என் மலர்
கார்
- பி.எம்.டபிள்யூ. 740d M ஸ்போர்ட் சென்னையில் உள்ள பி.எம்.டபிள்யூ. ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது.
- பி.எம்.டபிள்யூ. 740d M ஸ்போர்ட் மாடலில் 3.0 லிட்டர், 6 சிலிண்டர்கள் கொண்ட டீசல் என்ஜின் உள்ளது.
பி.எம்.டபிள்யூ. நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு புதிய ஆடம்பர கார் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய மாடல்கள் M70 எக்ஸ் டிரைவ் மற்றும் 7 சீரிஸ் 740d M ஸ்போர்ட் என்று அழைக்கப்படுகின்றன.
இதில் பி.எம்.டபிள்யூ. i7 M70 எக்ஸ்டிரைவ் மாடலில் முழுமையாக இலுமினேட் செய்யப்பட்ட முன்புற கிரில், செங்குத்தான ஸ்லாட்கள், ஸ்ப்லிட் எல்.இ.டி. ஹெட்லேம்ப் மற்றும் டி.ஆர்.எல்.கள், ஃபிளஷ் டோர் ஹேண்டில்கள், மெல்லிய எல்.இ.டி. டெயில் லேம்ப்கள், டூயல் டோன் பெயின்ட் ஃபினிஷ் செய்யப்பட்டு உள்ளது.

இந்த காரில் டூயல்-மோட்டார் செட்டப் உள்ளது. இவற்றுடன் 101.7 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 560 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. இதில் உள்ள மோட்டார்கள் ஒருங்கிணைந்து 657 ஹெச்.பி. வரையிலான பவர், 1100 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
புதிய பி.எம்.டபிள்யூ. கார் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 3.7 நொடிகளில் எட்டிவிடும். இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 250 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. பி.எம்.டபிள்யூ. i7 M70 எக்ஸ் டிரைவ் மாடலுடன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் 740d M ஸ்போர்ட் மாடல் சென்னையில் உள்ள பி.எம்.டபிள்யூ. ஆலையிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது.

பி.எம்.டபிள்யூ. 740d M ஸ்போர்ட் மாடலில் 3.0 லிட்டர், 6 சிலிண்டர்கள் கொண்ட டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 286 ஹெச்.பி. பவர், 650 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 8-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
விலை விவரங்கள்:
பி.எம்.டபிள்யூ. i7 M70 எக்ஸ் டிரைவ் ரூ. 2 கோடியே 50 லட்சம்
பி.எம்.டபிள்யூ. 7 சீரிஸ் 740d M ஸ்போர்ட் ரூ. 1 கோடியே 81 லட்சம்
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
- மாருதி சுசுகி நிறுவனம் நான்கு வகையான ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களை வழங்குகிறது.
- ஆட்டோமேடிக் மாடல்கள் விற்பனையில் 65 சதவீத யூனிட்கள் AGS வகையை சேர்ந்தது ஆகும்.
மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் ஆட்டோமேடிக் கார் விற்பனையில் பத்து லட்சம் யூனிட்கள் எனும் புதிய மைல்கல் எட்டியது. தற்போது ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்ட 16 மாடல்களை மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது.
இதில் நான்கு வகையான ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் அடங்கும். அவை ஆட்டோ கியர் ஷிஃப்ட் (AGS), 4-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன், 6-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் e-CVT யூனிட் உள்ளிட்டவை அடங்கும். ஒட்டுமொத்தமாக ஆட்டோமேடிக் மாடல்கள் விற்பனையில் 65 சதவீத யூனிட்கள் AGS டிரான்ஸ்மிஷனை சேர்ந்தவை ஆகும்.

"வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்குவதில் நாங்கள் ஆர்வம் செலுத்தி வருகிறோம். அனைவருக்கும் மொபிலிட்டி மூலம் சந்தோஷத்தை கொடுக்க வேண்டும் என்பதை எங்களின் குறிக்கோளாக வைத்திருக்கிறோம். இதன் மூலம் எங்களது ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் தொழில்நுட்பத்தில் பல வகைகளை கொடுக்க முடிகிறது."
