என் மலர்
கார்
கியா மோட்டார்ஸ் சமீபத்தில் அறிமுகம் செய்த செல்டோஸ் எஸ்.யு.வி. மாடல் இந்திய விற்பனையில் புதிய மைல்கல் கடந்துள்ளது.
கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது செல்டோஸ் எஸ்.யு.வி. மாடலை சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்தது. இது கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்த முதல் வாகனம் ஆகும். இந்தியாவில் செல்டோஸ் எஸ்.யு.வி. துவக்க விலை ரூ. 9.69 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் கியா மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் செல்டோஸ் மாடலை வாங்க இதுவரை சுமார் 40,000-க்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. தற்சமயம் செல்டோஸ் காரை வாங்க இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 22 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட கியா செல்டோஸ் முதல் எட்டு நாட்களில் 6000-க்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இது இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் மிட்-சைஸ் எஸ்.யு.வி. பிரிவில் கிரெட்டா மாடலை பின்னுக்குத் தள்ளி செல்டோஸ் முதலிடம் பிடித்துள்ளது.
கியா செல்டோஸ் எஸ்.யு.வி. கார்: 115 பி.ஹெச்.பி. மற்றும் 144 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் 1.5 லிட்டர் ஸ்மார்ட்ஸ்டிரீம் பெட்ரோல் என்ஜின், 115 பி.ஹெச்.பி. மற்றும் 250 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் 1.5 லிட்டர் CRDi டீசல் யூனிட் மற்றும் 140 பி.ஹெச்.பி. மற்றும் 242 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் 1.4 லிட்டர் டி-ஜி.டி.ஐ. டர்போ-பெட்ரோல் என்ஜின் என மூன்று வித ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
மூன்று என்ஜின்களும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், 6-ஸ்பீடு ஏ.டி., ஐ.வி.டி. மற்றும் 7-ஸ்பீடு டி.சி.டி. என மூன்று ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் வருகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டியாகோ காரின் லிமிட்டெட் எடிஷன் வேரியண்ட்டை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டியாகோ ஹேட்ச்பேக் மாடலின் புதிய லிமிட்டெட் எடிஷன் வேரியண்ட்டை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய வேரியண்ட் டாடா டியாகோ விஸ் எடிஷன் என அழைக்கப்பட இருக்கிறது. இந்த கார் வரும் வாரங்களில் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது.
வெளியீட்டிற்கு முன் புதிய லிமிட்டெட் எடிஷன் காரின் விவரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி டாடா டியாகோ விஸ் எடிஷன் மாடலில் காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பது உறுதியாகி இருக்கிறது.
டாடா டியாகோ விஸ் ஹேட்ச்பேக் மாடலை சுற்றி ஆரஞ்சு நிற ஹைலைட்கள் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் முன்புற கிரில், வீல் கவர்கள் மற்றும் ORVMகளில் ஆரஞ்சு நிறம் பூசப்பட்டுள்ளது. புதிய டாடா டியாகோ விஸ் டைட்டானியம் கிரே நிறத்தில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிப்புறம் மட்டுமின்றி காரின் உள்புறத்திலும் ஆரஞ்சு நிறம் காணப்படலாம் என கூறப்படுகிறது. டாடா டியாகோ விஸ் எடிஷனின் கியர் லீவர், ஏர் வென்ட் மற்றும் சீட்களில் ஆரஞ்சு நிற அக்சென்ட்களை எதிர்பார்க்கலாம். மெக்கானிக்கல் அம்சங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படாது என தெரிகிறது.
அந்த வகையில் லிமிட்டெட் எடிஷன் மாலில் 1.2 லிட்டர் மூன்று சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.05 லிட்டர் மூன்று சிலிண்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.
இதன் பெட்ரோல் யூனிட் 85 பி.ஹெச்.பி. @6000 ஆர்.பி.எம் மற்றும் 114 என்.எம். டார்க் @3600 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்கும். டீசல் என்ஜின் 69 பி.ஹெச்.பி. மற்றும் 140 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இரு என்ஜின்களும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டிருக்கும். இதன் பெட்ரோல் என்ஜினில் மட்டும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது.
புகைப்படம் நன்றி: Motor Arena
ரெனால்ட் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் க்விட் ஃபேஸ்லிஃப்ட் மாடல்களின் இந்திய வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.
ரெனால்ட் நிறுவனத்தின் க்விட் ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் அக்டோபர் மாத துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் ரெனால்ட் டஸ்டர் மேம்பட்ட மாடல் அறிமுகம் செய்யப்பட்டு, சமீபத்தில் டிரைபர் மாடலும் அப்டேட் செய்யப்பட்டது.
