என் மலர்
கார்
- வோக்ஸ்வேகன் நிறுவன கார் மாடல்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிப்பு.
- சிறப்பு சலுகைகள் நவம்பர் 30-ம் தேதி வரை வழங்கப்படுகிறது.
வோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு அதிரடி சலுகைகளை அறிவித்து இருக்கிறது. அதன்படி வாடிக்கையாளர்கள் புதிய வோக்ஸ்வேகன் கார் வாங்கும் போது தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ் மற்றும் லாயல்டி பலன்கள் வடிவில் சலுகைகளை பெற்றுக் கொள்ள முடியும்.
வோக்ஸ்வேகன் டைகுன் மாடலுக்கு ரூ. 1 லட்சம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. இதில் எக்சேன்ஜ் மற்றும் லாயல்டி பலன்கள் ரூ. 60 ஆயிரமும், ரொக்க பலன்களாக ரூ. 60 ஆயிரமும் வழங்கப்படுகின்றன. வோக்ஸ்வேகன் விர்டுஸ் மாடலுக்கு ரூ. 80 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. இதில் ரொக்க பலன்கள் ரூ. 40 ஆயிரமும், எக்சேன்ஜ் மற்றும் லாயல்டி பலன்கள் ரூ. 40 ஆயிரமும் வழங்கப்படுகிறது.

இதே போன்று வோக்ஸ்வேகன் டைகுன் மாடலுக்கு ரூ. 4 லட்சத்து 20 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. இதில் ரொக்க பலன்கள் ரூ. 75 ஆயிரம் வரையிலும், எக்சேன்ஜ் போனஸ் ரூ. 75 ஆயிரமும், கார்ப்பரேட் பலன்கள் ரூ. 1 லட்சம் வரையிலும், விசேஷ பலன்களாக ரூ. 84 ஆயிரமும், ரூ. 86 ஆயிரம் மதிப்புள்ள நான்கு ஆண்டுகளுக்கான எஸ்.வி.பி. சேவையும் வழங்கப்படுகிறது.
இந்திய சந்தையில் வோக்ஸ்வேகன் டைகுன் மாடல் ஒற்றை வேரியண்டில் கிடைக்கிறது. இதன் விலை 35 லட்சத்து 17 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று துவங்குகிறது.
- சியோமி SU7 மாடலில் இருவித பேட்டரிகள் வழங்கப்படுகின்றன.
- இந்த எலெக்ட்ரிக் கார் இருவித பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
சியோமி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் SU7 பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த எலெக்ட்ரிக் செடான் மாடல் பி.எம்.டபிள்யூ. i4 மற்றும் டெஸ்லா மாடல் 3 போன்ற கார்களுக்கு போட்டியாக அமைகிறது. இதன் விற்பனை சீனாவில் அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டு வாக்கில் துவங்க இருக்கிறது. புதிய சியோமி SU7 அளவீடுகளை பொருத்தவரை 4997mm நீளம், 1963mm அகலம், 1440mm உயரம் மற்றும் 3000mm வீல்பேஸ் கொண்டிருக்கிறது.
இந்த எலெக்ட்ரிக் கார் இருவித பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் ரியர் வீல் டிரைவ் வெர்ஷன் 299 ஹெச்.பி. பவர் கொண்டிருக்கிறது. இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 210 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. டூயல் மோட்டார்கள் கொண்ட 4-வீல் டிரைவ் வேரியண்ட் 637 ஹெச்.பி. பவர் கொண்டிருக்கிறது. இந்த வேரியண்ட் மணிக்கு அதிகபட்சம் 265 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.

