search icon
என் மலர்tooltip icon

    கார்

    மசிராட்டியின் எண்ட்ரி லெவல் எஸ்.யு.வி. - இந்திய வெளியீடு குறித்த சூப்பர் அப்டேட்
    X

    மசிராட்டியின் எண்ட்ரி லெவல் எஸ்.யு.வி. - இந்திய வெளியீடு குறித்த சூப்பர் அப்டேட்

    • சர்வதேச சந்தையில் கிரிகேல் எஸ்.யு.வி. மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    • கிரிகேல் எஸ்.யு.வி. மாடல் எலெக்ட்ரிக் வெர்ஷனிலும் கிடைக்கிறது.

    மசிராட்டி நிறுவனம் தனது கிரிகேல் எஸ்.யு.வி.-யை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதை உறுதிப்படுத்தி இருக்கிறது. மேலும் மசிராட்டி கிரிகேல் எஸ்.யு.வி. மாடலுக்கான முன்பதிவு இந்த ஆண்டு இறுதியில் துவங்கும் என்று அறிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் கடந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட கிரிகேல் எஸ்.யு.வி. அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகமாகிறது.

    சர்வதேச சந்தையில் ஜி.டி., மோடெனா மற்றும் டிரோஃபியோ என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும் கிரிகேல் எஸ்.யு.வி. மசிராட்டி நிறுவனத்தின் எண்ட்ரி லெவல் மாடல் ஆகும். இந்த மூன்று வேரியண்ட்களும் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது. கிரிகேல் எஸ்.யு.வி. மாடல் ஃபோல்கோர் என்ற பெயரில் எலெக்ட்ரிக் வெர்ஷனிலும் விற்பனை செய்யப்படுகிறது.

    கிரிகேல் எஸ்.யு.வி. மாடலின் மோடெனா வேரியண்டில் டுவின் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட 2.0 லிட்டர் மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் என்ஜின், ட்ரோஃபியோ வேரியண்டில் 3.0 லிட்டர் நெட்டுனோ வி6 என்ஜின், ஜி.டி. வேரியண்டில் 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர்கள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இவற்றுடன் 8 ஸ்பீடு ZF ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    Next Story
    ×