2015 ஆம் ஆண்டுக்கு பின் க்விட் மாடல் தற்சமயம் மேம்படுத்தப்பட இருக்கிறது. புதிய க்விட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் மொத்தம் நான்கு வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது. வேரியண்ட்கள் பற்றிய விவரங்கள் வெளியாகவில்லை.
எனினும் புதிய காரில் ஸ்ப்லிட் ஹெட்லேம்ப், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், முன்புற கிரில், புதிய வடிவமைப்பு கொண்ட பம்ப்பர், எல்.இ.டி. டெயில் லேம்ப்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர புதிய க்விட் மாடலில் மேம்பட்ட டிரைபர் காரில் வழங்கப்பட்ட அம்சங்களையும் எதிர்பார்க்கலாம்.

ரெனால்ட் க்விட் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 8.0 இன்ச் தொடுதிரை வசதி, ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற வசதிகள் வழங்கப்படலாம். இத்துடன் புதிய காரில் பாதுகாப்பு அம்சங்களும் மேம்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது.
புதிய க்விட் காரில் மெக்கானிக்கல் மாற்றங்கள் மேற்கொள்ளப்படாது என்றே தெரிகிறது. புதிய க்விட் ஃபேஸ்லிஃப்ட் மாடல்: 0.08 லிட்டர் என்ஜின் மற்றும் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம். இரு என்ஜின்களும் முறையே 54 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 68 பி.ஹெச்.பி. பவர் வழங்குகிறது.
ரெனால்ட் என்ஜின்கள் பி.எஸ். 6 விதிகளுக்கு பொருந்தும் வகையில் அப்டேட் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. தற்சமயம் ரெனால்ட் க்விட் மாடல் ரூ. 2.76 லட்சம் விலையில் துவங்கி ரூ. 4.75 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் க்விட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விலை ரூ. 3 லட்சத்தில் துவங்கி ரூ. 5 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம்.
மாருதி சுசுகி நிறுவன வாகனங்கள் விற்பனை மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பியுள்ளது. இதுகுறித்த விவரங்களை பார்ப்போம்.
மாருதி சுசுகி நிறுவன வாகனங்கள் விற்பனை அதிகரிக்க துவங்கியுள்ளது. செப்டம்பர் மாத விற்பனை ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும் போது அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த பத்து மாதங்களில் மாருதி சுசுகி நிறுவன வாகன விற்பனை சரிவை சந்தித்து வந்தது. இந்நிறுவன விற்பனை ஆகஸ்ட் மாதத்தில் மிகவும் குறைவானது. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் மாருதி சுசுகி 34 சதவிகிதம் சரிவை சந்தித்தது.
செப்டம்பர் மாதத்தில் நவராத்திரி பண்டிகை காலத்தில் வாகன விற்பனை அதிகரிக்கும். கடந்த மாதத்தை விட செப்டம்பரில் வாகன முன்பதிவு எண்ணிக்கை அதிகரித்துள்ளது என மாருதி சுசுகி இந்தியாவின் தலைவர் ஆர்.சி. பார்கவா தெரிவித்தார். செப்டம்பர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் முன்பதிவு மேலும் அதிகரிக்கலாம் என அவர் தெரிவித்தார்.

பண்டிகை கால விற்பனையை அதிகப்படுத்த மாருதி சுசுகி நிறுவனம் புதிதாக என்ட்ரி லெவல் ஹேட்ச்பேக் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. மாருதி சுசுகியின் புதிய எஸ் பிரெஸ்ஸோ இந்தியாவில் செப்டம்பர் 30 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
புதிய மாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோ கார் அந்நிறுவனத்தின் ஃபியூச்சர் எஸ் கான்செப்ட்டை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் ஆல்டோ கே10 மாடலுக்கு அடுத்த இடத்தில் நிலைநிறுத்தப்படலாம். இந்த மாடல் ரெனால்ட் க்விட் மற்றும் டேட்சன் ரெடி-கோ மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்.யு.வி.300 புதிய வேரியண்ட் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்.யு.வி.300 புதிய வேரியண்ட் உருவாக்கப்படுகிறது. புதிய வேரியண்ட் ஏழு பேர் பயணிக்கும் வகையில் இருக்கும் என தெரிகிறது. அந்த வகையில் புதிய ஏழு பேர் பயணிக்கக்கூடிய எக்ஸ்.யு.வி.300 விரைவில் இந்திய சாலைகளில் எதிர்பார்க்கலாம்.