சியோமி SU7 மாடலில் இருவித பேட்டரிகள் வழங்கப்படுகின்றன. அதன்படி என்ட்ரி லெவல் கார்களில் பி.ஒய்.டி.-இன் லித்தியம் ஐயன் ஃபாஸ்பேட் பேட்டரியும், விலை உயர்ந்த மாடலில் CATL ரக பேட்டரி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. எனினும், இந்த பேட்டரிகளின் திறன் மற்றும் ரேன்ஜ் பற்றிய விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
டிசைனை பொருத்தவரை சியோமி SU7 மாடல் அதிநவீன மெக்லாரென் ரக கார்களை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் ஹெட்லைட்கள் மெல்லியதாகவும், பொனெட் டேப்பர்கள் மெக்லாரென் மாடல்களில் உள்ளதை போன்றும் வழங்கப்பட்டுள்ளன. இந்த மாடல் 19-இன்ச் மற்றும் 20-இன்ச் வீல் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
- வால்வோ EM90 மாடலில் 116 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது.
- இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 8.3 நொடிகளில் எட்டிவிடும்.
ஸ்வீடனை சேர்ந்த ஆடம்பர கார் உற்பத்தியாளர் வால்வோ தனது முதல் எலெக்ட்ரிக் எம்.பி.வி. மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. வால்வோ EM90 என்று அழைக்கப்படும் புதிய எம்.பி.வி. மாடல் முதற்கட்டமாக சீன சந்தையில் விற்பனைக்கு வருகிறது. இந்த மாடல் முழுமையான எலெக்ட்ரிக் எஸ்.யு.வி.-யான EX90-ஐ தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.
வால்வோ EM90 மாடலின் முன்புறம் க்லோஸ்டு கிரில், இலுமினேட் செய்யப்பட்ட லோகோ, சிக்னேச்சர் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் வழங்கப்பட்டுள்ளன. பக்கவாட்டில் பெட்டி வடிவிலான எம்.பி.வி. தோற்றம் கொண்டிருக்கிறது. இதன் இரண்டாம் அடுக்கு இருக்கைகளுக்கு ஸ்லைடிங் வகையிலான கதவுகள் வழங்கப்பட்டு உள்ளன.

இத்துடன் பிளாக்டு அவுட் பில்லர்கள், 20 இன்ச் அலாய் வீல்கள், பின்புறத்தில் செங்குத்தான எல்.இ.டி. டெயில் லேம்ப்கள், ஷார்க் ஃபின் ஆண்டெனா, பெரிய விண்ட் ஷீல்டு உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. அளவீடுகளை பொருத்தவரை இந்த எலெக்ட்ரிக் எம்.பி.வி. மாடல் 5206mm நீளம், 2024mm அகலம், 1859mm உயரம் கொண்டிருக்கிறது. இதன் வீல்பேஸ் 3205mm அளவில் உள்ளது.
வால்வோ EM90 எம்.பி.வி. மாடலின் உள்புறத்தில் 15.4 இன்ச் அளவில் டச் ஸ்கிரீன், 15.6 இன்ச் ஸ்கிரீன் ஒன்று ரூஃப் பகுதியில் மவுன்ட் செய்யப்பட்டு இருக்கிறது. தேவைப்படும் போது இந்த ஸ்கிரீனை கீழே இறக்கிக் கொள்ளும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கிரீனுடன் கேமராவும் வழங்கப்படுகிறது. இத்துடன் போயெர் மற்றும் வில்கின்ஸ்-இன் 21 ஸ்பீக்கர்கள் அடங்கிய மியூசிக் சிஸ்டம், ஆம்பியன்ட் லைட்கள், பானரோமிக் சன்ரூஃப் வழங்கப்பட்டு இருக்கின்றன.

ஜெகர் (Zeekr) 09 பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கும் EM90 எலெக்ட்ரிக் எம்.பி.வி. மாடலில் 116 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார் 268 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 8.3 நொடிகளில் எட்டிவிடும். இதனை முழு சார்ஜ் செய்தால் 738 கிலோமீட்டர்கள் வரை செல்ல முடியும்.
- ஆட்டோமோடிவ் டெஸ்டிங் பபென்பர்க் களத்தில் இதற்கான டெஸ்டிங் செய்யப்பட்டது.
- நெவெராவை ரிவர்சில் முழு திறனை வெளிப்படுத்தும் வகையில் இயக்கப்பட்டது.
