search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    எத்தனை லட்சம்-னு கேளுங்க.. இந்தியாவில் அறிமுகமான புது கவாசகி பைக்..!
    X

    எத்தனை லட்சம்-னு கேளுங்க.. இந்தியாவில் அறிமுகமான புது கவாசகி பைக்..!

    • புதிய கவாசகி Z900RS மாடலில் 948சிசி, நான்கு சிலிண்டர்கள் கொண்ட லிக்விட் கூல்டு என்ஜின் உள்ளது.
    • 2024 கவாசகி Z900RS மெட்டாலிக் டயப்ளோ பிளாக் என ஒற்றை நிறத்தில் மட்டுமே கிடைக்கிறது.

    கவாசகி நிறுவனத்தின் 2024 Z900RS சூப்பர்பைக் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய பைக்கின் விலை ரூ. 16 லட்சத்து 80 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 2024 கவாசகி Z900RS மாடல்- மெட்டாலிக் டயப்ளோ பிளாக் நிறத்தில் மட்டுமே கிடைக்கிறது. ஸ்டைலிங்கை பொருத்தவரை புதிய மாடல் அதன் முந்தைய வெர்ஷனை போன்றே காட்சியளிக்கிறது.

    அதன்படி இந்த பைக்கின் முன்புறத்தில் வட்ட வடிவம் கொண்ட ஹெட்லைட், டுவின் பாட் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டியர்-டிராப் வடிவம் கொண்ட ஃபியூவல் டேன்க், சிங்கில்-பீஸ் சாடில், சைடு ஸ்லங் எக்சாஸ்ட், ஸ்போக் ஸ்டைல் கேஸ்ட் வீல்கள் வழங்கப்பட்டு உள்ளன. முந்தைய மாடலை போன்றே 2024 மாடலிலும் ஃபுல் எல்இடி லைட்டிங், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டூயல் சேனல் ஏபிஎஸ், கவாசகி டிராக்ஷன் கண்ட்ரோல், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது.

    மெக்கானிக்கல் அம்சங்களை பொருத்தவரை புதிய கவாசகி Z900RS மாடலில் 948சிசி, இன்லைன் நான்கு சிலிண்டர்கள் கொண்ட லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 107 ஹெச்பி பவர், 95 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

    பிரேக்கிங்கிற்கு 300 மில்லிமீட்டர் முன்புற டிஸ்க் பிரேக்குகள், பின்புறம் 250 மில்லிமீட்டர் ரோட்டார், அப்சைடு டவுன் முன்புற ஃபோர்க்குகள், பின்புறம் மோனோஷாக் யூனிட் வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் புதிய 2024 கவாசகி Z900RS மாடல் டிரையம்ப் போன்வில் T100 மற்றும் ஸ்பீடு டுவின் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    Next Story
    ×