"வாடிக்கையாளர்கள் அளித்திருக்கும் அமோக வரவேற்பு காரணமாக நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். மாருதி சுசுகி லிமிடெட் நிறுவனத்தின் ஆட்டோமேடிக் மாடல்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2023-24 நிதியாண்டு விற்பனையில் ஒரு லட்சம் ஆட்டோமேடிக் யூனிட்களை விரைவில் அடைந்துவிடுவோம்," என்று மாருதி சுசுகி நிறுவனத்தின் மூத்த நிர்வாக அதிகாரி சஷான்க் ஸ்ரீவஸ்தவா தெரிவித்து இருக்கிறார்.
- பென்ஸ் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாக GLE இருக்கிறது.
- இந்த காரின் முந்தைய வெர்ஷன் இந்திய சந்தையில் பெரும் வெற்றி பெற்றது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு புதிய கார்களை விரைவில் அறிமுகம் செய்வதாக அறிவித்து இருக்கிறது. அதன்படி இவை மெர்சிடிஸ் பென்ஸ் GLE எஸ்.யு.வி.-இன் ஃபேஸ்லிஃப்ட் மாடல் மற்றும் மெர்சிடிஸ் AMG C 43 மாடல்களாக இருக்கும் என்று தெரிகிறது. மேலும் இரண்டு மாடல்களும் நவம்பர் 2-ம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது.
இந்திய சந்தையில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாக GLE இருக்கிறது. மேலும் AMG C 43 மாடல் மெர்சிடிஸ் நிறுவனத்திற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த மாடலாக பார்க்கப்படுகிறது. இந்த காரின் முந்தைய வெர்ஷன் இந்திய சந்தையில் பெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக GLE ஃபேஸ்லிஃப்ட் மாடல் பிப்ரவரி 2023 மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காரில் சிறிதளவு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது. இத்துடன், எலெக்ட்ரிக் பவர்டிரெயின் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பம் உள்ளிட்டவை குறிப்பிடத்தக்க மாற்றமாக பார்க்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் GLE மாடலின் அனைத்து பவர்டிரெயின் வெர்ஷன்களிலும் 48 வோல்ட் மைல்டு-ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் சர்வதேச எடிஷன் GLE 400e பிளக்-இன்-ஹைப்ரிட் மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின், எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் 31.2 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்திய சந்தையில் மெர்சிடிஸ் பென்ஸ் GLE ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை ரூ. 1 கோடி வரையிலும், AMG C43 மாடலின் விலை ரூ. 90 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
- மெர்சிடிஸ் பென்ஸ் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
- மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் 12 ஆயிரத்து 768 யூனிட்களை விற்பனை செய்தது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு ரூ. 5 லட்சம் வரையிலான பலன்களை வழங்கி வருகிறது. இந்த சலுகை ஏற்கனவே உள்ள மெர்சிடிஸ் பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த சலுகை எப்போது வரை வழங்கப்படும் என்பது பற்றி மெர்சிடிஸ் பென்ஸ் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
சஸ்டெயினபிலிட்டி ஃபெஸ்ட் என்று அழைக்கப்படும் இந்த சலுகையின் கீழ் EQB, EQS, EQE அல்லது EQS போன்ற மாடல்களை வாங்கும் பயனர்களுக்கு சாலை வரியில் 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சலுகை எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சாலை வரி வசூலிக்கப்படும் மாநிலங்களில் மட்டுமே பொருந்தும்.
அக்டோபர் மாத விற்பனையை அதிகப்படுத்தும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு மெர்சிடிஸ் பென்ஸ் விற்பனை இதுவரையில் மட்டும் வருடாந்திர அடிப்படையில் 11 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. செப்டம்பர் 2023 வரையில் மட்டும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் 12 ஆயிரத்து 768 யூனிட்களை விற்பனை செய்துள்ளது.
கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் 11 ஆயிரத்து 469 யூனிட்களை விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. மெர்சிடிஸ் பென்ஸ் மொத்த விற்பனையில் பெரும்பாலான யூனிட்கள் டாப் எண்ட் வாகனங்கள் பிரிவை சேர்ந்தவை ஆகும். இதில் மேபேக், AMG மற்றும் EQS சீரிஸ் மாடல்கள் அடங்கும்.
- மெர்சிடிஸ் AMG G 63 கிராண்ட் எடிஷன் மாடல் சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தது.
- மெர்சிடிஸ் நிறுவனம் 12 ஆயிரத்து 768 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் டாப் எண்ட் மாடல்களுக்கு இந்திய சந்தையில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் மட்டும் GLS, S கிளாஸ், S கிளாஸ் மேபேக், GLS மேபேக் மற்றும் G கிளாஸ் போன்ற மாடல்கள் விற்பனையில் 54 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.
மேலும், சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மெர்சிடிஸ் AMG G 63 கிராண்ட் எடிஷன் மாடல் விற்பனை துவங்கிய சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்ததாக மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிர்வாக இயக்குனர் மற்றம் தலைமை செயல் அதிகாரி சந்தோஷ் அய்யர் தெரிவித்து இருக்கிறார். ரூ. 4 கோடி மதிப்பிலான AMG G 63 கிராண்ட் எடிஷன் மாடலின் 25 யூனிட்களும் வெறும் ஆறே நிமிடங்களில் விற்று தீர்ந்தது என அவர் தெரிவித்தார்.

மெர்சிடிஸ் AMG G 63 கிராண்ட் எடிஷனின் கூடுதல் யூனிட்களை இந்தியா கொண்டுவர கிட்டத்தட்ட 90 வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக சந்தோஷ் அய்யர் மேலும் தெரிவித்து உள்ளார். இந்த ஆண்டு செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் மெர்சிடிஸ் நிறுவனம் 12 ஆயிரத்து 768 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது.
இது 2022 ஆண்டுடன் ஒப்பிடும் போது 11 சதவீதம் அதிகம் ஆகும். கடந்த ஆண்டு மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் 15 ஆயிரத்து 822 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. இந்த ஆண்டு விற்பனை செய்யப்பட்ட 12 ஆயிரத்து 768 யூனிட்களில் 25 சதவீத யூனிட்கள் டாப் எண்ட் மாடல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- நிசான் மேக்னைட் மாடல் இந்திய சந்தையில் நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
- சமீபத்தில் நிசான் மேக்னைட் ஸ்பெஷல் எடிஷன் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
நிசான் இந்தியா நிறுவனம் தனது அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மேக்னைட் AMT மாடல் விலையை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. இந்திய சந்தையில் நிசான் மேக்னைட் AMT விலை ரூ. 6 லட்சத்து 49 ஆயிரத்து 900, எக்ஸ்-ஷோரூம் என்று துவங்குகிறது. இது அறிமுக விலை என்றும் நவம்பர் 10-ம் தேதிக்கு பிறகு, இந்த விலை மாற்றப்படும் என்றும் நிசான் தெரிவித்து உள்ளது.
இந்திய சந்தையில் நிசான் மேக்னைட் மாடல் XE, XL, XV மற்றும் XV பிரீமியம் என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இத்துடன் கியூரோ ஸ்பெஷல் எடிஷன் மாடலும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த டிரான்ஸ்மிஷனுடன் 1.0 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த என்ஜின் 71 ஹெச்.பி. பவர், 96 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. நிசான் மேக்னைட்-இல் இந்த என்ஜின் லிட்டருக்கு 19.70 கிலோமீட்டர்கள் வரையிலான மைலேஜ் வழங்கும் என்று ARAI சான்று பெற்று இருக்கிறது.