ரிமக் ஆட்டோமொபைல் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் ஹைப்பர்கார் நெவெரா கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து இருக்கிறது. ரிவர்சில் அதிவேகமாக செல்லும் கார் என்ற சாதனையை ரிமக் நெவெரா படைத்திருக்கிறது. ஜெர்மனியில் உள்ள ஆட்டோமோடிவ் டெஸ்டிங் பபென்பர்க் களத்தில், இதற்கான டெஸ்டிங் செய்யப்பட்டது.
முன்னதாக இதே களத்தில் 20-க்கும் அதிக அக்செல்லரேஷன் மற்றும் பிரேக்கிங் சாதனைகளை நெவெரா முறியடித்து இருந்தது. சிமுலேஷன் எனப்படும் இயந்திர பரிசோதனையில் மணிக்கு 241 கிலோமீட்டர் வேகத்தை எட்ட முடியும் என்று தெரியவந்தது. இதனை பரிசோதிக்க முடிவு செய்த குழு, நெவெராவை ரிவர்சில் முழு திறனை வெளிப்படுத்தும் வகையில் இயக்கியது. அதன்படி ரிமக் நெவெரா ரிவர்சில் மணிக்கு 275.74 கிலோமீட்டர் வேகத்தில் சென்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து உள்ளது.

"சோதனையின் போதே, அது கிட்டத்தட்ட பழகியதை போன்ற அனுபவத்தை கொடுத்தது. எடுத்த எடுப்பில், பின்புறம் பார்க்க வேண்டும், அப்போது காரின் வேகம் அதிகரித்துக்கொண்டே போகும் போது காட்சிகள் நிழலாடுவதை போன்று தெரியும். இந்த நிலையில், உங்களது கழுத்து- காரை வேகமாக வந்து பிரேக்கிங் செய்யும் போது முன்புறம் செல்வதை போன்று தள்ளப்படும்," என்று காரை ரிவர்சில் இயக்கிய டெஸ்ட் ஓட்டுனர் கோரன் ரென்டக் தெரிவித்தார்.
நெவெராவில் உள்ள புதுமை-மிக்க டிரைவ்-டிரெயின் காரணமாக இந்த சாதனை சாத்தியமானது. வழக்கமாக கார்களில் உள்ள டிரான்ஸ்மிஷன் இந்த காரில் இல்லாததால், நெவெராவை முன்புறம் மணிக்கு 411 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கிய அதே மோட்டார்கள் இந்த காரினை ரிவர்ஸ்-இலும் இத்தகைய வேகத்தில் இயக்க வழி செய்தது.
முன்னதாக கேட்டர்ஹாம் 7 ஃபயர்பிலேடின் டாரென் மேனிங் 2001-ம் ஆண்டு ரிவர்சில் காரினை மணிக்கு 165.08 கிலோமீட்டர்கள் வேகத்தில் இயக்கியது கின்னஸ் உலக சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
- வால்வோ நிறுவன கார் மாடல்களுக்கு அசத்தல் சலுகைகள் அறிவிப்பு.
- கார்களுக்கு குறுகிய கால சலுகை வழங்கப்பட்டு வருகிறது.
வால்வோ இந்தியா நிறுவனம் தனது தேர்வு செய்யப்பட்ட வாகனங்களுக்கு குறுகிய காலக்கட்டத்திற்கு சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடி வழங்கி வருகிறது. அதன்படி வால்வோ XC60 மற்றும் வால்வோ XC40 ரிசார்ஜ் போன்ற மாடல்களுக்கு "ஃபெஸ்டிவ் டிலைட்" சலுகைகளின் கீழ் சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
சலுகை விவரங்கள்:
வால்வோ XC60 மாடலுக்கு ரூ. 6 லட்சத்து 50 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் மூலம் வால்வோ XC60 விலை ரூ. 67 லட்சத்து 85 ஆயிரத்தில் இருந்து ரூ. 60 லட்சத்து 90 ஆயிரம் என்று குறைந்து இருக்கிறது. வால்வோ XC40 ரிசார்ஜ் மாடலுக்கு ரூ. 1 லட்சத்து 78 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் மூன்று ஆண்டுகளுக்கு சர்வீஸ் மற்றும் வாரண்டி சலுகை வழங்கப்படுகிறது.

