சங்கள் அதன் முந்தைய வெர்ஷனை விட மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.
மேலும் பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. அந்த வகையில், இந்த மாடலில் 1158சிசி, V4 கிரான்டூரிஸ்மோ என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 168 ஹெச்பி பவர், 126 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 17 இன்ச் கேஸ்ட்-அலுமினியம் அலாய் வீல்கள் மற்றும் டயப்லோ ரோஸோ III டயர்கள் வழங்கப்படுகின்றன.

சஸ்பென்ஷனுக்கு முன்புறத்தில் 50mm அப்சைடு-டவுன் ஃபோர்க்குகள், பின்புறம் மோனோஷாக் யூனிட் வழங்கப்படுகிறது. இவற்றை முழுமையாக அட்ஜஸ்ட் செய்யும் வசதியும் வழங்கப்படுகிறது. பிரேக்கிங்கிற்கு முன்புறத்தில் இரட்டை 330mm டிஸ்க், பிரெம்போ ஸ்டைல்மா மோனோபிளாக் கேலிப்பர்கள், பின்புறம் ஒற்றை டிஸ்க் பிரேக் வழங்கப்படுகிறது.
இந்த மாடலில் 5-இன்ச் TFT ஸ்கிரீன் வழங்கப்படுகிறது. இது பவர் மோட்கள், ரைடிங் மோட்கள், 6 ஆக்சிஸ் IMU சார்ந்த பிட்களான கார்னெரிங் ஏபிஎஸ், டிராக்ஷன் கண்ட்ரோல், வீலி கண்ட்ரோல், பவர் லான்ச், குயிக்ஷிஃப்டர் மற்றும் குரூயிஸ் கண்ட்ரோல் போன்ற வசதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. புதிய டுகாட்டி டயவெல் V4 மாடல் டுகாட்டி ரெட் மற்றும் த்ரில்லிங் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
- கவாசகியின் இரண்டு மாடல்களிலும் 9 கிலோவாட் மோட்டார் வழங்கப்படுகிறது.
- கவாசகி நிறுவனம் ஹைப்ரிட் மோட்டார்சைக்கிள் ஒன்றை உருவாக்கி வருகிறது.
கவாசகி நிறுவனத்தின் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடல்களின் வெளியீடு பற்றிய புதிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த வகையில், கவாசகி நிறுவனம் தனது நின்ஜா இ-1 மற்றும் Z இ-1 மாடல்களை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா சந்தைகளில் இரண்டு புதிய மாடல்களும் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. தற்போதைக்கு இந்த மாடல்களின் விற்பனைக்கு சர்வதேச சந்தையில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளன. இரண்டு மாடல்களிலும் 9 கிலோவாட் மோட்டார் வழங்கப்படுகிறது. இவை 3 கிலோவாட் ஹவர் திறன் வெளிப்படுத்தும் என்று கூறப்படுகிறது.