புதிய கார் வெளியீட்டிற்கு முன் சோதனை செய்யப்படும் என்பதால், இந்த கார் எப்படி காட்சியளிக்கும் என்பதை விரைவில் அறிந்து கொள்ள முடியும் என கூறப்படுகிறது. எக்ஸ்.யு.வி.300 புதிய வேரியண்ட் எக்ஸ்.யு.வி.400 என்ற பெயரில் வெளியாகும் என்றும் இது எஸ்2014 என்ற குறியீட்டு பெயரில் உருவாகி வருவதக தகவல் வெளியாகியுள்ளது.
மஹிந்திராவின் புதிய எக்ஸ்.யு.வி.300 வேரியண்ட் எக்ஸ்.யு.வி.300 மற்றும் எக்ஸ்.யு.வி.500 மாடல்களுக்கு மத்தியில் நிலைநிறுத்தப்படும் என தெரிகிறது. புதிய காரில் 1.5 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்படலாம். இதே என்ஜின் மராசோ எம்.பி.வி. காரிலும் வழங்கப்பட்டது.

டீசல் என்ஜின் எக்ஸ்.யு.வி.300 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படலாம். எனினும், இதன் செயல்திறன் மேம்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் எக்ஸ்.யு.வி.300 மாடல்: 1.2 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் யூனிட் மற்றும் 1.5 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட டீசல் யூனிட் வழங்கப்படுகிறது.
இவை முறையே 115 பி.ஹெச்.பி. பவர், 200 என்.எம். டார்க் மற்றும் 115 பி.ஹெச்.பி. பவர், 300 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இரு என்ஜின்களும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டிருக்கின்றன. இத்துடன் 6-ஸ்பீடு ஆட்டோமேடிக் மேனுவல் டிரான்ஸ்மிஷன் யூனிட்டை விரும்புவோர் தேர்வு செய்து கொள்ளும் வகையில் வழங்கப்படுகிறது.
ஆடி நிறுவனத்தின் புதிய கியூ3 காரின் இந்திய வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.
ஜெர்மன் நாட்டு ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி இந்தியாவில் இரண்டாம் தலைமுறை கியூ3 காரை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய என்ட்ரி-லெவல் மாடல் 2018 பாரிஸ் மோட்டார் விழாவில் முதன்முறையாக காட்சிக்கு வைக்கப்பட்டது.
அடுத்த தலைமுறை கியூ3 காரின் வடிவமைப்பு ஆடியின் ஃபிளாக்ஷிப் கியூ8 எஸ்.யு.வி.யை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. புதிய ஆடி கியூ3 முந்தைய மாடலை விட அதிக கம்பீரமாக காட்சியளிக்கிறது. இது ஃபோக்ஸ்வேகனின் MQB பிளாட்ஃபார்மை தழுவி உருவாகியிருக்கிறது.

புதிய காரின் முன்புறம் ஆக்டா-கோனல் வடிவம் கொண்ட சிங்கிள் ஃபிரேம் கிரில் மற்றும் மெல்லிய எல்.இ.டி. ஹெட்லேம்ப் கிளஸ்டர், டேடைம் ரன்னிங் லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. பின்புறம் ஸ்பாயிலர், இன்டகிரேட்டெட் பிரேக் லைட் வழங்கப்பட்டிருக்கிறது. டெயில் லேம்ப்கள் புதிய கியூ3 மாடலில் பெரியதாக இருக்கின்றன.
உள்புறத்தில் புதிய டேஷ்போர்டு வடிவமைப்பு, தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், புதிய கிளைமேட் கண்ட்ரோல் யூனிட் வழங்கப்பட்டுள்ளன. புதிய மாடலில் டிரைவர் அசிஸ்டன்ஸ், அடாப்டிவ் குரூஸ் கண்ட்ரோல், பார்க் அசிஸ்ட், லேன் டிபார்ச்சர் வார்னிங் போன்ற அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன.
புதிய ஆடி கியூ3 மாடல் பல்வேறு என்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த மாடல் இந்தியாவில் இருவித என்ஜின்கள்: 148 பி.ஹெச்.பி. பவர், 250 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் 1.4 லிட்டர் TFSI பெட்ரோல், 2.0 லிட்டர் TDI என்ஜின் இருவித டியூனிங்கில் கிடைக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிதாக இ.வி. தொழில்நுட்பத்தை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிதாக இ.வி. தொழில்நுட்பத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. சிப்டிரான் என அழைக்கப்படும் புதிய தொழில்நுட்பம் டாடா நிறுவனத்தின் எதிர்கால எலெக்ட்ரிக் கார்களில் பயன்படுத்தப்பட இருக்கிறது.