முன்னதாக வால்வோ நிறுவனம் தனது XC40 ரிசார்ஜ் மாடலின் கூப் வெர்ஷனாக வால்வோ C40 ரிசார்ஜ் மாடலை அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 61 லட்சத்து 25 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இத்துடன் இந்த எலெக்ட்ரிக் காரின் விலை ரூ. 1 லட்சத்து 70 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
- புதிய தலைமுறை ஸ்விஃப்ட் மாடலும் அதன் முந்தைய வெர்ஷனை விட அதிக யூனிட்கள் விற்பனை.
- புதிய Z12 என்ஜின் லிட்டருக்கு கிட்டத்தட்ட 40 கி.மீ. வரையிலான மைலேஜ் வழங்குகிறது.
மாருதி சுசுகி ஸ்விஃப்ட் ஹேச்பேக் மாடல் இந்திய சாலைகளில் டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக அடுத்த தலைமுறை ஸ்விஃப்ட் மாடல் இன்னும் சில மாதங்களில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கலாம்.
புதிய ஸ்விஃப்ட் மாடல் அதன் மூன்றாவது தலைமுறையில் உள்ளது. மேலும் இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் ஹேச்பேக் மாடலாகவும் உள்ளது. இந்தியாவில் இதுவரை அறிமுகம் செய்யப்பட்ட ஒவ்வொரு புதிய தலைமுறை ஸ்விஃப்ட் மாடலும் அதன் முந்தைய வெர்ஷனை விட அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன.

அந்த வகையில், புதிய தலைமுறை ஸ்விஃப்ட் மாடல் அதன் முந்தைய வெர்ஷனை விட அதிக யூனிட்கள் விற்பனையாகும் என்று தெரிகிறது. மேலும் புதிய ஸ்விஃப்ட் மாடலில் 3 சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் Z12 என்ற குறியீட்டு பெயர் கொண்டிருக்கிறது. இது 400சிசி வரையிலான திறன் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
புதிய Z12 என்ஜின் லிட்டருக்கு கிட்டத்தட்ட 40 கிலோமீட்டர்கள் வரையிலான மைலேஜ் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் புதிய தலைமுறை ஸ்விஃப்ட் மாடல் மைலேஜ் அடிப்படையில் ஸ்கூட்டர்களுக்கே போட்டியை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.
- மஹிந்திரா நிறுவனம் நவம்பர் மாதத்திற்கான சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
- மஹிந்திரா நிறுவன எஸ்.யு.வி.க்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன.
மஹிந்திரா நிறுவனம் தனது எஸ்.யு.வி. மாடல்களுக்கு அசத்தல் சலுகைகளை வழங்குகிறது. குறிப்பாக XUV400, XUV300 மற்றும் பொலிரோ நியோ காம்பேக்ட் எஸ்.யு.வி., மராசோ எம்.பி.வி. மற்றும் பொலிரோ எஸ்.யு.வி. மாடல்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன. இவை தள்ளுபடி மற்றும் அக்சஸரீக்கள் வடிவில் வழங்கப்படுகின்றன.
நவம்பர் மாதத்திற்கு மஹிந்திரா XUV400 மாடல் ரூ. 3 லட்சத்து 50 ஆயிரம் வரையிலான தள்ளுபடியில் கிடைக்கிறது. இது டாப் எண்ட் மாடலுக்கு மட்டுமே பொருந்தும். இதன் EL வேரியண்டிற்கு ரூ. 3 லட்சம் வரையிலான தள்ளுபடியும், EC வேரியண்டிற்கு ரூ. 1.5 லட்சம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இதே போன்று XUV300 மாடலுக்கு ரூ. 1.2 லட்சமும், மஹிந்திரா மராசோ மாடலுக்கு ரூ. 73 ஆயிரத்து 300, பொலிரோ மாடலுக்கு ரூ. 70 ஆயிரமும், பொலிரோ நியோ மாடலுக்கு ரூ. 50 ஆயிரமும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இவை காரின் வேரியண்டிற்கு ஏற்ப மாறுபடும். இத்துடன் ஒவ்வொரு நகரம் மற்றும் ஸ்டாக் இருப்புக்கு ஏற்ப சலுகைகளிலும் வேறுபாடு இருக்கலாம்.