சமீபத்தில் தான் நிசான் நிறுவனம் மேக்னைட் கியூரோ ஸ்பெஷல் எடிஷன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 8 லட்சத்து 27 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது மேக்னைட் XV வேரியண்டை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.
- எம்.ஜி. ZS EV மாடல் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.
- எம்.ஜி. ZS EV மாடலில் 50.3 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் உள்ளது.
எம்.ஜி. மோட்டார்ஸ் நிறுவனம் தனது ZS EV எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடலின் விலையை மாற்றியமைத்து இருக்கிறது. புதிய விலை மாற்றத்தின் படி எம்.ஜி. ZS EV மாடலின் விலை தற்போது குறைந்துள்ளது. இதனால் எம்.ஜி. ZS EV மாடல் விலை ரூ. 22 லட்சத்து 88 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று துவங்குகிறது.
எம்.ஜி. ZS EV மாடல்: எக்சைட், எக்ஸ்க்லுசிவ் மற்றும் எக்ஸ்க்லுசிவ் ப்ரோ மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றில் எக்சைட் வேரியண்ட் விலை ரூ. 50 ஆயிரமும், எக்ஸ்க்லுசிவ் மற்றும் எக்ஸ்க்லுசிவ் ப்ரோ வேரியண்ட்களின் விலை முறையே ரூ. 2 லட்சத்து 30 ஆயிரம் மற்றும் ரூ. 2 லட்சம் வரை குறைக்கப்பட்டு இருக்கிறது.
முழுமையான எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. என்ற அடிப்படையில், எம்.ஜி. ZS EV மாடலில் 50.3 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக், சிங்கில் மோட்டார் செட்டப் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார் 174 ஹெச்.பி. பவர், 280 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 419 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது.
புதிய விலை விவரங்கள்:
எக்சைட் ரூ. 22 லட்சத்து 88 ஆயிரம்
எக்ஸ்க்லுசிவ் ரூ. 24 லட்சத்து 99 ஆயிரத்து 800
எக்ஸ்க்லுசிவ் ஐகானிக் ஐவரி ரூ. 25 லட்சத்து 09 ஆயிரத்து 800
எக்ஸ்க்லுசிவ் ப்ரோ ரூ. 25 லட்சத்து 89 ஆயிரத்து 800
எக்ஸ்க்லூசிவ் ப்ரோ ஐகானிக் ஐவரி ரூ. 25 லட்சத்து 99 ஆயிரத்து 800
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
- புதிய வேரியண்டில் டாப் எண்ட் ஆறு பேர் அமரும் இருக்கை அமைப்பில் கிடைக்கிறது.
- கியா கரென்ஸ் X லைன் வேரியண்ட் இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
கியா இந்தியா நிறுவனம் தனது கரென்ஸ் எம்.பி.வி. மாடலின் வேரியண்ட்களை அப்டேட் செய்து இருக்கிறது. இந்திய சந்தையில் புதிதாக கரென்ஸ் X லைன் வேரியண்ட் பெட்ரோல் மற்றும் டீசல் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 18 லட்சத்து 94 ஆயிரம் மற்றும் ரூ. 19 லட்சத்து 45 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
புதிய வேரியண்டில் டாப் எண்ட் மாடல் ஆறு பேர் அமரும் இருக்கை அமைப்பில் மட்டுமே கிடைக்கிறது. கியா கரென்ஸ் X லைன் வேரியண்ட் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களிலும், 7 ஸ்பீடு DCT மற்றும் 6 ஸ்பீடூ ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது. இந்த காரின் வெளிப்புறம் மேட் கிராஃபைட், கிளாஸ் பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்டு உள்ளது.