இத்துடன் அடுத்த ஆண்டின் நான்காவது காலாண்டில் புதிய எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது. புதிய எலெக்ட்ரிக் கார் சிப்டிரான் இ.வி. தொழில்நுட்பத்தை தழுவி உருவாகிறது.

சிப்டிரான் இ.வி. பவர்டிரெயின் தொழில்நுட்பம் டாடாவின் எதிர்கால வாகனங்களில் பயன்படுத்தப்படுகிறது. இவை அதிக வோல்டேஜ் சிஸ்டம், நீண்ட பேட்டரி ரேன்ஜ், ஃபாஸ்ட் சார்ஜிங் வசதிகள் மற்றும் தலைசிறந்த அனுபவத்தை வழங்கும். புதிய பவர்டிரெயின் எட்டு வருட வாரண்டியுடன் வரும் என கூறப்படுகிறது.
டாடாவின் புதிய சிப்டிரான் தொழில்நுட்பம் தலைசிறந்த ஏ.சி. மோட்டார் உடன் வரும் என தெரிகிறது. இது தலைசிறந்த செயல்திறன் வழங்கும் என்றும் டஸ்ட் மற்றும் வாட்டர் ப்ரூஃப் பேட்டரி சிஸ்டம்களை கொண்டிருக்கிறது. புதிய இ.வி. தொழில்நுட்பம் எலெக்ட்ரிக் கார்களில் சிறந்த பிரேக்கிங், பேட்டரிகளை கார் ஓட்டும் போதே சார்ஜ் செய்யும் வசதி கொண்டிருக்கும்.
மத்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றிய புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது.
மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டத்தை நிறைவேற்றியது. இதில் வாகனம், ஒட்டுனர் தொடர்பான நடவடிக்கைகளுக்கு அபராத கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டது. மேலும் சாலை விதி மீறல்களுக்கு அபராத தொகையாக 10 மடங்கு உயர்த்தியது.
இதை குறைக்க வலியுறுத்தி அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்தது. அதன்படி இன்று காலை 6 மணிக்கு நாடு முழுவதும் தொடங்கிய லாரி ஸ்டிரைக் மாலை 6 மணி வரை நடக்கிறது.
இதில் தமிழகத்தில் உள்ள மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம், டிப்பர் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம், மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம் உள்பட பல அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளது.
இதனால் தமிழகத்தில் உள்ள 4.5 லட்சம் லாரிகள் உள்பட நாடு முழுவதும் உள்ள 40 லட்சத்திற்கும் அதிகமான லாரிகளில் பெரும்பாலான லாரிகள் ஓடவில்லை. இதனால் நாமக்கல்லில் லாரிகள் உரிமையாளர் சங்க வளாகத்திலும், சேலத்தில் லாரி மார்க்கெட்டிலும், சரக்கு ஏற்றப்பட்ட லாரிகள் சாலையோரம் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை பார்க்க முடிந்தது.

மேலும் தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஜவுளி, மஞ்சள், இரும்பு கம்பிகள், ஜவ்வரிசி, காய்கறிகள் தேக்கம் அடைந்தது. இதே போல வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் பருப்பு, பூண்டு, வெங்காயம், தானிய வகைகள், மார்பிள் மற்றும் கிராணைட் கற்கள் வரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயலாளர் தன்ராஜ் கூறியதாவது:- ஏற்கனவே தொழில் துறை மந்தமாக உள்ளதாலும், வேலை ஆட்கள் பற்றாக்குறையாலும் லாரி தொழில் நலிவடைந்துள்ளது . இதற்கிடையே விபத்துகளை குறைப்பதற்கு அபராதத்தை அதிகரிப்பதே சிறந்த வழி என மத்திய அரசு திட்டமிட்டு புதிய மோட்டார் வாகன சட்டத்தை உருவாக்கியுள்ளது. இது லாரி தொழிலை அடியோடு நசுக்கும் வகையில் உள்ளது.
அபராத தொகையை குறைக்கும் படி மத்திய அமைச்சர் நிதின்கட்கரி மற்றும் சாலை போக்குவரத்து அமைச்சக அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டது. மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடமும் வலியறுத்தி உள்ளோம். இது வரை எந்த நடிவடிக்கையும் எடுக்காததால் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம்.
