search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ford"

    ஃபோர்டு இந்தியா உற்பத்தி ஆலையில் பவர்டிரெயின் உற்பத்தி மேற்கொள்ளப்பட இருக்கிறது. இந்த ஆலையில் ஒவ்வொரு ஆண்டும் மூன்று லட்சம் யூனிட்கள் உற்பத்தி செய்ய முடியும்.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டாடா பாசஞ்சர் எலெக்ட்ரிக் மொபிலிட்டி பிரிவின் கீழ் ஃபோர்டு இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து குஜராத் அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் ஃபோர்டு நிறுவனம் குஜராத் மாநிலத்தின் சனந்த் பகுதியில் வைத்து இருக்கும் ஆலையை வாங்க டாடா மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது. 

     ஃபோர்டு உற்பத்தி ஆலை

    புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி டாடா பாசஞ்சர் எலெக்ட்ரிக் மொபிலிட்டி பிரிவு ஃபோர்டு இந்தியா உற்பத்தி ஆலையின் நிலம், கட்டிடங்கள் மற்றும் வாகன உற்பத்தி ஆலையை அதில் உள்ள இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களுடன் விலைக்கு வாங்க இருக்கிறது. அதன்படி அந்த ஆலையில் பணியாற்றும் ஊழியர்களும் விரைவில் டாடா பாசஞ்சர் எலெக்ட்ரிக் மொபிலிட்டி பிரிவின் கீழ் பணியாற்றுவர்.

    எனினும், ஃபோர்டு இந்தியா நிறுவனம் தனது பவர்டிரெயின் உற்பத்தி ஆலையை தொடர்ந்து இயக்க முடிவு செய்துள்ளது. இதற்காக டாடா பாசஞ்சர் எலெக்ட்ரிக் மொபிலிட்டி பிரிவிடம் இருந்து ஆலையை லீசுக்கு எடுத்து பயன்படுத்த இருக்கிறது. வரும் மாதங்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த ஆலையில் புது இயந்திரங்களை நிறுவி ஆலையின் உற்பத்தி திறனை ஆண்டுக்கு மூன்று லட்சமாக உயர்த்துகிறது. 
    ×