search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    418கிமீ ரேன்ஜ் வழங்கும் வால்வோ எலெக்ட்ரிக் கார்.. செப்டம்பரில் வெளியீடு..!
    X

    418கிமீ ரேன்ஜ் வழங்கும் வால்வோ எலெக்ட்ரிக் கார்.. செப்டம்பரில் வெளியீடு..!

    • வால்வோ C40 ரிசார்ஜ் மாடலில் 78 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.
    • வால்வோ C40 ரிசார்ஜ் இந்தியாவில் வால்வோ நிறுவனத்தின் இரண்டாவது எலெக்ட்ரிக் கார் ஆகும்.

    வால்வோ நிறுவனம் தனது C40 ரிசார்ஜ் எலெக்ட்ரிக் கார் மாடல் விலை விவரங்களை செப்டம்பர் மாதம் 4-ம் தேதி அறிவிக்க இருக்கிறது. 2023 ஜூன் மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில், அடுத்த மாதம் இதன் விலை மற்றும் விற்பனை விவரங்கள் அறிவிக்கப்பட உள்ளன. புதிய C40 ரிசார்ஜ் மாடல் இந்தியாவில் வால்வோ நிறுவனத்தின் இரண்டாவது எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும்.

    தற்போது வால்வோ நிறுவனம் XC40 ரிசார்ஜ் மாடலை மட்டுமே இந்திய சந்தையின் எலெக்ட்ரிக் வாகன பிரிவில் விற்பனை செய்து வருகிறது. வால்வோ C40 ரிசார்ஜ் மாடலில் 78 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் டூயல் மோட்டார் செட்டப் வழங்கப்படுகிறது. இவை இணைந்து 402 ஹெச்பி பவர், 660 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

    புதிய வால்வோ C40 ரிசார்ஜ் மாடல் முழு சார்ஜ் செய்தால் 418 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என்று சான்று பெற்றுள்ளது. இந்த காரை 150 கிலோவாட் பாஸ்ட் சார்ஜர் மூலம் 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 27 நிமிடங்கள் ஆகும். காரின் பின்புறம் தவிர C40 ரிசார்ஜ் மாடல் XC40 ரிசார்ஜ் போன்றே காட்சியளிக்கிறது.

    இந்த காரில் XC40 மாடலில் உள்ளதை போன்ற எல்இடி ஹெட்லேம்ப்கள், 19-இன்ச் அலாய் வீல்கள், ரிடிசைன் செய்யப்பட்ட ஸ்லோபிங் ரூப்லைன், செங்குத்தாக பொருத்தப்பட்ட டெயில் லேம்ப்கள், கான்டிராஸ்ட் நிற பிளாக் ஸ்பாயிலர், பிளாஸ்டிக் கிளாடிங் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. காரின் உள்புறத்தில் பிளாக் தீம் கொண்ட கேபின் வழங்கப்படுகிறது.

    இத்துடன் 9 இன்ச் ஆன்ட்ராய்டு சார்ந்த போர்டிரெயிட் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், வயர்லெஸ் சார்ஜிங் பேட், பானரோமிக் சன்ரூஃப் வழங்கப்படுகிறது. மேலும் 360 டிகிரி கேமரா, ADAS அம்சங்கள் வழங்கப்படுகிறது.

    Next Story
    ×