search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    இந்தியாவில் ரீ-என்ட்ரி.. சத்தமின்றி ஸ்கெட்ச் போடும் ஃபோர்டு?
    X

    இந்தியாவில் ரீ-என்ட்ரி.. சத்தமின்றி ஸ்கெட்ச் போடும் ஃபோர்டு?

    • கார் டிசைனுக்கு காப்புரிமை கோரியுள்ளது.
    • வாகனங்களை இறக்குமதி செய்ய அரசு அனுமதி.

    சென்னையில் உள்ள ஆலையை விற்பனை செய்யும் முடிவை மாற்றிக் கொண்டது, புதிய வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்புகளை வெளியிட்டது மற்றும் என்டேவர் பெயருக்கு காப்புரிமை கோரி விண்ணப்பித்து இருப்பது உள்ளிட்டவை ஃபோர்டு நிறுவனம் மீண்டும் இந்திய சந்தையில் கால் பதிக்கலாம் என்பதை உணர்த்தும் வகையில் தான் உள்ளது.

    முன்னதாக இந்திய சந்தையில் இருந்து வெளியேறுவதாக ஃபோர்டு நிறுவனம் அறிவித்து இருந்தது. எனினும், ஃபோர்டு மீண்டும் இந்தியாவில் தனது வாகனங்களை விற்பனை செய்யலாம் என்று தகவல்கள் வெளியாகின. அந்த வரிசையில், ஃபோர்டு நிறுவனம் தற்போது தாய்லாந்து போன்ற சர்வதேச சந்தைகளில் ஃபோர்டு எவரஸ்ட் என்ற பெயரில் விற்பனை செய்து வரும் கார் டிசைனுக்கு காப்புரிமை கோரியுள்ளது.


    2022-ம் ஆண்டு முதல் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருவதால் இந்த எஸ்.யு.வி. மாடல் இந்திய சந்தையில் புதிதான ஒன்றாகவே இருக்கும். இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் ஃபோர்டு நிறுவனம் புதிய என்டேவர் மாடலை சென்னையில் உள்ள ஆலையில் அசெம்பில் செய்ய திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

    தற்போது ஆண்டிற்கு 2500 யூனிட்கள் வரை இந்தியாவுக்கு வாகனங்களை இறக்குமதி செய்ய அரசு அனுமதி வழங்கி வருகிறது. இதன் காரணமாக ஃபோர்டு நிறுவனம் விரைவில் தனது என்டேவர் மாடலை இந்தியாவில் இறக்குமதி செய்யலாம் என்று கூறப்படுகிறது. என்டேவர் மாடலுக்கு இந்தியாவில் நேரடி போட்டியை ஏற்படுத்தும் மாடலாக டொயோட்டா ஃபார்ச்சூனர் உள்ளது.


    இந்தியாவில் டொயோட்டா ஃபார்ச்சூனர் மாடலின் டாப் எண்ட் விலை ரூ. 60 லட்சம் ஆக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நேரடியாக இறக்குமதி செய்யப்படும் என்டேவர் மாடல் ஃபார்ச்சூனருக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையிலேயே இருக்கும். முன்னதாக ஃபோர்டு நிறுவனமும் நேரடியாக இறக்குமதி செய்து வாகனங்கள் விற்பனை செய்ய திட்டமிருப்பதாகவும் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×