search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    270 கிமீ ரேன்ஜ்.. இந்தியாவில் முதல் ஸ்பெஷல் எடிஷன் கார்.. சூப்பர் சம்பவம் செய்த மினி..!
    X

    270 கிமீ ரேன்ஜ்.. இந்தியாவில் முதல் ஸ்பெஷல் எடிஷன் கார்.. சூப்பர் சம்பவம் செய்த மினி..!

    • மினி கூப்பர் SE சார்ஜ்டு எடிஷன் மாடலில் உள்ள மோட்டார் 184 ஹெச்பி பவர், 270 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
    • புதிய மினி ஸ்பெஷல் எடிஷன் மாடல் முழு சார்ஜ் செய்தால் 270 கிமீ ரேன்ஜ் வழங்குகிறது.

    மினி நிறுவனத்தின் ஆல்-எலெக்ட்ரிக் கூப்பர் SE மாடலின் சார்ஜ்டு எடிஷன் வேரியன்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. புதிய மினி கூப்பர் SE சார்ஜ்டு எடிஷன் மாடலின் விலை ரூ. 55 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய சார்ஜ்டு எடிஷன் மாடல் நாடு முழுக்க வெறும் 20 வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.

    இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட முதல் லிமிடெட் எடிஷன் கூப்பர் SE மாடல்- சார்ஜ்டு எடிஷன் சில்லி ரெட் நிறம் மற்றும் டூயல்-டோன் ரூஃப் ஆப்ஷன் கொண்டிருக்கிறது. அதன்படி இந்த காரின் ரூஃப் வைட் நிறத்திலும், வட்டவடிவம் கொண்ட ஹெட்லைட், டெயில் லைட் ரிங்குகள், டோர் ஹேன்டில்கள், லோகோ மற்றும் டெயில்கேட் ஹேன்டில் உள்ளிட்டவைகளை சுற்றி வைட் நிற அக்சென்ட்கள் செய்யப்பட்டு உள்ளன.

    இத்துடன் கான்டிராட்ஸ்ட் ஃபுரோசன் ரெட் ஸ்போர்ட்ஸ் ஸ்டிரைப்கள், பொனெட், பக்கவாட்டு மற்றும் பூட் பகுதி மற்றும் ஏர் வென்ட்களில் எல்லோ ஹைலைட்கள் செய்யப்பட்டுள்ளன. 17-இன்ச் மினி எலெக்ட்ரிக் மாடலின் வீல்களிலும் எல்லோ சரவுன்ட்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. வழக்கமாக மினி மாடல்களில் உள்ளதை போன்ற S லோகோ, இந்த வேரியன்டில் எல்லோ நிற பினிஷ் செய்யப்பட்டுள்ளது.

    கூப்பர் சார்ஜ்டு எடிஷன் மாடலின் உள்புறம் லெதர் கார்பன் பிளாக் இருக்கை மேற்கவர்கள், நப்பா லெதர் இன்சர்ட்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் உள்புற ஸ்டார்ட் / ஸ்டாப் ஸ்விட்ச், கியர் லீவர் மற்றும் டோர் சில் உள்ளிட்டவைகளில் ஸ்பெஷல் எடிஷன் பேட்ஜ்கள் இடம்பெற்றுள்ளன. இத்துடன் நேவிகேஷன், வயர்லெஸ் சார்ஜிங், ப்ளூடூத் கனெக்டிவிட்டி மற்றும் ஹார்மன் கார்டன் சவுன்ட் உள்ளிட்டவை "வயர்டு பேக்கேஜ்" மூலம் வழங்கப்படுகிறது.

    மினி கூப்பர் SE சார்ஜ்டு எடிஷன் மாடலில் உள்ள மோட்டார் 184 ஹெச்பி பவர், 270 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 7.3 நொடிகளில் எட்டிவிடும். இதில் உள்ள 32.6 கிலோவாட் ஹவர் பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்தால் 270 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் கிடைக்கும்.

    Next Story
    ×