- மெர்சிடிஸ் பென்ஸ் GLE மாடலின் முகப்பு பகுதி முற்றிலும் மாற்றப்பட்டு இருக்கிறது.
- புதிய மெர்சிடிஸ் பென்ஸ் GLE மாடலில் மூன்று விதமான என்ஜின்கள் வழங்கப்பட்டுள்ளன.
மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் தனது GLE எஸ்.யு.வி.-இன் ஃபேஸ்லிஃப்ட் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட புதிய பென்ஸ் GLE LWB மாடலின் விலை ரூ. 96 லட்சத்து 40 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த கார் AMG C43 மாடலுடன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
புதிய மெர்சிடிஸ் பென்ஸ் GLE மாடலின் முகப்பு பகுதி முற்றிலும் மாற்றப்பட்டு, மெல்லிய எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், சிங்கில் ஸ்லாட் கிரில், ரிடிசைன் செய்யப்பட்ட அலாய் வீல்கள், ரிவொர்க் செய்யப்பட்ட பின்புற பம்ப்பர் மற்றும் மேம்பட்ட எல்.இ.டி. டெயில் லைட்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த எஸ்.யு.வி.-இல் ரூஃப் ரெயில்கள், சைடு ஸ்டெப் மற்றும் பிளாக்டு அவுட் ORVM-கள் உள்ளன.

புதிய பென்ஸ் GLE ஃபேஸ்லிஃப்ட் மாடலின் கேபினில் புதிய ஸ்டீரிங் வீல், அதிநவீன MBUX சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே கனெக்டிவிட்டி, ரிடிசைன் செய்யப்பட்ட ஏ.சி. வெண்ட்கள், 4-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், ஆம்பியண்ட் லைட்டிங் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் வயர்லெஸ் சார்ஜர், எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் வசதி கொண்ட முன்புற இருக்கைகள் உள்ளன.
இருக்கைகளில் வென்டிலேஷன் வசதி, பவர்டு முன்புற இருக்கைகள், மசாஜ் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 360 டிகிரி சரவுண்ட் கேமரா, டிரான்ஸ்பேரண்ட் பொனெட் அம்சம், எலெக்ட்ரிக் சன் பிலைன்ட்கள், பானரோமிக் சன்ரூஃப் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் இருக்கைகளுக்கு மூன்றுவிதமான மெத்தை வகைகளில் ஒன்றை தேர்வு செய்யும் ஆப்ஷன் வழங்கப்படுகிறது.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் GLE மாடலில் 2.0 லிட்டர் டீசல், 3.0 லிட்டர் டீசல் மற்றும் 3.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள 4 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் 265 ஹெச்.பி. பவர், 550 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
இதில் உள்ள 6 சிலிண்டர் என்ஜின் 362 ஹெச்.பி. பவர், 750 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. அனைத்து என்ஜின்களுடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் உடன் 4மேடிக் AWD தொழில்நுட்பம் ஸ்டான்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது.
- மஹிந்திரா நிறுவனம் கணிசமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
- முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 29 சதவீதம் அதிகம் ஆகும்.
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் அக்டோபர் 2023 மாதத்திற்கான வாகனங்கள் விற்பனை விவரங்களை வெளியிட்டு உள்ளது. அந்த வகையில், ஒட்டுமொத்த ஆட்டோ விற்பனையில் 80 ஆயிரத்து 679 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இதில் உள்நாட்டு விற்பனை மட்டுமின்றி ஏற்றுமதி செய்யப்பட்ட யூனிட்களும் அடங்கும்.