கியா கரென்ஸ் X லைன் மாடல் டூயல் டோன் 16 இன்ச் க்ரிஸ்டல் கட் அலாய் வீல்களுடன் கிடைக்கிறது. காரின் உள்புறம் ஸ்பிலென்டிட் சேஜ் கிரீன் மற்றும் டூ-டோன் பிளாக் என இருவித இன்டீரியர் தீம் ஆப்ஷன்களை கொண்டிருக்கிறது. இதில் உள்ள இன்ஃபோடெயின்மெண்ட் யூனிட்-ஐ ஸ்மார்ட்போன் ஆப் மூலம் இயக்க முடியும்.
புதிய கியா கரென்ஸ் X லைன் மாடல் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் டர்போ பெட்ரோல் வெர்ஷனில் 7 ஸ்பீடு டி.சி.டி. கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 158 ஹெச்.பி. பவர், 253 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
1.5 லிட்டர் டீசல் என்ஜின் 113 ஹெச்.பி. பவர், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்படுகிறது.
- மஹிந்திரா நிறுவனத்தின் பொலிரோ நியோ மாடல் நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
- மஹிந்திரா பொலிரோ நியோ மாடலில் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
மஹிந்திரா நிறுவனம் தனது அதிகம் விற்பனையாகி வரும் பொலிரோ நியோ மாடல் விலையை மாற்றுகிறது. நான்கு வேரியண்ட்களில் கிடைக்கும் மஹிந்திரா பொலிரோ நியோ மாடலின் விலை தற்போது ரூ. 1,505 வரை அதிகரித்து இருக்கிறது.
புதிய விலை விவரம்:
மஹிந்திரா பொலிரோ நியோ N4 ரூ. 9 லட்சத்து 63 ஆயிரத்து 300
மஹிந்திரா பொலிரோ நியோ N8 ரூ. 10 லட்சத்து 16 ஆயிரத்து 500
மஹிந்திரா பொலிரோ நியோ N10 ரூ. 11 லட்சத்து 37 ஆயிரத்து 499
மஹிந்திரா பொலிரோ நியோ N10 (O) ரூ. 12 லட்சத்து 15 ஆயிரத்து 499
அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
மஹிந்திரா பொலிரோ நியோ மாடலில் பி.எஸ். 6-2 விதிகளுக்கு பொருந்தும் வகையிலான டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 100 ஹெச்.பி. பவர், 260 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
- டொயோட்டா ருமியன் எம்.பி.வி. மாருதி சுசுகி எர்டிகா காரின் ரிபேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும்.
- டொயோட்டா ருமியன் எம்.பி.வி. மாடல் ஐந்து விதமான நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் தனது ருமியன் எம்.பி.வி. மாடலின் CNG வேரியண்ட் முன்பதிவை தற்காலிகமாக நிறுத்தி இருக்கிறது. இந்த எம்.பி.வி. மாடலுக்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், வினியோகத்திற்கான காத்திருப்பு காலம் அதிகரித்துவிட்டது. இதன் காரணமாகவே இந்த காருக்கான முன்பதிவு நிறுத்தப்பட்டு இருக்கிறது.
தற்போது CNG வேரியண்ட் முன்பதிவு மட்டுமே தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக ருமியன் பெட்ரோல் வேரியண்ட் வாங்க விரும்புவோர், முன்பதிவு செய்ய முடியும். டொயோட்டா ருமியன் எம்.பி.வி. மாடல் மாருதி சுசுகி எர்டிகா காரின் ரிபேட்ஜ் செய்யப்பட்ட வேரியண்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய சந்தையில் டொயோட்டா ருமியன் மாடல் S, G மற்றும் V என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இத்துடன் ஸ்பன்கி புளூ, கஃபே வைட், என்டைசிங் சில்வர், ஐகானிக் கிரே மற்றும் ரஸ்டிக் பிரவுன் என ஐந்து விதமான நிறங்களில் கிடைக்கிறது.
டொயோட்டா ருமியன் எம்.பி.வி. மாடலில் 1.5 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின் உள்ளது. இந்த என்ஜின் 102 ஹெச்.பி. பவர், 136.8 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்படுகிறது.