மோட்டார் வாகன சட்ட பாதிப்பு, சுங்க கட்டணம் உயர்வு, டீசல் விலை உயர்வு உள்பட பல்வேறு பிரச்சினைகளை சுட்டி காட்டி இந்த வேலை நிறுத்தத்தை அகில இந்திய தலைமை அறிவித்துள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து டெல்லியில் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் கூடி எடுக்கும் நடவடிக்கைக்கு தமிழ் நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆதரவு அளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் அமியோ ஜிடி லைன் மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் போலோ மற்றும் வென்டோ கார்களின் ஜிடி லைன் வேரியண்ட் அறிமுகமானதைத் தொடர்ந்து அமியோ ஜிடி லைன் வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் அமியோ ஜிடி லைன் மாடல் விலை ரூ. 9.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய அமியோ கார் 110 பி.ஹெச்.பி. திறன் வழங்கும் 1.5 லிட்டர் டீசல் மற்றும் 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் என்ஜின் கொண்டிருக்கிறது.

வடிவமைப்பில் அமியோ ஜிடி லைன் காரில் ஜிடி லைன் வடிவமைப்பு அம்சங்கள் பின்பற்றப்பட்டுள்ளன. புதிய அமியோ ஜிடி லைன் மாடல் சன்செட் ரெட் எனும் புதிய நிறத்தில் கிடைக்கிறது. முன்னதாக அறிமுகம் செய்யப்பட்ட போலோ மற்றும் வென்டோ கார்களில் புதிய கிரில் மற்றும் பம்ப்பர் வழங்கப்பட்டிருந்த நிலையில், அமியோ ஜிடி லைன் மாடலில் இவை வழங்கப்படவில்லை.
அமியோ ஜிடி லைன் மாடல் ஹைலைன் பிளஸ் டாப்-எண்ட் டீசல் ஆட்டோமேடிக் வேரியண்ட்டை தழுவி உருவாகியிருக்கிறது. புதிய காரில் ஃபோக்ஸ்வேகன் கனெக்ட் சூட் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. அமியோ டீசல் மாடல் 5 வருட வாரண்டியுடன் கிடைக்கிறது. பெட்ரோல் வேரியண்ட்களுக்கு நான்கு வருடங்கள் / ஒரு லட்சம் கிலோமீட்டர் வாரண்டி வழங்கப்படுகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரபல மாடலாக இருந்த சுமோ உற்பத்தியை நிறுத்துவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது சுமோ காரின் உற்பத்தியை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது. உற்பத்தி நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து டாடா சுமோ நாடு முழுக்க எந்த விற்பனையகத்திலும் கிடைக்காது.
டாடா சுமோ எஸ்.யு.வி. மாடல் இந்தியாவில் 1994 ஆம் ஆண்டு விற்பனைக்கு வந்தது. 25 ஆண்டுகள் உற்பத்தியில் இருந்த டாடா சுமோ தற்சமயம் ஆட்டோமொபைல் சந்தையில் இருந்து விடைபெற்றுக் கொண்டது. இந்தியாவில் அமலாகியிருக்கும் புதிய பாதுகாப்பு விதிகளுக்கு சுமோ பொருந்தாததால், உற்பத்தி நிறுத்தப்பட்டது.
எதிர்காலத்தில் சுமோ மாடலை அப்டேட் செய்யும் திட்டம் இல்லாததால், டாடா மோட்டார்ஸ் உற்பத்தியை நிறுத்திவிட்டது. இந்தியாவில் ஏ.ஐ.எஸ். 145 பாதுகாப்பு விதிகள் மற்றும் புதிய வாகன பாதுகாப்பு திட்டம் போன்றவற்றை சுமோ பூர்த்தி செய்யவில்லை. இந்திய சந்தையில் டாடா சுமோ அதிக பிரபலமான எஸ்.யு.வி.யாக இருந்தது.

சுமோ மாடல் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எம்.பி.வி./எஸ்.யு.வி. பிரிவு விற்பனையை அதிகரிக்க உதவியது. டாடா சுமோ சீரிசில் கடைசியாக சுமோ கோல்டு மாடல் விற்பனைக்கு வந்தது. இந்தியாவில் டாடா சுமோ கோல்டு விலை ரூ. 7.39 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 8.77 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டது.
