search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    விலை ரூ. 78500 தான்.. புதிய என்ஜினுடன் ஹோண்டா லிவோ பைக் இந்தியாவில் அறிமுகம்..!
    X

    விலை ரூ. 78500 தான்.. புதிய என்ஜினுடன் ஹோண்டா லிவோ பைக் இந்தியாவில் அறிமுகம்..!

    • புதிய ஹோண்டா லிவோ மாடல் மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது.
    • 2023 ஹோண்டா லிவோ மாடலிலும் 109.51சிசி என்ஜின் தான் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் OBD2-விதிகளுக்கு பொருந்தும் 2023 லிவோ மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் டிரம் மற்றும் டிஸ்க் வேரியன்ட்களில் கிடைக்கின்றன. இவற்றின் விலை முறையே ரூ. 78 ஆயிரத்து 500 மற்றும் ரூ. 82 ஆயிரத்து 500, எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன.

    புதிய ஹோண்டா லிவோ மோட்டார்சைக்கிள்- அத்லெடிக் புளூ மெட்டாலிக், மேட் கிரஸ்ட் மெட்டாலிக் மற்றும் பிளாக் என மூன்றுவிதமான நிறங்களில் கிடைக்கிறது. ஹோண்டா லிவோ மாடலில் 109.51சிசி, ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ACG ஸ்டார்டர் மோட்டார் மற்றும் சைலன்ட் என்ஜின் ஸ்டார்ட் வசதி வழங்கப்படுகிறது.

    இதன் செயல்திறன் அளவில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில், புதிய மாடலிலும், இந்த என்ஜின் 8.67 ஹெச்.பி. பவர், 9.30 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையே வெளிப்படுத்துகிறது. இத்துடன் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    அம்சங்களை பொருத்தவரை புதிய ஹோண்டா லிவோ மாடலில் என்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் ஸ்விட்ச், டி.சி. ஹெட்லேம்ப், கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம், டியூப்லெஸ் டயர், 5 ஸ்டெப் பிரீலோடு அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ரியர் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் ஒட்டுமொத்த தோற்றத்தில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    Next Story
    ×