என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
லாரிகள் வேலை நிறுத்தம் - கோப்புப்படம்
புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிர்ப்பு - நாடு முழுக்க 40 லட்சம் லாரிகள் வேலை நிறுத்தம்
By
மாலை மலர்19 Sep 2019 9:19 AM GMT (Updated: 19 Sep 2019 10:51 AM GMT)

மத்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றிய புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது.
மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டத்தை நிறைவேற்றியது. இதில் வாகனம், ஒட்டுனர் தொடர்பான நடவடிக்கைகளுக்கு அபராத கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டது. மேலும் சாலை விதி மீறல்களுக்கு அபராத தொகையாக 10 மடங்கு உயர்த்தியது.
இதை குறைக்க வலியுறுத்தி அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்தது. அதன்படி இன்று காலை 6 மணிக்கு நாடு முழுவதும் தொடங்கிய லாரி ஸ்டிரைக் மாலை 6 மணி வரை நடக்கிறது.
இதில் தமிழகத்தில் உள்ள மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம், டிப்பர் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம், மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம் உள்பட பல அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளது.
இதனால் தமிழகத்தில் உள்ள 4.5 லட்சம் லாரிகள் உள்பட நாடு முழுவதும் உள்ள 40 லட்சத்திற்கும் அதிகமான லாரிகளில் பெரும்பாலான லாரிகள் ஓடவில்லை. இதனால் நாமக்கல்லில் லாரிகள் உரிமையாளர் சங்க வளாகத்திலும், சேலத்தில் லாரி மார்க்கெட்டிலும், சரக்கு ஏற்றப்பட்ட லாரிகள் சாலையோரம் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை பார்க்க முடிந்தது.

மேலும் தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஜவுளி, மஞ்சள், இரும்பு கம்பிகள், ஜவ்வரிசி, காய்கறிகள் தேக்கம் அடைந்தது. இதே போல வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் பருப்பு, பூண்டு, வெங்காயம், தானிய வகைகள், மார்பிள் மற்றும் கிராணைட் கற்கள் வரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயலாளர் தன்ராஜ் கூறியதாவது:- ஏற்கனவே தொழில் துறை மந்தமாக உள்ளதாலும், வேலை ஆட்கள் பற்றாக்குறையாலும் லாரி தொழில் நலிவடைந்துள்ளது . இதற்கிடையே விபத்துகளை குறைப்பதற்கு அபராதத்தை அதிகரிப்பதே சிறந்த வழி என மத்திய அரசு திட்டமிட்டு புதிய மோட்டார் வாகன சட்டத்தை உருவாக்கியுள்ளது. இது லாரி தொழிலை அடியோடு நசுக்கும் வகையில் உள்ளது.
அபராத தொகையை குறைக்கும் படி மத்திய அமைச்சர் நிதின்கட்கரி மற்றும் சாலை போக்குவரத்து அமைச்சக அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டது. மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடமும் வலியறுத்தி உள்ளோம். இது வரை எந்த நடிவடிக்கையும் எடுக்காததால் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம்.
மோட்டார் வாகன சட்ட பாதிப்பு, சுங்க கட்டணம் உயர்வு, டீசல் விலை உயர்வு உள்பட பல்வேறு பிரச்சினைகளை சுட்டி காட்டி இந்த வேலை நிறுத்தத்தை அகில இந்திய தலைமை அறிவித்துள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து டெல்லியில் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் கூடி எடுக்கும் நடவடிக்கைக்கு தமிழ் நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆதரவு அளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
