search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    மாருதி சுசுகி செலரியோ
    X
    மாருதி சுசுகி செலரியோ

    மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பும் மாருதி சுசுகி

    மாருதி சுசுகி நிறுவன வாகனங்கள் விற்பனை மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பியுள்ளது. இதுகுறித்த விவரங்களை பார்ப்போம்.



    மாருதி சுசுகி நிறுவன வாகனங்கள் விற்பனை அதிகரிக்க துவங்கியுள்ளது. செப்டம்பர் மாத விற்பனை ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும் போது அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    கடந்த பத்து மாதங்களில் மாருதி சுசுகி நிறுவன வாகன விற்பனை சரிவை சந்தித்து வந்தது. இந்நிறுவன விற்பனை ஆகஸ்ட் மாதத்தில் மிகவும் குறைவானது. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் மாருதி சுசுகி 34 சதவிகிதம் சரிவை சந்தித்தது.

    செப்டம்பர் மாதத்தில் நவராத்திரி பண்டிகை காலத்தில் வாகன விற்பனை அதிகரிக்கும். கடந்த மாதத்தை விட செப்டம்பரில் வாகன முன்பதிவு எண்ணிக்கை அதிகரித்துள்ளது என மாருதி சுசுகி இந்தியாவின் தலைவர் ஆர்.சி. பார்கவா தெரிவித்தார். செப்டம்பர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் முன்பதிவு மேலும் அதிகரிக்கலாம் என அவர் தெரிவித்தார்.

    மாருதி சுசுகி எஸ் கிராஸ்

    பண்டிகை கால விற்பனையை அதிகப்படுத்த மாருதி சுசுகி நிறுவனம் புதிதாக என்ட்ரி லெவல் ஹேட்ச்பேக் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. மாருதி சுசுகியின் புதிய எஸ் பிரெஸ்ஸோ இந்தியாவில் செப்டம்பர் 30 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    புதிய மாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோ கார் அந்நிறுவனத்தின் ஃபியூச்சர் எஸ் கான்செப்ட்டை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் ஆல்டோ கே10 மாடலுக்கு அடுத்த இடத்தில் நிலைநிறுத்தப்படலாம். இந்த மாடல் ரெனால்ட் க்விட் மற்றும் டேட்சன் ரெடி-கோ மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
    Next Story
    ×