search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    வெளியீட்டு தேதி அறிவிப்பு.. விரைவில் இந்தியா வரும் பென்ஸ் எலெக்ட்ரிக் கார்..!
    X

    வெளியீட்டு தேதி அறிவிப்பு.. விரைவில் இந்தியா வரும் பென்ஸ் எலெக்ட்ரிக் கார்..!

    • புதிய EQE மாடல் மெர்சிடிஸ் GLE எஸ்.யு.வி.-இன் எலெக்ட்ரிக் வெர்ஷன் ஆகும்.
    • மெர்சிடிஸ் பென்ஸ் EQE மாடல் இருவித பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் தனது EQE மாடலை செப்டம்பர் 15-ம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்த மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    புதிய EQE மாடல் மெர்சிடிஸ் GLE எஸ்.யு.வி.-இன் எலெக்ட்ரிக் வெர்ஷன் ஆகும். இந்த மாடல் EQB மற்றும் EQS மாடல்களின் இடையில் நிலைநிறுத்தப்படுகிறது. தோற்றத்தில் இந்த மாடல் EQS போன்ற காட்சியளிக்கிறது. இதன் வெளிப்புறம் மூடப்பட்ட நிலையில் முன்புற கிரில், எல்.இ.டி. டி.ஆர்.எல்.-கள், டிஜிட்டல் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், ஃபிளஷ் டோர் ஹேண்டில்கள், 20 இன்ச் அளவில் ஏரோ அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன.

    இந்த எஸ்.யு.வி. மாடலின் உள்புறம் டூயல் ஸ்கிரீன்கள்- இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் MBUX சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. மற்ற அம்சங்களை பொருத்தவரை வயர்லெஸ் சார்ஜர், மல்டி-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், பானரோமிக் சன்ரூஃப் வழங்கப்பட்டு இருக்கிறது.

    சர்வதேச சந்தையில் மெர்சிடிஸ் பென்ஸ் EQE மாடல் 89 கிலோவாட் ஹவர் மற்றும் 90.6 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் பேஸ் 350+ வேரியண்டில் ஒற்றை மோட்டார் உள்ளது. இது 288 ஹெச்.பி. பவர், 565 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளன.

    இதன் 350 4 மேடிக் மாடலில் டூயல் மோட்டார் செட்டப் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த யூனிட் 288 ஹெச்.பி. பவர், 765 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இவைதவிர 500 4மேடிக் வேரியண்ட் மற்றும் 53 4மேடிக் AMG வேரியண்ட்களும் கிடைக்கின்றன. இவற்றில் 170 கிலோவாட் டி.சி. ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இதை கொண்டு காரை 32 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்துவிட முடியும்.

    Next Story
    ×