இதன் மூலம் ஒட்டுமொத்த ஆட்டோ விற்பனையில் மஹிந்திரா நிறுவனம் 32 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. மேலும் தொடர்ச்சியாக நான்காவது மாதமாக மஹிந்திரா நிறுவனம் எஸ்.யு.வி. விற்பனையில் சாதனை படைத்துள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் மஹிந்திரா நிறுவனம் 43 ஆயிரத்து 708 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இது விற்பனையில் 36 சதவீதம் அதிகம் ஆகும்.

ஏற்றுமதியை பொருத்தவரை மஹிந்திரா நிறுவனத்தின் ஒட்டுமொத்த யுடிலிட்டி வாகனங்கள் விற்பனை 556 ஆக இருந்தது. மஹிந்திராவின் வர்த்தக பிரிவு வாகனங்கள் உள்நாட்டு விற்பனையில் 25 ஆயிரத்து 715 ஆக பதிவாகி இருக்கிறது. இதேபோன்று பயணிகள் வாகன பிரிவிலும் மஹிந்திரா நிறுவனம் கணிசமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
வருடாந்திர அடிப்படையில், மஹிந்திரா நிறுவனம் இதுவரை 2 லட்சத்து 58 ஆயிரத்து 622 பயணிகள் வாகனங்களை உள்நாட்டில் விற்பனை செய்திருக்கிறது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 29 சதவீதம் அதிகம் ஆகும்.
- புதிய ஸ்விஃப்ட் மாடலில் கிளாஸ் பிளாக் மெஷ் பேட்டன் கொண்ட கிரில் உள்ளது.
- இந்த காரில் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், கீலெஸ் ஸ்டார்ட் / ஸ்டாப் பட்டன் உள்ளது.
மாருதி சுசுகி நிறுவனம் முற்றிலும் புதிய தலைமுறை ஸ்விஃப்ட் மாடலை 2023 ஜப்பான் மொபிலிட்டி நிகழ்வில் அறிமுகம் செய்தது. புதிய தலைமுறை ஸ்விஃப்ட் மாடலின் வெளிப்புறம் மற்றும் உள்புறத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு, அதிக அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
இதன் முன்புறம் புதிய கிளாஸ் பிளாக் மெஷ் பேட்டன் கொண்ட கிரில், பிளாக் சரவுண்ட்கள், மெல்லிய எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள் மற்றும் இன்வெர்ட் செய்யப்பட்ட L வடிவ எல்.இ.டி. டி.ஆர்.எல்.-கள் மற்றும் சில்வர் ஃபினிஷ் செய்யப்பட்ட ஃபௌக்ஸ் ஸ்கிட் பிலேட் வழங்கப்பட்டுள்ளது. இதன் டோர் பேனல் முதல் டெயில் கேட் வரை கிரீஸ் இடம்பெற்று இருக்கிறது.
பின்புறத்தில் டெயில் லேம்ப் ஒட்டுமொத்த தோற்றத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. எனினும், இது இன்வெர்ட் செய்யப்பட்ட C வடிவ எல்.இ.டி. லே-அவுட் மற்றும் பிளாக் சரவுண்ட்களை கொண்டிருக்கிறது. இத்துடன் பின்புற வைப்பர், ரிடிசைன் செய்யப்பட்ட பிளாக்டு-அவுட் பம்ப்பர், ரியர் கேமரா மற்றும் சென்சார்கள் உள்ளன.
புதிய மாருதி சுசுகி ஸ்விஃப்ட் மாடலின் உள்புறம் பலேனோ மற்றும் ஃபிரான்க்ஸ் மாடல்களில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. இத்துடன் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ரிடிசைன் செய்யப்பட்ட ஏ.சி. வென்ட்கள், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், கீலெஸ் ஸ்டார்ட் / ஸ்டாப் பட்டன், ஆட்டோமேடிக் ஹெட்லேம்ப்கள், ஸ்டீரிங் மவுண்ட் செய்யப்பட்ட கண்ட்ரோல், அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டு இருக்கிறது.