- ஹூண்டாய் i20 N லைன் மாடலில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
- ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட i20 N லைன் வேரியண்ட் ஐந்து மோனோடோன் நிறங்களில் கிடைக்கிறது.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் சமீபத்தில் தான் i20 ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. தற்போது இந்த வரிசையில், புதிய i20 காரின் N லைன் வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ஹூண்டாய் i20 N லைன் வேரியண்ட் விலை ரூ. 9 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று துவங்குகிறது.
2023 ஹூண்டாய் i20 N லைன் மாடல் N6 மற்றும் N8 என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவை இரண்டிலும் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் காரில் போஸ் பிரீமியம் 7 ஸ்பீக்கர் சிஸ்டம், 127 எம்பெட் செய்யப்பட்ட வி.ஆர். கமாண்ட்கள், ஓ.டி.ஏ. அப்டேட்கள், வாய்ஸ் கமாண்ட், 60-க்கும் அதிக கனெக்டெட் கார் அம்சங்கள் வழங்கப்படுகின்றன.

ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட i20 N லைன் வேரியண்ட் ஐந்து மோனோடோன் மற்றும் இரண்டு டூயல்-டோன் நிற ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில் அபைஸ் பிளாக், அட்லஸ் வைட், டைட்டன் கிரே, தண்டர் புளூ மற்றும் ஸ்டேரி நைட் உள்ளிட்டவை மோனோ-டோன் ஆப்ஷனிலும், அட்லஸ் வைட் மற்றும் தண்டர் புளூ இரண்டு நிறங்களுடன் அபைஸ் பிளாக் ரூஃப் டூயல்-டோன் ஆப்ஷனில் கிடைக்கின்றன.
ஹூண்டாய் i20 N லைன் மாடலில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 118 ஹெச்.பி. பவர், 172 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், 7 ஸ்பீடு டூயல்-கிளட்ச் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

இந்திய சந்தையில் 2023 ஹூண்டாய் i20 N லைன் மாடலின் விலை ரூ. 9 லட்சத்து 99 ஆயிரம் என்று துவங்கும் நிலையில், இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 12 லட்சத்து 31 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
- ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் 2WD வெர்ஷனில் 2.0 லிட்டர் மல்டிஜெட் டீசல் என்ஜின் உள்ளது.
- காரின் உள்புறம் ஆல் பிளாக் ஃபினிஷ் மற்றும் ரெட் இன்சர்ட்கள் வழங்கப்பட்டு உள்ளன.
ஜீப் நிறுவனத்தின் காம்பஸ் 2WD ஆட்டோமேடிக் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை ரூ. 23 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் 2WD வெர்ஷனில் 2.0 லிட்டர் மல்டிஜெட் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 168 ஹெச்.பி. பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இதில் ஆட்டோமேடிக் 9 ஸ்பீடு யூனிட் உள்ளது. இதே யூனிட் தான் 4WD AT மாடல்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.

ஜீப் காம்பஸ் 2WD ஆட்டோமேடிக் மாடல் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 9.8 நொடிகளில் எட்டிவிடும். அந்த வகையில், இந்த பிரிவில் அதிவேக மாடல் என்ற பெருமையை பெற்று இருக்கிறது. இத்துடன் பிளாக் ஷார்க் பேக்கேஜ் காரின் வெளிப்புறம் 18-இன்ச் பிளாக்டு-அவுட் வீல்கள், கிளாஸ் பிளாக் கிரில் மற்றும் பிளாக் இன்சர்ட்கள் வழங்கப்பட்டு உள்ளன.
காரின் உள்புறம் ஆல் பிளாக் ஃபினிஷ் மற்றும் ரெட் இன்சர்ட்கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் பானரோமிக் சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜிங், கனெக்டெட் கார் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த வேரியண்ட் லிட்டருக்கு 16.2 கிலோமீட்டர்கள் வரையிலான மேலைஜ் வழங்கும் என்று ARAI சான்று பெற்று இருக்கிறது.






