search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    அசத்தலாக வெளியான சூப்பர் டீசர் - விரைவில் இந்தியா வரும் லெக்சஸ் LM
    X

    அசத்தலாக வெளியான சூப்பர் டீசர் - விரைவில் இந்தியா வரும் லெக்சஸ் LM

    • லெக்சஸ் LM மாடல் ஆட்டோ எக்ஸ்போ 2023 விழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டது.
    • லெக்சஸ் LM மாடல் நான்கு, ஏழு பேர் அமரும் இருக்கை அமைப்புகளில் கிடைக்கிறது.

    லெக்சஸ் பிரான்டின் புதிய LM மாடல் கார் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதனை உணர்த்தும் டீசரை லெக்சஸ் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது. முன்னதாக ஆட்டோ எக்ஸ்போ 2023 விழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டது. தற்போது டீசர் வெளியாகி இருப்பதை அடுத்து, லெக்சஸ் LM மாடல் வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

    புதிய லெக்சஸ் LM மாடலில் ஸ்பின்டில் டிசைன், எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், இன்டகிரேட் செய்யப்பட்ட டி.ஆர்.எல்.கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரில் 19 இன்ச் அளவு கொண்ட அலாய் வீல்கள், 3000mm வீல்பேஸ் மற்றும் பவர் ஸ்லைடு வசதி கொண்ட பின்புற கதவுகள் வழங்கப்பட்டு உள்ளன.

    சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் லெக்சஸ் LM மாடல் நான்கு மற்றும் ஏழு பேர் அமரும் இருக்கை அமைப்புகளில் கிடைக்கிறது. இந்த காரின் பின்புறம் 48-இன்ச் டிஸ்ப்ளே கொண்ட ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. காரின் உள்புறம் கேபின் பகுதியில் வயர்லெஸ் சார்ஜிங் பேட், மினி குளிரூட்டி, 50 நிறங்கள் அடங்கிய ஆம்பியன்ட் லைட்கள் வழங்கப்படுகின்றன.

    புதிய லெக்சஸ் LM மாடலில் ADAS அம்சங்களான அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல், பிரீ-கொலிஷன் வார்னிங், பிரேக் அசிஸ்ட் மற்றும் ப்ரோ ஆக்டிவ் டிரைவ் அசிஸ்ட் போன்ற வசதிகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்தியாவுக்கு இந்த கார் சி.பி.யு. முறையில் கொண்டுவரப்படுகிறது. இதன் காரணமாக அம்சங்கள், சர்வதேச மாடலில் இருப்பதை போன்றே வழங்கப்படலாம். இந்த காரில் 2.4 லிட்டர் அல்லது 2.5 லிட்டர் செல்ஃப் சார்ஜிங் வசதி கொண்ட ஹைப்ரிட் பவர்டிரெயின் வழங்கப்படுகிறது.

    Next Story
    ×