நின்ஜா இ-1 மாடலில் கூர்மையான முன்புறம், ஸ்ப்லிட் எல்இடி ஹெட்லைட், டிரான்ஸ்பேரன்ட் வின்ட்-ஸ்கிரீன் வழங்கப்படுகிறது. Z இ-1 மாடல் அளவில் சற்று சிறியதாக காட்சியளிக்கிறது. இரண்டு மாடல்களிலும் ஸ்ப்லிட் சீட்கள், அலாய் வீல்கள், டெலிஸ்கோபிக் முன்புற போர்க்குகள், மோனோஷாக் யூனிட் வழங்கப்படுகிறது.
இத்துடன் TFT ஸ்கிரீன், இரண்டு பேட்டரி லெவல் ரீட்-அவுட்கள், இ-பூஸ்ட் ஆப்ஷன் உள்ளிட்டவை வழங்கப்படும் என்று தெரிகிறது. இந்த இரு மாடல்கள் மட்டுமின்றி கவாசகி நிறுவனம் ஹைப்ரிட் மோட்டார்சைக்கிள் ஒன்றை உருவாக்கி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த மாடல் தோற்றத்தில் நின்ஜா 650 போன்றே காட்சியளிக்கும் என்று தெரிகிறது.
- மஹிந்திரா தார்.இ மாடலின் வெளியீட்டை உணர்த்தும் டீசரை வெளியிட்டு உள்ளது.
- தார்.இ மாடலில் 60 கிலோவாட் ஹவர் திறன் கொண்ட பேட்டரி வழங்கப்படும் என்று தெரிகிறது.
மஹிந்திரா நிறுவனம் ஸ்கார்பியோ N சார்ந்த பிக்கப் டிரக் மாடலை ஆகஸ்ட் 15-ம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இதுபற்றிய தகவல் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் புதிய டீசரில் தார் எஸ்யுவி-யின் எலெக்ட்ரிக் கான்செப்ட் மாடல் தார்.இ என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக மஹிந்திரா தெரிவித்து உள்ளது.
டீசரில் தார் ஐ.சி. என்ஜின் வெர்ஷனின் மாடிஃபை செய்யப்பட்ட எலெக்ட்ரிக் வெர்ஷனின் செங்குத்தாக இருக்கும் டெயில் லேம்ப், சதுரங்க வடிவம் கொண்ட எல்இடி ஹெட்லேம்ப்கள், தார்.இ பேட்ஜிங் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. மஹிந்திரா BE Rall-E மாடலை போன்றே தார்.இ மாடலிலும் 60 கிலோவாட் ஹவர் திறன் கொண்ட பேட்டரி வழங்கப்படும் என்று தெரிகிறது.
இத்துடன் டூயல் மோட்டார், 4 வீல் டிரைவ் வசதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது விற்பனை செய்யப்படும் தார்.இ மாடல் லேடர்-ஆன்-ஃபிரேம் பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய தார்.இ கான்செப்ட் மஹிந்திரா நிறுவனத்தின் INGLO ஸ்கேட்போர்டு பிளாட்பார்மில் உருவாக்கப்படும் என்று கூறப்படுகிறது.
தார்.இ எலெக்ட்ரிக் மாடலில் தற்போதைய மாடலில் உள்ளதை போன்ற வெளிப்புற டிசைன், இன்டீரியர் வழங்கப்படுகிறது. புதிய தார்.இ மாடல் ஆகஸ்ட் 15-ம் தேதி தென் ஆப்பிரிக்காவில் அறிமுகம் செய்யப்படுகிறது. இதன் வெளியீடு 2025 வாக்கில் நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம். புதிய தார்.இ மாடல் ஹூண்டாய், கியா, மாருதி சுசுகி, ஹோண்டா, எம்ஜி மற்றும் டாடா நிறுவன எலெக்ட்ரிக் மாடல்களுக்கு போட்டியாக அமையும் என்று தெரிகிறது.
- வால்வோ C40 ரிசார்ஜ் மாடலில் 78 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.
- வால்வோ C40 ரிசார்ஜ் இந்தியாவில் வால்வோ நிறுவனத்தின் இரண்டாவது எலெக்ட்ரிக் கார் ஆகும்.
வால்வோ நிறுவனம் தனது C40 ரிசார்ஜ் எலெக்ட்ரிக் கார் மாடல் விலை விவரங்களை செப்டம்பர் மாதம் 4-ம் தேதி அறிவிக்க இருக்கிறது. 2023 ஜூன் மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில், அடுத்த மாதம் இதன் விலை மற்றும் விற்பனை விவரங்கள் அறிவிக்கப்பட உள்ளன. புதிய C40 ரிசார்ஜ் மாடல் இந்தியாவில் வால்வோ நிறுவனத்தின் இரண்டாவது எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும்.
தற்போது வால்வோ நிறுவனம் XC40 ரிசார்ஜ் மாடலை மட்டுமே இந்திய சந்தையின் எலெக்ட்ரிக் வாகன பிரிவில் விற்பனை செய்து வருகிறது. வால்வோ C40 ரிசார்ஜ் மாடலில் 78 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் டூயல் மோட்டார் செட்டப் வழங்கப்படுகிறது. இவை இணைந்து 402 ஹெச்பி பவர், 660 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

புதிய வால்வோ C40 ரிசார்ஜ் மாடல் முழு சார்ஜ் செய்தால் 418 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என்று சான்று பெற்றுள்ளது. இந்த காரை 150 கிலோவாட் பாஸ்ட் சார்ஜர் மூலம் 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 27 நிமிடங்கள் ஆகும். காரின் பின்புறம் தவிர C40 ரிசார்ஜ் மாடல் XC40 ரிசார்ஜ் போன்றே காட்சியளிக்கிறது.
இந்த காரில் XC40 மாடலில் உள்ளதை போன்ற எல்இடி ஹெட்லேம்ப்கள், 19-இன்ச் அலாய் வீல்கள், ரிடிசைன் செய்யப்பட்ட ஸ்லோபிங் ரூப்லைன், செங்குத்தாக பொருத்தப்பட்ட டெயில் லேம்ப்கள், கான்டிராஸ்ட் நிற பிளாக் ஸ்பாயிலர், பிளாஸ்டிக் கிளாடிங் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. காரின் உள்புறத்தில் பிளாக் தீம் கொண்ட கேபின் வழங்கப்படுகிறது.
இத்துடன் 9 இன்ச் ஆன்ட்ராய்டு சார்ந்த போர்டிரெயிட் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், வயர்லெஸ் சார்ஜிங் பேட், பானரோமிக் சன்ரூஃப் வழங்கப்படுகிறது. மேலும் 360 டிகிரி கேமரா, ADAS அம்சங்கள் வழங்கப்படுகிறது.