பாதுகாப்பிற்கு ஆறு ஏர்பேக், ஃபுல் எல்.இ.டி. லைட்கள், லெவல் 2 ADAS சூட், 360 டிகிரி சரவுண்ட் கேமரா, கொலிஷன் மிடிகேஷன் பிரேகிங், அடாப்டிவ் ஹை பீம் அசிஸ்ட் மற்றும் டிரைவர் மாணிட்டரிங் சிஸ்டம் வங்கப்பட்டுள்ளது. 2024 சுசுகி ஸ்விஃப்ட் மாடலில் 1.2 லிட்டர் K சீரிஸ் பெட்ரோல் ஹைப்ரிட் என்ஜின் மற்றும் 5 ஸ்பீடு மேனுவல், AMT கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
- புதிய டஸ்டர் மாடல் மூன்றுவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என்று தெரிகிறது.
- புதிய டஸ்டர் மாடல் மிட் சைஸ் எஸ்.யு.வி. மாடல்களுக்கு நேரடி போட்டியை ஏற்படுத்தும்.
ரெனால்ட் நிறுவனம் தனது முற்றிலும் புதிய டஸ்டர் எஸ்.யு.வி.-யை நவம்பர் 29-ம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய டஸ்டர் மாடல் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. எனினும், இந்த மாடல் 2025 ஆண்டு தான் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தெரிகிறது.
புதிய டஸ்டர் மாடலில் எண்ட்ரி லெவல் 120 ஹெச்.பி. பவர் திறன் கொண்ட 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல், 140 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட் மற்றும் 170 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் என மூன்றுவித ஆப்ஷன்களில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் இதுவரை வெளியானதில் சக்திவாய்ந்த டஸ்டர் மாடலாக இது இருக்கும்.
இதுதவிர முற்றிலும் புதிய ரெனால்ட் டஸ்டர் மாடலின் மூன்றடுக்கு இருக்கைகள் கொண்ட வெர்ஷனும் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இது பிக்ஸ்டர் எஸ்.யு.வி. என்று அழைக்கப்படலாம். இந்த கார் அடுத்த ஆண்டு சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம்.
ஏற்கனவே குறிப்பிட்டதை போன்றே புதிய டஸ்டர் மாடல் 2025-ம் ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம். இது தற்போது எஸ்.யு.வி. சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷக், மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா அர்பன் குரூயிசர் ஹைரைடர் போன்ற மாடல்களுக்கு நேரடி போட்டியை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.
- இந்த சலுகை இம்மாத இறுதிவரை வழங்கப்பட இருக்கிறது.
- மாருதி ஜிம்னி விலை ரூ. 12.74 லட்சம் ஆகும்.
இந்தியாவில் பண்டிகை காலத்தை முன்னிட்டு மாருதி சுசுகி நெக்சா விற்பனையாளர்கள் தள்ளுபடி மற்றும் சலுகைகளை வழங்கி வருகின்றனர். அதன்படி ஜிம்னி சீட்டா வேரியண்டிற்கு ரூ. 1 லட்சம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது.
ஜிம்னி சீட்டா வேரியண்டிற்கு ரூ. 50 ஆயிரம் வரையிலான தள்ளுபடியும், ரூ. 50 ஆயிரம் வரையிலான எக்சேன்ஜ் அல்லது லாயல்டி போனஸ் வழங்கப்படுகிறது. இந்த சலுகை இம்மாத இறுதிவரை மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் ஆப்ஷன்களுக்கு வழங்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய சந்தையில் ஜிம்னி சீட்டா என்ட்ரி லெவல் மாடலின் விலை ரூ. 12 லட்சத்து 74 ஆயிரம் என்றும், ஆட்டோமேடிக் வேரியண்டின் விலை ரூ. 13 லட்சத்து 94 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடலில் 1.5 லிட்டர் K15B பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது.
அம்சங்களை பொருத்தவரை ஜிம்னி சீட்டா மாடலில் ஸ்டீல் வீல்கள், 7.0 இன்ச் டச் ஸ்கிரீன், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே, 6 ஏர்பேக், இ.எஸ்.பி. வழங்கப்பட்டு உள்ளன.