டாடா சுமோ கோல்டு மாடலில் பி.எஸ். 4 3.0 லிட்டர் டீசல் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 85 பி.ஹெச்.பி. பவர், 250 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100 சதவிகித வரிவிலக்கு அளிக்கும் புதிய கொள்கையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
சுற்றுப்புறச் சூழல்களை பாதுகாத்து, காற்று மாசு படுவதை குறைக்கின்ற வகையில், மின்சாரத்தில் இயங்கிடும் வாகனங்களை தமிழ்நாட்டில் உற்பத்தி செய்வதற்கு ஏதுவாக தமிழ்நாடு அரசினால் “தமிழ்நாடு மின்சார வாகனக் கொள்கை 2019” தயாரிக்கப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில் “தமிழ்நாடு மின்சார வாகனக் கொள்கை 2019”ஐ வெளியிட்டார். அதனை அமைச்சர்கள் எம்.சி. சம்பத், எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
தமிழ்நாடு மின்சார வாகனக் கொள்கை 2019-ன் படி, அனைத்து மின்சார இருசக்கர வாகனங்கள், சீருந்துகள், மூன்று சக்கர வாகனங்கள், பேருந்துகள் மற்றும் இலகு ரக சரக்கு வாகனங்கள் ஆகியவற்றிற்கு 100 சதவிகித மோட்டார் வாகன வரி விலக்கு வழங்கப்படும். இந்த வரி விலக்கு, 2022-ம் ஆண்டு இறுதி வரை வழங்கப்படும்.

மின்சார வாகனங்கள், அதன் உதிரி பாகங்கள் மற்றும் மின்கலன் அதற்கான மின்ஏற்று உபகரணங்களை உற்பத்தி செய்வோருக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படும். ரூபாய் 50 கோடிக்கு மேல் முதலீடு செய்தும், குறைந்தபட்சம் 50 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள் பின்வரும் சலுகைகள் பெற தகுதி பெறும்.
தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் மின்சார வாகனங்களுக்கான மாநில சரக்கு மற்றும் சேவை வரி 100 சதவிகிதம் திரும்ப வழங்கப்படும். இந்த சலுகை 2030-ம் ஆண்டு வரை வழங்கப்படும்.
மின்சார வாகனங்கள் உற்பத்திக்கான முதலீடுகளுக்கு 15 சதவிகிதம் வரையும், மின்கலன் (பேட்டரி) உற்பத்திக்கான முதலீடுகளுக்கு 20 சதவிகிதம் வரையும் மூலதன மானியம் வழங்கப்படும். இந்த சலுகை, 2025ஆம் ஆண்டு வரை செய்யப்படும் முதலீடுகளுக்கு பொருந்தும்.
மாருதி சுசுகி நிறுவனத்தின் கார்களுக்கு பெட்ரோல் ஹைப்ரிட் என்ஜின் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாருதி சுசுகியின் விடாரா பிரெஸ்ஸா மற்றும் எஸ் கிராஸ் மாடல்களுக்கு விரைவில் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் பெட்ரோல் ஹைப்ரிட் என்ஜின் வழங்கப்படுகிறது. இரு மாடல்களுக்கான பெட்ரோல் வேரியண்ட் டிசம்பர் மாதத்தில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு மாடல்களிலும் மாருதி சுசுகியின் 1.5 லிட்டர் K15 சீரிஸ் பெட்போல் ஹைப்ரிட் என்ஜின் வழங்கப்படுகிறது. இதே என்ஜின் ஏற்கனவே சியாஸ், எர்டிகா மற்றும் எக்ஸ்.எல்.6 மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 104 பி.ஹெச்.பி. பவர், 138 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டிருக்கிறது. இதுதவிர 4-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டெர் ஆட்டோமேடிக் வசதியும் வழங்கப்படுகிறது.

தற்சமயம் மாருதி சுசுகி விடாரா பிரெஸ்ஸா மற்றும் எஸ் கிராஸ் மாடல்களில் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது. இவை 1.3 லிட்டர் யூனிட் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த என்ஜின் ஃபியாட் உருவாக்கி வழங்கியதாகும். இது 82 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 200 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.
இதில் மாருதி சுசுகியின் ஆல்டோ, வேகன் ஆர், ஸ்விஃப்ட், டிசையர், பலேனோ, எர்டிகா மற்றும் எக்ஸ்.எல்.6 என ஏழு மாடல்களில் பி.எஸ். 6 பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் ஏழு பி.எஸ். 6 ரக பெட்ரோல் மாடல்களை கொண்டிருக்கும் ஒற்றை நிறுவனமாக மாருதி சுசுகி இருக்கிறது.






